கடவுளுக்குப் படைத்த பிரசாதம் ஆனாலும், அளவுக்கு அதிகமாகச் சாப்பிடக்கூடாது. உடல்நிலைக்கேற்ப ஒருவருடைய ஜீரண சக்தி மாறும். அவரவர் தன்மைக்கேற்ப சாப்பிடுவது அவசியம். இதைத் தான் ‘அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்று பெரியவர்கள் சொல்லி வைத்தனர். அளவாகச் சாப்பிட்டால் உடலில் வியாதிகள் அணுகாது. ஆரோக்கியம் நிலைத்திருக்கும்.
எனவே எந்த ஒரு உணவையும் அளவுக்கு அதிகமாக உட்கொள்ளும் போது அது ஆபத்தாகவே மாறி விடும். எனவே என்ன தான் நலக்குகு எந்த உணவுப் பொருட்கள் பிடித்தாலும், அதை எந்த அளவு சாப்பிடுவது நல்லது என்பதை ஒவ்வொருவரும் தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும்.
கேரட்
கேரட்டில் உள்ள ‘ஏ‘ வைட்டமின் கண் பார்வைக்கு நல்லது. கேரட்டுக்கு மஞ்சள் நிறத்தை அதிலுள்ள பீட்டா கரோட்டின் என்ற அமிலம்தான் தருகிறது. அந்த பீட்டா கரோட்டின்தான் மனித கண்களில் புரை வராமல் பாதுகாக்கிறது. தினமும் ஒரு கேரட் சாப்பிட்டால் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை அகற்றலாம், குடல் புண்கள் வராமல் தடுக்கலாம். ஆனாலும் எவ்வளவு தான் கேரட் ஆரோக்கியமானது என்றாலும், அளவுக்கு அதிகமாக உட்கொண்டால், உடலானது அதிக அளவில் பீட்டா-கரோட்டீனை உறிஞ்சி விடும். பீட்டா கரோட்டீன் அதிகமானால், இரத்த செறிவு ஏற்படும் மற்றும் சருமத்தின் நிறமே ஆரஞ்சு நிறத்தில் மாறும். எனவே கேரட்டை அளவாக உட்கொண்டு, அதன் முழு பலனைப் பெறுங்கள்.
தக்காளி
ஆரோக்கியமான உணவுப் பொருள் தான் தக்காளி. ஆனால் இதில் க்ளைகோ அல்கலாய்டு என்னும் விஷமிக்க கெமிக்கல் நிறைந்துள்ளது. அதுவும் இது தண்டு மற்றும் இலைகளில் தான் இருக்கும். ஒருவேளை அதன் தண்டு அல்லது இலையை சாப்பிட்டால், அது நரம்புதளர்ச்சியை உருவாக்குவதோடு, வயிற்று உப்புசத்தை அதிகரித்து இறுதியில் இறப்பை ஏற்படுத்திவிடுமாம்.
உருளைக்கிழங்கு
பெரும்பாலானோருக்கு பிடித்த உருளைக்கிழங்கு கூட ஆபத்தானவை தான். அதுவும் இந்த பச்சையாக இருந்தால், அதில் க்ளைக்கோ அல்கலாய்டு என்னும் விஷம் நிறைந்திருக்கும். அப்போது அதனை உட்கொண்டால், உடலின் சக்தியானது கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து, கோமா வரை கொண்டு சென்று விடுமாம்
காபி
காபியை அளவுக்கு அதிகமாக குடித்தால், நரம்பு மண்டல பாதிப்பு, தூக்கமின்மை, தசை நடுக்கம் மற்றும் இதய படபடப்பு போன்ற பிரச்சனைகளை சந்திக்க வேண்டி வரும். எனவே ஒரு நாளைக்கு 2 கப்பிற்கு மேல் காபி குடிப்பதைத் தவிர்த்திடுங்கள்.
. எனவே இந்த ஆரோக்கியமான உணவுப் பொருளை அளவாக உட்கொள்ளுங்கள்.
பட்டை
பட்டைபட்டையில் கௌமரின் அதிகம் உள்ளது. பட்டையை அளவுக்கு அதிகமாக உணவில் சேர்க்கும் போது, அது புற்றுநோய் அல்லது கல்லீரல் நச்சுத்தன்மையை ஏற்படுத்தும். மேலும் ஒரு நாளைக்கு உடலுக்கு 2 கிராம் பட்டை சேர்த்தாலே போதும் என்று ஆய்வுகள் கூறுகிறது. எனவே அளவாக உட்கொண்டு, பலனைப் பெறுங்கள்.
பிரேசில் நட்ஸ்
பிரேசில் நட்ஸில் செலினியம் ஏராளமாக நிறைந்துள்ளது. செலினியம் உடலில் அதிகமாகும் போது நச்சுமிக்கதாக மாறுகிறது. எனவே பிரேசில் நட்ஸை அளவாக உட்கொள்ளுங்கள்.
நட்சத்திர பழம்
ஸ்நாக்ஸ் நேரங்களில் சாப்பிட இப்பழம் சிறந்தது. ஆனால் இப்பழத்தை அளவுக்கு அதிகமாக உட்கொண்டால், சிறுநீரகம் மற்றும் நிரந்தரமாக குறி புண் சிறுநீரக பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும். எனவே இப்பழத்தை அளவாக உட்கொள்ளுங்கள்.
பழனி மலைவாழும் சிவ ரூபமாகக் கருதப்படும் சித்தர்களைத் தேடிய பயணம் .
உலகம் ரகசியங்களால் நிரம்பப் பெற்றது என்றார் லீ மார்ட்டினேஸ் என்ற புகழ்பெற்ற எழுத்தாளர். ரகசியங்கள்தான் எளிதில் வசீகரிக்கும் கூட..
O
. மலை உச்சியில் இருக்கும் கோவில் தவிர புலிப்பாணி சித்தரின் உறைவிடம், நோய் தீர்க்கும் நவபாஷான சிலையை உருவாக்கிய போகரின் உறைவிடம் மற்றும் இன்னும் சில சித்தர்கள் என பழனி பற்றி அறிந்துகொள்ள வேண்டியது நிறையவே இருக்கிறது.
புலிப்பாணி சித்தரின் சமாதியிலிருந்து தேடலைத் தொடங்கினோம். சித்தரின் சமாதியை பராமரிக்கும் ஒருவர் கூறியது. ”போகரின் தலைமை சீடர்களில் ஒருவர்தான் புலிப்பாணி சித்தர். போகரின் சமாதி மலையின் மேலும், புலிப்பாணி சித்தரின் சமாதி அடிவாரத்திலும் இருக்கிறது.போகர் தலைமையில் அவருடைய சீடர்கள்தான் முருகனின் நவபாஷான சிலையைப் நிர்மாணம் செய்தார்கள். நவபாஷாண சிலை ஒன்பது வகை மூலிகைகளால் ஆனது. செவ்வாய் கிரகத்திலிருந்து வெளிப்படும் கதிர்வீச்சு பழனிமலை உச்சியின் பக்கம் அதிகம் வீசுவதால் அதற்கு எதிர்வீச்சாக இந்த நவபாஷான சிலை நிறுவப்பட்டது.தவிர இந்த சிலையிலிருந்து வெளியேறும் வீச்சு மலையைச் சுற்றி அதிர்வலைகளை ஏற்படுத்தியபடி இருக்கிறது. அந்த அதிர்வலைக்குப் பெருத்த மன நோயைத் தீர்க்கும் சக்தி உண்டு. சிலைக்குச் செய்யப்படும் அபிஷேகப் பாலை உண்பதால் உடல் உபாதைகள் குணமாகிறது. பஞ்சாமிர்தம் என்பது ஐவகை நிலங்களிலிருந்தும் உருவாகும் தேன், வாழை, வெல்லம், நெய், பேரிச்சையுடன் நவபாஷான சிலையின் சக்தியும் சேரும்போது அதை உண்பவருக்கு வல்லமை கிடைக்கிறது. பழனி மலையில் பஞ்சாமிர்தம் தரப்படுவதற்கான காரணமும் இதுதான்”
சாக்கடைச் சித்தரை. மலையடிவாரப் படிக்கட்டுப் பக்கத்தில் ஒருவர் தங்கும் அளவிலானதொரு குடிசைதான் அவர் இருப்பிடம். நாற்பது வருடத்திற்கு முன்பு அங்கு வந்தவர் அருகில் இருக்கும் சாக்கடை நீரைக் குடித்தபடி மட்டுமே உயிர்வாழ்ந்து கொண்டிருக்கிறார். அந்த இடத்தை விட்டு அசைந்ததும் இல்லை, யாரிடமும் பேசியதும் இல்லை. எப்போதவதுதான் கண் திறந்து பார்ப்பாராம். அந்த பார்வைக்காக நாங்கள் போன சமயம் அப்படி அல்லோல்கலப்பட்டு முந்திக்கொண்டிருந்தார்கள்.
நம்மைப் போல சாதாரண மனிதராகச் சுற்றித் திரியும் சுப்ரமணிய சித்தர். சித்தருக்கான எந்த அறிகுறியும் அவரிடம் இருக்காது அவரே பேசினாலேயொழிய சித்தர் எனத் தெரியாது. இவர்களில் வித்தியாசமானவர் புத்துடை சித்தர். யாராவது உடை வாங்கிக் கொடுத்தால் அதைப் போட்டுக்கொண்டு தன் பழைய உடையைக் கழற்றிவிடுவார். அந்த பழைய உடைதான் மக்களுக்கு அவர்தரும் அருள். சப்பாணி சித்தர்- கால் ஊனமானவர் என்றாலும் ஒரு இடத்திலும் யாரும் இவரை எளிதில் பார்த்துவிட முடியாது. வருடம் ஒருமுறை கொடைக்கானல் மலை உச்சியில் இருக்கும் பூம்பாறை முருகன் கோவிலுக்கு இவர் செல்லும்போது மட்டும் கண்ணில் காணலாம். மற்றபடி நாள் முழுதும் பழனி மலையைச் சுற்றித் திரிந்தபடியே இருக்கிறார். பழனி மலை ஆன்மீகத்துக்கு மட்டுமில்லை
நோய் தீர்க்கும் மலை பழனி மலை. முருகன் சிலைதவிர மலையைச் சுற்றி இன்னும் நிறைய நவபாஷானச் சிலைகள் நிறுவப்பட்டு இன்னும் தேடப்படாமலே இருக்கின்றன. ஆதி சித்தன் சிவன் தொடங்கி என்னற்ற சித்தர்கள் நாடு முழுவதும் இன்னும் ஜீவித்துக் கொண்டிருக்கிறார்கள். போகர் தொடங்கி, ஒரு காலத்தில் சமூகத்தை நெறிவழிப்படுத்தியது அவர்கள்தாம்.
Courtesy : jannal media
Sent from my iPad