நல்வழி
வெட்டனவை மெத்தனவை வெல்லாவாம் வேழத்தில்
பட்டுருவும் கோல்பஞ்சில் பாயாது - நெட்டிருப்புப்
பாரைக்கு நெக்குவிடாப் பாறை பசுமரத்தின்
வேருக்கு நெக்கு விடும். (பா-33)
பெரிய யானை மீது பட்டு, துளைத்து வரும் அம்பானது பஞ்சினைத் துளைக்காது.
நீண்ட இரும்புப் பாறைக்குப் பிளவுபடாத கருங்கற்பாறை, பச்சை மரத்தின் வேருக்கு பிளவுபடும்.
இவற்றைப் போலவே வன்சொற்கள் தோல்வியடையும்.
இனிய சொற்கள் வெற்றியடையும்.
No comments:
Post a Comment