Bhoo thatha's Blogspot

Search my older Blog

Thursday, September 10, 2015

தர்மங்களுக்கு தகுந்த பலன் கிடைக்கும்


தர்மா தர்மங்களுக்கு தகுந்த பலன் கிடைக்கும்

இந்தக் காலத்திலே அநேகம் பேருக்கு ஒரு கேள்வி உண்டாகிறது. என்ன என்றால் நீங்கள் சொல்கிறீர்கள், வேதத்துலே, சாஸ்த்ரத்திலே எல்லாம் இப்படி சொல்லி இருக்கிறது, இந்த மாதிரி நடந்துகொள்ள வேண்டும், இது மாதிரி நடந்து கொள்ளக்கூடாது என்று சொல்லி இருக்கிறது என்கிறீர்கள். அது பெரியவர்களும் சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள். ஆனால் ஜனங்கள் அதை நடைமுறையில் கொண்டு வரும்போது அது போலவே கொண்டு வருவதில்லை. இரண்டு வித்யாசம் வருகிறது. சாஸ்த்ரத்திலே சொல்லி இருக்கிறது ஒன்று, நாம் செய்வது ஒன்று. இதற்கு என்ன காரணம் இருக்கலாம்? முடியாது அல்லது தெரியாது என்று சொல்வதற்கு வழியில்லை. ஏனெனில் பெரியவர்கள் எல்லாரும் சொல்லிக் கொண்டும் செய்து கொண்டும் இருக்கிறார்கள். பின்பு என்ன காரணம் இருக்கலாம் என்று அநேகம் பேர் கேட்கிறார்கள். அதற்கு என்ன காரணங்கள் இருக்கலாம் என்பதை முன்னோர்கள் சிலவற்றையெல்லாம் கண்டுபிடித்து இருக்கிறார்கள். “வேதா வாக்யம் விததவசன:
விர்மரேவிதரோவா தர்மாதர்ம விபிரசனாம்
அனுதகோவாம் த்ருடாத்யாது உத்தோவாகயாம்
மஹமிதி தபோ விரிம்ருதி சந்த்யத்மாதீம்
மேதோதத்வாம் மிதித மஹதர் ஸர்வதோ நிவ்ருதாத்ம:”
என்ன சொல்கிறீர்கள்? வேதத்துலே இப்படி இருக்கிறது. திருட்டுத்தனம் செய்யக்கூடாது. பொய் சொல்லக் கூடாது. இன்னொருத்தனுக்கு ஹிம்ஸை செய்யக் கூடாது. அப்பா, அம்மா சொல்வதைக் கேட்க வேண்டும். அப்படி எல்லாம் சொல்லி இருக்கப்பா! அதனால் அதில் சொன்னபடி நாம் கேட்க வேண்டும். சொல்லும்போது அவனுக்கு என்ன தோன்றுகிறது? வேதத்திலே சொன்னதை எல்லாம் எப்படி நம்பமுடியும்? “வேதோ வாக் விததவசன: வேதத்திலே பொய் சொல்லி இருக்கிறார்களோ என்னவோ? அதனால் வேதத்தில் சொல்லி இருப்பதெல்லாம் நாம் கேட்கவேண்டும் என்று எங்கு இருக்கிறது? அதனால் வேதத்தில் சொல்லி இருக்கிறது நீ செய் என்று சொன்னால் எங்களுக்கு நம்பிக்கை வரமாட்டேங்கிறது.
நீங்கள் சொல்கிறீர்கள் வேதம் பெரியது என்று. எங்களுக்கு வேதம் பெரியது இல்லை என்கிற குதர்க்கத்தை மனதில் வைத்துக் கொண்டால் இந்த மாதிரி கர்ம மார்க்கத்தில் அவனைத் திருத்துவதற்கு வழி வருவதில்லை. நாம் என்ன சொல்கிறோம்? இங்கு பாரப்பா! வேதத்திலே சொல்லி இருக்கிறது என்று மட்டும் இல்லை. பகவானோ நாம் செய்த தர்மா தர்மங்களுக்கு தகுந்த பலனைக் கொடுப்பான் என்பது உண்மை, என்கிறோம்.
நாம் நல்ல கர்மாவைச் செய்தால் அதற்குத் தகுந்த மாதிரி பகவான் நமக்கு ஸத்பலத்தைக் கொடுப்பான். நாம் அஸத் கர்மாவை அதாவது கெட்ட கர்மாவைச் செய்தால் அதற்குத் தகுந்த மாதிரி துன்பத்தை பகவான் நமக்கு தருவான். அதனால் நாம் விதிநிஷேதங்களை அதிக்ரமிச்சால் நமக்கு வேண்டிய சுகத்தை பகவான் கொடுக்க மாட்டான் என்று சொல்கிறோம். அங்கே என்ன குதர்க்கம் சொல்கிறார்கள்? “வித்மரேனி புதிக்கரோவா தர்மா தர்ம ஸ்ரிபிரசனாம்” நீங்கள் சொல்கிறீர்கள், ஈஸ்வரன் வந்து நம் கர்மத்திற்கு தகுந்தாற் போல் பலத்தைக் கொடுப்பான் என்று. இத்தனை பேர் இருக்கிறோமே எல்லாவற்றையும் அவன் எப்படி ஞாபகம் வைத்துக் கொள்ள முடியும்? கோடிக்கணக்கான மக்கள் இருக்கிறோம். நாம் ஒவ்வொருத்தனும் செய்த கார்யத்தை இவன் சரியாகச் செய்தான். இவன் தவறு செய்தான், இவன் தர்மத்தைச் செய்தான். அதனால் இவனுக்கு தர்மத்துக்கு தகுந்த பலன் கொடுக்கணும். இவனுக்கு அதர்மத்துக்குத் தகுந்த பலன் கொடுக்கணும் என்பதெல்லாம் அவன் ஞாபகம் வைத்துக் கொள்வானா என்பது எங்களுக்கு நம்பிக்கை வரமாட்டேன் என்கிறது. என்னவோ நம் அதிர்ஷ்டத்துக்கு நம் எதிரில் அவன் வருவதில்லை என்றால் நாம் எவ்வளவோ தவறு செய்கிறோம். ஆனால் அவனுக்கு ஞாபகமே இல்லாமல் நமக்கு ஸ்வர்க்கத்தைக் கொடுத்து விடுகிறான்.. அப்படி ஆகக் கூடாதா? அப்படி என்கிற குதர்க்கத்துக்கு வரணும். இல்லை அப்பா! யமன் என்பவன் ஒருவன் இருக்கவே இருக்கிறான். யார் என்ன தவறு செய்தாலும் நல்லது செய்தாலும் அவனிடம் போய் அவன் நீ செய்தது தப்பு. அதனால் உனக்கு இந்த சிக்ஷை என்பதை அவன் சொல்லப் போகிறான். யமன் கிட்ட போகாமல் யாருடைய கேஸும் பைஸல் ஆகவே ஆகாது.
ஒரு முறை எங்க மடத்திலே பெரிய டாக்டர் இருந்தார். அவர் சொன்னாராம், நாம் எல்லோருக்கும் ஒரு சம்பந்தம் இருக்கிறது. என்ன சம்பந்தம்? வேறு எந்த சம்பந்தம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் நம்ம இரண்டு பேரும் ஒரே யமன்கிட்ட போகப் போகிறோம் என்ற சம்பந்தம் இருக்கவே இருக்கிறது. “ஹக்ராஜ யமக்ராஜ்யத்வம்” நான் எந்த யமனிடம் போக வேண்டி இருக்கிறதோ அதே யமன் கிட்ட நீயும் போக வேண்டி வரும். அதுதான் நம் இருவருக்கும் சம்பந்தம் என்று ரொம்ப தமாஷாகச் சொன்னார். அதனால் யமதர்மராஜன், அவன் மட்டும் நீ செய்ததற்கு தகுந்த சிக்ஷைதான் கொடுப்பான் என்று சொன்னால் “அந்த கோவாம்த்ருடாத்வாது” அதெல்லாம் பொய்! யமனும் கிடையாது. என்னைப் பார்க்கிறதும் கிடையாது. நீங்கள் என்னவோ யமன் என்று ஒன்றைக் கல்பித்து விட்டு எங்களை பயமுறுத்திக் கொண்டு இருக்கிறீர்கள் என்று அங்கே ஒரு குதர்க்கம். அப்படி இல்லையப்பா! அப்படி எல்லாம் சொல்லாதே. நீ இந்த சரீரத்தை விட்டுப் போயாச்சு என்று சொன்னால் அங்கே போகத்தான் வேண்டும் யமன் கிட்ட. வேற மார்க்கமே இல்லை. அப்படியா? பொய் என்றாலும் நீங்கள் சொல்வதை ஒத்துக் கொள்கிறோம் என்று வைத்துக் கொள்ளுங்கள். நான் போவேன் என்று என்ன நிச்சயம்? நான் என்றைக்கும் இப்படியே இருப்பேன் என்று வைத்துக் கொள்ளுங்களேன். நான் செத்தால் அல்லவா நீங்கள் சொல்வது எல்லாம்? எனக்கு என்னவோ நான் சாகவே மாட்டேன் என்று தோன்றுகிறது. அப்போது என்ன செய்வது? நாம் எப்போதும் இந்த சரீரத்தோடு இப்படியே இருக்கலாம். அப்போது யமன் ஒன்றும் பண்ணமுடியாது. இந்த மாதிரி எவ்வளவோ நாம் செய்கிற தப்பிதங்களை மறைப்பதற்கு நாம் செய்யும் தப்பிதங்களை சரி என்று சாதிப்பதற்கு இந்த மாதிரி எவ்வளவோ சமாதானங்களைக் கண்டுபிடித்து எப்போதுமே ஒரு சாஸ்த்ரோத்தமான வ்யவஸ்தையை கவனிக்காமல் சரீரத்தை மட்டும் வளர்த்துக்கொண்டு உட்கார்ந்து இருப்போம்.
ஆனால் நாம் இந்த மாதிரி பேசலாமா? இந்த மாதிரி குதர்க்கத்தைச் செய்யலாமா? அப்பேர்ப்பட்ட ஓர் உயர்ந்த ஸநாதன பரம்பரையில் வந்து எப்பேர்ப்பட்ட மஹான்களுடைய பரம்பரையில் வந்து இந்த மாதிரி வார்த்தைகள் நம்முடைய வாயிலிருந்து வரலாமா? இப்பேர்ப்பட்ட பாவனைகள் நம்முடைய மனசுகளில் வரலாமா? முதலில் என்ன சொன்னான் அவன்? “வேதாவாக்யே விதத்வசனா” வேதங்கள் ஏன் பொய்யாக இருக்கக் கூடாது என்று சொல்கிறான். வேதத்தைப் பற்றி நம் முன்னோர் என்ன சொல்லியிருக்கிறார்கள்? பகவத் பாத சங்கரர் தங்கள் அத்யத்திலே “பிரதீபவத் ஸர்வார்த்த பாகதத்வா ஸர்வக்ஞ கல்பஸ்ய வேதஸ்ய” என்று சொன்னார். எப்படி ஓர் இடத்திலே ஒரு தீபத்தை வைத்தால் அந்த தீபத்தின் வெளிச்சத்திலே அங்கு இருக்கிற ஒவ்வொரு பொருளும் ப்ரகாசிக்குமோ அதேபோல் வேதம் ஸர்வார்த்தங்களுக்கும் ப்ரகாசமானது. ஸர்வக்ஞ கல்பஸ்ய. எப்படி ஸர்வக்ஞனான ஒரு யதி எல்லாவற்றையும் சொல்லுவானோ- ஸர்வக்ஞன் என்ற பதத்திற்கு அதுதானே அர்த்தம்? ஸர்வம் என்றால் எல்லாம் தெரிந்தவன் ஸர்வக்ஞன். வேதமும் ஸர்வக்ஞகல்பம். அப்பேர்ப்பட்ட ஸர்வக்ஞ கல்பம் என்று சொன்னால் ஸர்வக்ஞன் மாதிரி என்று அர்த்தம். அப்படி இருக்கும்போது அப்பேர்ப்பட்ட வேதத்தை பொய் என்று ஒரே வார்த்தையில் தள்ளிவிட்டால் அதைவிட மூர்க்கத்தனம், அதைவிட அவிவேகம் இன்னொன்று இருக்குமா? நிஜமாக வேதம் சொல்வது பொய்யாக இருந்தால் வேதம் ப்ரமாணமே இல்லை என்று சொன்னால் சங்கரர் மாதிரி மஹான்கள் வேதத்துக்கு அவ்வளவு ப்ராமண்யத்தைக் கொடுத்துப் பேசிக் கொண்டிருந்தார்களே, அப்போது அவர்கள் எல்லோரும் புத்தி இல்லாதவர்கள் என்று அர்த்தமா? அவர்கள் யாருக்கும் புத்தி இல்லை, நமக்கு புத்தி இருக்கிறது என்று நாம் நினைத்துக் கொண்டு இருந்தோமானால் முதலில் புத்தி இல்லாத ஆள் நான் தான் என்று ஆகிவிடும். அதனால் வேதத்து விஷயத்துல அது அப்ரமாணம் என்று சொன்னால் அது மிக மிக அபராதம். அதனுடைய மஹிமையை ப்ரதி ஒரு தார்தகிதனும் சொல்லுவான்.
மீதி அதிகாரங்களில் எவ்வளவு வித்தியாசம் இருந்தாலும் வேதம் விஷயம் வரும்போது எந்த சாஸ்த்ரகாரனைக் கேட்டாலும் அது விஷயத்திலே ப்ரச்னையே கிடையாது. மீமாம்சகாரர்கள் சொல்வார்கள், வேதம் அபோவவேவம். கார்கிகள் சொல்வாகள். வேதம் மித்ரபிரமிதம். இரண்டு பேருக்கும் ப்ராமாண்யம் கொடுக்கும்போது சமமாகத்தான் கொடுப்பார்கள். 
“வேதஸ்ய புருஷகர்த்தா நஹி ஆதுர்ஸாவிதஹா இந்த்ர விலோக்ய
நிர்மாண நிபுண பரமேஸ்வர:”
யாரும் உன் மாதிரி என் மாதிரி ஆட்கள் வேதத்தை எழுதி வைக்கவில்லை. த்ரைலோக்ய நிர்மாண நிபுண: மூன்று உலகங்களையும் அனாயாசமாக ஸ்ருஷ்டிக்கக்கூடிய அபாரமான சாமர்த்யம் உள்ள பரமேஸ்வரன் அந்த வேதத்தை உபதேசித்தான். அதனால் வேதம் தர்மா தர்ம வ்யவஸ்தையைச் சொல்லியிருக்கிறது. அந்த வேதமே பொய் ஆகலாம் என்ற வார்த்தை மட்டும் நம் மனத்தில் உள்ளது அந்த பாவனை வரக்கூடாது. அந்த வார்த்தையும் வாயிலே வரக் கூடாது. இந்த தர்மா தர்ம வ்யவஸ்தையை ஈஸ்வரன் ஒரு வேளை மறந்தாலும் மறக்கலாம். ஏன் ஒரு சமயம் ஞாபகம் இல்லாமலும் போகலாம். அப்படி இருந்தால் அவனை ஈஸ்வரன் என்று நாம் சொல்லவே மாட்டோம். இந்த மறதி என்பது ஈஸ்வரனுக்கும் இருந்தால் அவனை ஏன் நாம் ஈஸ்வரன் என்று நாம் பூஜிக்கணும்? அவனும் நம்ம மாதிரியே ஆகிவிட்டதே. ஈஸ்வரன் விஷயத்துலே சொல்வார்கள். எந்தவிதமான தோஷங்களும் இல்லாதவன் என்று. என்ன தோஷங்கள்? நமக்கு எல்லாம் சில தோஷங்கள் இருக்கிறது. அந்த தோஷம் ஒன்றும் அவனிடம் இல்லை. என்ன தோஷம் என்றால் கிரமம், ப்ரமாதம், விப்ரவித்த, கரணா அபாடவம் என்ன க்ரமம் என்று சொன்னால் ஒரு விஷயத்தை அது எப்படி இருக்கிறதோ அப்படித் தெரிந்து கொள்ளாமல் வேறு விதமாகத் தெரிந்து கொள்வது க்ரமம்.
சாதாரணமாக வேதாந்திகள் சொல்வதைக் கேள்விப்பட்டிருக்கலாம். அங்கே ஒரு கயிறு இருந்தால் அதைப் பாம்பு என்று நினைத்துக் கொண்டு விட்டான். அது ப்ரமாதம். அங்கு இருப்பது வேறு; இவன் நினைத்தது வேறு. இந்த தோஷம் நமக்கு வரலாம். ஈஸ்வரனுக்கு கிடையாது. இன்னொன்று ப்ரமாதம். ப்ரமாதம் என்று சொன்னால் தமிழில் ரொம்ப ப்ரமாதமாக இருக்கிறது என்று சொல்வோமே அந்த ப்ரமாதம் இல்லை. ப்ரமாதம் என்று சொன்னால் ஸம்ஸ்க்ருதத்திலே தவறு. விஷயம் தெரியும்; ஆனால் அதைச் சொல்லும்போது ஒன்று சொல்வதற்குப் பதிலாக இன்னொன்றைச் சொல்லி விடுவோம். நமக்கு எவ்வளவோ இப்படி நம் ஜீவிதத்திலே நடந்து கொண்டு இருக்கிறது. பின்பு அதை சொல்வதற்குத் தவறுதலாக ஆகி விட்டது. இதைச் சொல்வதற்கு பதிலாக வேறு சொல்லி விட்டேன். நமக்கு சாதாரணமான தோஷம் அது. ஈஸ்வரனுக்கும் அதுமாதிரி தோஷம் இருந்தால் அவன் ஈஸ்வரன் இல்லையே. அதனால் க்ரமம் என்பது தப்பான அறிவு. ப்ரமாதம் என்பது தவறு. இன்னொன்று விப்ரதித்த: விப்ரதித்த: என்ற வார்த்தைக்கு அர்த்தம் ஏமாற்றணும் என்கிற அபிப்ராயம்.
நமக்கு அந்த மாதிரி அபிப்ராயம் இருக்கும். அதனால் ஒன்றுக்கு பதிலாக இன்னொன்று தெரிந்து வேண்டுமென்றே சொல்லுவோம். அவனை தப்பான வழிக்குக் கொண்டு போகணும் என்கிற அபிப்ராயம். அதனால் அவன் எப்படி போகணும் என்று கேட்டால், இப்படி போகணும் என்று சொல்வதற்கு பதிலாக அப்படி போய்க்கோ என்று சொல்வோம். அவன் பாவம் அப்படி போய் கடைசியில் எங்கேயோ போவான். ‘ஓ! அந்தப் பெரியவரிடம் கேட்டேனே! அவர்தானே இப்படி போகச் சொன்னார்? இப்படி போனால் சரி என்று நினைத்துக் கொண்டு வந்தேன் ஆனால் எங்கெங்கோ வந்து விட்டேன், என்று சொல்வான். கடைசியில் விஷயம் என்னவென்று கேட்டால் இவருக்குத் தெரியும் ஆனாலும் அவனைக் கொஞ்சம் அழவைக்கணும், அலைய வைக்கணும் என்பதற்காக இப்படி போ என்று சொல்லிவிட்டார். அந்த தோஷம் மனுஷ்யனுக்கு இருக்கலாம். ஈஸ்வரனுக்குக் கிடையாது. விப்ரதித்த:
முன்பு ஒரு பண்டிதர் இருந்தாராம். அந்த பண்டிதர் வந்து பாவம் சின்னப் பையன்கள் ஸப்தங்கள் படிக்கும்போது “அகாரம் சொல்லுங்கோ ராம ஸப்த:” என்று சொல்லிக் கொண்டிருந்தார். கிடையாது ‘இ’ காரம்தான் சொல்லுவேன் என்று சொல்லிக் கொண்டு போனாராம். சும்மா இருக்காமல் அவன் ஒழுங்காக ‘அ’ காரரார்த்த ஸப்தம் சொல்லும்போது இவர் “அக”£ரம் சொல்லாதேடா “இ”காரம் சொல்லு என்று, இவர் பெரிய பண்டிதர் ஆச்சே அதனால் தான் தப்பாகச் சொல்கிறோமோ என்று அஹங்காரம் ஸகஜமாகிவிட்டது. அவனுடைய அசல் வாத்யார் “ஏண்டா இப்படி சொல்றே இல்லை?” என்று கேட்டதற்கு “அகாரம்தான் சொல்லிக் கொண்டு இருந்தேன். அந்தப் பெரிய சாஸ்திரிகள் வந்துவிட்டார். அவர் வந்து அகாரம் சொல்லாதே இகாரம் சொல்லு என்று சொன்னார்.” என்றான். அப்போ இவர் போய் அந்த சாஸ்திரிகளிடம் “என்ன அவன் ஒழுங்காகப் படித்துக் கொண்டிருந்த சமயத்திலே நீங்கள் போய் “இ’காரம் சொல்லு என்று சொன்னீர்களாமே!” என்றதற்கு “இல்லை தமாஷுக்கு சொன்னேன்.” என்றாராம். நீங்க தமாஷ் பண்ணுவது நமக்கு அப்யாஸம் இருக்கலாம். ஈஸ்வரன் மட்டும் அதை ஏற்றுக்கொள்ளவே மாட்டான். அதனால் அந்த “விப்ரதிப்த” என்பது அவனுக்குக் கிடையாது. அதேபோல் ‘கரணாபாதவம்’ என்று சொன்னால் இந்த்ரியங்கள். அஸாமர்த்தமாக இருக்கிறது என்று அர்த்தம். அதாவது இந்த்ரியங்களுக்கு ஸாமர்த்தம் இல்லாமல் போனால் கொஞ்சம் விபரீதமாக ஆகும். எப்படி ஆகும் என்றால் ஓர் இடத்தில் சொன்னார், ஒருவருக்கு சரியாகப் பேச வராது. உச்சாரணம் சரியாக இல்லை. அதனால் அங்கே என்ன ஆயிற்று என்றால் ஒரு பதத்தை உச்சாரணம் செய்வதற்கு பதிலாக இன்னொரு பதத்தை உச்சாரணம் பண்ணினார். என்ன அப்படி உச்சாரணம் பண்ணினால் அவ்வளவு வித்யாசம் வரும் என்கிறீர்களா? அர்த்தத்துலே, ஸம்ஸ்க்ருதத்திலே துளி வித்யாஸம் வந்தாலும் அர்த்தம் பஹு விபரீதமாகிவிடும். எப்படி என்றால் “வசன ஸ்வஜனைமாபொது ஸகஸம் சகலம் சகுர்த்தோ” என்றார்.
ஒருவர் வந்து பாவம் ஸம்ஸ்க்ருதத்திலே பேசணும் என்று ஆசைப்பட்டார். ஸகார, சகாரங்களுக்கு வித்யாஸம் தெரியவில்லை. அந்த வார்த்தை சுத்தம் இல்லை என்று வைத்துக் கொள்ளுங்கள். சஜனாள் வந்தார்கள் என்பதற்கு பதிலாக ஸ்வெஜனாள் வந்தார்கள் என்று சொல்லிவிட்டால் தவறு. ஸ்வஜனாள் என்று சொன்னால் எனக்கு வேண்டிய ஆட்கள் என்று அர்த்தம். “ஸ்வெஜனங்கள்” என்று சொன்னால் பாவிகள் என்று அர்த்தம். இதுமாதிரி மாற்றி சொன்னால் என்ன செய்வது? ஜாஸ்தி வித்யாஸம் வரவில்லை. ஸகாரத்துக்கு பதிலாக சகாரம் போட்டு விட்டான். இவ்வளவு வைபரீத்யம் வந்துவிட்டது. ஸகலம் சகலம். ஸகலம் என்று சொன்னால் முழுசாக மொத்தம் என்று அர்த்தம். சகலம் என்று சொன்னால் உடைத்து இரண்டு ஆக்கியது என்று அர்த்தம். நீங்கள் ஸகலம் எடுத்துக் கொள்ளுங்கள் என்பதற்கு பதிலாக சகலம் எடுத்துக் கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டான். அவன் அதை உடைத்து விட்டான். “ஏன் ஐயா! இப்படி பண்ணினாய்?” என்று கேட்டதற்கு “நீங்கள்தானே சகலம் எடுத்துக்கொள் என்று சொன்னீர்கள்?” என்றானாம். அதுமாதிரி இன்னொன்று. ஒரு வைத்யரிடம் போய் இந்த “ஔஷதத்தை” எப்படி எடுத்துக்கொள்ள வேண்டும் என்று கேட்டதற்கு “ஸகுர்த்” எடுத்துக்கொள் என்பதற்கு பதிலாக “அசகுர்த்” எடுத்துக்கொள் என்று சொன்னாராம். “ஸகுர்த்” என்று சொன்னால் ஒரு தடவை. அதுவே “அசகுர்த்” என்று சொன்னால் அநேகம் தடவை. “ஸகுர்த்” என்பதற்கு பதிலாக இப்படிச் சொன்னால் அவனுக்கு என்ன தெரியும்? அந்த வந்த பேஷண்டுக்கு ஸம்ஸ்க்ருதம் தெரியவில்லை. அவன் வேண்டுமென்று சொல்லவில்லை. இவனை அவமதிப்பதற்காகவும் சொல்லவில்லை. இவனுக்கு சரியாகப் பேச வரவில்லை. ஒன்றுக்கு பதிலாக இன்னொன்றை சொல்லிவிட்டான். இது எல்லாம் எதனால் வந்தது ‘கரணாபாதத்தினாலே’ இந்த்ரிய அசாமர்த்தியத்தினாலே வந்தது. அதேபோல் அவன் சொல்வது இவனுக்குக் காதில் விழவில்லை. அப்போதும் விபரீதங்கள் அதிகம்.
ஒன்று நீங்கள் கேட்டிருக்கலாம் என்று நினைக்கிறேன். ஒரு செவிடன் இருந்தான், அவனுக்கு ஒரு நண்பர். அந்த நண்பருக்கு உடம்பு சரியில்லாமல் இருந்தது. அவர் யோகக்ஷேமம் விசாரிக்கணும் என்று இவர் போனார். ஆனால் இவருக்கு செவிடு, கேட்காது. அதனால் ஆரம்பத்திலேயே தீர்மானம் பண்ணிக்கொண்டு விட்டார். நான் அவரைக் கேட்பேன். இன்னின்ன ஜவாப் சொல்லுவார் அதற்கு நான் இப்படி சொன்னால் சரி. நான் என்ன கேட்கலாம் முதலில்? “என்ன எப்படி இருக்கேள்?” என்று கேட்பேன். அவர் “பரவாயில்லை நன்றாக இருக்கிறேன்.” என்பார். “ரொம்ப ஸந்தோஷம்” என்று சொல்லிவிடுவேன். “என்ன மருந்து எடுத்துக் கொள்கிறீர்கள்” என்று கேட்பேன். “ஏதோ சரியான மருந்துதான் எடுத்துக் கொள்கிறேன்” என்பார். “ரொம்ப நல்லது. அந்த மாதிரிதான் எடுத்துக்கணும்” என்று சொல்லலாம். பின்பு “யார் டாக்டர்?” என்று கேட்பேன். அவர் ஒரு பெரிய டாக்டரின் பெயர் சொல்லுவார். “ரொம்ப நல்லவர் அவர்கிட்டதான் காண்பிக்கணும்” என்று சொல்லுவேன். இப்படி நினைத்துக் கொண்டு போனார். அங்கே போனால் அவனுக்கு எப்படி இருக்கிறது என்றால் ரொம்ப நாளாக அந்த வியாதியை அனுபவித்து, அனுபவித்து போதும்போதும் என்று ஆகி விட்டது. “எப்படி இருக்கிறீர்கள்?” என்று இவன் கேட்டான். அதற்கு “அவன் எப்படி இருக்கேன், சாவதற்குத் தயாராக இருக்கேன்” என்று சொன்னாராம். அதற்கு இவன் “ரொம்ப ஸந்தோஷம்” என்று சொன்னானாம். “என்ன மருந்து எடுத்துக் கொள்கிறீர்கள்” என்று கேட்டானாம். அதற்கு “அவர் மருந்தா! இனி ‘பாலிடால்’ எடுத்துக் கொள்வதுதான் பாக்கி” என்றாராம். அதற்கு இவன் “நல்ல மருந்து எடுத்துக் கொள்ளுங்கள்” என்று சொன்னானாம். “யார் டாக்டர் என்று கேட்டான்?” அதற்கு “அவர் யமன்தான் வரணும்” என்றாராம். அதற்கு இவன் “ஓ நல்ல டாக்டர்” என்றானாம். காது கேட்காததனாலே எவ்வளவு அனர்த்தம் ஆகிவிட்டது? இந்த மாதிரி இந்த்ரியங்களுடைய அசாமர்த்தியத்தினாலே எவ்வளவோ தப்பிதங்கள் நடப்பதற்கு நமக்கு வழி உண்டு. ஈஸ்வரன் விஷயத்துலே இந்த மாதிரி எதற்கும் அவகாசம் இல்லை. அதனால் அவனை “நித்ய நிர்தோஷி” என்றைக்கும் எந்தவிதமான தோஷமும் இல்லாதவன் ஈஸ்வரன். அப்பேர்பட்ட ஈஸ்வரன் விஷயத்துலே அவனும் தர்மாதர்ம வ்யவஸ்தையை மறந்து போயிருக்கலாம். நம்ம விஷயமும் அவன் மறந்து போகலாம் என்று சொல்ல அவகாசமே இல்லை. அதனால் அந்த வார்த்தையையும் சொல்லாதீர்கள்.
அடுத்தது “அந்தகோவா வ்ருஷாஸ்யா” என்பது. யமன் இருப்பதே தெரியாமல் இருக்கலாம். இவ்வளவு ம்ருத்யு இதிகாச புராணங்கள் எல்லாமே இப்படி ம்ருதன் ஆனவனுக்கு யமன் ஸந்நிதியிலே அவனுடைய தர்மா தர்மத்துக்கு தகுந்தமாதிரி வ்யவஸ்தை நடக்கும் என்று சொல்கிறபோது அது எல்லாம் ஒரே வார்த்தையிலே பொய் என்று சொல்வது தவறு. கடைசியில் சொன்னான் “ம்ருத்யோ மார்த்யாமா:” “இல்லை. அதெல்லாம் ஸத்யமாக இருக்கட்டும் ஓய் நான் செத்தால்தானே இதெல்லாம். நான் சாகவே மாட்டேன்.” அப்படி என்று சொன்னால் அதைவிட முட்டாள்தனம் இன்னொன்று இருக்குமா? என்ன! தர்மராஜனிடம் யக்ஷன் கேட்டான். “மஹாபாரதத்திலே ஆச்சர்யமானது எது?” என்று கேட்டான். அப்போது தர்மராஜன் பதில் சொன்னான் என்றால்,
“அஹன் அஹனி பூதானி ப்ரதி விந்தி யமாலயம்”
சேஷாத் காரஞ் சந்தி ஆத்மரிஜந்தரத் பரம்”
தினந்தோறும் அநேகம் பேர் செத்துப் போய்க் கொண்டே இருக்கிறார்கள். அதில் நாம் பார்த்துக் கொண்டே இருந்தும் நாம் மட்டும் நினைத்துக் கொள்கிறோம், ‘நான் மட்டும் சிரஞ்சீவியாக இருப்பேன். நான் சாக மாட்டேன். நான் என்றைக்கும் இப்படியே இருப்பேன்.’ அப்படி என்று நான் நினைத்துக் கொள்கிறோம். இதைவிட ஆச்சர்யம் இன்னொன்று இல்லை. அப்போது ப்ரதி ஒருத்தனும் போக வேண்டியதுதான் என்று சொல்கிறீர்களா? இல்லை யாராவது இருப்பார்களா? அது கிடையவே கிடையாது. எப்பேர்ப்பட்ட மஹான்கள் எல்லாம் இன்று இல்லை. எப்பேர்ப்பட்ட மஹான்கள் எல்லாம் நம்முடைய இந்த நாட்டில் இருந்தார்கள்? அகஸ்தியர் பற்றிச் சொல்கிறோமே அவர் ஸமுத்ரத்தையே ஆசமனீயம் பண்ணினார் என்று சொல்கிறோம். விஸ்வாமித்திரர் பற்றிக் கேட்டிருப்போமே, அவருடைய மஹிமை எப்பேர்ப்பட்டது? அவர் ஒருத்தனிடம் யாகம் நடத்தினார். “நீ இப்போது சரீரமாக ஸ்வர்க்கத்துக்குப் போகலாம்” என்று சொல்லி, அவன் மேலே போனபோது தேவதைகள் ஒத்துக்கொள்ளவில்லை. “சரீரமாக யாரும் ஸ்வர்க்கத்துக்கு வரமுடியாது ஐயா!” என்று சொல்லி விட்டார்கள். விஸ்வாமித்திரர் தன்னோட தபோ பலத்தினாலே மேலே தள்ளிக் கொண்டு இருந்தார். தேவதைகள் அவனைக் கீழே தள்ளிக் கொண்டு இருந்தனர். அப்போது இவர் என்ன பண்ணினார் என்றால் “அந்த ஸ்வர்க்கத்தில் உனக்கு அவகாசம் இல்லாவிடில் இன்னொரு ஸ்வர்க்கம் உனக்காக ஸ்ருஷ்டி செய்கிறேன்.” ஸ்வர்க்கத்துக்கு “ப்ரதி ஸ்வர்க்கம்” ஸ்ருஷ்டிச்சார்.
அவர்கூட எங்கே? வஸிஷ்டர் இருந்தார். அவருடைய சாமர்த்தியம் எப்படிப்பட்டது? நாம் யூகிக்கக்கூட முடியாது. அவர்கிட்ட விஸ்வாமித்திரர் இந்த ப்ரும்மரிஷி ஆவதற்கு முன்னால் ராஜாவாக இருந்த சமயத்துலே வஸிஷ்டரிடம் இருந்த ஒரு ஹோமகுண்டத்தை அபேக்ஷித்து கேட்டார். வஸிஷ்டர் சொன்னார் “கொடுக்க முடியாது. இது ஹோமகுண்டம்.” என்று. “இது வேண்டும். நான் இங்கு ராஜாவாக இருக்கிறேன் நான் ராஜா சொல்றேன் கேட்க மாட்டாயா?” என்றாராம். “நீங்கள் ராஜா என்றால் ராஜா எப்படி இருக்கணுமோ அப்படி கம்பீரமாக இருப்பது நல்லது. நீங்கள் ராஜா என்று சொல்லி எல்லோரும் எல்லாவற்றையும் கொடுக்கணும் என்று பார்த்தால் அது சாத்யமாகாத கார்யம்” என்று சொல்லி விட்டார். அப்போது “பலாத்காரமாகக் கொண்டு போனால் என்ன செய்வீர்கள்?” என்று கேட்க “உங்களுக்கு கொண்டு போகிற சக்தி இருந்தால் நான் ஏன் வேண்டாமென்று சொல்லப் போகிறேன்.” “அப்படியானால் ஒரு கை பார்க்கிறேன்.” “பார்த்துக்கொள்ளுங்கள்.” “என்னிடம் எவ்வளவு சைன்யம் இருக்கிறது தெரியுமா? தெரியும். இவ்வளவு சைன்யத்தோடு நான் வந்தால் என்ன பண்ணுவீர்கள்?” என்றார். “நான் இப்படியே உட்கார்ந்திருப்பேன்.” என்றார். அவர் அசந்து போய் விட்டாராம். என்னடா இது! இந்த மனுஷர் இப்படி ஜவாப் சொல்கிறார் என்று நினைத்து, “அப்படியானால் யுத்தம் பண்ணுகிறேன்.” என்றார். “உங்களுக்கு சக்தி இருந்தால் பண்ணுங்கோ. சரி அந்த ஸஸ்தங்கள் எல்லாம் ப்ரும்மகந்தத்துக்கு முன்னால் ஒன்றும் இல்லை” என்றாராம்.
ஒரு சமயத்தில் சரீரத்தை விட வேண்டிவரும்போது இந்த சாதாரண ஆட்களைப் பற்றி என்ன சொல்வது? 
“தத் பாவ்ருச்ச ப்ரபவத தனோ தேவ குபேர வர்க்கே
கால: கீடானி வல பலயாமாஸதான ஜயாத்ம”
அப்பேர்ப்பட்டவர்கள் புறப்பாடுகள் என்று யோசிக்கவும் முடியாது நாம். அவர்களையும்கூட உதயநேரத்தில் அந்த யமனானவன் ஒரு க்ஷணத்திலே எடுத்துக்கொண்டான் என்கிறபோது மீதிப்பேர்கள் விஷயத்துலே என்ன சொல்வது? அதனால் நான் நித்யனாக இருப்பேன் என்று நினைத்தால் அது மிகப் பிசகானது. அதனால் இப்பேர்ப்பட்ட சமாதானங்களைச் சொல்லிக் கொண்டு நாம் தர்மாதர்ம வ்யவஸ்தையை உல்லுங்கனும் செய்து யதீஷ்டமாக ஆசரத்தை செய்கிறோமே அது மிகவும் தவறானது. வேதம் ப்ரமாணம் ஈஸ்வரன் நாம் செய்த தர்மாதர்மங்களுக்குத் தகுந்த பலத்தைத் தருவான். நாம் என்றைக்காவது ஒருநாள் சரீரத்தை விடவேண்டியதுதான். அப்போது யமன் ஸந்நிதியிலே நம்முடைய திருக்கட்டை வெளிப்படுத்தத்தான் வேண்டும். அப்போது நாம் தர்மத்தைச் செய்திருந்தால் அதற்கு தகுந்த மாதிரி பலன். மஹாபாரதத்திலேயே கடைசியிலே தர்மராஜனை அந்த ஸர்க்காரோஹனை பர்வத்துலே தர்மராஜனுக்கு அந்த நரக துக்கத்தை ஒரு க்ஷணம் காட்டுவார்கள்.
வில்லூதனாதிகள் எல்லாம் ஸ்வர்க்க சுகத்தை அனுபவித்துக் கொண்டு இருப்பார்களாம். தர்மராஜனுக்கு ரொம்ப ஆச்சர்யமாகிவிட்டது. என்ன இது? நான் என்னவோ எல்லாம் தர்மத்தைத்தான் பண்ணினேன். ஆனால் நரகதுக்கம் காட்டினான் இவனோ பிறந்த அன்றிலிருந்து அக்ரமத்தையே பண்ணிக்கொண்டு வந்தான், துரியோதனன் அவனுக்கு ஸ்வர்க்கத்தைக் காட்டினீர்கள். புரியவில்லையே என்று சொன்னான். “இல்லை நீங்கள் முதலில் எந்த தர்மத்தைச் செய்தீர்கள்? துளி அதர்மம் இடையில் நடந்து விட்டது. ரொம்பத் துளி. அந்த துரோணரை ஸம்ஹாரம் பண்ணக்கூடிய சமயத்துலே “அஸ்வத்தாமாஹல: குஞ்சர: என்று சொன்னீர்கள். ஆனாலும் துளி அதர்மம் நடந்ததுனாலே உங்களுக்கு சும்மா அது தாங்கக்கூடிய அதர்மம்தான். உங்களுக்கு நரக வாசல் இல்லை. அந்த நரகவாசிகளைப் பார்க்கிற அளவு மட்டும் உங்களுக்கு அதர்மம் நடந்துவிட்டது. அதேபோல் அவனோ எவ்வளவோ தவறுகள் பண்ணினான். அதிலே துளி தர்மத்தைச் செய்தான். அதனால் அந்த ஸ்வர்க்க சுகம் கொஞ்சமாக. ஆனால் இப்போது நரகத்துக்கு அனுப்பப் போகிறோம் என்று மஹாபாரதத்துலே சொல்வது உண்டு. அதனால் அந்த தர்மாதர்ம வ்யவஸ்தை சாஸ்த்ரத்துலே சொல்லப்பட்ட வ்யவஸ்தை மிகப் ப்ராமாணிகமானது. அதனால்தான் பகவான் பகவத் கீதையிலே அர்ஜுனனுக்கு எல்லாம் உபதேசம் பண்ணி ஒரு வார்த்தை சொன்னார்.
“தஸ்மாத் சாஸ்த்ரம் ப்ரமாணம் தே
கார்யா கார்ய வ்யவஸ்திதௌ
ஜ்ஞாத்வா சாஸ்த்ர விதானோக் தம்
கர்ம கர்து மிஹார்ஹஸி”
அதை மட்டும் ஞாபகத்திலே வைத்துக்கொள். “கார்யா கார்ய வ்யவஸ்திதௌ சாஸ்த்ரம் ப்ரமாணம்” இது கார்யம். அதாவது இது செய்ய வேண்டும். இது செய்யக்கூடாது. இந்த இரண்டு விஷயத்துலே சாஸ்த்ரம் ப்ரமாணம். சாஸ்த்ரம் என்று சொன்னால் முக்யமாக வேதத்துக்கு சொல்லுவோம். பின்பு அதை அனுசரித்து வந்து ஸ்ம்ருதி, தர்ம சாஸ்த்ரங்கள் எல்லாம். அப்படி பகவானும் பகவத் கீதையிலே உத்தரவு செய்தான். இந்த விஷயத்தை நாம் எப்போதும் மனத்திலே வைத்துக்கொண்டால் நம்மால் தவறு நடக்காது. இந்தப் பாபங்கள் நம் மனத்தில் இல்லாமல் போனால் வேதத்தை சொன்னார்கள். யார் கண்டது? ஈஸ்வரனை யார் கண்டார்கள்? இந்த மாதிரி குதர்க்கம் மனசுலே வந்தால்தான் நம்மால் தப்பு நடக்கும். இந்த குதர்க்கத்துக்கு இடம் இல்லை என்று சொன்னால் அந்த விஸ்வாசம் நம் மனத்தில் பரிபூர்ணமாக ஏற்பட்டால் அக்ருத்யங்களை நாம் செய்வதற்கு அவகாசம் வராது. அதனாலே எல்லோரும் இந்த விஸ்வாஸத்தை வைத்துக்கொண்டு அதர்மத்தை ஸ்ருஷ்டிக்காமல் தர்மத்தையே செய்து ஸ்ரேயஸை அடைய வேண்டும் என்பது சாஸ்த்ரத்தின் அபிப்ராயம். பகவான் எல்லோருக்கும் இந்த ஸத்ப்ரேரணையைத் தந்து அருள் செய்யட்டும் என்று பகவானைப் ப்ரார்த்தித்து இந்த பாஷணத்தை இங்கு முடிக்கிறேன்.
Co

No comments: