Pages

Sunday, November 15, 2009

sraaddham

ஏன்னா  நாளைக்கு  அம்மா ஸ்ரார்தம்

இன்னிக்கு  ஒரு போது

சீக்கிறம் குளிச்சுட்டு வாங்கோ பெருமாள் சன்னதிலே  இருக்கற அம்மாவையும்
அப்பாவையும்  சேவிக்கலாம்

நாளைக்கு வாத்யாருக்கு சொல்லிட்டேளோ  பரபரத்துக்கொண்டிருந்தாள்  தர்ம பத்தினி

எல்லாம் சொல்லிட்டேன்  வாத்யாரும்  நாளைக்கு காத்தாலே 7 மணிக்கெல்லாம்
வந்துடறேன்னு சொல்லி இருக்கார்

நான் போயி வாழை இலை  இன்னும் ஸ்ரார்த்தத்துக்கு என்னென்ன வேணுமோ அதெல்லாம்
வாங்கிண்டு வந்துடறேன்

ஹும் அப்புறம் அம்மாவுக்கு  மாம்பழம்னா  உயிரு

இந்தக் காலத்துலே மாம்பழம் கிடைக்குமான்னு  தெரியலை

பாப்போம் கிடைச்சா வாங்கிண்டு வந்துடறேன்

என்று கூறிவிட்டுக் கிளம்பினார் ரங்கன்

மறுநாள்  அம்மாவின் திவ்சம் எல்லாம் முடிந்து ப்ரசாதத்தை

காக்காய்க்கும் வைத்துவிட்டு ப்ராமணார்த்தக்காரா  சாப்ட்டு முடிச்ச வுடனே
 தர்ப்பணமும்
பண்ணிட்டு

தம்பதி சமேதரரா சேவிச்சு எழுந்து, பெருமாள்  ஏளப்பண்ணி இருக்கிற  அலமாரிக்கு
எதிரே நின்னு அம்மா அப்பா படத்தை ஒருவாட்டி  தீர்கமாப் பாத்துட்டு  மனசுக்குளே
நன்னா வேண்டிண்டு  எல்லாரையும் ஷேமமா வையுங்கோன்னு வேண்டிண்டு  சாஷ்டாங்கமா
சேவிச்சுட்டு

சாப்பிட உட்கார்ந்தனர்  வீட்டில் உள்ள அனைவரும்

சாப்பிட்டு முடிந்தவுடன்  ரங்கன்  சாய்வு நாற்காலியில்  சாய்ந்து உட்கார்ந்தார்

ஆனால் அவர் எண்ணங்கள் சாயாமல் ஓட ஆரம்பித்தன

இப்போ இவ்வளவு பக்தி ச்ரத்தையா அம்மாவுக்கும் அப்பாவுக்கும் தெவசம் பண்ட்றோமே

இது பயத்துனாலேயா, இல்லே உண்மையாவே பித்ருக்களுக்கு  செய்யவேண்டிய கடமையினாலேயா
  எப்பிடி செய்யிறோம்னு யோசித்துக்கொண்டே இருந்தார்

அப்படியே கண் இழுத்துக்கொண்டு போயிற்று

காதிலே  ஏதோ  அசரீரி  ஒலித்தது

ஏண்டா  ரங்கா  நானும் அப்பாவும் உன்ன்னோட இருந்தப்போ

எங்களுக்குன்னு ஏதாவது செஞ்சிருக்கியா , எங்களுக்கு பிடிக்கும்னு ஏதாவது
வாங்கிண்டு வந்திருக்கியா

ஒரு நாள் ஒரே நாளாவது பாசமா ஒரு வார்த்தை இதமாப் பேசியிருக்கியா  ?  அன்பா
தடவிக்குடுத்திருக்கியா

  பின்ன ஏண்டா இப்போ  தெவசம் பண்றே

யாரைத் த்ருப்தி பண்ண  இப்போ செலவழிக்கற  என்றது

திடுக்கிட்டுக் கண் விழித்தார் ரங்கன்

    ஆமாம்  நாம  பித்ருக்களுக்கு  செய்யலேன்னா

நமக்கு, நம்மோட குடும்பத்துக்கு  ஏதாவது  தீமை வருமோன்னு  பயந்து போயி  இந்த
ஸ்ரார்தம் எல்லாம் செய்யறோமா..?

இல்லே  உண்மையிலேயே  நாம இந்த உலகத்துக்கு  வரதுக்கு காரணமா இருந்த
பெத்தவாளுக்கு  நன்றிக்கடனா  செய்யறோமா  …?

இது பக்தியா  இல்லே பயமான்னு புரியாம  முழிச்சுண்டு இருக்கார்  ரங்கன்

எனக்கு இன்னும் ஒண்ணும் புரியலை

உங்களுக்கு ஏதாவது புரிந்ததா

இப்பவாவது  முழிச்சுக்குவோமே
நன்றி ; தமிழ்தேனீ
பின் குறிப்பு பயம் தான் பக்தி fear in LORD is the beginning of wisdom

No comments:

Post a Comment