Pages

Sunday, November 15, 2009

strange fact

நேஷனல் ஜியோகிராபிக் சானலில்  அதிவேக டிலிவரி சர்வீஸ் பற்றிய டாக்குமெண்டரி.

தென் கொரிய தலைநகரான சியோலில் உள்ள கொரியர் சர்வீஸ்கள் தான் உலகிலேயே அதிவேக
மான டெலிவரி சர்வீஸாம்.

உணவு, விலங்கு, மனிதர்கள் என எதையும் அவர்கள் ஒரு இடத்திலிருந்து மற்றொரு
இடத்திற்கு டெலிவரி
செய்கிறார்கள். அவர்களின் வேகம் நம்மை பிரமிக்க வைக்கிறது.

புதிதாக தோன்றியுள்ள சில சர்வீஸ்கள் உங்களுக்கு தேவையான பொருட்களை அவர்களே
வாங்கி வந்து டெலிவரி செய்கிறார்கள்..

நீங்கள் தனி கட்டையா.. உடம்பு சரியில்லையா.. மருந்துவாக ஆள் இல்லியே.. கவலையே
வேண்டாம்
இந்த டெலிவரி கம்பனிக்கு போன் போடுங்க. எந்த மருந்தையும் வாங்கி வந்து வீட்டில்
டெலிவரி செய்து விடுவார்கள்..குறித்த நேரத்தில்.

நீங்க இரவு வெகுநேரம் படித்து விட்டு காலை அவசரமாக பரிட்சைக்கு போக வேண்டுமா..
கவலையே வேண்டும் இந்த கொரியர் சர்வீஸ் பாய்ஸ் உங்களை குறித்த நேரத்தில் பரிட்சை
ஹாலில் கொண்டு போய் விட்டு விடுவார்கள்.

கன்னியாகுமாரியில் மட்டுமே கிடைக்கும் குறிப்பிட்ட மீனை சென்னையில் நீங்க
ஃபிரஷ்ஷாக சுவைக்க வேண்டுமா..?
கூப்பிடுங்க கொரியர் சர்வீஸை.

பல அடுக்கு மாடியில் வசிக்கும் நீங்க குப்பையை கொட்ட சாலையை கடந்து போகனுமா..
கவலையே வேண்டாம்...டெலிவரி பாய்ஸ் உங்களுக்கு உதவுவார்கள்.

வேகம்.. வேகம்.. வேகம் அது தான் இவர்கள் மந்திரம்.

No comments:

Post a Comment