கடிக்காத ஃப்ரெண்ட்ஷிப்!
பூனையும் எலியும் ஃப்ரெண்ட் ஆக முடியுமா? 'முடியும்' என்கிறார் அமெரிக்க ஆராய்ச்சியாளர் சாய். எலியைப் பார்த்ததும் வெறிகொண்டு பாயும் ஒரு பூனையையும், ஒரு அப்பிராணி எலியையும் மூன்று அறைகளாகப் பிரிக்கப்பட்ட ஒரு கண்ணாடிப் பெட்டியில் அடைத்தார். அந்தப் பெட்டியின் ஒன்றாவது மற்றும் மூன்றாவது அறைகளில் இருக்கும் பட்டனை ஒரே நேரத்தில் அழுத்தினால்தான் நடுவில் இருக்கும் கதவு திறக்கும். முதல் அறையில் எலி, மூன்றாவது அறையில் பூனையை அடைத்து இரண்டாவது அறையில் உணவை வைத்தார். ஒரே நேரத்தில் பட்டனை அழுத்தினால்தான் கதவு திறக்கும் என்று பல முறை செய்துகாட்டினார். இரண்டு விலங்குகளையும் அரைப் பட்டினியிலேயே வைத்திருந்தார். மூன்றரை மாதத்தில் 700 முறைக்கு மேல் எலியும், பூனையும் முயற்சி செய்து கடைசியாகக் கதவைத் திறந்துவிட்டது. வெளியே வந்த பூனை அமைதியாக உணவைச் சாப்பிட்டது. எலியைக் கண்டுகொள்ளவில்லை.
அடுத்ததாக... எலி சாப்பிட, பூனை பட்டனை அழுத்த வேண்டும். பூனை சாப்பிட, எலி பட்டனை அழுத்த வேண்டும் என்று பெட்டியை வடிவமைத்தார். அடுத்த மூன்று மாதத்தில் பூனை எலியின் பசியைப் புரிந்துகொண்டு பட்டனை அழுத்தும் அளவுக்குப் பழகிவிட்டது. (எலி உயிரோடு இருந்தால்தானே பூனையால் உயிரோடு இருக்க முடியும்!) அடுத்த சில நாட்களில் பூனையின் முதுகில் ஏறி விளையாடத் தொடங்கும் அளவுக்குப் பழகிவிட்டதாம் எலி! எப்பூடி?
நன்றி;நட்புவிகடன்--ஆனதவிகடன் உரிமை
Search my older Blog
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment