உங்கள் ஃப்ரனெமி யார்?
நியூயார்க் நகரின் பிரபல மாடல் லிஸ்குலா கோஹென். திடீரென இணையத்தில் அவரைப்பற்றித் தாறுமாறான தகவல்களும், ஆபாசப் புகைப்படங்களும் குவிந்தன. தோண்டித் துருவி குற்றவாளியை டிரேஸ் செய்தால், அவர் லிஸ்குலாவின் நெருங்கிய தோழி!
பொதுவாக, இப்படி ஒருவரது இமேஜை டேமேஜ் செய்வது பெரும்பாலும் அவர்களது நண்பர்களாகவே இருக்கிறார்கள் என்பதுதான் அதிர்ச்சி நம்பர் ஒன்! இப்படிப்பட்ட நண்பர்களை(?!) 'ஃப்ரனெமி' என்கிறார்கள் (frenemy - ஃப்ரெண்ட் பாதி, எனிமி மீதி) இவர்களை எப்படி அறிந்துகொள்வது?
ஃப்ரனெமிக்கள் சுயநலவாதிகள். அவர்களிடம் உங்கள் பிரச்னைகளைச் சொன்னால் தோள் கொடுக்க மாட்டார்கள். ஓட்டம் எடுப்பார்கள். நீங்கள் எலுமிச்சம் பழத்தைத் தூக்கிப் போட்டு கேட்ச் பிடித்தால்கூட, 'அடுத்த யுவராஜ்சிங் நீதான்!' என்று பில்டப் கொடுப்பார்கள். நீங்கள் நகர்ந்ததும், 'ஓவரா அலட்டுறான்டா!' என்று காலி செய்வார்கள். உங்களை அதிகம் புகழ்பவர்களிடம் எப்போதும் உஷாராக இருங்கள்!
உங்கள் நண்பர்களுள் யாரோ ஒருவர் உங்கள் காதலன்/ காதலியை அடிக்கடி சந்திக்கிறாரா? அவரைச் சந்தித்த பிறகெல்லாம் உங்கள் காதலன்/காதலி உங்களோடு சண்டை போடுகிறாரா? அந்த யாரோ ஒருவர்தான் உங்கள் ஃப்ரனெமி! கொஞ்சமும் யோசிக்காமல், அவர்கள் நட்பைத் துண்டித்துவிடுங்கள். ஃப்ரனெமி தவிர்க்க முடியாத நபராக இருந்தால், அவருக்கு முன் நீங்கள் டம்மி பீஸ் போல நடிக்க ஆரம்பியுங்கள். ''ச்சே! இது வேலைக்காவாது!'' என்று உங்கள் ஃப்ரனெமி அடுத்த ஆளை டார்கெட் செய்துகொள்வார். எந்த நபரைப் பார்த்ததும் உங்கள் உள்ளத்தில் தோன்றும் முதல் அபிப்ராயத்தை நம்புங்கள். அது பெரும்பாலும் சரியாகத்தான் இருக்கும்!
பலர் முன் உங்கள் நண்பர் உங்களைத் தொடர்ந்து காயப்படுத்துகிறாரா? ஏதோ உள்குத்து இருக்கிறது நண்பரே!
மிக முக்கியமான விஷயம்... எத்தனைதான் நெருங்கிய நண்பராக இருந்தாலும், எவரிடமும் உங்கள் ரகசியங்களைச் சொல்லாதீர்கள். இன்றைய நண்பன் நாளையே உங்கள் எதிரி ஆகலாம். அப்போது உங்கள் ரகசியங்கள் ஆயுதமாக்கப்படலாம். உங்கள் ரகசியங்கள் உங்களுக்கு மட்டுமே!
நன்றி';விகடன் வார idhazh
Search my older Blog
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment