மனுஸ்ம்ருதி''நூலின் ஐயப்பாடு பற்றி அடியேன் கண்ணோட்டத்தில்
P R E L U D E
Before india got independence, many people from Britain used to come to India. They used to write books on the culture, and the way of living in India. One person came to Andhra Pradesh, and started observing how people live. He went to a lake and started observing one person. That person was a washerman. He had so many clothes which he brought from people in the village. He put all the clothes in hot water for some time. Then, he started hitting the rock with the clothes to clean the clothes. Initially, he hit with right hand, then with left hand. After hitting for some time, he put that cloth, in a bucket, and took another clothe, and did the same thing. He did that for few hours, and left. That british man observed all this and started writing book.
People in andhra pradesh are big fools. They don't have even common sense. They are trying to brake a big rock by clothes. They were thinking that, they could brake a rock by clothes. They are using hot water with clothes, so that they could brake the rock easily. And for few hours they tried to brake with both the hands. They could not break, and finally gave up. Next day, they came again and tried the same thing. How foolish are they?
Any body who knows little bit about washing clothes in India can understand that, the above writing is the foolish writing. But, for those who do not know, it may appear as correct, eventhough it is completely wrong. If we want to understand about someone, instead of directly observing someone, and commenting on that, we should directly go to that person and ask his/her reasons for doing that. Then only one can understand properly. Otherwise, we get only wrong information. Same thing applies in the case of scriptures also. From any verse in the scriptures, we can give hundreds of meanings. And foolish people takes only one meaning which they like, and starts criticizing the scriptures.
To understand any verse in any scripture, one must understand the author's intent, NOT one's own interpretation. 90% of the present spiritual books does not consider the author's intent in any of the scriptures, and because of that people are losing the belief in the scriptures. Everybody criticizes manusmruthi because it gives more authority to brahmins. But, those whoever criticizes do not know the definition of brahmin. Many scriptures including Bhagavadgita, and Bhagavatham clearly says that brahmin is not a right which one gets by birth. By birth everybody is a sudra. One must get so many qualities to become a brahmin. Scriptures also mention that, in kaliyuga, everybody is a sudra. So, in this age, no body gets the authority mentioned by Manusmruthi.
Without understanding the author's intent of the scriptures, one should not criticize any of the scriptures.
இன்றுள்ள சாதிய முறைக்கும், இத்தனை ஆண்டு காலம் நிகழ்ந்த தீண்டாமைக் கொடுமைகளுக்கும் மனு ஸ்மிருதியே காரணம் என்ற ஒரு கருத்து அனைவரது (இந்துக்கள், பிராமணர்கள் உட்பட) ஆழமாக விதைக்கப்பட்டு விட்டது.
பிராமண துவேஷம் எங்கெல்லாம் நடக்கிறதோ (தமிழகத்தில் மட்டுமல்ல, எல்லா இடங்களிலும்) அங்கெல்லாம் மேற்கோள் காட்டப்படுவது ‘ மனு ஸ்மிருதி’ எனப்படும் மனுவின் நீதி நூல். இது நீதி நூல் என்பதையே பலரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை.
YYEYகள் உருவாக்கப்பட்டுள்ளன. இப்போது அனைவராலும்
தூற்றப்படும் மனு ஸ்மிருதி கிருதா
யுகத்திற்க்கானது. இதை கலி யுகத்தில்
பயன்படுத்தியது நம் முன்னோர்கள் செய்த
முதல் தவறு. ஆயினும், மனு ஸ்
மிருதியில் எவ்வித பிழையும் இல்லை, அதை உறுதி செய்யவே இந்தக் கட்டுரை.
முதலில் மனு ஸ்மிருதியில் குறிப்பிடப்பட்டுள்ள வர்ணாசிரம முறைகள்
அதன் ஒரு மிகச் சிறிய பகுதி என்பதை அனைவரும் உணர வேண்டும்
. கல்வி, வாழ்க்கை முறை, பக்தி, குற்றங்கள், தண்டனைகள், போர் முறை
, திருமணம், சாட்சி சொல்லும் முறை, ஒற்றர்கள் என பல சமுதாய
, அரசியல் விஷயங்களும் மனு ஸ்மிருதியில் விவாதிக்கப்பட்டுள்ளன.
ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னரே இப்படி அனைத்து
விஷயங்களையும் விவாதிக்கும் ஒரு நீதி நூல் உருவாக்கப்பட்டது
ஆச்சர்யமே!
மனு ஸ்மிருதி மனிதர்களை வர்ண முறை வர்ண முயில் நான்காகவும், ஆசிரம முறையில் நான்காகவும் பிரிக்கிறது.
றையில் , பிராமணர்
க்ஷத்ரியர், வைசியர், சூத்திரர் என அவரவர் செய்யும் தொழிலின் அடிப்படையிலும், ஆசிரம முறையில் சிறுவர் (வயது < 8), பிரமச்சாரி (8-16), சம்சாரி (16-48) மற்றும் சந்நியாசி (>48) எனவும் பிரிக்கிறது. ஒவ்வொரு வகுப்பினருக்கும் கடமைகளையும், வாழ்க்கைமுறைகளையும் விளக்கமாக எடுத்துரைக்கிறது மனு தர்மம். இவை அனைத்தும் மக்கள் வாழ்க்கையை நெறிப்படுத்த உருவாக்கப் பட்டனவே அன்றி, பாழ்படுத்த அல்ல.
பிராமணர்கள் வேதம் ஒதுவதற்கும், பக்தி மார்க்கத்தைப் பரப்புவதற்கும், க்ஷத்ரியர்கள் ஆட்சி செய்து நீதி வழங்கவும், வைசியர்கள் நியாயமான வியாபாரம் செய்யவும், சூத்திரர்கள் உடல் உழைப்பு தேவைப்படும் வேலைகளை செய்வதற்கும் பணிக்கப்பட்டனர். இதில் பிராமண துவேஷர்களின் வாதம் யாதெனில், மனு ஸ்மிருதியில் பிராமணர்களுக்கு உயரிய இடம் கொடுக்கப்பட்டிருக்கிறது, மனு ஸ்மிருதி என்ன சொல்கிறது?
‘க்ஷத்ரியனை விட உயர்ந்தவன் இல்லை. ஆகையால் ராஜசூயம்
நடக்கும்போது, பிராமணன் க்ஷத்ரியனை விட தாழ்வான இடத்திலேதான்
அமர வேண்டும்’ – இது சதபத புராணம் கூறுவது. ‘சந்திரன், வாயு, அக்னி,
சூரியன், இந்திரன், குபேரன், வருணன், யமன் ஆகிய எட்டு உலக
நாயகர்களின் அம்சங்களைக் கொண்டவன் அரசன். ஆகையால் அவனுக்கு
அசுத்தம் கிடையாது’ என்றும் சொல்கிறது. பிராமணன் அரசனாக முடியாது
என்றும் கூறுகிறது மனு தர்மம். இதிலிருந்து, க்ஷத்ரியர்களே
உயர்வானவர்களாக சொல்லப்பட்டுள்ளனர் என்பது தெளிவாகிறது.
மற்றொரு குற்றச்சாட்டு, பிராமணர்களுக்கு பல சலுகைகள் அளிக்கப்பட்டுள்ளன என்பது. உதாரணமாக பிராமணனுக்கு வரி விலக்கு
என்பது. இதை மனு தர்மம் யாருக்கு அளிக்கிறது? நன்கு கற்றறிந்து, வேதம்
ஓதி, இரந்து உண்ணும் பிராமணனுக்கே இச்சலுகை. பிராமணனாகப் பிறந்து
, வேறு தொழில் ஒருவன் செய்வானாயின் அவனுக்கு எவ்வித சலுகையும்
வழங்கவில்லை மனு தர்மம். மாறாக, வன்மையாகக் கண்டிக்கிறது.
எவ்வளவு வசதியாக இருந்தாலும், ஜாதியைப் பொறுத்து சலுகை
வழங்கும் இன்றைய சட்டங்களைப் போற்றுவோருக்கு, மனு ஸ்மிருதி
தவறாகத்தான் தெரியும்.
மனு ஸ்மிருதி பிராமணர்களுக்கு மரண தண்டனையிலிருந்து விலக்கு
அளிக்கிறது என்றால் வேதங்களை கற்றுணர்ந்து, தனக்கு வகுத்த
முறைப்படி வாழும் எந்த பிராமணனும் மரண தண்டனை அளிக்கும்
அளவுக்கு தவறு இழைக்க மாட்டான் என்ற நம்பிக்கையே காரணம். இதில்
தவறேதும் இல்லையே. இன்று வரை மரண தண்டனை விதிக்கத் தகுந்ததாக
கருதப்படும் குற்றங்களான கொலையிலும், கற்பழிப்பிலும், ராஜ
த்ரோகத்திலும் எத்தனை பிராம்மணர்கள் சம்மந்தப்பட்டிருக்கின்றனர்
? பார்ப்பன பயங்கரவாதம் என்று இந்த இருபத்தி ஓராம் நூற்றாண்டில்
பிதற்றிக் கொண்டிருப்பது தொடர்ந்த போதும் பிராமணர்கள் குற்றங்களிலோ
, குற்றங்களைத் தூண்டுவதிலோ, வன்முறையை ஊக்குவிப்பதிலோ எந்த
பங்கும் கொள்வதில்லை என்பதே உண்மை.
பிராமணனுக்கு மரண விலக்கு அளிக்கும் அதே மனு ஸ்மிருதிதான்
இதையும் சொல்கிறது
.
ஷோடசைவ து வைச்யச்ய
அதாவது, ‘அறிந்து திருட்டுக் குற்றத்தை செய்கின்ற சூத்திரனுக்கு,
வழக்கமான தண்டனையை விட எட்டு மடங்கு அதிக தண்டனையை
விதிக்க வேண்டும். வைச்யனுக்கு பதினாறு மடங்கு. க்ஷத்ரியனுக்கு
முப்பத்திரண்டு மடங்கு. குற்றத்தின் தன்மையை அறிந்தவன் என்பதால்
பிராமணனுக்கு 64 அல்லது 100 அல்லது 128 மடங்கு தண்டனை விதிக்க
வேண்டும்’. பிராமணனுக்கு சலுகைகள் தரும் அதே மனு ஸ்மிருதிதான்
இதனையும் கூறுகிறது.
இந்த சலுகைகள் பிராமணனுக்கு மட்டும் வழங்கப்படவில்லை. முதியோர்
, ஊனமுற்றோர், ஏழைகள், சிறு தொழில் செய்வோர் என அனைவருக்கும்
வழங்கப்பட்டுள்ளது. ஒரு பிராமணன் மனு தர்மத்தின் படி வாழ்கையி
ல் அவன் ஏழை என்ற பகுதிக்குக் கீழ் வந்து விடுகிறான். ஏனெனில்,
வேதங்களின் படியும், மனு தர்மத்தின் படியும், பிராமணன் அடுத்த நாள்
உணவுக்காகக் கூட பொருள் சேர்த்து வைக்கக் கூடாது. பிராமணனுக்கு
சலுகைகளைத் தரும் அதே மனு தர்மம்தான் அவன் மீது இத்தகைய
சுமைகளையும் ஏற்றுகிறது. மற்ற எந்த தரப்பினருக்கும் இத்தகைய
கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படவில்லை.
பிராமணர்கள் மனு ச்மிரிதியை உருவாக்கி இருந்தால் தாங்களே
தங்களுக்கு
இத்தகைய கட்டுப்பாடுகளை இட்டுக் கொண்டிருப்பார்களா?
இன்று இந்திய
சட்டத்தின்கீழ் சலுகை பெறுவோருக்கு ஏதேனும் கட்டுப்பாடுகள்
உள்ளனவா? நீங்கள் சற்றே சிந்திக்க வேண்டிய விஷயம்
‘சூத்ரோ ப்ராமணதாமேதி ப்ராமணஸ்சைதி சூத்ரதாம்
க்ஷத்ரியாஜ்ஜாதவேதம் து வித்யாத்வைச்யாத்ததைவ ச’
அதாவது – ‘சூத்திரன் பிராமணனாகி விடலாம்; பிராமணனும்
சூத்திரனாகலாம்; அதே போல், க்ஷத்ரிய மற்றும் வைசிய வர்ணங்களைச்
சார்ந்தவர்களின் மகன்களும், மகள்களும் வேறு வர்ணத்தை அடையலாம்’.
ஆக, சூத்திரர்கள் வேதம் கற்கக் கூடாது என்று சொல்லும் அதே மனு
தர்மம்தான் அவர்கள் வேதம் ஓதும் பிராமணர்கள் ஆகலாம் என்று
சொல்கிறது. இதை மற்றோர் விதமாய் சொல்ல வேண்டுமானால், வேதம்
ஓத விருப்பம் தெரிவிப்பவன் பிராமணனாக மாறியே அவ்வாறு செய்ய
இயலுமேயன்றி சூத்திரனாகவே இருந்து செய்ய இயலாது. இதில் யாரும்
எந்த வகையிலும் தடுக்கப்படவோ ஒடுக்கப்படவோ இல்லை.
அப்ராம்ணாத் அத்யயனம் ஆபத்காலே விதியதே
அனுவ்ரஜா ச சுச்ரூஷா யாவத் அத்யயனம் குரோ:
அதாவது, தவிர்க்க முடியாத காலங்களில் ஒரு பிராமண மாணவன்
பிராமணன் அல்லாத குருவிடமிருந்து கல்வி கற்கலாம். அவ்வாறு
செய்கையில் அம்மாணவன் அக்குருவிற்கு பணிவிடை செய்ய வேண்டும்.
பிற்போக்கு கண்ணோட்டத்துடன் மனுஸ்ம்ருதியை அணுகும்
முற்போக்குவாதிகளின் கண்களில் முன்னுக்குப்பின் முரணாக தென்படும்
இந்த தர்மங்களுக்கு பின்னால் ஆதவனென பிரகாசிக்கும் உண்மை –
மனுஸ்ம்ருதி ஜாதி அடிப்படையில் அமைக்கப்பட்டது அல்ல என்பதே. ஒரு
சமூகத்தின் அனைத்து அங்கங்களும் ஒன்றோடு ஒன்று இணைந்து
செயல்பட்டால் மட்டுமே சமூக நலன் காக்க முடியும் என்ற கருத்தே இந்த
தர்ம நூலின் அடிப்படை. அனைவருமே வேதம் கற்க வந்தாலோ
அனைவருமே விவசாயம் செய்யத்தொடங்கினாலோ சமூகத்தில் சீரமைப்பு
இருக்க வழியில்லை. வழி வழியாக ஒரு தொழிலை ஒரு குடும்பத்தினர்
செய்கையில் அவர்கள் ரத்தத்தில் அது ஊறி விடுமென்று மனுஸ்ம்ருதி
கூறுவது முட்டாள்த்தனம். ஆனால் ‘ஜீன்’ எனப்படும் மரபணுக்கள் நம்
முன்னோர்களிடம் இருந்து வருகிறது. அதன் மூலமாகவே பல குணங்களை
நாம் பெறுகிறோம் என்று ஆங்கிலேயன் கூறினால் அது விஞ்ஞானம்!
எந்த ஒரு தர்ம சாத்திரத்தையும் வார்த்தைக்கு வார்த்தை அமல்படுத்துவது
நடைமுறைக்கு ஒவ்வாத ஒரு விஷயம்! அது மனு தர்மத்திற்கும்
முற்றிலும் பொருந்தும். மனுவின் நீதிகள் அனைத்தையும் ஒரு அரசன்
அமல்படுத்த வேண்டியதில்லை. அந்த ராஜ்ஜியத்திற்கு, மக்களின் வாழ்க்
கை முறைக்கு எது தேவையோ அவற்றை மட்டும் எடுத்துக் கொள்ளலாம்.
அவ்வாறே மனுவின் நீதிகளும் கூட வகுக்கப்பட்டுள்ளன.
இதற்க்கு மேலும் மனுவின் தர்மங்கள் பிராமணர்களுக்கு சாதகமாகவும்
மாற்ற வர்ணத்தவருக்கு பாதகமாகவும் வகுக்கப் பட்டுள்ளன என்று
கூச்சலிடும் இன்றைய பகுத்தறிவாளிகளுக்காக இன்னும் சில உண்மைகள் தொடர்கின்றன.
மனு பிராமணர்களுக்கு சில சலுகைகளை வழங்கினாலும், மிகக்
கடுமையான விதிகளை விதிக்கிறான். வேதம் ஓதி, சாஸ்திர முறைப்படி
வாழாத பிராமணனை மனு தர்மம் மிகக் கடுமையாக அணுகுகிறது.
‘மற்றவர் பொருளில் விருப்பம் வைத்து, பொய்யைப் பரப்பி, கர்வம் கொண்டு,
பொறாமை உடைய பிராமணன் பூனையின் குணம் கொண்டவன்.
இப்படிப்பட்ட குணமுடைய பிராமணன் நரகத்தில் வீழ்கிறான். பூனை குணம்
கொண்ட பிராமணனுக்கோ, விரதமுடையவன் போன்ற வேடம் போடுகிற
பிராமணனுக்கோ, வேதங்களை முறையாகப் பயிலாத பிராமணனுக்கோ
, நன்னடத்தை கொண்ட எவனோருவனும் ஒரு சிறிய தானத்தைக் கூட
செய்து விடுதல் கூடாது. அவ்வாறு செய்தால் தானம் வாங்கியவனோடு
சேர்ந்து தானம் கொடுத்தவனும் துன்பத்தையே அனுபவிப்பான்.
’ பிராமணனுக்கு சலுகைகள் பல வழங்கி மற்றவர்களை ஒடுக்கியதாக
பிராமண துவேஷர்கள் சொல்லும் மனு தர்மம் சொல்கிறது.
சிற்சில சலுகைகளை வழங்கினாலும் அவர்கள் மீது பற்பல சுமைகளை
ஏற்றுகிறது மனுஸ்மிருதி. இருப்பினும் மனுதர்மம் தவறானது
, பேதங்களைக் கற்பிப்பது. இன்றைய இந்திய அரசியல் சாசன சட்டமோ
, வெறும் பிறப்பை அடிப்படையாகக் கொண்டு கல்வி, வேலைவாய்ப்பு,
வேலையில் பணி உயர்வு, கல்வியில் பண உதவி என எண்ணிலடங்கா
சலுகைகளை வழங்குகிறது. அவ்வாறு சலுகை பெறுவோருக்கு எவ்வித
கட்டுப்பாடுகளும் இல்லை. இத்தகைய சட்டம் உயரியது, சிறப்பானது
. இவ்வாறு காமாலைக் கண்ணோடு எதனையும் பார்ப்பவர்களுக்கு என்ன
சொன்னாலும் புரியாது, எத்தனை ஆதாரங்கள் கொடுத்தாலும் விளங்காது.
அனைத்திற்கும் மேல் நான்கு வர்ணங்களைத் தவிர ஐந்தாவது பிரிவு
என்றொன்று கிடையாது என்பதை மனு தர்மம் மீண்டும் மீண்டும்
வலியுறுத்துகிறது. எனவே, ‘தாழ்த்தப்பட்டவர்’ என்ற ஒன்று இந்த சாதீய
முறை வந்த பின்னரே தோன்றியுள்ளது. ‘சாதி’ என்ற வார்த்தையே இல்லாத
மனுஸ்மிருதியை இதற்க்கு எவ்வாறு குற்றம் கூற இயலும். தீண்டாமை’
என்ற ஒரு தவறை அனைத்துத் தரப்பினரும் இழைத்துள்ளனர். இன்றும்
, இந்த கொடுமைகளை செய்பவர்களில் அநேகர் பிராமணரல்லாதோரே.
?
அஜ்யேஷ்டாஸோ அகனிஷ்டாஸ ஏதே
ஸம் ப்ராதரோ வாவ்ருது: ஸௌபகாய
(ரிக்)
ஸம் ப்ராதரோ வாவ்ருது: ஸௌபகாய
(ரிக்)
பொருள்: உங்களில் உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்று யாரும் கிடையாது. நீங்கள் அனைவரும் சகோதரர்களே! எனவே ஒன்றுபட்டு வாழ்வீர்களாக, மேன்மையடைவீர்களாக!
…
ஸம்ஸமித்யுவஸே வ்ருஷன்னக்னேன விச்வான்யர்ய ஆ (ரிக்)
பொருள்: நன்மையை அள்ளிக் கொடுக்கின்ற தெய்வமான அக்னி தேவனே! எல்லா உயிரினங்களையும் ஒற்றுமையாக இருக்கச் செய்வாயாக!’
பொருள்: நன்மையை அள்ளிக் கொடுக்கின்ற தெய்வமான அக்னி தேவனே! எல்லா உயிரினங்களையும் ஒற்றுமையாக இருக்கச் செய்வாயாக!’
——- வளரும், வழித்தடைகள் விலகும் வ
No comments:
Post a Comment