Bhoo thatha's Blogspot

Search my older Blog

Friday, November 8, 2013

religion--hinduism

அம்மன்பேட்டையில் ஸ்ரீபெருந்தேவியுடன் அருள்புரிகிறார் ஸ்ரீவரதராஜப் பெருமாள்.
அம்மன்பேட்டையில் ஸ்ரீபெருந்தேவியுடன் அருள்புரிகிறார் ஸ்ரீவரதராஜப் பெருமாள். சோழர், நாயக்கர், மராட்டிய மன்னர்களால் பராமரிக்கப்பட்டு, திருப்பணிகள் நடைபெற்ற ஆலயம் இது. ஸ்ரீவரதராஜரை வழிபட வியாபாரம் அபிவிருத்தியடையும், உடல் நலம் சீராகும். கடன் தொல்லை தீரும். ஒருகாலத்தில் அனைத்து விசேஷங்களும் நடைபெற்ற இவ்வாலயம் தற்போது முற்றிலும் சிதிலமடைந்துள்ளது. தற்போது திருப்பணிகள் நடந்துகொண்டிருக்கின்றன.
அமைவிடம்: தஞ்சாவூர் - திருவையாறு பேருந்து மார்க்கத்தில் அம்மன்பேட்டை பேருந்து நிறுத்தத்தில் இறங்கி கோயிலை அடையலாம்

===================================================
எந்த சந்தர்ப்பத்தில் நாம் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதற்குத் தக்க எடுத்துக்காட்டு பகவத்கீதையில் வந்து அமைகிறது.
எந்த சந்தர்ப்பத்தில் நாம் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதற்குத் தக்க எடுத்துக்காட்டு பகவத்கீதையில் வந்து அமைகிறது. போர் புரிவதற்கென்று அர்ஜுனன் போர்க்களத்துக்கு கண்ணபிரானால் அழைத்துச் செல்லப்பட்டான். தன் உற்றார் உறவினரையே கொன்றாக வேண்டும் என்னும் தர்மசங்கடத்தை ஆங்கு அவன் காணலுற்றான். உடனே தன் எண்ணத்தை அர்ஜுனன் மாற்றிக்கொண்டான். அஹிம்சைதான் வாழ்க்கையில்சிறந்த லட்சியம் என்னும் கோட்பாட்டை அவன் எடுத்து இயம்பினான். அப்பொழுது அவன் பெற்றிருந்த மன நிலைக்கு அஹிம்ஸô தர்மம் ஒரு கவசமாக வந்து அவனுக்கு அமைந்தது. கொல்லலாகாது என்னும் கோட்பாட்டில் நிலைநிற்க அவன் முயன்றான். ஆனால் அவன் கோட்பாட்டைக் கண்ணன் கேட்டுக்கொள்ளவில்லை.
அர்ஜுனனைப் பொய் வேஷக்காரன் என்றும், பயங்கொள்ளி என்றும் கிருஷ்ணன் எள்ளி நகையாடினார். தீமையை எதிர்த்துப் போராடத் தகுதியற்றவன் வாழ்க்கைக்கு உதவான் என்றும் அவர் எடுத்துக்காட்டினார். அதர்மம் என்னும் பெருங்கேடு உற்றார் உறவினரிடத்து இருப்பதால் அக்கேட்டினுக்கு இடங்கொடுத்தே ஆக வேண்டும் என்னும் மயக்கம் அறிவுடையோன் ஒருவனை வந்து சாரலாகாது. பயிர் பண்ண விரும்புபவர்கள் தங்கள் பூமியிலுள்ள களைகளை நீக்குவது போன்று சமுதாயத்தில் அற வாழ்வை நிலைநாட்ட விரும்புகின்றவர்கள் அற வாழ்வுக்கு எதிரிகளாய் இருப்பவர்களை எல்லாம் தகர்த்தே ஆக வேண்டும் என்பது கண்ணனுடைய கோட்பாடு.
- சுவாமி சித்பவானந்த

courtesy;''vellimani

No comments: