பொங்கல் திருநாளில் எங்கள் குடும்பம் பிக் பம் புகழ் ஜீவா ருக்மணி திரை அரங்கில்கண்டு களித்த ''குட்டி'' பட விமர்சனம்
தெலுங்குவில் அல்லு அர்ஜுன் நடித்து சுகுமார் இயக்கி வசூலில் பட்டையை கிளப்பிய "ஆர்யா" படத்தின் ரீமேக் . இளகிய மனசுடைய ஷ்ரேயா கன்னியாகுமாரியில் தனக்காக கடலில் குதித்த முகம் தெரியாத ஒருவன் இறந்து விட்டான் என்றும் தன்னால் ஒரு உயிர் போய்விட்டது என்று தினமும் வருந்துகிறார் . அதனால் சமீர் தட்டாணி தன்னை ஸ்ரேயா காதலிக்கவில்லை என்றால் தற்கொலை செய்துகொள்வேன் என மிரட்டும் பொழுது கன்னியாகுமரி சம்பவம் நினைவுக்கு வருகிறது . உடனே சமீரின் காதலை ஏற்றுக்கொள்கிறார் ஸ்ரேயா . அப்பொழுது தான் ஸ்ரேயா வாழ்கையில் தனுஷ் நுழைகிறார் . ஸ்ரேயா வேறொருவனை காதலிப்பது தெரிந்தும் அவளிடம் தன காதலை சொல்கிறார் தனுஷ் . "நான் உன்னை காதலிக்கிறேன் நீ யாரை காதலித்தாலும் பரவாயில்லை என்னுடைய காதலை நீ உணர்ந்தால் மட்டும் போதும்" என்று ஸ்ரேயா பின்னாலயே சுற்றுகிறார் தனுஷ் . இதனால் வெறுப்படையும் சமீர் தனுஷை முறைக்கிறார் . சமீரின் அரசியல்வாதி தந்தை ராதா ரவி வேறொரு பெண்ணை நிச்சயம் செய்து முடிக்கிறார் , பின் தனுஷ் உதவியுடன் சமீர் -ஸ்ரேயா காதல் தொடர்கிறது . ஒரு கட்டத்தில் அடியாட்கள் சூழும்போது ஸ்ரேயாவை கலட்டி விட்டு ஓட்டம் எடுக்கிறார் சமீர் . அந்த தருணத்தில் ஸ்ரேயாவை காப்பாற்றுகிறார் தமிழ் நாட்டின் புரூஸ் லீ தனுஷ் .பின் ஸ்ரேயாவுக்கு தனுஷ் மீது காதல் மலர்கிறது . அதை வெளிபடுத்த நினைக்கும் நேரத்தில் தன் தந்தையை சமாதான படுத்தி அழைத்து வருகிறார் சமீர் . சமீர் -ஸ்ரேயா ஜோடி மணவறை ஏறுகிறது . அப்போது தான் கன்னியாகுமரியில் தனக்காக கடலில் குதித்தது தனுஷ் தான் என்பது தெரியவருகிறது . பின் ஷ்ரேயா -தனுஷ் ஒன்று சேர்கிறார்கள் .
நல்ல கதையை கையில் எடுத்துகொண்டு அதை சாதாரனமாய் சொல்லி இருக்கிறார்கள் . தொழில் நுட்ப ரீதியாக எந்த புதுமையையும் செய்யவில்லை . "எடிட்டிங் ,சிநேமேடோகிராபி" நம்மை எந்த நெருடலும் இல்லாமல் கதையுடன் பயணிக்க வைக்கிறது . இன்னும் மெனக்கட்டிருந்தால் படத்தை உணரவைத்திருக்கும் .படம் தனுஷ் -ஸ்ரேயா - சமீர் மூவரையும் சுற்றியே பயணிப்பதால் மற்றவர்களுக்கு படத்தில் பெரிய வேலை ஒன்றும் இல்லை .
பிளஸ் +++++++++++++++++++
1. அற்புதமான கதை .
2. தனுஷின் அற்புதமான நடிப்பு . சூப்பர் பாடி லாங்குவாஜ் . குறிப்பாக கிளைமாக்ஸ் காட்சியில் அழும்பொழுது நடிப்பில் முதிர்ச்சி தெரிகிறது
3. ஆங்காங்கே வரும் சில காமெடி காட்சிகள்
4. அடக்கி வாசித்திருக்கும் ஸ்ரேயா
5. "oneside love" என்கிற உன்னதமான ஒன்றை கையில் எடுத்திருப்பது .
6. தெலுங்குவில் உள்ள அளவு ஹீரோயிசம் இதில் இல்லாதது . சண்டை காட்சிகளில் கூட சின்ன யுமர் வைத்திருக்கிறார்கள்
7. தேவி ஸ்ரீ பிரசாத்தின் இசையில் "feel ma love " பாடலும் "oneside love " பாடலும் ரசிக்கவைகின்றன .தாமரையின் வரிகளில் "யாரோ ஏன் நெஞ்சில்" பாடல் சூப்பர் .
8. தெலுங்கு படத்தில் இருந்தது போல தான் என்றாலும் எல்லா இடத்திலும் R.R வைக்காமல் சில இடங்களில் மௌனத்தை ரசிக்க வைத்திருக்கின்றனர் .
மைனஸ் -------------------------
1. திரைகதையில் விறுவிறுப்பும் அழுத்தமும் குறைவு .
2. இரண்டாம் பாதி பொறுமையை சில சமயம் சோதிக்கின்றது .
3. பெரிய அளவில் ட்விஸ்ட் களோ சுவாரசியமான காட்சிகளோ இல்லை .
4. சமீரின் கதாபாத்திரத்தை சரியாக வைக்க தவறி இருக்கிறார்கள் . அவர் ஹார்ட் நேச்சரா ? இல்லை சாப்ட் நேச்சரா ?
5. கல்லூரி காட்சிகளில் அடித்து ரகளை ஓட்டி இருக்கலாம் . மிஸ் பண்ணிடாங்க .
6. ஒரு தலை காதலை கையில் எடுத்தவர்கள் அதில் நம்மை கட்டிப்போட வைக்க தவறிவிட்டார்கள் .
VERDICT - couldnt feel love completely
முடிவாக ஒன்று .......
. சின்ன சின்ன குறைகளை தவிர்த்து விட்டு பார்த்தல் நல்ல பொழுது போக்கு படம்
Search my older Blog
Showing posts with label FILM REVIEW. Show all posts
Showing posts with label FILM REVIEW. Show all posts
Saturday, January 16, 2010
Subscribe to:
Posts (Atom)