Space Shuttle Atlantis Launch STS-129 Video courtesy NASA. Space Shuttle Atlantis Launch STS-129 |
Search my older Blog
Monday, February 15, 2010
space
Sunday, February 14, 2010
GOLD
Subject: தங்கம் விலை எகிறக் காரணம் என்ன!!!
ஒரு கிராம் தங்கம் விலை 1,600 ரூபாயைத் தாண்டிவிட்டது. மிக விரைவில் கிராம் 2,000ரூபாயையோ, சவரன் 20 ஆயிரம் ரூபாயையோ எட்டினால் வியப்பதற்கில்லை. அந்த உயரம், வெகு தூரமில்லை என்கின்றனர் நகை வியாபாரிகள். "இப்படி நாளுக்கு நாள் உயரும் தங்கம் விலைக்கும் உள்ளூர் வியாபாரிகளுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை;மொத்தத்தையும் தீர்மானிப்பது, வெறும் 14 பேர் தான்'என்றால் நம்ப முடிகிறதா? உண்மை அதுதான். இதுகுறித்து, ஸ்ரீ குமரன் தங்க மாளிகை மேலாண் இயக்குனர் ஆறுமுகம் கூறியதாவது: பிரிட்டன் தலைநகர் லண்டனில், புல்லியன் எக்சேஞ்ச் ஒன்று இருக்கிறது. நம்மூர் பங்குச் சந்தைகள் மாதிரி, தங்கத்தின் விலையை நிர்ணயிக்கும் சந்தை இது தான். இதில் 14வங்கிகள் பங்குதாரர்களாக உள்ளன. இவற்றில் 11 வங்கிகள் ஸ்காட்லாந்தைச் சேர்ந்தவை. இவை தங்கச் சுரங்கங்களுடன் ஒப்பந்தம் செய்து, உற்பத்தி அளவுக்கேற்ப மார்க்கெட் விலையை நிர்ணயிக்கின்றன. உற்பத்தி மற்றும் தேவையை ஒட்டுமொத்தமாக கட்டுப்படுத்துவது இந்த புல்லியன் எக்சேஞ்ச் தான். இதில், அங்கத்தினர்களான வங்கிகள் கூடி, "இன்று இதுதான் விலை' என்று அறிவித்தால், உலகம் முழுவதும் அன்றைய விலையாக, அதுவே தீர்மானிக்கப்படுகிறது. அமெரிக்க டாலரின் மதிப்பு வீழ்ச்சியடைந்தாலோ, தங்கச் சுரங்கங்களில் உற்பத்தி குறைந்தாலோ, கச்சா எண்ணெயின் விலை குறைந்தாலோ, தங்கத்தில் முதலீடு செய்வதும், அதன் தேவையும் அதிகரித்துவிடுகிறது. கையோடு, அன்றைய மார்க்கெட் விலையை, லண்டன் புல்லியன் அதிகரித்துவிடுகிறது. தங்கம் விலை நிர்ணயத்தின் முக்கிய காரணியாக, ஆன்-லைன் வர்த்தகம் தான் செயல்படுகிறது. ஆன்-லைனில்,எந்த நேரடி பணப் புழக்கமும் இல்லாமல், வெறுமனே, "இன்றைக்கு எனக்கு இத்தனை கிலோ தங்கம் ஒதுக்கிவையுங்கள்' என பதிவு செய்துவிட்டால், உங்கள் கணக்கில் அந்தத் தங்கம் சேர்க்கப்படும். ஒட்டுமொத்தமாக, இந்தியாவின் தனி மனிதத் தேவைக்குப் பயன்படும் தங்கத்தை, அமெரிக்காவில் இருக்கும் ஒரே ஒரு வர்த்தகரே ஆன்-லைன் மூலம் பதிவு செய்துவிடுகிறார். இப்படித்தான், செயற்கை முறையில் தங்கத்தின் தேவை அதிகரிக்கப்படுகிறது. இந்தியாவில் தங்கம் வாங்குவோரில், 80 சதவீதம் பேர் நடுத்தர வர்க்கத்தினர் தான். 20 சதவீதம் வாடிக்கையாளர்கள் தான் செல்வந்தர்கள். விலை உயர்வால் ஒட்டுமொத்தமாக பாதிக்கப்படுவது,நடுத்தர வர்த்தக மக்கள் தான். இந்த அதிரடி விலை உயர்வால், தங்கள் அவசியத் தேவைக்கு கூட தங்கம் வாங்க முடியாமல் தவிக்கின்றனர். அந்த வகையில்,தங்கம் விலையை 90 சதவீதம் ஆன்-லைன் வர்த்தகமும், 10 சதவீதம் மட்டுமே தனிமனிதத் தேவையும் நிர்ணயிக்கிறது. இவ்வாறு ஆறுமுகம் கூறினார். தங்கத்தின் கதை: உலகின் மிகப் பழமையான நாகரிகங்களுள் ஒன்றான மெசபடோமியாவின் சுமேரிய நாகரிகத்தில் தான் (இப்போதைய ஈரான், ஈராக்) முதல் முதலில் தங்கம் ஓர் புனிதமான, ஆடம்பரமான,அலங்காரத்துக்கான நகையாக பயன்படுத்தப் பட்டது. கிட்டத்தட்ட அதே காலத்தில், தங்கம் உற்பத்தியில்,முன்னணியில் இருந்த எகிப்தியர்களும், தங்கத்தை சுத்திகரிக்கும் கலையைக் கண்டுபிடித்தனர். அவர்களும் தங்கத்தை சொந்த உபயோகத்துக்குத் தான் பயன்படுத்தினர். நான்காம், ஐந்தாம் நூற்றாண்டுகளைச் சேர்ந்த சில மன்னர்கள், தங்கத்தில் நாணயம் வெளியிட்டனர். முதன் முதலில், பெரிய அளவில் சுத்தமான தங்க நாணயங்களை அறிமுகப்படுத்தியவர் கி.மு., 560 - கி.மு., 546ல் ஆண்ட லிடியா (இப்போதைய மேற்கு டர்க்கி) மன்னர் கிரீசஸ் தான். அதில், சிங்கம் மற்றும் காளையின் முகங்களைக் கொண்ட ராஜ முத்திரை பதிக்கப்பட்டிருந்தது. அந்த நாணயங்கள் தான் ,உலகத்திலேயே முதல் முறையாக வர்த்தகப் பயன் பாட்டுக்கும் கொண்டுவரப்பட்டது. மொத்தத் தங்கம்: தங்க வயல் சுரங்க சேவைகள் என்ற நிறுவனம் 2003ம் ஆண்டு வெளியிட்ட தகவலின்படி,உலகத்தில் தற்போது ஒரு லட்சத்து 50 ஆயிரத்து 500 டன் புழக்கத்தில் உள்ளது (இதில் உங்கள் வீட்டில் எவ்வளவு இருக்கிறது?). இதில் 61 சதவீதம், 1950ம் ஆண்டுக்குப் பிறகு பூமியிலிருந்து சுரண்டப்பட்டவை. மொத்த தங்கத்தையும் ஒரு கட்டியாகச் செய்தால், நான்கு புறமும் 19 மீட்டர் கொண்ட கனசதுரம் கிடைக்கும். அவ்வளவு தான். சொக்கத்தங்கம்: பொதுவாக, தங்கத்தின் மதிப்பு காரட் அடிப்படையில் அளவிடப்படுகிறது. காரட் என்ற வார்த்தை காரப் என்ற விதையில் இருந்து வந்தது. இந்த விதை,கீழ்திசை நாடுகளில், எடைக்கற்களாகப் பயன்படுத்தப்பட்டது. சொக்கத் தங்கம் என்றழைக்கப்படும் சுத்தமான தங்கம், 24 காரட் மதிப்புடையது. நேர்த்தியான நிலையில், 100 சதவீதம் சுத்தமான இத்தங்கம், நகை செய்ய உகந்தது அல்ல. நகைக்கு பயன்படுத்தப்படும் தங்கம் 22 காரட் உடையது என பரவலாக சொல்லப்படுகிறது. இது 91.67 சதவீதம் சுத்தமான தங்கம். ஆனால், 75 சதவீதம் சுத்தத் தங்கமான18 காரட்டைப் பயன்படுத்தினாலே பெரிய விஷயம் தான் என்கின்றனர் விவரம் அறிந்தவர்கள் -- Thanks & Regards, |
Thursday, February 11, 2010
story
The first day of school our professor introduced himself and challenged us to get to know someone we didn't already know. I stood up to look around when a gentle hand touched my shoulder.
I turned around to find a wrinkled, little old lady beaming up at me with a smile that lit up her entire being.
She said, 'Hi handsome. My name is Rose. I'm eighty-seven years old. Can I give you a hug?'
I laughed and enthusiastically responded, 'Of course you may!' and she gave me a giant squeeze.
'Why are you in college at such a young, innocent age?' I asked.
She jokingly replied, 'I'm here to meet a rich husband, get married, and have a couple of kids.'
'No seriously,' I asked. I was curious what may have motivated her to be taking on this challenge at her age.
'I always dreamed of having a college education and now I'm getting one!' she told me.
After class we walked to the student union building and shared a chocolate milkshake.
We became instant friends. Every day for the next three months we would leave class together and talk non-stop. I was always mesmerized listening to this 'time machine' as she shared her wisdom and experience with me.
Over the course of the year, Rose became a campus icon and she easily made friends wherever she went. She loved to dress up and she revelled in the attention bestowed upon her from the other students. She was living it up.
At the end of the semester we invited Rose to speak at our football banquet. I'll never forget what she taught us. She was introduced and stepped up to the podium.. As she began to deliver her prepared speech, she dropped her three by five cards on the floor...
Frustrated and a little embarrassed she leaned into the microphone and simply said, 'I'm sorry I'm so jittery. I gave up beer for Lent and this whiskey is killing me! I'll never get my speech back in order so let me just tell you what I know.'
As we laughed she cleared her throat and began, 'We do not stop playing because we are old; we grow old because we stop playing.’
There are only four secrets to staying young, being happy, and achieving success… You have to laugh and find humour every day. You've got to have a dream. When you lose your dreams, you die...We have so many people walking around who are dead and don't even know it!
There is a huge difference between growing older and growing up..
If you are nineteen years old and lie in bed for one full year and don't do one productive thing, you will turn twenty years old. If I am eighty-seven years old and stay in bed for a year and never do anything I will turn eighty-eight. - Anybody can grow older. That doesn't take any talent or ability. The idea is to grow up by always finding opportunity in change. Have no regrets.
The elderly usually don't have regrets for what we did, but rather for things we did not do. The only people who fear death are those with regrets.'
She concluded her speech by courageously singing “The Rose”.
She challenged each of us to study the lyrics and live them out in our daily lives. At the year's end Rose finished the college degree she had begun all those years ago.
One week after graduation Rose died peacefully in her sleep.
Over two thousand college students attended her funeral in tribute to the wonderful woman who taught by example that it's never too late to be all you can possibly be.
REMEMBER, GROWING OLDER IS MANDATORY. GROWING UP IS OPTIONAL.
We make a Living by what we get. We make a Life by what we give.
God promises a safe landing, not a calm passage.
If God brings you to it, He will bring you through it.
Good friends are like stars.....You don't always see them, but you know they are always there.

moral
WHAT is it that's hard to break???
Diamonds are hard to find but not hard to Break.
What is the hardest thing to break then?
The answer is: HABIT!
If you break the H, you still have A BIT.
If you break the A, you still have BIT.
If you break the B, you still have IT!
Hey, after you break the T in IT, there is still the 'I'.
And that "I" is the root cause of all the problems that You/me/all are facing.
Isn't it right? Do You endorse? Do You agree?
Now you know why "HABIT" is so hard to break.
Now let's take quick taste and it will confirm to You
Moral of the story
We have to respect each other's opinion and views too.
We just need to listen others actively and their point of view
Regards,

Thursday, February 4, 2010
ATTITUDE
Live and dont forget : BRT Rajan
---
|
BEACH
Don ' t miss the last Pic!!
Beach In Every House Palm Jumeirah @ DUBAI new pics
|
Wednesday, February 3, 2010
MALARUM NINAIVUKAL
| Some things cannot be forgotten. Here is small recap!!!!! Things that we have used ……… BRIL INK: CAMEL GUM: HERO PEN: BALL POINT PEN: GEOMENTRY BOX: NATARAJ PENCILS: Audio: VIDEO: WALKMAN: FLOPPY: FILM CAMERA: FILM ROLL: TELEPHONE: STAMPS: INLAND LETTER: POST CARD: SHOES: SCHOOL PICK UP: GOLD SPOT: BUBBLE GUM: Last but not the least - Our Own Childhood friends who alwayz gave us unconditional luv !!! |
Tuesday, February 2, 2010
STRANGE AMERICA
தாறுமாறாகப் பொருள்களை வீணாக்கும் அமெரிக்கர்கள்
பொருள்களை அமெரிக்கர்கள் வீணாக்குவது பற்றி பல முறை வயிறெரிந்து, அது பற்றி இரண்டு முறை ஏற்கனவே நான் எழுதியும்விட்டேன். ஆனால் இம்மாதம் ஆறாம் தேதி நியுயார்க் டைம்ஸ் பத்திரிக்கையில் வெளிவந்த செய்தி இதுவரை நான் அறிந்த எல்லா வகையான வீணாக்குதல்களையும் தூக்கிச் சாப்பிடுவது போல் இருந்தது.
ஃபாஷன் உடைகளும் ஃபாஷன் சாமான்களும் தயாரிக்கும் கம்பெனிகளின் தயாரிப்புகளை விற்கும் நியுயார்க்கில் உள்ள மேல்மட்டக் கடை ஒன்றின் பின்புற வாசலில் பல வகையான கம்பளி உடைகளும், ஆண்களின் சட்டைகளும், குளிருக்குப் பாதுகாப்பாக கைகளில் அணியும் கையுறைகளும் காலணிகளும் வேண்டுமென்றே சேதப்படுத்தப்பட்டு பெரிய குப்பைகளுக்கான பைகளில் அடைக்கப்பட்டுக் கிடந்தனவாம். இந்தப் பொருள்கள் எதையும் யாரும் உபயோகிக்கவில்லை. இவை எல்லாம் அந்தக் கடையில் இருந்த விற்பனையாகாத பொருள்கள். குப்பைத்தொட்டிக்கு அருகில் ஒரு ஏழைப் பெண்ணும் ஆணும் அந்தப் பைகளைத் திறந்து பைகளில் சேதப்படாமல் தப்பித்த ஆடைகள் ஏதாவது இருக்கின்றனவா என்று அந்தப் பைகளை தேடிப்பார்த்து, அப்படி ஏதாவது இருந்தால் அவற்றை இன்னொரு பையில் சேமித்தார்களாம்.
இன்னும் சில கடைகள் தள்ளி தெருவில் நடந்துகொண்டிருந்த ஒரு பெண் இன்னொரு கடைக்கு அருகில் அதே மாதிரி இதுவரை உபயோகிக்கப்படாத சட்டைகள், பேன்ட்டுகள், குளிருக்கு இதமாக உபயோகிக்கும் ஆடைகள் அடங்கிய பெரிய பைகளைக் கண்டார். பெரும் அதிர்ச்சி அடைந்த அவர் கிழிக்கப்பட்டும் சேதப்படுத்தப்பட்டும் உள்ள பொருள்களில் சிலவற்றையாவது யாராவது சீர்செய்து உபயோகிக்கலாம் என்ற எண்ணத்தில் தன்னால் தூக்க முடிந்த அளவு சில பைகளை வீட்டிற்கு இழுத்துச் சென்றார். கையுறைகளில் விரல்கள் வெட்டப்பட்டிருந்தனவாம்; ஆண்களின் சட்டைகளின் கைகள் துண்டிக்கப்பட்டிருந்தனவாம்; காலணிகளில் துளைகள் போடப்பட்டிருந்தனவாம்; அழகான டி ஷர்ட் என்னும் சட்டைகள் தாறுமாறாகக் கிழிக்கப்பட்டிருந்தனவாம். “நியுயார்க்கின் ஜனத்தொகையில் மூன்று பங்கு வறுமையில் வாடுகிறது; இப்போது குளிர்காலமாதலால் குளிர் நடுக்குகிறது. இப்படிப் பொருள்களை வீணாக்குகிறார்களே” என்று வருத்தப்பட்டு ஒரு நிருபர் பத்திரிக்கையில் எழுதியிருந்தார். அவரைப் போலவே நிறையப் பேர் இந்தச் செய்தியை அறிந்து அவருக்கு நிறைய மின்னஞ்சல்கள் அனுப்பியிருந்தார்களாம். அப்படி மின்னஞ்சலகள் அனுப்பிய சிலர் தாங்கள் விற்பனையாளர்களாக வேலைபார்க்கும் சில கடைகளும் விற்பனையாகாத பொருள்களை இப்படிச் சேதப்படுத்தி குப்பையில் எறிவதுண்டு என்று குறிப்பிட்டிருந்தார்களாம்.
இந்தச் செய்தி வெளியாவதற்கு முன் தினம் நியுயார்க் டைம்ஸ் பத்திரிக்கை அந்தக் கடைகளின் மேனேஜர்களை பத்துத் தடவை தொலைபேசியிலும் மின்அஞ்சல் மூலமும் தொடர்பு கொள்ள முயன்றதாம். ஆனால் அவர்கள் எந்தவித பதிலும் கூறவில்லையாம். பலர் இதைக் கண்டு குமுறவும் அந்த இரண்டு சங்கிலித் தொடர் கடைகளின் மேல்மட்ட அதிகாரிகள், குறிப்பிட்ட அந்தக் கடைகள் ஏன் அப்படி நடந்துகொண்டன என்று தங்களுக்குத் தெரியாது என்றும் எப்போதும் தங்கள் கடைகள் விற்பனையாகாத பொருள்களை தர்ம ஸ்தாபனங்களுக்கு இலவசமாகக் கொடுத்துவிடுவதாகவும் கூறினார்களாம். இனி இப்படி நடக்காமல் பார்த்துக்கொள்வதாகவும் உறுதி அளித்தார்களாம்.
சாமான்களைச் சேதப்படுத்தித் தூக்கியெறிந்த அந்தக் கடைகளுக்கு மிக அருகில் உபயோகித்துப் பழையதான உடைகளைச் சேகரித்து ஏழைகளுக்கு இலவசமாக வழங்கும் ஒரு ஸ்தாபனம் இயங்கி வருகிறது என்பதை இங்கு குறிப்பிட வேண்டும்.
இப்படி பொருள்கள் வீணடிக்கப்பட்டது சம்பந்தமாக மறுநாள் காலையில் வந்த இன்னொரு செய்தி இதை விட அதிர்ச்சியூட்டுவதாக இருக்கிறது. இப்படி விற்கப்படாத பொருள்களை தர்மஸ்தாபனங்களுக்குக் கொடுத்தால் அவற்றை அங்கிருந்து இலவசமாகப் பெறுபவர்களோ அல்லது அவற்றை அங்கிருந்து திருடிவிடுபவர்களோ கடைக்கு எடுத்துச் சென்று அவற்றைத் திருப்பிக் கொடுத்து, அந்தப் பொருள்களுக்குப் பணத்தைப் பெற்றுக்கொள்வார்களாம். ஒரு பொருளை வாங்கிவிட்டுப் பின் அது பிடிக்கவில்லையென்றால் கடையிலேயே திருப்பிக் கொடுத்துவிடுவது அமெரிக்காவில் சகஜம். (அமெரிக்காவில் சங்கிலித் தொடர் கடை ஒன்றில் வாங்கிய ஒரு சாமானை அதே ஊரில் வேறு இடத்தில் உள்ள அதே சங்கிலித்தொடர் கடையிலோ அல்லது மற்றொரு ஓரில் உள்ள அதே சங்கிலித் தொடர்கடையிலோ திருப்பிக் கொடுத்துப் பணத்தைப் பெற்றுக்கொள்ளலாம். இப்படிக் கொடுப்பதற்கு சில மாத தவணை உண்டு. தவணை முடிந்த பிறகும் சில கடைகள் தங்கள் கடைக்கு வாடிக்கையாளர்களை மறுபடி வரவழைக்க வேண்டும் என்பதற்காக வாங்கிக்கொள்வார்கள்.) இது உண்மையான காரணமா என்று ஆராய முற்படுமுன் பத்திரிக்கை நிருபர் குறிப்பிடும் இன்னொரு காரணம் மனதை வெகுவாக நோகடிக்கிறது. இந்தப் பொருள்கள் எல்லாம் ஃபாஷனை விரும்பும் பணக்காரர்களுக்காக தயாரிக்கப்படுவனவாம். இப்படிப் பணக்காரர்களுக்காகத் தயாரிக்கப்படும் உடைகளை, பொருள்களை ஏழைகள் உபயோகிக்கக் கூடாதாம். தங்கள் பிராண்டுகளை உபயோகிப்பவர்கள் பணக்காரர்களாக மட்டுமே இருக்க வேண்டுமே தவிர இலவசமாகப் பெற்று உபயோகிக்கும் ஏழைகளாக இருக்கக் கூடாதாம். எப்படிப்பட்ட சின்னப் புத்தி!
நியுயார்க் மாநகராட்சியே இப்படி பொருள்களை வீணாக்கும் காரியத்தைச் செய்து வருகிறது. சில கம்பெனிகள் பெரிய பிராண்டுகளின் பெயரைக் கொண்டு போலித்தயாரிப்புகளைத் தயாரிக்கின்றன. இந்தக் கம்பெனிகளின் மீது பிராண்டுகளின் சொந்தக்காரர்கள் வழக்குப் போட்டு அந்தப் பொருள்கள் போலித் தயாரிப்புகள் என்று நிரூபணமானால் அந்தப் பொருள்களை நீதிமன்றம் பறிமுதல் செய்கிறது. இப்படிப் பறிமுதல் செய்யப்பட்ட பொருள்களை நியுயார்க் நகராட்சியே ஒரு டன்னுக்கு 150 டாலர் செலவழித்து எரியகங்களில் எரித்தோ பெரிய இயந்திரங்களைக் கொண்டு துண்டு துண்டாகக் கிழித்தோ சேதமாக்குகிறது. ஓரிரண்டு வருடங்கள் வரை இப்படிப் பறிமுதல் செய்யப்பட்ட பொருள்களை பிராண்டுகளின் சொந்தக்காரர்களின் சம்மதத்தோடு ஏழைகளுக்கு இலவசமாக வழங்கும் கம்பெனிகளுக்குக் கொடுத்துவந்தனவாம். அப்படிக் கொடுத்துவந்தபோதும் உடைகள், காலணிகள் ஆகிய பொருள்களை மட்டுமே ஏழைகளுக்கு இலவசமாகக் கொடுக்கும் கம்பெனிகளுக்குக் கொடுக்க ஒப்புக்கொண்டனவாம். போலித்தயாரிப்புகளான ரோலக்ஸ் கைக்கடிகாரங்கள். பெண்களின் டம்பப் பைகள் ஆகியவற்றை சேதப்படுத்திவிட்டனவாம். இந்தப் பொருள்கள் சேதமாவதைக் கண்காணிப்பவர்கள் இலவசமாக அவற்றைப் பெற்றுக்கொள்ளும் கம்பெனிகள் இவற்றை வாங்க மறுத்துவிட்டதாகக் கூறியிருக்கிறார். அவற்றைப் பெற்றுக்கொண்டு இலவசமாக விநியோகிக்கும் கம்பெனியின் அதிகாரி ஒருவர் “நாங்கள் ஒரு போதும் அவற்றை வாங்க மறுத்ததில்லை. இப்படி வீணாக்காமல் ஏழைகளுக்குக் கொடுத்தால் நியுயார்க் நகராட்சிக்குப் பணமும் மிச்சமாகும். அந்தப் பொருள்களைத் தேவையானவர்களும் உபயோகிக்கலாம். சுற்றுப்புறச் சூழல் கெடுவதையும் தவிர்க்கலாம்” என்று கூறியிருக்கிறார்.
அமெரிக்காவில் அதிகமாகச் சோளம் விளைந்துவிட்டது என்று அதைக் கடலில் கொட்டுவார்கள். அதிகமாகப் பால் உற்பத்தி என்றால் அதையும் கடலில் கொட்டுவார்கள். அவற்றையெல்லாம் ஏழை மக்கள் அதிகமாக இருக்கும் நாடுகளுக்கு அனுப்பச் செலவாகும் என்று காரணம் கூறுவார்கள். விருந்துகள், விருந்துகள் என்று அங்கு பரிமாறப்பட்ட உணவில் பாதியை வீணடித்து குப்பையில் கொட்டி புதைகுழியில் சேர்ப்பார்கள். உணவகங்களில் அன்றன்று மிஞ்சும் உணவுகளை மறுநாள் உபயோகித்தால் உடல்நலத்திற்கு நல்லதல்ல என்று குப்பையில் சேர்ப்பார்கள். இதற்கெல்லாம் சிகரம் வைப்பது போல் இப்போது வந்திருக்கிறது உடைகளையும் குளிருக்காக உபயோகப்படுத்தும் பொருள்களையும் வீணாக்கும் செய்தி.
உலகின் ஒரு மூலையில் இருக்கும் கச்சாப் பொருள்களை குறைந்த விலையில் வாங்கி ஊதியம் குறைவாக உள்ள நாடுகளில் உள்ள ஏழைத்தொழிலாளிகளின் உழைப்பைக் கொண்டு உற்பத்தி செய்து தங்கள் நாட்டில் விற்பனை செய்து பெரும் பணக்காரர்களாக விளங்குபவர்கள் இருக்கும் அமெரிக்காவிற்கு, இந்தியாவும் சீனாவும் சுற்றுப்புறச் சூழ்நிலையை மாசுபடுத்துகின்றன என்று சொல்வதற்கு என்ன யோக்கியதை இருக்கிறது? தன் முதுகு தனக்கே தெரியாது என்பார்கள். அமெரிக்காவிற்கு இதை யார் எடுத்துச் சொல்வது? சுற்றுபுறச் சூழலை மாசுபடுத்துவதைத் தடுத்து நிறுத்த நடக்கும் மாநாடுகளில் கலந்துகொள்ளும் அமெரிக்காவை, “நீதான் முதல் குற்றவாளி, நீ திருந்தினால்தான் இது முடியும்” என்று சொல்லும் காலம் எப்போது வரும்?
நன்றி; நாகேஸ்வரி வலைத்தளம்

Monday, February 1, 2010
நம்மாழ்வார் உகந்த நம்பெருமாள்!
நம்மாழ்வார் உகந்த நம்பெருமாள்!
ஸ்ரீரங்கம் முரளி பட்டர்
ஆழ்வார்கள் பாடிய திவ்யப் பிரபந்தங்களுக்கு 'தமிழ் மறை' என்று பெயர். இதற்கு இத்தனை சிறப்பு வரக் காரணமாக இருந்தவர், 'வேதம் தமிழ் செய்த மாறன்' ஆகிய நம்மாழ்வார்.
திருவழுதிவளநாட்டை ஆண்ட காரியாருக்கும் வேளிர் அரசி உடையமங்கைக்கும், திருக்குருகூர் தலத்தில், வைகாசி- விசாக நட்சத்திரத்தில் விஷ்வக்ஸேனரின் அம்சமாக அவதரித்தவர் இவர். பிறந்தவர் அழவும் இல்லை, அசையவும் இல்லை! ஒன்றேயன்று உயிர்... அது மட்டுமே இருந்தது.
திருக்குருகூர் ஆதிநாதர் சந்நிதியில் குழந்தையை விட்டுவிட்டு, காரியாரும் உடைய மங்கையும் கதறி அழுதனர். அப்போது, ஓர் அதிசயம் நிகழ்ந்தது. பூப்போல் சிரித்து, குப்புறக் கவிழ்ந்து தவழ்ந்த குழந்தை, அப்படியே சந்நிதியில் உள்ள புளியமரத்தை நோக்கிச் சென்றது! மரத்தின் அடியில் சென்று சேர்ந்த குழந்தையை யாராலும் தூக்க முடியாமல் போனது. பசி-தாகம் இன்றி, எவ்வித வாட்ட மும் இன்றி, அதன் அடியிலேயே இயல்புக்கு மாறாக வளர்ந்ததால் மாறன் எனப் பெயரிடப் பெற்றார்.
சாதாரணமாக குழந்தை பிறந்தவுடன் சடம் என்னும் அறியாமைக்கு உரித்தான ஒரு நாடி படருமாம். இந்தக் குழந்தை அந்த நாடியைத் தன்னிடம் நெருங்கவிடவில்லை. அதனை வென்றதால், சடகோபன் என்ற பெயரும் வந்தது. திருக்குருகூர் ஆதிநாதப் பெருமாள், விஷ்வக்ஸேனரையே இவருக்கு குருவாக நியமித்தார். இளமையிலேயே கற்றுத் தேர்ந்தார் மாறன்!
இவரின் மௌனத்தைக் கலைத்தவர் மதுரகவிகள். ஞானம் தேடி வடக்கே சென்ற மதுரகவி, அயோத்தியில் வானில் தெரிந்த தெய்விக ஒளியைக் கண்டு அதிசயித்தார். அதனால் ஈர்க்கப்பட்டு, அந்த ஒளியைப் பின்தொடர்ந்தார். அது இவரை திருக்குருகூருக்கே கொண்டு வந்து சேர்த்தது. இத்தனைக்கும் திருக்குருகூரை அடுத்த திருக்கோளுர்தான் இவருக்கு சொந்த ஊர்!
இப்படி, வெகுதூரம் ஞானம் தேடிச்சென்று, தன் ஊர் அருகிலேயே தான் தேடிய ஞானியைக் கண்டுகொண்ட மதுரகவி, நம்மாழ்வாரிடம் வெகுநாட்களாக தனக்கு விடைதெரியாத ஒரு கேள்வியை நம்பிக்கையுடன் கேட்டார்...
''செத்ததின் வயிற்றில் சிறியது பிறந்தால் எத்தைத் தின்று எங்கே கிடக்கும்?''
(செத்தது- சரீரம்; சிறியது- ஜீவாத்மா(உயிர்). உடலில் தங்கும் இந்த ஜீவன், எப்படி செயலாற்றும்? என்பது மதுரகவிகளின் கேள்வி)
நம்மாழ்வார் முதன் முதலாக திருவாய் மலர்ந்தார்-''அத்தைத் தின்று அங்கே கிடக்கும்''.
(உடலில் உயிர் உள்ளவரை, உடல் அனுபவிக்கும் ஐம்புலன்களின் இன்ப- துன்பங்களையும் இந்த ஜீவாத்மா சகித்துக் கொண்டிருக்கும்). இதனால் தெளிவு பெற்ற மதுரகவி, அவருடனேயே தங்கிவிட்டார்.
தன் குரு நம்மாழ்வாரிடம் வேதம் அனைத்தையும் தமிழ்ப்படுத்த வேண்டினார் மதுரகவிகள். அதனால், நம்மாழ்வார் நான்கு வேதங்களின் சாரமாக, நான்கு பிரபந்தங்களை அருளிச்செய்தார். அவை: திருவிருத்தம் (ரிக் வேத சாரம்), திருவாசிரியம் (யஜூர் வேத சாரம்), திருவாய்மொழி (சாம வேத சாரம்), திருவந்தாதி(அதர்வண வேத சாரம்).
இவர், எந்த திவ்யதேசத்துக்கும் செல்லவில்லை. திருப் புளியின் அடியிலேயே இருந்தார். எல்லா திவ்யதேச எம்பெருமான்களும், இவர் இடத்துக்கு வலிய வந்து, தங்கள் திவ்ய தரிசனத்தை இவருக்குக் காட்டி அருளினர்.
மற்றைய ஆழ்வார்களைப் போன்று இவ்வுலக உணர்ச்சி ஏதும் அடையாமல், தத்துவ ஞானத்தோடு ஞானபக்தியை உடையவராக, சதா தியானபரராக... இந்நிலை என்றும் மாறாதிருந்த மாறன் இவர். இவர் அவயவி(உடல்). மற்றைய ஆழ்வார்கள் எல்லாரும் இவருக்கு அவயம்(உறுப்புகள்).
பூவுலகில் சுமார் 35 ஆண்டுகள் எழுந்தருளியிருந்த சுவாமி நம்மாழ்வார், பரமபதம் செல்ல எண்ணம் கொண்டார். அதனால், மிகவும் துயரம் அடைந்த அவரின் சீடர் மதுரகவியாழ்வார், நம்மாழ்வாரை விக்ரஹ உருவிலாவது தரிசிக்கலாமே என்று எண்ணி, 'நம்மாழ்வாரின் அர்ச்சைத் திருமேனி வேண்டும்' என்று கேட்டார். அதற்கு நம்மாழ்வாரும், ''தாமிரபரணி ஆற்று நீரை எடுத்து வந்து, சுண்டக் காய்ச்சினால், எனது உருவம் கிடைக்கும்'' என அவரைத் தேற்றினார். மதுரகவிகளும், தாமிரபரணி ஆற்றின் நீரை ஒரு பொற்குடத்தில் எடுத்து வந்து, வேத விற்பன்னர்களின் வேதகோஷம் முழங்க, இடைவிடாமல் காய்ச்சினார்.
ஏழாம் நாள்... யாரும் எதிர்பாராத வகையில்... கூப்பிய கையுடன், திரிதண்டமாகிற முக்கோல் ஏந்தியிருக்க, ஒரு திவ்ய மங்கள விக்ரஹம் தோன்றியது. அதனைக் கண்ட நம்மாழ்வார், 'பொலிக பொலிக பொலிக' என, திருவாய் மலர்ந்தருளினார். ''அது, வருங்காலத்தில் வைணவத்தை ஆழமாக நிலைநாட்டப் போகும் சுவாமி ராமானுஜரின் பவிஷ்யதா சார்ய திருமேனி'' என்று அருளி, தனது வலது திருவடியைக் காண்பித்தார். அதில் ஸ்ரீராமானுஜரின் உருவத்தை அனைவரும் தரிசித்தனர். அந்த விக்ரஹத்தை அங்கேயே வைத்திருந்து ஆராதனைகள் செய்து வரும்படி பணித்தார்.
மீண்டும் ஒருமுறை தாமிரபரணித் தண்ணீரைக் காய்ச்சுமாறு சொன்னார். முன்பு செய்தது போல செய்தபோது, சுவாமி நம்மாழ்வாரின் திவ்ய மங்கள விக்ரஹம் சின்முத்திரையோடு உண்டானது. (இன்று நாம் ஆழ்வார் திருநகரியில் தரிசிக்கும் விக்ரஹம் இதுதான்!) அப்போது நம்மாழ்வாரின் திருமேனியில் இருந்து அருள்ஒளி விக்ரஹத் திருமேனியில் பாய்ந்தது. அதன் பிறகு நம்மாழ்வார் பரமபதம் எழுந்தருளினார். அவரது சரமத் திருமேனியை திருப்புளியமரத்தின் அடியில் பள்ளிப்படுத்தி, திருவரசு ஏற்படுத்தி மதுரகவியாழ்வார் வழிபட்டு வரலானார்.
நம்மாழ்வார் மிகவும் உகந்த பெருமாள் நம் அரங்கனே!
திருவரங்கனைத் தன் மணாளனாக வரித்து, தானே அரங்கனின் நாயகியாகிப் பாடிய பாசுரங்கள் அநேகம். அவற்றில், அரங்கனையே நினைத்து உருகும் தன் மகளின் நிலையைக் கண்டு கண்ணீர் உகுத்து, அரங்கனிடம் 'நீ என்ன செய்யப் போகிறாய்?' என்று நாயகியின் தாயார் கேட்கும் பாசுரம் ஒன்று... கங்குலும் பகலும் கண் துயில் அறியாள் எனத் தொடங்கும் பாசுரம். இதில்,
''இரவு பகலாக கண் மூடி உறங்க வேண்டும் என்பதை அறிந்தும் அறியாதவளாகி விட்டாள். பொங்கும் கண்ணீர், உன்னைக் காண இடையூறாக இருக்கும் என்பதால், அதனைத் தனது கைகளால் தள்ளி விடுகிறாள். சங்கு- சக்கரங்கள் என்று சொல்லி வணங்க முயல்கிறாள். தாமரைக் கண்கள் என்று சொல்லி, அதனைப் பெற முடியாமல் உள்ளத்தால் சோர்வடைகிறாள். உன்னை விட்டு நான் எப்படி இருப்பேன்?- என்கிறாள். தன் கைகளால் நிலத்தை அளைந்த வண்ணம் இருக்கிறாள். திருவரங்கப் பெரிய பெருமாளே! என் மகளின் நிலைகுறித்து நீ என்ன நினைத்துள்ளாய்?'' என்று அரங்கனைக் கேட்கிறாள் நாயகியின் தாயார்.
முடிவு இவன் தனக்கு ஒன்று அறிகிலேன் என்னும்
மூவுலகாளியே! என்னும்
கடிகமழ் கொன்றைச் சடையனே! என்னும்
நான்முகக் கடவுளே! என்னும்
வடிவுடை வானோர் தலைவனே! என்னும்
வண் திருவரங்கனே! என்னும்
அடியடையாதார் போல் இவளணுகி
அடைந்தனள் முகில் வண்ணனடியே!
இந்தப் பெண் இவ்வாறு சிரமப்படும் நேரங்களில் தனக்கோ அல்லது தன் சிரமங்களுக்கோ எந்தவித முடிவும் தெரியவில்லை என்கிறாள். மூவுலகையும் ஆளும் இந்திரனுக்கு ஆத்மாவாக உள்ளவனே... மணமுள்ள கொன்றை மாலையை சடையில் தரித்துள்ள சிவனுக்கு ஆத்மாவாக உள்ளவனே... நான்முகனுக்கு ஆத்மாவாக உள்ளவனே... உன் வடிவினை உடைய வானோர்களின் தலைவனே... அனைவருக்கும் அருள்புரிகின்ற திருவரங்கப் பெரியபெருமாளே - என்கிறாள். அவனது திருவடிகளை அடைய மாட்டாள் என்று எண்ணும்படி இருந்தபோது, மேகவண்ணன் திருவடிகளை அவள் பெற்றுவிட்டாள்.
மூவுலகாளியே = மூ + உலகு + ஆளியே! திருமலையாண்டான் சுவாமி, இதற்கு விளக்கம் சொல்லும்போது, மூன்று உலகையும் ஆளும் இந்திரன் எனப்படும், சிவன் எனப்படும், பிரம்மன் எனப்படும் வடிவுடைய வானோர்கள் மற்றும் தேவர்களின் தலைவனே- என்கிறார். ஸ்ரீமத் ராமானுஜர் விளக்கம் சொல்கையில், 'அவர்களது தலைவன் என்பதோடு, அந்தர்யாமியாக இருப்பவனே' என்றும் சேர்க்கிறார்.
மூவுலகாளியே... மூவுலகையும் ஆளும் தலைவனே என்று சொல்லும்போது, ஒரு சம்பவம் நினைவுக்கு வருகின்றது.
திருவரங்கம் கோயிலில்... கருவறையில் காலை, மதியம், மாலை, இரவு ஆகிய நான்கு வேளைகளிலும் பச்சரிசி மாவை தண்ணீர் விட்டுக் குழைத்து, பூர்ணம் போன்று செய்து, நடுவில் நெய் திரி ஏற்றி, ஆறு மங்கள ஆரத்தியும், கற்பூரத்தினால் மூன்று கற்பூர ஆரத்தியும் பெரிய பெருமாளுக்கு காண்பிப்பர்.
அன்று ஓர் ஏகாதசி. நம்பெருமாள் புறப்படும் முன் அடியேன் மங்கள ஆரத்தி செய்தேன். வெளியில் ஸ்ரீதிரிதண்டி நாராயண ஜீயர் சுவாமி தரிசித்துக் கொண்டிருந்தார். அவருடன் உபந்யாசகர் ஸ்ரீவில்லிபுத்தூர் கண்ணன் சுவாமியும் இருந்தார். இரண்டு மூத்த அர்ச்சகர்கள் உடனிருக்க, நம்பெருமாளை தோளுக்கினியானில் எழுந்தருளச் செய்து, துவாரபாலகர்கள் படியைத் தாண்டி வந்து கொண்டிருந்தோம். அப்போது, ஜீயர் சுவாமி திடீரென ஒரு கேள்வி கேட்டார்...
''எதற்காக ஆறு பூரணம் போன்று செய்யப்பட்ட மங்கள ஆரத்தி? எதற்காக மூன்று கற்பூர ஆரத்தி?''
அர்ச்சகர்கள் இருவரும் சற்று மௌனம் சாதித்தனர்... அதற்குள் ஸ்ரீகண்ணன் சுவாமிகள் அடியேனைப் பார்த்து, ''என்ன முரளீ! உனக்குத் தெரியுமா?''என்றார்.
உடனே, தோன்றிய பதிலை அப்போது சொன்னேன்... ''நம்பெருமாள் ஷாட்குண்யபரிபூரணர் (ஞானம், சக்தி, பலம், ஐஸ்வரியம், வீர்யம், தேஜஸ் என்ற ஆறுகுணங்களும் முழுமையாகப் பெற்றவன்) அதனால் ஆறு மங்கள ஆரத்தி...''
''சரி, மூன்று கற்பூர ஆரத்தி..?'' ஜீயர் சுவாமிகள் கேட்டார்.
''த்ரைலோக்ய பூஜிதர்... அதனால்!'' (மூன்று உலகிலும் ஆளும் இந்திரன், சிவன், பிரம்மனால் பூஜிக்கப்படுபவர்) என்றேன்.
இந்த பதிலால் ஜீயர் சுவாமி திருப்தியடைந்து மகிழ்ச்சி அடைந் தார் என்பதை அவரின் முகம் காட்டியது. இருந்தாலும், 'நாம் ஏதோ நேரத்துக்குத் தகுந்தாற்போல உளறிவிட்டோமோ?' என்று எனக்குள் ஒரு குழப்பம். நம்மைக் காட்டிலும் பெரியவர்களே அமைதியாகப் போகும்போது, நாம் ஏன் வாயைக் கொடுத்தோம் என்ற உதறல்!
சிறிது நேரத்தில், ஸ்ரீகிருஷ்ணப்ரேமி சுவாமி நம்பெருமாளை தரிசிக்க வந்தார். அடியேனை சிறுகுழந்தையாக இருக்கும் போதிலிருந்து சுவாமி நன்கு அறிவார். அவரிடம் நடந்ததைச் சொன்னேன். ''தாங்கள்தான் இதற்கு ஒரு விளக்கம் தரவேண்டும்'' என்று கேட்டுக் கொண்டேன். அதற்கு அவர், ''நீ இங்கிருந்து சொன்னாய் அல்லவா! அதுதான் உண்மை. இதுதான் பிரமாணம். கவலை வேண்டாம்'' என ஆசீர்வதித்தார். நானும், நம் மனதில் இருந்து அரங்கனே அப்படி வெளிப்படுத்தினானோ என்று ஆறுதலடைந்தேன்!
நன்றி////உரிமை////சக்திவிகடன்

கடிக்காத ஃப்ரெண்ட்ஷிப்!
பூனையும் எலியும் ஃப்ரெண்ட் ஆக முடியுமா? 'முடியும்' என்கிறார் அமெரிக்க ஆராய்ச்சியாளர் சாய். எலியைப் பார்த்ததும் வெறிகொண்டு பாயும் ஒரு பூனையையும், ஒரு அப்பிராணி எலியையும் மூன்று அறைகளாகப் பிரிக்கப்பட்ட ஒரு கண்ணாடிப் பெட்டியில் அடைத்தார். அந்தப் பெட்டியின் ஒன்றாவது மற்றும் மூன்றாவது அறைகளில் இருக்கும் பட்டனை ஒரே நேரத்தில் அழுத்தினால்தான் நடுவில் இருக்கும் கதவு திறக்கும். முதல் அறையில் எலி, மூன்றாவது அறையில் பூனையை அடைத்து இரண்டாவது அறையில் உணவை வைத்தார். ஒரே நேரத்தில் பட்டனை அழுத்தினால்தான் கதவு திறக்கும் என்று பல முறை செய்துகாட்டினார். இரண்டு விலங்குகளையும் அரைப் பட்டினியிலேயே வைத்திருந்தார். மூன்றரை மாதத்தில் 700 முறைக்கு மேல் எலியும், பூனையும் முயற்சி செய்து கடைசியாகக் கதவைத் திறந்துவிட்டது. வெளியே வந்த பூனை அமைதியாக உணவைச் சாப்பிட்டது. எலியைக் கண்டுகொள்ளவில்லை.
அடுத்ததாக... எலி சாப்பிட, பூனை பட்டனை அழுத்த வேண்டும். பூனை சாப்பிட, எலி பட்டனை அழுத்த வேண்டும் என்று பெட்டியை வடிவமைத்தார். அடுத்த மூன்று மாதத்தில் பூனை எலியின் பசியைப் புரிந்துகொண்டு பட்டனை அழுத்தும் அளவுக்குப் பழகிவிட்டது. (எலி உயிரோடு இருந்தால்தானே பூனையால் உயிரோடு இருக்க முடியும்!) அடுத்த சில நாட்களில் பூனையின் முதுகில் ஏறி விளையாடத் தொடங்கும் அளவுக்குப் பழகிவிட்டதாம் எலி! எப்பூடி?
நன்றி;நட்புவிகடன்--ஆனதவிகடன் உரிமை

frenemy
உங்கள் ஃப்ரனெமி யார்?
நியூயார்க் நகரின் பிரபல மாடல் லிஸ்குலா கோஹென். திடீரென இணையத்தில் அவரைப்பற்றித் தாறுமாறான தகவல்களும், ஆபாசப் புகைப்படங்களும் குவிந்தன. தோண்டித் துருவி குற்றவாளியை டிரேஸ் செய்தால், அவர் லிஸ்குலாவின் நெருங்கிய தோழி!
பொதுவாக, இப்படி ஒருவரது இமேஜை டேமேஜ் செய்வது பெரும்பாலும் அவர்களது நண்பர்களாகவே இருக்கிறார்கள் என்பதுதான் அதிர்ச்சி நம்பர் ஒன்! இப்படிப்பட்ட நண்பர்களை(?!) 'ஃப்ரனெமி' என்கிறார்கள் (frenemy - ஃப்ரெண்ட் பாதி, எனிமி மீதி) இவர்களை எப்படி அறிந்துகொள்வது?
ஃப்ரனெமிக்கள் சுயநலவாதிகள். அவர்களிடம் உங்கள் பிரச்னைகளைச் சொன்னால் தோள் கொடுக்க மாட்டார்கள். ஓட்டம் எடுப்பார்கள். நீங்கள் எலுமிச்சம் பழத்தைத் தூக்கிப் போட்டு கேட்ச் பிடித்தால்கூட, 'அடுத்த யுவராஜ்சிங் நீதான்!' என்று பில்டப் கொடுப்பார்கள். நீங்கள் நகர்ந்ததும், 'ஓவரா அலட்டுறான்டா!' என்று காலி செய்வார்கள். உங்களை அதிகம் புகழ்பவர்களிடம் எப்போதும் உஷாராக இருங்கள்!
உங்கள் நண்பர்களுள் யாரோ ஒருவர் உங்கள் காதலன்/ காதலியை அடிக்கடி சந்திக்கிறாரா? அவரைச் சந்தித்த பிறகெல்லாம் உங்கள் காதலன்/காதலி உங்களோடு சண்டை போடுகிறாரா? அந்த யாரோ ஒருவர்தான் உங்கள் ஃப்ரனெமி! கொஞ்சமும் யோசிக்காமல், அவர்கள் நட்பைத் துண்டித்துவிடுங்கள். ஃப்ரனெமி தவிர்க்க முடியாத நபராக இருந்தால், அவருக்கு முன் நீங்கள் டம்மி பீஸ் போல நடிக்க ஆரம்பியுங்கள். ''ச்சே! இது வேலைக்காவாது!'' என்று உங்கள் ஃப்ரனெமி அடுத்த ஆளை டார்கெட் செய்துகொள்வார். எந்த நபரைப் பார்த்ததும் உங்கள் உள்ளத்தில் தோன்றும் முதல் அபிப்ராயத்தை நம்புங்கள். அது பெரும்பாலும் சரியாகத்தான் இருக்கும்!
பலர் முன் உங்கள் நண்பர் உங்களைத் தொடர்ந்து காயப்படுத்துகிறாரா? ஏதோ உள்குத்து இருக்கிறது நண்பரே!
மிக முக்கியமான விஷயம்... எத்தனைதான் நெருங்கிய நண்பராக இருந்தாலும், எவரிடமும் உங்கள் ரகசியங்களைச் சொல்லாதீர்கள். இன்றைய நண்பன் நாளையே உங்கள் எதிரி ஆகலாம். அப்போது உங்கள் ரகசியங்கள் ஆயுதமாக்கப்படலாம். உங்கள் ரகசியங்கள் உங்களுக்கு மட்டுமே!
நன்றி';விகடன் வார idhazh

Subscribe to:
Posts (Atom)