Bhoo thatha's Blogspot

Search my older Blog

Friday, August 28, 2015

thirukkannamangai


திருக்கண்ணமங்கை


      வைஷ்ணவ திவ்யதேசங்களில் 108 இல்  106 திவ்ய தேசங்களை மட்டுமே நில உலகில் உள்ளது. திருப்பாற்கடல், மற்றும் ஸ்ரீவைகுண்டம் என்னும் இரு திவ்யதேசங்களும் மோக்ஷத்தினை அடைந்தவர்கள் மட்டுமே ஸேவிக்கமுடியும். 

      திருமங்கையாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட (பாடப்பெற்ற) இமயமலையில் உள்ள “திருப்பரிதி” என்னும் திவ்யதேசம் இன்னமும் எங்கு உள்ளது என கண்டுபிடிக்கமுடியவில்லை. 

      அதற்கு பதிலாக “ஜோஷி மட்” என்னும் திய்வதேசத்தினை பக்தர்கள் திய்வதேசமாக ஸேவித்துவருகின்றனர்.  

      108 வைஷ்ணவ திவ்ய தேசங்களில் 27 வது ஸ்தலமாக உள்ளதும், சோழநாடு திவ்யதேசங்களான நாற்பதில் பஞ்ச கிருஷ்ணாரண்ய க்ஷேத்திரங்கள் ஐந்தில்... திருக்கண்ணங்குடி, திருக்கண்ணாமங்கை, திருக்கண்ணபுரம், கபிஸ்தலம்,திருக்கோவலூர் என்னும் ஐந்து திவ்ய தேசங்களின் நடுநாயகமாக திகழ்வதும் 108 திவ்ய தேசங்களில் ஸ்ரீகிருஷ்ணனுக்கும் தாயாருக்கும் திருக்கல்யாணம் நடந்ததால் “திருக்கண்ணமங்கை” திவ்ய தேசம் “கிருஷ்ண மங்கள க்ஷேத்திரம்” என வழங்கப்படுகிறது.  

      திருவாரூரிலிருந்து கும்பகோணம் செல்லும் வழியில் இரண்டாவது கிலோமீட்டரில் உள்ளது திருக்கண்ணமங்கை திவ்யதேசம்.     

ஸ்ரீ திருக்கண்ணமங்கை யாண்டான் வரலாறு


        ஸ்ரீ நாதமுனிகளின் பதினோரு சீடர்களில் புகழ் பெற்ற ஐந்து சீடர்கள் புண்டரீகாக்ஷர், அஷ்டாங்க யோகத்தில் ஈடுபட்ட குருகைக் காவலப்பன், நாதமுனிகளின் மருமக்களான மேலையகத்தாழ்வான், கீழையாகத்தாழ்வான், மற்றும் திருக்கண்ணாமங்கையாண்டான் ஆகியோர்.


      திருக்கண்ணமங்கையில் ஆனி மாதம் க்ருஷ்ண பட்ச ஸ்ராவண (திருவோண) நட்சத்திரத்தில் அந்தணர் குலத்தில் அவதரித்து கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கி விவாஹம் ஆகியவராய் ஸ்ரீ நாதமுனிகளால் பஞ்ச ஸம்ஸ்காரம் செய்விக்கப்பட்டு, துளஸீ மாலைகளை ஸ்ரீ பக்தவத்ஸல பெருமாளுக்கும் திருக்கண்ணமங்கை நாயகிக்கும், அபிஷேகவல்லி தாயாருக்கும் ஸமர்பித்துவந்தார்.

      பெருமாளை ஸேவிக்க இரண்டு வேட்டையாடுபவர்கள் தனது நாய்களுடன் கோவிலுக்கு வந்தனர். கோவிலுக்கு வெளியே தனது நாய்களினையும் செருப்பினையும் விட்டுவிட்டு  கோவிலுக்கு உள்ளே செல்ல...

       ஒரு வேடனின் நாயானது மற்றொரு வேடனின் செருப்பினை கடிக்க அதை கண்ட மற்றொரு நாயானது தனது எஜமானனின் செருப்பினை நாய் கட்டிப்பதை பொறுக்காது அந்த நாயுடன் பலமாக சண்டையிட்டது. 

      சண்டையின் முடிவில் ஒரு நாய் இறந்துபோக இதனை அப்போது வெளியில் வந்த வேடர்கள் கண்டனர். 

      தனது நாயினை கொன்ற மற்றொரு நாயை தன் வாளால் வேடுவன் வெட்டிக்கொல்ல, தமது  நாய்களின் பொருட்டு இரு வேடுவர்களுக்கும் இடையே கத்திச் சண்டை துவங்கியது, உச்ச கட்ட சண்டையின் முடிவில் இரு வேடுவர்களும் ஒருவரை ஒருவர் வெட்டிக்கொண்டு இறந்தனர். 

      கையில் துளஸீ மாலையுடன் அங்கு வந்த திருக்கண்ணமங்கையாண்டான் நடந்த நிகழ்ச்சிகளை அறிந்து பிறருக்கு வேலை செய்து பிழைப்பவர்களும், தாழ்ந்த ஒழுக்கமுள்ளவர்களுமான இவ்விருவரும் தங்களின்மேல் அன்புள்ள நாய்களிடம் கொண்ட கருணையால் சண்டையில் தங்களது உயிரை இழந்தார்கள். 

      தர்மங்களை பற்றி ஆராய்ச்சி இல்லாத, இவர்களது மனித இயற்கைக்கு மீறிய இந்த கருணை வியக்கத்தக்கது.

      இவர்களுக்கே இப்படிப்பட கருணை இருக்குமானால் இந்த உலகை படைத்து இயற்கையிலேயே உறவினனாய் எல்லாம் அறிந்தவனாய், உலகனைத்துக்கும் தலைவனாய், உயிர்கள் அனைத்துக்கும் தாயாய் தந்தையாய் உள்ள ஸ்ரீ பத்வத்ஸல பெருமாள்,தாயாருக்கும் பக்தர்களிடம் இருக்கும் கருணை பற்றி கேட்கவும் வேண்டுமோ?

      பெருமாள் தன் பக்தனை ரக்ஷிப்பானா? மாட்டானா? என்னும் சந்தேகம் தேவையற்றது என எண்ணி, பக்தியால் உறுதி பூண்டு,தன்னை ஸ்ரீ பத்வத்ஸல பெருமாள், தாயாரிடம் ஒப்படைத்தவராய் எல்லா நித்ய, நைமித்திக கர்மானுஷ்டானத்தினையும் அடியோடு விலக்கி நாயைப்போல இரண்டு கைகளையும் கால்களாக்கி நான்கு கால்களை ஊன்றி நாய் போன்று நடந்து... 

       காலையில் ஊருக்கு வெளியே சென்று காலைக்கடன்களை முடித்து குளத்தில் குளித்து வஸ்திரமில்லாமல் (உடலில் துணிகள் இல்லாமல்) கைகளினையும் கால்களாக்கி நடந்து வேகமாக வந்து ஸ்ரீ பத்வத்ஸல பெருமாள் ஸன்னதியில் மகிழ மரத்தின் அடியில் பெருமாளை ஸ்துதித்தபடி மௌனியாய் கிடந்து, கிடைக்கும் பிரசாதத்தினை உண்டு வாழத்துவங்கினார்.   

      தன் பக்தனின் பக்தியில் மகிழ்வுற்ற ஸ்ரீ பத்வத்ஸல பெருமாள் ஓரிரவில் ஊர்மக்கள் அனைவர் கனவிலும் தோன்றி, எனது பக்தனான திருக்கண்ண மங்கை யாண்டானுக்கு அனைவரும் காணும் பொழுதில் மோக்ஷமளிக்கப்போகிறேன் எனக் கூறிட... 

    மறுதினம் பெருமாளை நோக்கி திருக்கண்ணமங்கையாண்டான் செல்ல பக்தர்கள் அனைவரும் தங்கள் கண்களால் கண்டுகொண்டிருக்கும் போது மின்னல் கூட்டம் போன்ற ஒரு பெரிய ஒளி ஆட்கொள்ள திருகண்ண மங்கை யாண்டான் பெருமாள் திருவடிகளை அடைந்தார். 



      மோக்ஷத்தினை அடைந்த அவருடைய திருவரசு இன்றும் திருகண்ண மங்கை திவ்யதேசத்தில் ப்ராஹாரத்தின் வலது புறம் மகிழ மரத்தின் கீழ் செண்பக ப்ரஹாரத்தில் அமைந்துள்ளது.  


      திருவரசின் மேற்புறமும், ஆழ்வார்கள் சன்னதியிலும் திருக்கண்ணமங்கையாண்டான் மூலவராக சேவை சாதிக்கிறார். உத்சவர் திருமேனி கோவிலின் மூலவர் சன்னதியின் முன் வலது புறம் உள்ளது.

      ஒவ்வொரு ஆண்டும் ஆனி ஸ்ராவணத்தின் போதும், திருக்கண்ண மங்கையாண்டான் உற்சவர் திருமேனிக்கும், அவரது திருவரசிலும் திருமஞ்சனம் சிறப்பாக நடைபெறுகிறது. 

      வெகுஜன மக்களால், ஏன் பக்தர்களால் கூட அதிகம் அறியப்படாத ஆழ்வார்களின் சரித்திரத்தினை விட உயர்ந்ததான, பக்தி மற்றும் ஸரணாகதி என்பதை தன் வாழ்க்கையின் மூலம் வாழ்ந்து காட்டிய,இம்மகானின் பெருமையை உணர திருக்கண்ணமங்கை சென்று ஸேவிக்கவேண்டும். 


                  ஆனி ஸ்ரவணத்துதித்தோன் வாழியே!c















C










































' கற்களால் ஆன சர்ச்

ஹாலந்து நாட்டின் என்சிச்எடி நகரில் 2012ம் ஆண்டு 'க்ரீன்ஸ் வெர்க்' திருவிழாவுக்காக இந்த 'லெகோ' கற்களால் ஆன சர்ச் அமைக்கப்பட்டது. கூரை மட்டும் இணைப்பு!

இது பற்றி இரு தகவல்கள்:

ஒன்று உண்மையில் இவை 'லெகோ' கற்களால் ஆனவை அல்ல! மாறாக கான்கீரிட்டில் பிளாக் செய்து ஆரம்ப கால லெகோப்ளாக்குகளில் அடிக்கப்பட்ட 5 வண்ணங்கள் பூசப்பட்ட ஒன்றின் மீது ஒன்று வைக்கப்பட்டதாகும்.

இரண்டாவது இது உண்மையான சர்ச் அல்ல. 'அபான்டான்டஸ் ஜியான்டஸ் சர்ச்' என செல்லப் பெயரிட்டு அழைக்கப்பட்டாலும் உண்மையில் இங்கு ஒரு தடவை மாஸ் நடந்ததோடு சரி!

உண்மையில் இது, 'க்ரீன்ஸ் வெர்க்' விழாவிற்காக உருவாக்கப்பட்டது. இந்த சர்ச்சினுள் விழா சமயத்தில் சிறப்பு பேச்சுக்கள், சங்கீத கச்சேரிகள் நிகழ்த்தப்பட்டன. 'லெகோ கற்கள்' அடுக்கும் போட்டி கூட நடத்தப்பட்டது. ஆனால் விழா நடந்து முடிந்ததும், சர்ச் பிரிக்கப்பட்டு ஒரு இடத்தில் கற்கள் அடுக்கி வைத்து விடுவர். அடுத்த வருமட் அதனை பயன்படுத்தி மீண்டும் கட்டுவர். சர்ச் கட்டியபோது அதன் அதிகபட்ச உயரம் 20 மீட்டராக இருந்தது.

திலிப்

new words in the :Dictionary

New words in the dictionary? Awesomesauce!


New words! In the Oxford dictionary! So exciting! If there were only a word to describe just how exciting.


Wait, there is ... it's on the list! 
Awesomesauce!
That term, meaning extremely good or excellent, is just one of the couple dozen new words, prhases and acronyms added Thursday to the Oxford Dictionaries online version.
The words represent newer terms judged most significant and likely to stand the test of time, according to Oxford University Press.
The additions include terms such as cat cafe, manspreading, onboarding and terms drawn Sent from my iPad
A cat cafe, the dictionary explains, is an "establishment where people pay to interact with cats housed on the premises."

Manspreading refers to "the practice whereby a man, especially one travelling on public transport, adopts a sitting position with his legs wide apart, in such a way as to encroach on an adjacent seat or seats."
And onboarding comes from the colorful world of human relations, describing the "action or process of integrating a new employee into an organization or familiarizing a new customer or client with one's products or services."
'WTF' in the dictionary?! That's 'clickbait'
We also get recognition for several new terms with -y endings, including cheffy ("characteristic of a chef"), melty ("melting or partially melted), cidery (no, not tasting of cider, but a place where the stuff is made) and cupcakery ("a bakery that specializes in cupcakes.")
Surprisingly "MacGyver" and "holodeck" -- although feeling a bit like words from another century -- also made the cut, referring respectively to the art of "making or repairing (an object) in an improvised or inventive way" and the (so-far) fictional "chamber or facility in which a user can experience a holographic or computer-simulated physical environment."
Other words on the list:
Kayfabe: "The fact or convention of presenting staged performances as genuine or authentic." It's largely used in pro wrestling circles, natch, but the dictionary says its origin is unknown, except possibly as a reversal of the phrase, "be fake."
Rando: "A person one does not know, especially one regarded as odd, suspicious, or engaging in socially inappropriate behaviour."
Mkay: A non-standard way of spelling, or saying, "Okay," often used, Oxford says, "to invite agreement, approval, or confirmation."
Hangry: "Bad-tempered or irritable as a result of hunger."
Beer o'clock and wine o'clock: Terms referring to the appropriate time to start drinking.

A new word for the overworked:Al desko

Thursday, August 27, 2015

கேரள மக்களின் பாரம்பரிய விழாவான ஓணம் பண்டிகை கொண்டாட்டம் உற்சாகத்துடன் தொடங்கி விட்டது...கேரளத்தில் மட்டுமின்றி, தமிழக வாழ் கேரளா மக்களாலும் விமர்சையாக கொண்டாடப்படும் மிகப் பெரிய திருவிழாவான ஓணம் பண்டிகை, பத்து நாட்கள் கொண்டாடப்படும்.

ஆவணி மாதத்தில் ஹஸ்தம் நட்சத்திரத்தில் தொடங்கும் திருவோண திருவிழா சித்திரை, சுவாதி, விசாகம், அனுசம், கேட்டை, மூலம், பூராடம், உத்ராடம், திருவோணம் என பத்து நட்சத்திர நாட்களிலும் கொண்டாடப்படுகிறது.
மிகவும் விசேஷமாக கடைசி நாளான திருவோணத்தன்று, தன் மக்களைத் தேடி வரும் மகாபலி மன்னரை வரவேற்க, கேரள மக்கள் தங்கள் வீட்டு வாசல்களில் 'அத்தப் பூக்கோலம்' போட்டு, புத்தாடைகள் அணிந்து, இனிப்புகள் பரிமாறி, மகிழ்வுடன் திருவோணத்தை கொண்டாடுகின்றனர்.

ஓணம் வரலாறு...

முன்னொரு காலத்தில், சிவாலயத்துள் எரிந்து கொண்டிருந்த விளக்கின் திரியைத் தூண்டி, பிரகாசமாக எரிய உபகாரம் செய்தது ஒரு எலி. எனவே அவ்வெலிக்கு மூன்று லோகத்தையும் ஆட்சி செய்யும் அதிகாரத்தை வழங்கினார் சிவபெருமான். அந்த எலியானது மறு பிறப்பில் மகாபலி என்ற என்ற பெயருடன் மன்னனாக பிறந்து, சக்ரவர்த்தியாகி மூவுலகையும் சிறப்பாக ஆட்சி புரிந்தது.
மகாபலி மன்னனின் ஆட்சியில் மக்கள் மகிழ்ச்சியுடன் வாழ்ந்தனர். அசுரகுலத்தின் வாரிசான மகாபலி மன்னனின்  வளர்ச்சியைக் கண்ட தேவர்கள், மகாபலி மன்னனுடன் போரிட்டனர். போரில் அசுர குலம் ஜெயிக்கவே, தேவர்குலம் பயந்து திருமாலிடம் முறையிட்டனர். திருமாலை மகனாக அடைய வேண்டி, காசிப முனிவரின் மனைவியான திதி என்பவள் வரம் கேட்க, அதன்படியே அவர்களுடைய மகனாக வாமன அவதாரம் எடுத்தார் திருமால்.

அசுர குலத்தினனாக  இருந்த போதிலும்,  தான தர்மங்களிலும், யாகங்கள் நடத்துவதிலும் மகாபலி மன்னன் சிறந்தவனாக விளங்கினான். அதனை தமக்கு சாதகமாக பயன்படுத்த நினைத்த வாமனன், மகாபலியின் அரண்மனைக்குச் சென்று, தான் தவம் செய்வதற்காக மூன்றடி மண் கேட்டார். வந்திருப்பது கடவுள் அவதாரமான வாமனன்  என்பதை அறிந்த அசுரகுருவான சுக்கிராச்சாரியார், தானம் தர ஒப்புக்கொள்ள வேண்டாமென மகாபலியை தடுத்தார்.

இறைவனே தம்மிடம் கையேந்தி நிற்பதை அறிந்த மகாபலி, மன்னன் குரு சொன்னதை கேளாமல், மூன்றடி மண் தானம் தர ஒப்புக் கொண்டார்.
உடனே திரிவிக்கிரம அவதாரம் எடுத்த திருமால், ஓரடியால் பூலோகத்தையும், மற்றொரு அடியால் தேவலோகத்தையும் அளந்து, மூன்றாவது அடிக்கு இடமில்லையே என்றுக் கூற, மகாபலி மன்னன் தன் சிரம்மேல் மூன்றாவது அடியை அளக்குமாறு கூறினான். அதன்படி அவன் சிரம் மீது கால்வைத்து அழுத்த, அவன் பாதாள லோகத்திற்குள் சென்றான். அந்த சமயத்தில் மகாபலி சக்ரவர்த்தி, வாமனனிடம் தான் ஆண்டுக்கு ஒருமுறை மக்களை வந்து பார்க்க வேண்டும் என்று அனுமதி கேட்டார். அதற்கு வாமனனும் வரமளித்தார்.

அப்படி தன் மக்களை மகாபலி சக்ரவர்த்தி காண வரும் நாளே ஓணம் திருநாளாக கொண்டாடப்படுகிறது. தங்களை காண வரும் மன்னனை வரவேற்கவும், தாங்கள் மகிழ்ச்சியாக இருப்பதை காட்டவும் மலையாள மக்கள் வாசலில் பூக்களால் கோலமிட்டு, அதில் தீபம் ஏற்றி வழிபடுகின்றனர். இந்த திருநாளில், கேரள மக்களின் மகிழ்ச்சியை காண வரும் மகாபலி மன்னர் ஆசிர்வாதங்களையும், செல்வங்களையும் வாரி வழங்குவர் என்பது ஐதீகம்.
ஓணம் சத்ய விருந்தில் என்ன சிறப்பு....?

ஓணம் சத்ய விருந்து,  திருவோண நாள் அன்று கேரளா மக்களால் உறவுகளுக்கும், நட்புகளுக்கும் அன்போடு பரிமாறப்படுகிறது. கேரளத்தின் பாரம்பரிய உணவு வகைகளான அவியல், தோரன்,காலன், ஓலன், பச்சடி, கிச்சடி, இஞ்சிப்புளி, மாங்காய், எலிசேரி, கூட்டுக்கறி ஆகியவை தலைவாழை இலைபோட்டு பரிமாறப்படும். பின்னர் பூவன்பழம், சர்க்கரை, உப்பேரி, காவற்றல், விளம்பி, சாதத்தில் பருப்போடு நெய் சேர்த்து பப்படம்(அப்பளம்) வைத்து உண்ணுவார்கள்.

பின்னர் சாம்பார் சேர்த்து உண்ட பின்,  பிரதமன் எனப்படும் பாயசத்தை சுவைத்துவிட்டு, புளுசேரி கூட்டி, இறுதியாக மோர் கூட்டான் சேர்த்து உண்டு எழுந்தால் வயிறும், மனமும் நிறைந்தே விடும்.
மகிழ்ச்சி பொங்கும் பாரம்பரிய விளையாட்டுகள்....

மாலைப் பொழுதுகளில் பெண்கள் ஓணம் சேலை கட்டிக்கொண்டு, கோலத்தை சுற்றி கும்மி கொட்டியும், வீட்டு வாசலில் ஊஞ்சல் கட்டியும், பந்துகள் விளையாடியும் மகிழ்ச்சியுடன் ஓணத்தை கொண்டாடி மகிழ்வர். மக்கள் மகிழ்ச்சியுடன் இருப்பதை அறிந்த மகாபலி மன்னனும் அவர்களுக்கு ஆசிகளை வழங்கிவிட்டு, மீண்டும் பாதாள லோகம் செல்கின்றார் என்பது வரலாறு.

புதுமணத் தம்பதிகள் இந்த நாளை, தலைத் தீபாவளி போன்று 'தலை ஓணம்' என்று மிகவும் மகிழ்ச்சியுடன் கொண்டாடுகின்றனர். கேரளம் மட்டுமின்றி, மலையாள மொழி பேசும் மக்கள் வாழும் தமிழகம், கர்நாடகம், ஆந்திரம் போன்ற அண்டை மாநிலங்களிலும் ஓணம் கொண்டாடப்படுகிறது. ஜாதி, மத, பேதம் கடந்து கொண்டாடப்படும் இந்நன்னாளில், நாமும் நம் வாழ்த்துகளை கேரளா மக்களுக்கு தெரிவிப்போமே!




















Johannesburgh

தென் ஆப்பிரிக்காவில், ஹைவெல்டு என்னுமிடத்தில் "ஆண்டிலோப்' என்னும் கலைமான்கள் சுதந்திரமாகத் திரிந்து கொண்டிருந்தன. சிறிய நாடோடிக் கூட்டத்தினர், உணவுக்காக இம்மான்களை வேட்டையாடி வாழ்ந்து வந்தனர். இந்நிலையில் ஐரோப்பியர்கள், அண்டை நாடுகளை ஆக்ரமித்துக் குடியேறினர். ஆப்பிரிக்காவில் ஊடுருவிய ஐரோப்பியக் குடியானவர்கள், தங்கள் கால்நடைகளுக்கான மேய்ச்சல் நிலங்களைத் தேடி தென்திசையில் பயணித்து புதிய நிலப்பரப்புகளில் குடியேறினர்.

இவர்கள் கலைமான்களின் கூட்டத்துக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தவில்லை. ஹைவெல்டு பகுதியில் அமைதியும், மகிழ்ச்சியும் நிலவியது. இந்த அமைதியும், தனிமையும் 1886ல் முடிவுக்கு வந்தது. இந்த ஆண்டில் இப்பகுதியில் தங்கம் கிடைத்ததுதான் திடீர் மாற்றத்துக்குக் காரணம். ஹைவெல்டு பகுதியில் 1886ம் ஆண்டு, செப்டம்பர் மாதம் 8ம் தேதி தங்கச் சுரங்கம் உள்ள இடத்தில் "ஜோஹன்னஸ்பர்க்' என்ற புதிய நகருக்கு அஸ்திவாரமிடப்பட்டது.

ஜோஹன்னஸ்பர்க் நகருக்குக் கிழக்கிலும், மேற்கிலும் முப்பது மைல் தொலைவில், ஆயிரம் மைல் உயரத்தில் பொட்டலான மலைப்பகுதி, வெல்டு பகுதியைச் சூழ்ந்து நின்றது. இம்மலைப் பகுதியை, "விட் வாட்டர் ஸ்ராண்ட்' என்றழைத்தனர். அதாவது, "வெள்ளை நீரின் மேல் வரம்பு' என்பது பொருள். இம்மலையின் மேல்வரம்பை, "பேங்கெட்' என்றழைத்தனர்.

இந்த பேங்கெட்டில் தங்கத்துகள்கள் ஏராளமாகக் கிடைத்தன. ஒரு டன் மலைப்புழுதியில் கிடைக்கும் தங்கம் மிகக் குறைவுதான். ஒரு அவுன்ஸ் தங்கம் தான். ஆனால், இந்த பேங்கட்டின் நிலத்தின் அடியில் ஆழத்தில் ஏராளமான தங்கம் புதைந்து கிடந்தது. உலகிலுள்ள சில தங்கச் சுரங்கங்களிலே மிக ஆழமான சுரங்கம். ஒன்றரை மைல் ஆழம். ஆற்றுப் பள்ளத்தாக்கு மேட்டு நிலமான ராண்ட் பகுதியின் ஆழத்தில் தங்கரேகைகளுள்ள பாறைகள் கிடைத்தன.

தங்கம் கிடைக்கும் செய்தி காட்டுத் தீயாகப் பரவவே ஆயிரக்கணக்கானோர் ஜோஹன்னஸ் நகரை முற்றுகையிடலாயினர். ஒரு மாதத்தில், 4 ஆயிரம் பேர் வந்து முகாமிட்டனர். பத்து வருடத்தில் இந்நகரில் வசிப்போரின் எண்ணிக்கை 1 லட்சமாகப் பெருகியது. ஆரம்பத்தில் இந்நகரின் குடியிருப்புகள், மரத்தினாலான தாழ்வான வீடுகளே. கடைகள், வங்கிகள், உணவகங்கள் அனைத்துமே இப்படித் தான்! மாடுகள் இழுக்கும் வண்டிகளும், குதிரைகள் பூட்டிய கோச்சுகளுமே போக்குவரத்து சாதனங்கள். தெருச்சாலைகள் புழுதி மண்டிக்கிடக்கும். எந்த அசவுகரியத்தையும் தங்கத்துக்காக சகித்துக் கொண்டனர்.

ஆனால், இன்று-நவீன யுகத்தில் நவீன வசதிகள் கொண்ட மில்லியன் மக்கள் வாழும் நகரமாக விளங்குகிறது. கெய்ரோவைத் தவிர்த்து, ஆப்பிரிக்காவின் மிகப் பெரிய நகரமாக ஜோஹன்னஸ் பர்க் விளங்குகிறது. கெய்ரோ நகருக்கு 4000 மைல் வடக்கே பல மாடிகளை கொண்ட கம்பீரமான கட்டடங்கள் எழுந்துள்ளன. நகரின் நடுவே செல்லும் நெடுஞ்சாலையில், இருபக்கத்திலும் நகரைச் சுற்றி உயர்ந்து நிற்கும் வெள்ளை நிறப் பாறைக்குவியல் மேடு, 5 ஆயிரம் மில்லியன் மதிப்புள்ள தங்கத்தை கொடுத்துள்ளது.

கடந்த நூறு ஆண்டுகளில் ராண்ட் பகுதியிலுள்ள தங்கச்சுரங்கம், நம்பத்தகாத அளவுக்கு செல்வத்தை வழங்கி இருக்கிறது. இப்போது இப்பகுதியில் யுரேனியம் என்ற தாதுவும் கிடைக்கிறது. அணுசக்தி உற்பத்திக்கு யுரேனியம் அவசியமாயிற்றே. இதனால் ஜோஹன்னஸ்பர்க்கின் செல்வம் மேலும் கூடுகிறது.

இங்குள்ள ஜனத்தொகையில் பாதி பேர் வெள்ளையர். இவ்வெள்ளையரில் பாதிக்கும் மேலானவர்கள் ஆப்பிரிக்கர் எனப்படும் கலப்பு (வெள்ளை-நீக்ரோ) இனத்தவர். டச்சு நாட்டு வம்சாவழியினர்; மீதி பேர் ஆப்பிரிக்க நீக்ரோக்கள். நீக்ரோக்களில் ஆயிரக்கணக்கானோர் தங்கச் சுரங்கங்களில் பணியாற்றுகின்றனர்.

இவர்கள் ஆப்பிரிக்காவின் பல பகுதிகளிலிருந்தும் ஜோஹன்னஸ்பர்குக்கு வந்து குடியேறியவர்கள். இவர்களில் ஜூலு, ஸோலாஸ், ஸ்வாஸிஸ், பாஸுடோஸ், நியாயாஸ் ஆகிய ஆப்பிரிக்க இனத்தவர்களும் அடக்கம். தங்கச் சுரங்கங்களில் பணியாற்றி, பொருள் சேகரித்துக் கொண்டு, தங்கள் தாயகங்களுக்குத் திரும்பி வருபவர்கள் சிலர். மற்றவர் ஜோஹன்னஸ் பர்க்கிலேயே தங்கி அந்நகர வாசியாகி விடுகின்றனர். ஆப்பிரிக்க (நீக்ரோ) தொழிலாளிகள் "ஷாக்ஸ்' எனப்படும் குடியிருப்புகளில் நெருக்கமாக வாழ்கின்றனர்.

***

Culture-quiz


Q1              What is the brain made of?

A1               The human brain contains no muscle, unlike the rest of the body.  It comprises billions of nerve cells and contains about 75% water.  There are also about 100,000 miles of blood vessels that carry oxygen and nutrients to your brain.

Q2              What is specialty with the eyes of frogs?

A2               Frogs never close their eyes, even when they sleep.

Q3              What is the specialty with sunflower nuts?

A3               Sweet, nutty sunflower seeds are an excellent source of essential fatty acids, vitamins, and minerals.

Q4              What is specialty with gooseberry?

A4               Suffering from constipation?  Eat new gooseberries.  The fibre rich fruit will act as a laxative.

Q5              What is the news item- E-control of cancer cells found

A5               Researchers have found a new electrical mechanism that can control molecular switches which regulate human cell growth and are linked to life-threatening cancers.

Q6              Whether Electrical circuit made of gel can repair itself?

A6               Yes. Electrical circuit made of gel can repair itself-It has been found out. 

Q7              What is the news item- Wealthiest Asian,Wang Jianlin, lost $3.6 billion in one day?

A7              Wealthiest Asian,Wang Jianlin, lost $3.6 billion in one day  Despite the loss, his wealth has increased by $6 billion this year..

Wednesday, August 26, 2015

Thinnai

தியோடர் பாஸ்கரன் எழுதிய, 'தமிழ் சினிமா வளர்ந்த கதை' நூலிலிருந்து: சென்னைக்கு சினிமா வந்தது, 1897ல்! அப்போது, ஆர்தர் கேவ்லக் என்பவர், மதராஸ் ராஜதானி கவர்னராக இருந்தார். ஒரு நாள் மாலை, மூர்மார்க்கெட்டை அடுத்த விக்டோரியா பப்ளிக் ஹாலில், ஒரு கூட்டம் மிகுந்த எதிர்பார்ப்புடன் கூடியிருந்தது. ஹாலின் நடுவே எட்வர்ட் என்ற ஆங்கிலேயர், சிறிய நுாதன கருவி ஒன்றில் படச்சுருள் ஒன்றை நுழைத்து, 'சினிமாஸ்கோப்' என்று விளம்பரப்படுத்தியிருந்த காட்சிக்கு, தயார் செய்து கொண்டிருந்தார்.

அப்போதுதான், தமிழ் தினசரியான, 'சுதேசமித்திரன்' இதழ் (1889 முதல்) வெளிவர துவங்கியிருந்தது. சென்னை சாலைகளில், அங்கொன்றும், இங்கொன்றுமாக மிகுந்த இரைச்சலுடன் ஓடிக் கொண்டிருந்தன, மோட்டார் கார்கள். இரு ஆண்டுகளுக்கு முன் தான், டிராம் சர்வீஸ் சென்னைக்கு வந்திருந்தது. அத்துடன், டெலிபோன் வசதி சில பணக்காரர்கள் வீடுகளுக்கு வந்திருந்தது.

ஒரு கறுப்புத் தட்டில் (இசைத்தட்டு) சங்கீதத்தை அடைத்து, விரும்பும் போது ஒரு பெட்டியின் மேலிட்டு, பாட்டுப் பாட வைக்கும் அதிசயத்தை சிறுசிறு கூட்டமாக நின்று அனுபவித்துக் கொண்டிருந்தனர், சென்னைவாசிகள்.

இதன் மூலம், சமுதாயத்தின்   அடிமட்டத்தில் இருப்போருக்கும் சாஸ்த்ரீய சங்கீதம் கேட்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. இத்தனைக்கும் நடுவேதான், சலனப்படமும் வந்தது.

அன்று, விக்டோரியா ஹாலில் காட்டப்பட்டவை சில நிமிடங்கள் ஓடும் மவுனப் படங்கள்.

தொடர்ந்து இரு ஆண்டுகளில், பல மவுனப் படக் காட்சிகள், சென்னையின் வெவ்வேறு இடங்களில் காண்பிக்கப்பட்டன. ஒவ்வொரு காட்சியாளரும், தத்தம் காட்சிக்கு, 'பயாஸ்கோப், சினி மோட்டோ கிராப்ஸ் மற்றும் மோட்டோ - போட்டோ ஸ்கோப்' என்று வெவ்வேறு பெயர் வைத்துக் கொண்டாடினர். இறுதியாக நிலைத்தது, மும்பை லூமியே சகோதரர்கள் சூட்டிய, 'சினி மோட்டோ கிராப்ஸ்!' அதாவது, அசையும் படங்கள். இரு கிரேக்க சொற்களின் கூட்டுப் பெயர். இக்காட்சியாளர்கள் எல்லாருமே வெள்ளையர்கள்.


எழும்பூர், சென்ட்ரல், மற்றும் ஜார்ஜ்டவுன் முதலிய இடங்களை சுற்றியே வளர்ந்திருந்த அன்றைய சென்னையில், நிறைய திறந்த வெளிகள் இருந்தன. லைசென்ஸ் முதலிய கவலைகள் இல்லை; மின்சாரம் தேவையில்லை. ஏனென்றால், அந்த ஆரம்ப கால, 'புரொஜக்டர்'களில் மக்னிசிய விளக்குகளே ஒளிவீச்சுக்குப் பயன்படுத்தப்பட்டன. இரண்டு, மூன்று காட்சிகள் ஓரிடத்தில் காட்டப்பட்டதும், பெட்டியை மூடி, அக்குழு வேறிடம் செல்லும்.

சென்னை அண்ணா சாலையில், ஒருவர் நிரந்தர சினிமா கொட்டகை கட்டி, அதற்கு, 'எலக்ட்ரிக் தியேட்டர்' எனப் பெயர் வைத்தார். மக்னீசிய விளக்குகளுக்கு பதில், மின்சார ஒளி மூலம் திரையிடப்படும், 'புரொஜக்டரை' விளம்பரப்படுத்த, இந்தப் பெயர். முதல் எட்டு ஆண்டுகள் சென்னையில் மட்டுமே சலனப்படக் காட்சிகள் நடைபெற்று வந்தன.



'சங்கீதச் சிரிப்பு' நூலிலிருந்து: சங்கீத மேதை அரியக்குடி ராமானுஜ ஐயங்காருக்கு, திருவாவடுதுறை ராஜரத்தினம் பிள்ளையின் நாதஸ்வர இசை என்றால் ரொம்ப பிடிக்கும். ஒருமுறை, ராஜரத்தினம் பிள்ளையின் கச்சேரிக்கு பின், அரியக்குடி பேசியது:

பிசிறு இல்லாமல், கற்பனா சக்தியுடன் இனிமையான ஒலியை, பிள்ளையவர்களின் நாயனத்தில் கேட்டோம்; வாசிக்கும் முறையில் வாசித்தால் தான், நாயனத்தின் ஒலியை ரசிக்க முடியும். இல்லாவிட்டால், அது, 'நாயி'னத்தின் ஒலியாகத்தான் இருக்கும்!
Courtesy :vaaramalar dinamalar



'புகழ் பெற்றவர்கள் வாழ்வில்' நூலிலிருந்து: ஒருமுறை லண்டன் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்தார் சார்லி சாப்ளின். அவரது நகைச்சுவை நிமிடத்திற்கு நிமிடம், விறுவிறுப்பாக இருந்தது. திடீரென்று, தொலைக் காட்சியிலிருந்து சத்தம் வருவது நின்றது. திரையில் அவர் பேசும் காட்சி, ஊமைப்படம் போல் தெரிந்தது. 

நிலைய அதிகாரிகள் விழுந்தடித்து ஓடி, என்ன கோளாறு என்று பார்த்தனர். அது, நேரடி ஒளிபரப்பு; இரு நிமிடங்கள் சென்றதும், 'கடகட'வென சிரித்தார் சாப்ளின். தொடர்ந்து ஒலியும் கிடைத்தது. பின்தான் புரிந்தது அந்த இரு நிமிடங்களும், அவர் பேசாமல் வெறும் வாயை மட்டுமே அசைத்து, எல்லாரையும் திணற அடித்திருக்கிறார் என்பது!.  



நடுத்தெரு நாராயணன்