Bhoo thatha's Blogspot

Search my older Blog

Friday, August 28, 2015

' கற்களால் ஆன சர்ச்

ஹாலந்து நாட்டின் என்சிச்எடி நகரில் 2012ம் ஆண்டு 'க்ரீன்ஸ் வெர்க்' திருவிழாவுக்காக இந்த 'லெகோ' கற்களால் ஆன சர்ச் அமைக்கப்பட்டது. கூரை மட்டும் இணைப்பு!

இது பற்றி இரு தகவல்கள்:

ஒன்று உண்மையில் இவை 'லெகோ' கற்களால் ஆனவை அல்ல! மாறாக கான்கீரிட்டில் பிளாக் செய்து ஆரம்ப கால லெகோப்ளாக்குகளில் அடிக்கப்பட்ட 5 வண்ணங்கள் பூசப்பட்ட ஒன்றின் மீது ஒன்று வைக்கப்பட்டதாகும்.

இரண்டாவது இது உண்மையான சர்ச் அல்ல. 'அபான்டான்டஸ் ஜியான்டஸ் சர்ச்' என செல்லப் பெயரிட்டு அழைக்கப்பட்டாலும் உண்மையில் இங்கு ஒரு தடவை மாஸ் நடந்ததோடு சரி!

உண்மையில் இது, 'க்ரீன்ஸ் வெர்க்' விழாவிற்காக உருவாக்கப்பட்டது. இந்த சர்ச்சினுள் விழா சமயத்தில் சிறப்பு பேச்சுக்கள், சங்கீத கச்சேரிகள் நிகழ்த்தப்பட்டன. 'லெகோ கற்கள்' அடுக்கும் போட்டி கூட நடத்தப்பட்டது. ஆனால் விழா நடந்து முடிந்ததும், சர்ச் பிரிக்கப்பட்டு ஒரு இடத்தில் கற்கள் அடுக்கி வைத்து விடுவர். அடுத்த வருமட் அதனை பயன்படுத்தி மீண்டும் கட்டுவர். சர்ச் கட்டியபோது அதன் அதிகபட்ச உயரம் 20 மீட்டராக இருந்தது.

திலிப்

No comments: