்ரீ தேவியே வா!
பீகார் பகுதியினர் தீபாவளி நாளில், பழைய துடைப்பத்தை விட்டு வாசலில் போட்டுக் கொளுத்துவர். இதனால், வறுமை விலகி வளமை சேரும் என்பது நம்பிக்கை. "மூதேவியே விலகி ஸ்ரீதேவியே வருக ! என வேண்டுவர்.
தீபாவளி பைரவர்
காசியில் தங்கத்தாலான கால பைரவர் உற்சவ விக்ரகம் உள்ளது. தீபாவளி நாளன்று மட்டுமே இந்த உற்சவர் பவனி வருகிறார். அன்று இவரை தரிப்பது அதிசறிப்பானதாகச் சொல்லப்படுகிறது.
குலுவில் தீபாவளி:
குலு பள்ளதாக்கில் தீபாவளி தினத்தன்று ராவண உருவத்தின் மீது வண்ணக்கோலமிட்டு அதை எரிப்பது வழக்கம். அன்றைய தினம் ராமாயணத்தின் பல்வேறு சம்பவங்கள் குறித்த நாடகங்கள் நடத்தப்படும். மலை வாழ் மக்கள் குன்றுகளில் பேரிகை முழக்கத்துடன் ஊர்வலமாக ராமபிரானை தரிசிக்கக் கொண்டு வருவார்கள்.
மோனி தீபாவளி
வட மாநிலங்களில், தீபாவளியன்று லட்சுமி வீட்டில் தங்குவதாக ஜதிகம், அமாவாசையன்று பூஜையறையில் 24 மணி நேரமும் ஒரு விளக்கு எரியும் அந்த விளக்கில் படியும் புகைக்கரியிலிருந்து தயாரிக்கப்படும் கண் மையைத்தான் ஆண்டு முழுவதும் பயன்படுத்துகிறார்கள். இதை மோனி தீபாவளி என்கிறார்கள்.
நேபாள தீபாவளி
நேபாள நாட்டில் தீபாவளியை ஒட்டி கொண்டாடப்படும் விழாவில் நாய்களுக்கு முக்கியத்துவம் தரப்படுகிறது. வடிழாவில் நாய்களுக்கு மாலை அணிவித்து அவற்றின் நெற்றியில் திலகமிட்டு வழிபடுகின்றனர்.
- நெ.இராமன் சென்னை-74.
COURTESY'DINAMALAR/BHAKTHI KUMUDAM SEITHI
No comments:
Post a Comment