மகான்கள் சித்தியடைந்த உடனே அவங்களோட திருமேனியைப் பள்ளிப்படுத்தவாங்க. ஸ்ரீராகவேந்திரரோட பிருந்தாவனம், மந்திராலயத்தில் இருக்கு.
. அதேமாதிரி, வைணவ மரபுல அமைஞ்ச சன்னதிகளை திருவரசுன்னு சொல்றது.
பெரியாழ்வாரோட திருவரசு திருமாலிருஞ்சோலை என்கிற அழகர் கோவில்ல இருக்கு.
திருமங்கையாழ்வாருக்கு திருக்குறுங்குடில திருவரசு அமைஞ்சிருக்கு
. இப்ப, நாம் மணவாள மாமுனிகளோட திருவரசை ஸ்ரீரங்கத்துல இருக்கு.'
.
"பெரிய ஜீயர், யதீந்திர பிரவணர், வர வர முனி இப்படிப் பல சிறப்புப் பெயர்கள் இவருக்கு உண்டு.
உபதேச ரத்தின மாலை, ஆர்த்தி பிரபந்தம்னு பல நூல்களை இவர் தந்திருக்கார்.
ஸ்ரீமத் ராமானுஜர் காலத்துக்குப் பின்னால, நிர்வாகச் சீர்குலைவுக்க ஆளாகியிருந்தது ஸ்ரீரங்கம் ரங்கநாதர் திருக்கோயில்.
அதைச் சீரமைச்சவர் இந்த மணவாள மாமுனிகள்தான்.
இவரோட திருவாய்மொழி விளக்கத்தை, ஒரு வருஷ காலம், நம் பெருமாள் எந்த விழாவும் கொண்டாடாம் பொருந்தி இருந்து கேட்டாராம்.'
" ராமானுஜர் காஞ்சிபுரத்தல இருந்து திருப்பதிக்குப் போனார். அங்க இருந்த திருமலை நம்பிகள்கிட்டே, எனக்கு ராமாயணம் சொல்லணும்னு கேட்டார். அப்பறம் வான்னார் நம்பிகள். ஒரு தடவை, ரெண்டு தடவை இல்லை. 18 தடவை. பதினெட்டாவது முறையும் அதே பதில்தான். சரின்னு ராமானுஜர் முகம் சுளிக்காம கிளம்பினார். அவரைக் கூப்பிட்டு ராமாயணத்தைச் சொன்னார் திருமலை நம்பி.'
" அதையே மகான்கள் சொன்னா, அதுல இருக்கற சூட்சுமங்கள் புரியும்.'
"உதாரணமா, பிரம்மாஸ்திரத்தை இந்திரஜித் மேல விடாதே. அது உலகத்தையே அழிச்சிடும்னு லஷ்மணனுக்கு எச்சரிக்கை செய்தார் ராமன். ஆனா, அவர் ராவணனை பிரம்மாஸ்திரத்தைக் கொண்டுதான் வீழ்த்தினார். அப்ப ஏன் உலகம் அழியலை?'
"ஆமா, ஏன் அழியலை? லாஜிக் இடிக்குதே,' .
"இந்த லாஜிக்கை யோசிச்சவன் கம்பன். அவன் சொன்னான்; அக்கணத்தில் அயன்படை ஆண்தகை சக்கரப் படையொடும் தழீஇச் சென்றுனு. அஸ்திரத்தைச் சுத்தி, வளையம் மாதிரி சுதர்சன சக்கரம் போச்சு. அதனால், பிரம்மாஸ்திரம் வேற யாருக்கும் எந்தப் பாதிப்பும் ஏற்படுத்தாம், ராவணனை மட்டம் தாக்கியது; வீழ்த்தியது. வெறுமனே ராமாயணத்தைப் படிச்சா, இந்த விஷயம் புரியுமான்னா புரியாது. யாராவது படிச்சுச் சொல்லணு
ஸ்ரீரங்கம் பெருமாளே, விழாக்கூட கொண்டாடாம, திருவாய்மொழி விளக்கத்தைக் கேட்டார்.'
"
"இதைக் கேட்கணும்; தெரிஞ்சுக்கணும்னு மனசுல ஒரு உத்வேகம் இருக்கணும். அப்படி இருந்தாத்தான். கவனம் முழுக்க அதுலயே இருக்கும். இல்லேன்னா, மனசும் புத்தியும் எங்கயோ இருக்கும் உடம்பு மட்டும் உட்கார்ந்து இருக்கும். அப்படிக் கேக்கறதாலயோ, அபபடிப் பட்டவர்களுக்குச் சொல்வதாலேயோ எந்தப் பயனுமில்ல. அதனாலதான், பொருந்தி உட்கார்ந்து கேக்கணும்னு சொல்றது.'
"COURTESY;DINAMALAR/KALKIOCT7,2011
No comments:
Post a Comment