Bhoo thatha's Blogspot

Search my older Blog

Showing posts with label temple. Show all posts
Showing posts with label temple. Show all posts

Monday, December 7, 2009

temple



பெருமாள் கோவிலுக்குச் சென்றால், முதலில் தாயாரை வணங்கி, அதன் பிறகே பெருமாளை வணங்குவது மரபு. திருப்பதி செல்பவர்கள், நேராக வெங்கடாசலபதியைத் தரிசித்த பிறகே திருச்சானூர் செல்கின்றனர்; ஆனால், முறைப்படி திருச்சானூர் சென்று, அலமேலு மங்கை எனப்படும் பத்மாவதி தாயாரைத் தரிசித்த பிறகே, வெங்கடாசலபதியை தரிசிக்க செல்ல வேண்டும்.
முற்பிறப்பில் வேதவதி என்னும் பெயரில் பிறந்தாள் பத்மாவதி தாயார். அழகில் சிறந்த அவள், ஒரு தபஸ்வினியாகி காட்டில் தவமிருந்தாள். ஒரு முறை, அவளை பார்த்தான் ராவணன். தன்னைத் திருமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்தினான். ராமபிரானைத் தவிர, வேறு யாரையும் திருமணம் செய்யமாட்டேன் என்று அவனிடம் தெரிவித்த வேதவதியை பலவந்தப்படுத்தினான் ராவணன்.
அவனிடம், “பெண்ணிச்சையால் என்னைப் பலவந்தப்படுத்திய உனக்கு இதே இச்சையால் அழிவு நேரும்…’ என சாபமிட்டாள் வேதவதி. பின்னர் தன் கற்பைப் பாதுகாத்துக் கொள்வதற்காக அக்னியில் விழுந்த அவளை, எரிக்காமல் பாதுகாத்தார் அக்னிபகவான்.
ஒருமுறை, அவள் ராமபிரானைச் சந்தித்தாள். தன்னைத் திருமணம் செய்து கொள்ளும்படி கேட்டாள். “இப்பிறவியில் நான் ஏகபத்தினி விரதன். கலியுகத்தில், நான் திருமலையில் சீனிவாசன் என்ற பெயரில் தங்குவேன். நீ, அந்த மலையை ஆளும் ஆகாசராஜன்- தரணிதேவி தம்பதியருக்கு புதல்வியாகப் பிறப்பாய். அப்போது, உன்னைத் திருமணம் செய்து கொள்கிறேன்…’ என்று வாக்களித்தார் ராமபிரான்.
இதன்படி, திருமலைக்கு சீனிவாசன் வர, பத்மாவதியைச் சந்தித்தார். தன் காதலை அவளிடம் வெளிப்படுத்தினார். தன் முற்பிறவி வரலாறை மறந்துவிட்ட பத்மாவதி, அவரைக் கண்டு அஞ்சினாள். பத்மாவதியின் தோழிகள் அவர் மீது கல்லெறிந்து துரத்தினர். காயமடைந்த சீனிவாசன், தன்னை வளர்த்து ஆளாக்கிய வகுளாதேவியிடம் தன் விருப்பத்தை தெரிவித்தார்.
சீனிவாசனுக்காக ஆகாசராஜனிடம் தூது சென்றாள் வகுளாதேவி. தன் மகன் சீனிவாசன், நாராயணனின் அம்சம் என்பதை மன்னனிடம் தெரிவித்தாள். அதுகேட்டு ஆனந்தமடைந்தார் மன்னர். இதையடுத்து திருமண ஏற்பாடுகள் வேகமாக நடந்தன. சீனிவாசனுக்கும், பத்மாவதிக்கும் நடக்கவிருந்த திருமணத்தைக் காண தேவலோகமே கூடியது.
சீனிவாசன் ஏழை என்பதால், ராஜா வீட்டுப்பெண்ணை மணம் முடிக்க வேண்டிய நிலையில், திருமணச்செலவுக்காக குபேரனிடம் கடன் வாங்கினார்.
“குபேரா! என்னை வணங்குவதற்கு இந்த திருத்தலத்துக்கு ஏராளமான பக்தர்கள் வருவார்கள். அவர்களின் பாவக்கணக்குக்கு ஏற்ப அவர்களிடம் நான் செல்வத்தை வசூலித்து விடுவேன். அதை உனக்கு வட்டியாகத் தருவேன்! கலியுகம் முடியும் போது அசலை முழுமையாகத் தந்துவிடுவேன்…’ என்று எழுதிக்கொடுத்தார்.
சீனிவாசன்- பத்மாவதி திருமணம் இனிதே முடிந்தது. நாராயணன், இன்னொரு திருமணம் முடித்துவிட்டார் என்ற தகவலை லட்சுமியிடம் சென்று சிண்டுமுடித்தார் நாரதர். கோபமடைந்த லட்சுமி, சீனிவாசனிடம் வந்து நியாயம் கேட்டு அழுதாள். அவளைச் சமாதானம் செய்து விளக்கமளித்தார் சீனிவாசன்.
“லட்சுமி! முற்பிறவியில் நீ சீதையாக பிறந்த போது ராவணன் உன்னைக் கடத்த வந்தான். அப்போது அக்னியின் பாதுகாப்பில் இருந்த மாயசீதையான இவள், உனக்குப் பதிலாக ராவணனுடன் சென்றாள். உண்மையில் இவள் உன்னைக் காப்பாற்றியவள்…’ என்றார். சமாதானமடைந்த லட்சுமி, பத்மாவதியைத் தன் தங்கையாக ஏற்றாள்.
பின்னர், லட்சுமியிடம், “நீ என் மார்பில் அமர்ந்துகொள். என் மார்பில் வலப்பக்கம் பத்மாவதி இருப்பாள். அவளது மற்றொரு வடிவத்தை பத்மசரோவர தீர்த்தக்கரையில் அமையும் வகையில் ஏற்பாடு செய். நீங்கள் இருவரும் இங்கு வரும் பக்தர்களுக்கு அவரவர் தகுதிக்கேற்ப அருள் வழங்குங்கள்…’ என்றார் சீனிவாசன். பத்மாவதி அமர்ந்த இடமே அலமேலுமங்காபுரம் எனப்படுகிறது. பிற்காலத்தில் திருச்சானூர் என்ற பெயர் சூட்டப்பட்டது.

நன்றி; sendil vayal@
wordpress

Tuesday, November 17, 2009

TEMPLE VISIT

டவுளும்  கரப்பான் பூச்சியும்

சமீபத்தில்  ஒரு கோயிலுக்கு சென்றிருந்தேன்
அம்பாள் கோயில்
(பொது நலன் கருதி அந்தக் கோயிலின் பெயரை வெளியிடாமல் இருக்கிறேன்)
நாங்கல் எங்கள் குடும்ப சகிதமாக  மற்றக் கோயில்களில் தரிசனங்களை
முடித்துக்கொண்டு  அந்த அமபாள் கோயிலுக்குப் பானபோது சரியாக  நேரம் 12
மணியை நெருங்கி விட்டது
எப்போதும் அம்பாள் கோயிலுக்குப் போகும்போது  ஒரு ஆளுயர மாலையை வாங்கிக்
கொண்டு போவது  எங்கள் வழக்கம், அதே போல அன்றும் சென்றோம்
நாங்கள் அம்பாள் சன்னதையை நெஉங்கும் நேரத்தில் எங்களுக்கு  முன்னால்  பல
பக்தர்கள்  காத்திருந்தனர்

நாங்களும் நேரம் 12 மணியை நெருங்குகிறதே , நன்றாக தரிசனம் கிடைக்க
வேண்டுமே  ,தரிசனம் முடித்து மீண்டும் ஒரு மணிக்கு காரில் அங்கே இருந்து
புறப்பட்டால்தான் இரவு வீடு வந்து சேர முடியும், மறுநாள்  ஒரு
படப்பிடிப்பொஉ வேரு இருந்தது, மனதுக்குள் அம்பாளை வேண்டிய படி
நின்றிருந்தோம்

அரச்சகர் கர்ப்பக் கிருஹத்தின்  வாயிலை  உச்சிகால பூஜைக்காக  சாத்தினார்
நாங்கள்  மனம் வாடி நின்றோம்

நாங்கள்  மனதால் நேரிடையாக  அம்பாளுடன்   வேண்டிக்கொள்லத் துவங்கினோம்

அம்பாளே  நாங்கள்  ஒருமணிக்குள் கிளம்பவேண்டுமே அதற்குள்  இத்தனை
பக்தர்கள் உன்னைத் தரிசித்துவிட்டு
எங்களுக்கு வழி விட்டு எங்களுக்கும்  நீ உன் திவ்ய தரிசனத்தை
தரவேண்டுமே, இப்படி  இருக்க நீ உன் கர்பக் கிருஹத்தின் வாயிலை
மூடிக்கொண்டால்  எப்படி நாங்கள் தரிசனம் செய்ய முடியும்  என்று
வேண்டிக்கொண்டிருந்தோம்

எங்கள் வேண்டுதல் அம்பாளின் காதில் விழுந்தது போலும் கதவை மூடிக்கொண்டு
உள்ளே சென்ற அர்ச்சகர்  மீண்டும் கதவைத்திறந்து  முன்னால் நின்றிருந்த
அத்தனை பேரையும் தாண்டி எங்களை நோக்கி  அப்படி வாருங்கள் என்று ஒரு
வழியைக் காண்பித்தார்

முன்னால் காத்திருக்கும்  அத்தனை பக்தர்களின் வரிசைக் க்ரமத்தை
உடைத்துக்கொண்டு  செல்ல மனம் தயங்கினாலும்
அம்பாள் உத்தரவு  என்று எண்ணி   அர்ச்சகர் காட்டிய வழியே உள்ளே
நுழைந்தோம்’ எங்களை மட்டும் உள்ளே அழைத்துக்கொண்டு  மீண்டும் கர்பக்
கிருஹத்தின் கதவுகளைச் சாத்தினார்  அர்ச்சகர், அதாவது உச்சிகால பூஜைக்கு
முன் தரிசனம் செய்யவேண்டிய பக்தர்களில் எங்களை சேர்த்து முன்னால்
அழைத்துக்கொண்டு சென்று அம்பாளுக்கு முன்னால் நிற்க வைத்தார்

பாவம்  மற்ற பக்தர்கள்  மீண்டும் காத்திருந்து உச்சிகால பூஜைக்குப் பிறகு
தரிசனம் செய்யவேண்டும்

நாங்கள் கண்ணில் நீர் வழிய அம்பாளை உற்று நோக்கி நன்றி கூறி  தரிசனம்
செய்ய ஆரம்பித்தோம்

அர்ச்சகர்  எங்கள் கையிலிருந்த  ஆளுயர மாலையை வாங்கி அம்பாளுக்கு
சார்த்திவிட்டு  ஆரத்தி காட்டி  நன்றாக தரிசனம் செய்து கொள்ளுங்கள்
என்று  கூரினார், மற்றும் அம்பாளின் பெருமைகளக் கூறி எங்களை மெய்
சிலிர்க்க வைத்தார்

அவர் கொண்டு வந்த தட்டில்  மனதில் பணிவோடு  100 ரூபாயை  நான் போட்டேன்
அந்த அர்ச்சகர் என்ன நினைத்தாரோ  மீண்டும் அம்பாளின் அருகிலே சென்று
மீண்டும் ஒரு முறை  கற்பூர ஆரத்தி காட்டிவிட்டு  அம்பாளின் பாதங்களையும்
தரிசனம் செய்து வைத்து,அம்பாளின் மேல் ஏற்கெனவே  சூடியிருந்த  மாலைகளில்
ஒன்றை எடுத்துக் கொண்டு   எங்களை நோக்கி நகர்ந்து வர ஆரம்பித்தார்

அவர் அம்பாளின் மேலிருந்து எடுத்த மாலையில் சிக்கியிருந்த அம்பாளின்
புடவை  அம்பாளின் மேலிருந்து  மாலையுடன் வர ஆரம்பித்ததைப் பார்த்த நான்
பதறிப் போய்

ஸ்வாமி அம்பாளின் புடவை  மாலையில் சிக்கிக்கொண்டு நகர்கிறது என்றேன்

அந்த அர்ச்சகர் ஒன்றும் கவலைப்படாதீர்கள் எல்லாம் காரணமாகவே  நடக்கிறது
என்று கூறிவிட்டு அந்தப் புடவையைக் களைந்தார், உள்ளே  மற்றொரு புடவை
சாத்தியிருந்தது
, அது மட்டுமல்ல  அம்பாளின் முன்னே  ஒரு பெரிய  மந்திர யந்திரம்
வைக்கப்படிருந்தது வெளியே தெரிந்தது ,
அந்த மந்திர யந்திரத்தையும்  தரிசனம் செய்ய  ஆரத்தி காட்டி விட்டு ,
இப்போதுதான் புதிதாக  இந்த யந்திரம் செய்திருக்கிறோம்  அந்த யந்திர
தரிசனம் உங்களுக்கு கிடைக்கத்தான் இந்த லீலையை அம்பாள் நிகழ்த்தி
இருக்கிறாள்  என்றார்

எங்களுக்கு உடலும் மனமும் பூரித்தது என்னவோ உண்மைதான்  ஆனாலும்
மாலையில்  புடவை சிக்கியிருப்பததக் கவனியாமல் எடுத்துக்கொண்டு வந்து
விட்டு
நாங்கள் பதறியதைப் பார்த்து  மிக சாமர்த்தியமாக  தன்னுடைய  கவனக் குறைவை
மறைத்து அதை எங்களுக்கும் தனக்கும் சாதகமாக  ஆக்கினாரோ அந்த அர்ச்சகர்
என்று  தோன்றியது மனதில்

மனது மிகவும் பொல்லாதது
இதில் உண்மை எது என்று புரியாமல் மனதைத் தேற்றிக்கொண்டு  மனம் நிறைந்து
தரிசனம் முடித்துவிட்டுத் திரும்பினாலும்

மனதுக்குள் ஒரு போராட்டம்

அத்தனை பக்தர்களையும் காக்கவைத்துவிட்டு  நாம் முந்திக்கொண்டு  தரிசனம்
செய்தது நியாயமா..?

அதே போல  புடவை மாலையில் மாட்டிக்கொண்டதைக்  கூட கவனியாமல்  நகர்ந்த
அர்ச்சகரின்  மனோ நிலை  அம்பாளின் அருகிலேயே  இருப்பதால் ஏற்பட்ட  சகஜ
பாவமா, அலட்ஷிய மனோபாவமா ,அல்லது  தான் தினமும் தொட்டு அலங்காரம்
செய்யும் தன்னுடைய  தாய்தானே  கோபித்துக்கொள்ளமாட்டாள் என்னும்  மனோ
நிலையா
என்று யோசிக்கையில்

கர்பக் கிருஹத்தில்  இருக்கும் தெய்வங்களையும் அந்த தெய்வங்களின்மேல்
ஊறும் கரப்பான் பூச்சிகளையும்  ஒரே  நோக்கில் நோக்கும் மனோபாவம்
அர்ச்சகர்களுக்கு ஏற்பட்டிருப்பது  உண்மைதானோ என்று சிந்திக்க வைத்தது

எனக்குப் புரியவில்லை  உங்களுக்கு  புரிவதை  கூறுங்கள்
காத்திருக்கிறேன்

நன்றி;மின்தமிழ்
அன்புடன்

தமிழ்த்தேனீ

Tuesday, November 10, 2009

sriperumbudoor,ramaanujaand ,than ugantha thirumeni,,yathirahanathavallathaayaar

r. The shrine of the main deity is thronging with devotees. A smiling Sri Adhikesavaperumal, with his consorts Sreedevi and Bhoodevi, bestows his abundant grace on his devotees. To the right of the main shrine is the sanctum sanctorum of Sri Ramanuja and to the left is Sree Yatirajanathavallithayar. Her name denotes that she is the consort of the master of the king of saints, Yathiraja (Ramanuja). This is the only temple where Goddess Lakshmi has a name attributed to a devotee of the lord. She is a "Varaprasadi", who grants all wishes. The temple has a golden vimana with Sri Ramanuja's image etched on it. Those associated with the temple say this was the first golden vimana in South India, erected in 1912. A copper plate commemorating the event is set on the temple floor, from where one can look up and see the great devotee seated on the vimana.
After the temple visit, we go to the garden adjacent to the place of Sri Ramanuja's birth. Here one can see the utsava murthy of the great teacher. It is said that Ramanuja was so impressed by its likeness to him that he hugged it, passing on all his powers to it. It was, therefore, called the "than ugandha thirumeni"; the body touched by him. The fact that his powers had been conveyed to this vigraha is indicated by two events. First, when the stapathi opened the eye of the vigraha with the chisel, blood came out of the eyes of the teacher, who was then residing far away at Srirangam. When asked why, the preceptor explained that it was because the idol was "himself". Secondly, when the vigraha was sanctified, Ramanuja became weak and shuffled off his mortal coil in a fortnight. This is interpreted as his prana coming to abide in the vigraha at Sriperumbudur.
The idol here is believed to be very powerful and worshipping it will confer all benefits, including Moksha. In fact, in Sriperumbudur, Ramanuja is addressed as "Swamy'. On the festival day, the idol is bejewelled, dressed in glittering robes and carrying a sword, indicating Ramanuja's status as the king of saints. The idol is brought to the garden after the ride in the temple car in the morning. Before the "Thirumanjanam", the jewels and robes are removed and the idol can be seen in all its original glory. It is very difficult to find words to describe the visage and the form of the great saint. His back is shaped like a hooded serpent, flared and vibrant as he was the incarnation of Adisesha. People eagerly wait to see the thirumanjanam and the pushpa pallakku that follows. Devotees from all over have come to see and serve the lord. The locals exude warmth and hospitality even to strangers