கடவுளும் கரப்பான் பூச்சியும்
சமீபத்தில் ஒரு கோயிலுக்கு சென்றிருந்தேன்
அம்பாள் கோயில்
(பொது நலன் கருதி அந்தக் கோயிலின் பெயரை வெளியிடாமல் இருக்கிறேன்)
நாங்கல் எங்கள் குடும்ப சகிதமாக மற்றக் கோயில்களில் தரிசனங்களை
முடித்துக்கொண்டு அந்த அமபாள் கோயிலுக்குப் பானபோது சரியாக நேரம் 12
மணியை நெருங்கி விட்டது
எப்போதும் அம்பாள் கோயிலுக்குப் போகும்போது ஒரு ஆளுயர மாலையை வாங்கிக்
கொண்டு போவது எங்கள் வழக்கம், அதே போல அன்றும் சென்றோம்
நாங்கள் அம்பாள் சன்னதையை நெஉங்கும் நேரத்தில் எங்களுக்கு முன்னால் பல
பக்தர்கள் காத்திருந்தனர்
நாங்களும் நேரம் 12 மணியை நெருங்குகிறதே , நன்றாக தரிசனம் கிடைக்க
வேண்டுமே ,தரிசனம் முடித்து மீண்டும் ஒரு மணிக்கு காரில் அங்கே இருந்து
புறப்பட்டால்தான் இரவு வீடு வந்து சேர முடியும், மறுநாள் ஒரு
படப்பிடிப்பொஉ வேரு இருந்தது, மனதுக்குள் அம்பாளை வேண்டிய படி
நின்றிருந்தோம்
அரச்சகர் கர்ப்பக் கிருஹத்தின் வாயிலை உச்சிகால பூஜைக்காக சாத்தினார்
நாங்கள் மனம் வாடி நின்றோம்
நாங்கள் மனதால் நேரிடையாக அம்பாளுடன் வேண்டிக்கொள்லத் துவங்கினோம்
அம்பாளே நாங்கள் ஒருமணிக்குள் கிளம்பவேண்டுமே அதற்குள் இத்தனை
பக்தர்கள் உன்னைத் தரிசித்துவிட்டு
எங்களுக்கு வழி விட்டு எங்களுக்கும் நீ உன் திவ்ய தரிசனத்தை
தரவேண்டுமே, இப்படி இருக்க நீ உன் கர்பக் கிருஹத்தின் வாயிலை
மூடிக்கொண்டால் எப்படி நாங்கள் தரிசனம் செய்ய முடியும் என்று
வேண்டிக்கொண்டிருந்தோம்
எங்கள் வேண்டுதல் அம்பாளின் காதில் விழுந்தது போலும் கதவை மூடிக்கொண்டு
உள்ளே சென்ற அர்ச்சகர் மீண்டும் கதவைத்திறந்து முன்னால் நின்றிருந்த
அத்தனை பேரையும் தாண்டி எங்களை நோக்கி அப்படி வாருங்கள் என்று ஒரு
வழியைக் காண்பித்தார்
முன்னால் காத்திருக்கும் அத்தனை பக்தர்களின் வரிசைக் க்ரமத்தை
உடைத்துக்கொண்டு செல்ல மனம் தயங்கினாலும்
அம்பாள் உத்தரவு என்று எண்ணி அர்ச்சகர் காட்டிய வழியே உள்ளே
நுழைந்தோம்’ எங்களை மட்டும் உள்ளே அழைத்துக்கொண்டு மீண்டும் கர்பக்
கிருஹத்தின் கதவுகளைச் சாத்தினார் அர்ச்சகர், அதாவது உச்சிகால பூஜைக்கு
முன் தரிசனம் செய்யவேண்டிய பக்தர்களில் எங்களை சேர்த்து முன்னால்
அழைத்துக்கொண்டு சென்று அம்பாளுக்கு முன்னால் நிற்க வைத்தார்
பாவம் மற்ற பக்தர்கள் மீண்டும் காத்திருந்து உச்சிகால பூஜைக்குப் பிறகு
தரிசனம் செய்யவேண்டும்
நாங்கள் கண்ணில் நீர் வழிய அம்பாளை உற்று நோக்கி நன்றி கூறி தரிசனம்
செய்ய ஆரம்பித்தோம்
அர்ச்சகர் எங்கள் கையிலிருந்த ஆளுயர மாலையை வாங்கி அம்பாளுக்கு
சார்த்திவிட்டு ஆரத்தி காட்டி நன்றாக தரிசனம் செய்து கொள்ளுங்கள்
என்று கூரினார், மற்றும் அம்பாளின் பெருமைகளக் கூறி எங்களை மெய்
சிலிர்க்க வைத்தார்
அவர் கொண்டு வந்த தட்டில் மனதில் பணிவோடு 100 ரூபாயை நான் போட்டேன்
அந்த அர்ச்சகர் என்ன நினைத்தாரோ மீண்டும் அம்பாளின் அருகிலே சென்று
மீண்டும் ஒரு முறை கற்பூர ஆரத்தி காட்டிவிட்டு அம்பாளின் பாதங்களையும்
தரிசனம் செய்து வைத்து,அம்பாளின் மேல் ஏற்கெனவே சூடியிருந்த மாலைகளில்
ஒன்றை எடுத்துக் கொண்டு எங்களை நோக்கி நகர்ந்து வர ஆரம்பித்தார்
அவர் அம்பாளின் மேலிருந்து எடுத்த மாலையில் சிக்கியிருந்த அம்பாளின்
புடவை அம்பாளின் மேலிருந்து மாலையுடன் வர ஆரம்பித்ததைப் பார்த்த நான்
பதறிப் போய்
ஸ்வாமி அம்பாளின் புடவை மாலையில் சிக்கிக்கொண்டு நகர்கிறது என்றேன்
அந்த அர்ச்சகர் ஒன்றும் கவலைப்படாதீர்கள் எல்லாம் காரணமாகவே நடக்கிறது
என்று கூறிவிட்டு அந்தப் புடவையைக் களைந்தார், உள்ளே மற்றொரு புடவை
சாத்தியிருந்தது
, அது மட்டுமல்ல அம்பாளின் முன்னே ஒரு பெரிய மந்திர யந்திரம்
வைக்கப்படிருந்தது வெளியே தெரிந்தது ,
அந்த மந்திர யந்திரத்தையும் தரிசனம் செய்ய ஆரத்தி காட்டி விட்டு ,
இப்போதுதான் புதிதாக இந்த யந்திரம் செய்திருக்கிறோம் அந்த யந்திர
தரிசனம் உங்களுக்கு கிடைக்கத்தான் இந்த லீலையை அம்பாள் நிகழ்த்தி
இருக்கிறாள் என்றார்
எங்களுக்கு உடலும் மனமும் பூரித்தது என்னவோ உண்மைதான் ஆனாலும்
மாலையில் புடவை சிக்கியிருப்பததக் கவனியாமல் எடுத்துக்கொண்டு வந்து
விட்டு
நாங்கள் பதறியதைப் பார்த்து மிக சாமர்த்தியமாக தன்னுடைய கவனக் குறைவை
மறைத்து அதை எங்களுக்கும் தனக்கும் சாதகமாக ஆக்கினாரோ அந்த அர்ச்சகர்
என்று தோன்றியது மனதில்
மனது மிகவும் பொல்லாதது
இதில் உண்மை எது என்று புரியாமல் மனதைத் தேற்றிக்கொண்டு மனம் நிறைந்து
தரிசனம் முடித்துவிட்டுத் திரும்பினாலும்
மனதுக்குள் ஒரு போராட்டம்
அத்தனை பக்தர்களையும் காக்கவைத்துவிட்டு நாம் முந்திக்கொண்டு தரிசனம்
செய்தது நியாயமா..?
அதே போல புடவை மாலையில் மாட்டிக்கொண்டதைக் கூட கவனியாமல் நகர்ந்த
அர்ச்சகரின் மனோ நிலை அம்பாளின் அருகிலேயே இருப்பதால் ஏற்பட்ட சகஜ
பாவமா, அலட்ஷிய மனோபாவமா ,அல்லது தான் தினமும் தொட்டு அலங்காரம்
செய்யும் தன்னுடைய தாய்தானே கோபித்துக்கொள்ளமாட்டாள் என்னும் மனோ
நிலையா
என்று யோசிக்கையில்
கர்பக் கிருஹத்தில் இருக்கும் தெய்வங்களையும் அந்த தெய்வங்களின்மேல்
ஊறும் கரப்பான் பூச்சிகளையும் ஒரே நோக்கில் நோக்கும் மனோபாவம்
அர்ச்சகர்களுக்கு ஏற்பட்டிருப்பது உண்மைதானோ என்று சிந்திக்க வைத்தது
எனக்குப் புரியவில்லை உங்களுக்கு புரிவதை கூறுங்கள்
காத்திருக்கிறேன்
நன்றி;மின்தமிழ்
அன்புடன்
தமிழ்த்தேனீ
Search my older Blog
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment