Bhoo thatha's Blogspot

Search my older Blog

Tuesday, January 26, 2016

திருமலையில் ரதசப்தமி 14 February 2016 -Sunday aanmeegam

திருமலையில் ரதசப்தமி 14 February 2016 -Sunday




சூரியன் உலாவரும் தேரினை இழுக்கும் ஏழு குதிரைகளைப் போல், ஏழு மலைகளின் மீது கோயில் கொண்ட திருமலை-திருப்பதியில் ‘ரதசப்தமி’ விழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இந்த ஒருநாளில் மட்டும், காலை 4.30 மணி முதல் 11.30 மணிக்குள், ஏழு வாகனங்களில் பவனி வருகிறார் திருமலையப்பன்.

பத்துநாள் விழாவினை ‘பிரம்மோற்சவம்’ என்பார்கள். அந்த நாளில், தினமும் ஒவ்வொரு வாகனத்தில் சுவாமி உலா வருவார். ஆனால், இந்த ரத சப்தமி திருநாளிலோ, ஒரே நாளில் ஏழு வாகனங்களில் பெருமாள் உலா வருகிறார். இதனாலேயே இந்த விழாவினை ‘அர்த்த பிரம்மோற்ஸவம்’ என்று குறிப்பிடுகிறார்கள்.



திருமலை, ஏழுமலைகளை கொண்டது என்றால், ரங்கம் ஏழு பிராகாரங்களைக் கொண்டது. இங்கும் நம்பெருமாள் ரதசப்தமியை விமரிசையாகக் கொண்டாடுகிறார். தை மாதத்தில், சூரியனை விஷ்ணு என்று குறிப்பதால், பொதுவாக எல்லாப் பெருமாள் கோயில்களிலும் இந்த விழா, சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது போலும்.

மகாலட்சுமிக்கு தை மாதம் சந்தனக்காப்பு!

தஞ்சாவூர் மாவட்டம் திருநறையூரில் சித்தநாதேஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது.  இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக மேற்கு நோக்கி அருள்பாலிக்கிறார். தன்னுடைய அவதார்த் தலம் என்பதால் மகாலட்சுமி இங்கே குழந்தை வடிவில் காட்சி தருகிறாள். ‘மழலை மகாலட்சுமி’ என்றே அழைக்கப்படுகிறாள். இந்த பாலகி மகாலட்சுமிக்குப் பாவாடை - சட்டை அணிவித்து அலங்காரம் செய்கிறார்கள். மேற்கு நோக்கிய தலம் இது. இத்தல விநாயகர் ‘ஆண்டவிநாயகர்’ என்ற திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார். 

சவுந்தர்யநாயகி தாயார் தனிச்சந்நதியில் கொலுவிருக்கிறாள். இந்த அன்னை க்கு தை மாத கடைசி வெள்ளியன்று சந்தனக்காப்பு செய்யப்படுகிறது. மகாலட்சுமி சந்நதி அருகில் தட்சிணாமூர்த்தி இருக்கிறார். இவர் மேற்கு நோக்கியிருப்பது வித்தியாசமான கோலம். இந்த தட்சிணாமூர்த்திக்கு எதிரே நவகிரக சந்நதி இருக்கிறது. 

இங்கு அவதரித்த மகாலட்சுமி, திருமாலை திருமணம் செய்துகொண்டு அருகிலுள்ள  நாச்சியார்கோயிலில் அருளுகிறாள். எனவே, இவளுக்கு தீபாவளி, பொங்கல் போன்ற விசேஷ நாட்களில் பட்டுப்புடவை, சீயக்காய், எண்ணெய், பொங்கல் பானை, வெல்லம் என இங்கிருந்து பிறந்த வீட்டு சீராக அனுப்பி வைக்கின்றனர். வைகுண்ட ஏகாதசிக்கு மறுநாள் இங்கிருந்து சிவன், அம்பிகை இருவரும் பெருமாள் கோயிலுக்குச் செல்கின்றனர். 

தை மாதம் அகத்தியர் திருமணம் 

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் அகத்தீஸ்வரர் ஆலயம் உள்ளது. அகத்தியர், இக்கோயிலில் நின்ற கோலத்தில் வலது கையில் ருத்ராட்ச மாலையுடன், சின்முத்திரை காட்டியபடி காட்சியளிக்கிறார். இடக்கையில் ஏடு ஏந்தியிருக்கிறார். இவரது சந்நதி எதிரில் நந்தியையும், பிராகாரத்தில் சண்டிகேஸ்வரரையும் காணலாம். 

சிவனுக்குரிய பூஜை முறைப்படியே, இவருக்கும் பூஜை நடக்கிறது. சிவராத்திரியன்று இரவில் 4 கால பூஜையும் உண்டு. உற்சவர் அகத்தியருக்குத் தனிச்சந்நதி இருக்கிறது. தன் வலது கையில் நடு விரல்கள் இரண்டையும் மடக்கி, பக்தர்களை அழைக்கும் கோலத்தில் காட்சி தருவது வேறெங்கும் காணவியலாத சிறப்பான அமைப்பு.

அகத்தியரின் மனைவி லோபமுத்திரைக்கும் இங்கே தனிச்சந்நதி உண்டு. இவர் அம்பிகையைப் போலவே வலது கையில் பூச்செண்டு வைத்திருக்கிறாள். நவராத்திரி விழாவின்போது 9 நாட்களும் இவளுக்கு விசேஷ அலங்காரம் செய்யப்படுகிறது. தை மாதம், அஸ்தம நட்சத்திரத்தில், அகத்தியர் - லோபமுத்திரை திருக்கல்யாணம் நடக்கிறது. 

அன்று காலையில் லோபமுத்திரை மட்டும் கோயிலில் இருந்து புறப்பாடாகி, ஓரிடத்திற்குச் சென்று தவம் இருக்கிறாள். மாலையில் அகத்தியர் அங்கு சென்று காட்சி கொடுக்க, பின்பு இருவரும் கோயிலுக்குத் திரும்புகின்றனர். அன்றிரவு இருவருக்கும் திருக்கல்யாணம் நடக்கும். சிவன் திருமணம் போன்றே, இந்த வைபவம் இங்கு நடக்கிறது. இந்த நேரத்தில் அகத்தியரை தரிசித்திட, திருமண பாக்கியம் கிடைப்பதாக நம்பிக்கை. 

தை மகத்தில் அவதரித்த ஆழ்வார்

சென்னையில் இருந்து திருவள்ளூர் செல்லும் சாலையில் 28 கிலோ மீட்டர் தொலைவில் திருமழிசை உள்ளது. இத்தலத்தில் ஜெகந்நாத பெருமாள் மற்றும் ஒத்தாண்டேஸ்வரருக்கு ஆலயங்கள் உள்ளன. பன்னிருவரில் 4வது ஆழ்வாரான திருமழிசை ஆழ்வார் இத்
தலத்தில்தான் தோன்றினார். 

துவாபர யுகத்தில் இத்தலம், ‘மகிசார சேத்திரம்’ என்றழைக்கப்பட்டது. 13ம் நூற்றாண்டில் இது ‘திருமழிசை சதுர்வேதி மங்கலம்’, என்றும் 13ம் நூற்றாண்டில் ‘திருமழிசை அகரம்’ என்றும் அழைக்கப்பட்டது. அதன் பிறகு சுருங்கி ‘திருமழிசை’ ஆகிவிட்டது. சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட மிகப் பழமையான இந்த ஆலயத்தில் வழிபாடு செய்தால், திவ்ய தேசங்களில் வழிபட்ட பலன்கள் கிடைக்கும் என்பது ஐதீகமாகும். ஐந்து நிலை ஏழு கலசங்களுடன் உள்ள கோபுரத்தை பயபக்தியுடன் வணங்கி விட்டு உள்ளே சென்றால் இரண்டு பிராகாரங்களுடன் கோயில் அமைந்திருப்பதைக் காணலாம். இத்தலத்தில் தனிச்சந்நதியில் அருள்பாலிக்கும் திருமங்கைவல்லித் தாயார், தம்மை நம்பிக்கையுடன் அணுகும் பக்தர்களுக்கு சகல சௌபாக்கியங்களையும் அள்ளி, அள்ளி கொடுப்பதாக கருதப்படுகிறது. 

இத்தாயாருக்கு உரிய முறையில் வழிபாடு செய்தால், விரைவில் குழந்தை பாக்கியம் கிடைக்கும், நிறைவான வாழ்க்கையையும் பெற முடியும். அதுபோல இத்தலத்தின் பிராகார தேவதையான வைஷ்ணவியும் பக்தர்களுக்கு வரங்களை வாரி, வாரி வழங்குகிறாள். திருமாலின் சங்கு, சக்கரத்தை ஏந்தியுள்ள அவள் கருணை வடிவாக நின்று சேவை சாதிப்பது குறிப்பிடத்தக்கது. இந்த வைஷ்ணவிக்குப் பூமாலை வழிபாடு செய்தால் உடனே திருமணம் நடைபெறும் என்பது நம்பிக்கை. ஆண்டு தோறும் ஆனி மாதம் ஜெகந்நாத பெருமாளுக்கு பிரம்மோற்சவமும், ஐப்பசி மாதம் வைணவர்களின் குருவான மணவாள மாமுனிவர் உற்சவமும், தை மாதம் மகம் நட்சத்திரத்தில் திருமழிசை ஆழ்வாரின் அவதார மகோற்சவமும், மாசி மாதம் மூன்று நாட்கள் தெப்ப உற்சவமும் கொண்டாடப்படுகிறது.

மாட்டுப் பொங்கலன்று நந்திக்கு மரியாதை

அண்ணாமலையார் கோயில் என்றும் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயில் என்றும் அறியப்படும் தலமானது சிவபெருமானின் ஐம்பூதத் தலங்களில் ஒன்றான அக்னித் தலமாகும். இத்தலத்தின் மூலவர் அருணாசலேஸ்வரர் என்றும், அம்பிகை உண்ணாமுலையாள் என்றும் அழைக்கப்படுகின்றனர். 

மாட்டுப் பொங்கலன்று இங்குள்ள நந்திக்கு விசேஷ பூஜை நடக்கும். அன்று அனைத்து காய்கறிகள், பழங்கள், இனிப்பு வகைகள், பலகாரங்கள் படைத்து, அனைத்துவகை மலர்களும் கோர்க்கப்பட்ட மாலை அணிவித்து, பூஜை செய்வர். அவ்வேளையில் அண்ணாமலையார், 
நந்தியின் முன் எழுந்தருளி அவருக்கு காட்சி தருவார். தனது வாகனத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும்விதமாக சிவன் இவ்வாறு 
எழுந்தருளுகிறார்.

தை வெள்ளிக்கிழமை விசேஷ வழிபாடு

அம்மனின் சக்தி பீடங்களில் காஞ்சி காமாட்சி ஆலயம் காமகோடி பீடமாகத் திகழ்கிறது. இத்தல காமாட்சி அம்மனை வேத வியாசர் பிரதிஷ்டை செய்துள்ளார். தங்க விமானத்தின் கீழ் அம்மன் அமர்ந்த கோலத்தில் அருள்பாலிக்கிறாள். அம்மனுக்கு முன்னால் ஆதிசங்கரர் பிரதிஷ்டை செய்த சக்கரம் உள்ளது. இத்தலத்தில்தான் ஆதிசங்கரர் ஆனந்தலஹரி பாடினார். குழந்தை வரம் வேண்டுபவர்கள் இத்தலத்தில் உள்ள சந்தான ஸ்தம்பத்தை வணங்கினால் புத்திர பாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. 

தசரத சக்கரவர்த்தி இந்த ஸ்தம்பத்தை சுற்றி வந்து, புத்திரகாமேஷ்டி யாகம் செய்ததால்தான் ராமர் முதலானோர் பிறந்தனர் என்கிறது இத்தலப் புராணம். சக்தி பீடங்களில் இது மிக முக்கியமான தலம். அம்பாள் தென்கிழக்கு திசையை நோக்கி அமர்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது. பிரம்மா, விஷ்ணு, ருத்ரன், ஈஸ்வரன், சதாசிவன் ஆகிய பஞ்ச பிரம்மாக்களை தனக்கு ஆசனமாக கொண்டும், நான்கு கைகளுடனும் அம்பிகை காட்சி தருகிறாள். 

கைகளில் பாசம், அங்குசம், புஷ்ப பாணம், கரும்புவில் ஏந்தியிருக்கிறாள். காமாட்சிக்கு லலிதா, ராஜராஜேஸ்வரி, திரிபுரை, சக்கரநாயகி ஆகிய பெயர்
களும் உண்டு. தை மாத வெள்ளிக்கிழமைகளிலும், செவ்வாய்க்கிழமைகளிலும் காமாட்சி அம்மனுக்கு விசேஷ வழிபாடுகள் நடைபெறுகின்றன. கருவறைக்குள்ளேயே மூல விக்ரகத்துக்கு அருகில் ஒற்றைக்காலில் தவம் செய்த நிலையில் அமைந்திருக்கும் ‘தபஸ் காமாட்சி’யை தரிசிப்பதும் முக்கியமானது. 

தை அமாவாசையில் பத்ர திருவிழா 

தென்காசி காசி விஸ்வநாதர் திருக்
கோவில், தென்றல் வீசும் குற்றால நீர்வீழ்ச்சியிலிருந்து 6 கி.மீ. தொலைவில் உள்ளது. இந்த தலத்தில் காலடி எடுத்து வைத்தவுடனே மூலிகை நறுமணம் நம்மை வரவேற்று ஆரோக்கியம் அளிக்கும். நெல்லை மாவட்டத்தில் உள்ள இத்திருத்தலத்தில் ஈஸ்வரன் சுயம்புவாக எழுந்தருளி இருப்பது மிகவும் விசேஷம் என்கின்றனர். 

வடக்கே காசியிலுள்ள விஸ்வநாதரை தரிசித்த பலனும், சக்தியும் இங்குள்ள ஈஸ்வரனை தரிசித்தால் கிடைக்கும் என்று நம்புகின்றனர். இங்குள்ள அம்மனின் பெயர் உலகம்மன் ஆகும். இந்தக் கோயிலின் தல விருட்சம் செண்பக மரம். இங்குள்ள சிற்பங்கள் உலகப் பிரசித்தி பெற்றவை. குறிப்பாக, இரட்டை சிற்பங்களாகிய வீரபத்திரன்-வீரபாகு, இரண்டு தாண்டவ மூர்த்திகள், இரண்டு தமிழ் அன்னைகள், ரதி- மன்மதன் ஆகியவற்றோடு, மிகவும் நேர்த்தியான மஹாவிஷ்ணு,

கம்பீரமான காளி தேவி சிலைகளும் வியக்கத்தக்க, நுணுக்கமான சிற்ப வேலைப்பாடுகள் கொண்டவை. இக்கோயில் சுமார் 4 ஏக்கர் பரப்பளவில் பரந்திருக்கிறது. இந்தத் தலத்தில் மாசி மகம், நவராத்திரி, ஐப்பசி மாதம் திருக்கல்யாணம், ஆவணி மாதம் மூல 
நட்சத்திரத்தன்று தெப்பத்திருவிழா, தை அமாவாசையில் பத்ர திருவிழா ஆகியன மிகுந்த உற்சாகத்தோடு கொண்டாடப்படுகின்றன.

ரதசப்தமியன்று சூரிய வழிபாடு 

ஈசன் ஏகாம்பரநாதராகவும், இறைவன் ஏலவார்குழலியாகவும் திருவருள் புரியும் தலம் காஞ்சி ஏகாம்பரம். பஞ்சபூத தலங்களில் முதன்மையான இத்தலம், பிருத்வி (நிலம்) தலமாகும். கருவறையில் சுவாமி மணல் லிங்கமாகவே விளங்குகிறார். இவரது மேனியில் அம்பாள் கட்டியணைத்த தடத்தைத் தற்போதும் காணலாம். இவருக்கு புனுகு மற்றும் வாசனைப் பொருட்கள் பூசி வெள்ளிக் கவசம் சாத்தி வழிபடுகின்றனர். 

அபிஷேகங்கள் ஆவுடையாருக்கே நடக்கின்றன. சிவன் இத்தலத்தில் அம்பாளுக்கு அருள்புரிவதற்காக கங்கையையும், ஆலகால விஷத்தின் உஷ்ணத்தால் கருப்பு நிறமாக மாறிய மகாவிஷ்ணுவை குணப்படுத்த தன் தலையை அலங்கரிக்கும் பிறைச்சந்திரனையும் பயன்படுத்தியிருக்கிறார் மகேஸ்வரன். தன் திருமுடியில் இருக்கும் கங்கை, சந்திரன் இருவருக்கும் சிவன் இத்தலத்தில் அந்தப் பொறுப்புகளைக் கொடுத்திருப்பது சிறப்பு.

தை மாத ரதசப்தமி தினத்தில் லிங்கத்தின் மீது சூரிய ஒளி விழுகிறது. இந்நாளில் சுவாமியை தரிசனம் செய்தால் பாவம், தோஷங்கள் நீங்கும் 
என்பது நம்பிக்கை.

ரதசப்தமி உற்சவம்

நீர்வண்ணர், ரங்கநாதர், உலகளந்த பெருமாள், பாலநரசிம்மர் நான்கு தோற்றங்களில் பெருமாள் அருளும் தலம் திருநீர்மலை. இது ஒரு மலைக்கோயில் ஆகும். மலையிலும், கீழேயும் இரண்டு பெரிய கோயில்கள் அமைந்துள்ளன. பெருமாள் நான்கு நிலைகளில், மூன்று அவதார கோலங்களில் காட்சி தருகிறார். 
இத்தலத்திற்கு மூன்று ஏக்கர் பரப்பளவில் நடுவில் நீராழி மண்டபத்துடன் அழகிய தெப்பக்குளம் உண்டு. இக்குளம் சுத்த புஷ்கரணி, க்ஷீர புஷ்கரணி, காருண்ய புஷ்கரணி, ஸ்வர்ண புஷ்கரணி என பல பெயர்களில் அழைக்கப்படுகிறது. வைகானச ஆகம விதிப்படி இருவேளை பூஜை நடக்கிறது. ராமர் தனிச்சந்நதியில் வீற்றிருக்கிறார். இத்தலத்தின்குளத்தில் நீராடி பெருமாளை வழிபட்டால் நோய் விலகி நலம் உண்டாகும். அத்துடன் 
சித்தம் தெளிந்து சகல சௌபாக்கியங்களும் கிடைக்கும். 

குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் இங்குள்ள மரத்தில் தொட்டில் கட்டியும், திருமணத்தடை நீங்க பெண்கள் கிரிபிரதட்சணம் செய்தும் வழிபடுகின்றனர்.மலைக்கோயிலில் உள்ள ரங்கநாதருக்கு சித்திரையிலும், அடிவாரத்திலுள்ள நீர்வண்ணப்பெருமாளுக்கு பங்குனியிலும் பிரம்மோற்ஸவம் நடக்கிறது. 

வைகுண்ட ஏகாதசியின்போது அழகிய மணவாளர் சொர்க்கவாசல் கடக்கிறார். இவரே மாசி மகத்தன்று கருடசேவை சாதிக்கிறார்.நரசிம்மருக்கு ஆனியிலும், உலகளந்த பெருமாளுக்கு ஆடியிலும் ஒருநாள் விழா நடக்கிறது. அப்போது இவ்விருவரும் அடிவார கோயிலுக்கு எழுந்தருளி கருடசேவை சாதிக்கின்றனர். 

சித்திரை உத்திரத்தில் நீர்வண்ணர் - அணிமாமலர்மங்கை திருக்கல்யாணமும், பங்குனி உத்திரத்தில் ரங்கநாதர் - ரங்கநாயகி திருக்கல்யாணமும் நடைபெறுகின்றன. பொதுவாக கோயில்களில் விழாக்காலங்களில் சுவாமி ஒவ்வொருநாளும் ஒவ்வொரு வாகனத்தில் 
எழுந்தருளுவார். ஆனால், இக்கோயிலில் ரங்கநாதர், ஒரே நாளில் ஏழு வாகனங்களில் பவனி வருவார். 

தை மாத ரதசப்தமியன்று இந்த அற்புத தரிசனத்தைக் காணலாம். அன்று காலை சூரிய உதயத்திற்கு முன்பு ரங்கநாதர் சூரியபிரபை வாகனத்தில் எழுந்தருளி மாடவீதி சுற்றி தீர்த்தக்கரைக்கு எழுந்தருளுகிறார். சூரிய உதய வேளையில், பெருமாளின் பாதத்திலிருந்து முகம் வரையில் படிப்படியாக தீபாராதனை செய்வர். இதனை பெருமாளுக்கு சூரியனே செய்யும் பூஜையாக கருதுவதுண்டு. பின்னர், அனுமந்த வாகனம், கருடன், சேஷன், குதிரை, சிம்மம், சந்திரபிரபை ஆகிய வாகனங்களில் சுவாமி உலா வருவார்.

எறும்புகளின் 'செல்லப் பிராணி'யான அந்தப் பூச்சி இனத்தின் பெயர், 'அசுவுணி' (Aphids- - அபிட்ஸ்). அசுவுணிப். Science corner

எறும்புகள் தங்கள் புற்றில் ஒரு பூச்சி இனத்தை வளர்ப்பது உண்டு!

எறும்புகளின் 'செல்லப் பிராணி'யான அந்தப் பூச்சி இனத்தின் பெயர், 'அசுவுணி' (Aphids- - அபிட்ஸ்). அசுவுணிப் பூச்சியின் உடலில் இருந்து தேன் போன்ற ஒரு திரவம் (liquid) சுரக்கும். இதற்காகத்தான் எறும்புகள் இவற்றைப் பாதுகாக்கின்றன. 'தேன் எறும்புகள்' (Honey Ants - ஹனி ஆன்ட்ஸ்) என்ற எறும்பு வகைக்கு இந்த திரவம் முக்கியமான உணவுப் பொருள். இதற்காக எறும்புகள், அசுவுணிப் பூச்சிகளுக்கு உணவு அளித்தும், எதிரிகளிடம் இருந்து பாதுகாத்தும் உதவி செய்கின்றன. அசுவுணிப் பூச்சிகளின் முட்டைகளைக் குளிர்காலங்களில் பாதுகாப்பான இடத்திற்கு எடுத்துச் செல்கின்றன. 

சில நேரங்களில், எறும்புகள் சிறிய 'ஸ்ட்ரா' போன்ற தங்கள் உணர்கொம்புகளால் அசுவுணிப் பூச்சியைத் தடவிக் கொடுத்து இந்த 

திரவத்தைச் சுரக்கச் செய்கின்றன. 

அசுவுணிப் பூச்சிக்கு 'செடிப் பேன்' என்ற பெயரும் உண்டு. இவை மிகச் சிறியதாகவும் மென்மையாகவும் வெள்ளை, பழுப்பு, மஞ்சள், பச்சை, கருப்பு ஆகிய நிறங்களிலும் காணப்படும். அசுவுணிப் பூச்சிகளில் சில வகைகளுக்கு இறக்கை இருக்கும். சிலவற்றுக்கு இருக்காது. 

அசுவுணிப் பூச்சி தன் கூர்மையான வாயால் வெண்டைக்காய், பருத்தி, உளுந்து ஆகிய செடிகளைக் கடித்துச் சாறு உறிஞ்சும். இதனால் செடிகள் பாதிப்புக்குள்ளாகும். எறும்புகள் அதிகமுள்ள இடங்களில் அசுவுணிப் பூச்சிகள் இருந்தால் ஆச்சரியப்படாதீர்கள்!
Courtesy dhinamalar ariviyal arivom

wonders of English letters

ஆங்கிலத்தின் முதல் எழுத்துக்களான a, b, c, d, e, f உள்ளடக்கிய சின்ன வார்த்தை (Feedback - ஃபீட்பேக்).

தட்டச்சு (Typewriter - டைப்ரைட்டர்) இயந்திரத்தின் ஆங்கில விசைப் பலகையில் (Key board - கீ போர்ட்) ஒரே ஒரு வரிசையை மட்டும் பயன்படுத்தி நாம் டைப் செய்யக் கூடிய மிக நீளமான வார்த்தை Typewriter!

a, b, c, d என்ற எழுத்துக்கள் ஜீரோ (Zero), ஒன் (One) முதல் தொண்ணூற்று ஒன்பது (Ninety Nine) வரையுள்ள ஆங்கில வார்த்தைகளில் எங்குமே இடம்பெறவில்லை.



One, Two, Three…. என ஆங்கிலத்தில் எழுதிக் கொண்டு வந்தால் One thousand என்று எழுதும்போதுதான் முதன்முறையாக a என்ற எழுத்து வரும்.

'mt' என்று முடிகிற ஒரே ஆங்கில வார்த்தை 'Dreamt' - 'ட்ரெம்ட்'. கனவு காண்பது என்பதன் இறந்த காலச் சொல் (Past Tense - பாஸ்ட் டென்ஸ்) இது. 

'SWIMS' என்ற வார்த்தையைத் தலைகீழாகத் திருப்பி வாசித்தாலும் 'SWIMS' என்றுதான் தெரியும்.
Courtesy dhinamalar ariviyal arivom

வளம் தரும் வாஸ்து - அரைஞாண் கயிறு கட்டுவது எதற்காக?

வளம் தரும் வாஸ்து -

அரைஞாண் கயிறு கட்டுவது எதற்காக?(courtesy aanmeegappalan kungumam


பிறப்பு முதல் இறப்பு வரை நடைபெறும் காதணி விழா முதல் கல்யாண விழா வரை பல்வேறு நிகழ்வுகளிலும் வாஸ்து, பெங்சூயி சூட்சுமங்கள் உள்ளன, தெரியுமா உங்களுக்கு?கர்ப்பிணிகள் வசிக்கக் கூடிய அறை, தென்மேற்கு மற்றும் வடமேற்கு பகுதியாக அமைவது நல்லது என்று வாஸ்து விஞ்ஞானம் தெளிவுபடுத்துகிறது. பெங்சூயிபடி  அறை சுவர்களில் மென்வர்ணம், குறிப்பாக இளம் நீலம், இளம் சிவப்பு மற்றும் இளம் சந்தன வண்ணங்கள் கொண்டவையாக இருக்க வேண்டும். 


குழந்தை பிறந்தபின் அதனை இடும் தொட்டிலை வடமேற்கு மூலையில் அமைக்க வேண்டும் என்றும் குறிப்பிடுகிறது. மாறாக, தென்கிழக்கில் தொட்டில் அமைக்கும்போது குழந்தை உரிய நேரத்திற்குத் தூங்காமல், விழித்துக் கொண்டும், அழுது கொண்டும் அடம் பிடிக்கும் என உறுதிபட கூறுகிறது.

வடகிழக்கில் தொட்டில் அமைக்கும்போது குழந்தையின் வளர்ச்சி தடைபடுவதுடன் பல்வேறு பிரச்னைகளுக்கும், இன்னல்களுக்கும் அது ஆளாகும். எனவே படுக்கையறையில் கர்ப்பிணி படுக்கும் முறையும், குழந்தைத் தொட்டில் அமையவேண்டிய அமைப்பையும் படத்தில் 
உள்ளவாறு அமைக்க வேண்டும்.

குழந்தை பிறப்பின்போது சோற்றுக்கற்றாழையை பெங்சூயி வெகுவாக ஆராதிக்கிறது. சோற்றுக்கற்றாழையை வேருடன் பிடுங்கி வடகிழக்கு/தென்கிழக்கில் கட்டி தொங்கவிடும்போது மகப்பேறு அடைந்த தாயின் ரத்த போக்கு காரணமாக வெளியேறும் பாக்டீரியாவை உள்வாங்கி அங்கே சுகாதாரம் பேணப்படும் என்று ஆரோக்யத்தை சொல்கிறது. இது வீட்டுக்குள்ளேயே பிரசவம் நடக்கும் அந்தக் காலத்திய வழக்கம். இன்றும் சில கிராமங்களில் கையாளப்படுகிறது.

அதேபோல சுவர் ஓரங்களை மஞ்சள்நீரால் துடைக்கும்போது குழந்தையின் சிறுநீர்/மலம் மூலமாக வெளியாகும் பாக்டீரியாகளையும் அவை உருவாக்கக்கூடிய  நோய்களையும் அண்டவிடாமல் காக்கும்.இன்றைக்கு ஜனனம் ஆன சில குழந்தைகளை இன்குபேட்டரில் வைத்துப் பாதுகாக்கும் நிலைமை உள்ளது. அப்போது பிரசவித்த தாய் குழந்தையுடன் இருக்கமுடியாத காரணத்தால் பால் சுரப்பு, குழந்தையை அரவணைத்தபடி இருக்க இயலாமை போன்ற பாதிப்புகள் வருகின்றன. 

ஆனால், அந்நாளில் வீட்டில் நடக்கும் பிரசவத்தில் தாய்-சேய் இருவரையும் வடமேற்கு மூலையில் தங்க வைப்பதால், மாலை சூரியனின் கதகதப்பு இரவுவரை இருக்கும். காற்றும் அதிகம் வீசாது. இது இப்போதைய இன்குபேட்டரின் மென்மையான உஷ்ண அமைப்பு!கைக்குழந்தைகளுக்கு இதயத் துடிப்பு அதிகமாக இருக்கும். இதற்குக் காரணம் அது உடனே அடுத்தடுத்த வளர்ச்சிக்குத் தன்னைத் தயார் செய்துகொள்வதே. இந்த காலகட்டத்தில் அதன் இதயத் துடிப்பை சீராக்க உதவுகிறது அதன் இடுப்பில் 
கட்டப்படும் அரைஞாண் கயிறு.

இடுப்பு அருகில் மட்டுமே ரத்த குழாய்கள் மெலிதாக தோலின் மிக அருகில் செல்கின்றன.எனவே ஈரம்பட்டாலும் அறுபடாத பொருளான வெள்ளை எருக்கம் பூவின் நாரினை கயிறாக திரித்து அதைத்தான் இடுப்பில் கட்டிவிடுவார்கள்.ஆனால், நம் முன்னோர்கள், அவ்வாறு கட்டுவது பேய், பிசாசு, கறுப்பு அண்டாமல் இருப்பதற்காக என்ற ‘நம்பிக்கையை’ வளர்த்துவிட்டதால், அது வாஸ்து விஞ்ஞானத்தின் ஒருவகை என்ற உண்மை
மறைந்துபோனது.

வயதானவர்கள் உள்ள வீடுகளில், அவர்கள் இன்றும் தம் பேரன், பேத்தி, கொள்ளு பேர குழந்தைகளுக்கு வெள்ளை எருக்கம் நார் - அரைஞாண் கயிறை கட்டி இதயத் துடிப்பை சீராக்கி குழந்தை வளர்ச்சியை நன்முறையில் பேணுகின்றனர்.‘வசம்பு’ என்ற மூலிகைக்கு கிராமங்களில் ‘பிள்ளை வளர்த்தி’ என்றே பெயர். இதன் அடிப்பகுதி - வேர்பகுதி கட்டையாக இருக்கும். இதனை சிறு சிறு மணிகளை போல செய்து நூலில் கோர்த்து வளையல் போல குழந்தைகளின் கைகளில் அணிவிப்பார்கள்.

இது என்ன அலங்காரம்? இது அலங்காரம் அல்ல. வாஸ்து விஞ்ஞானமே! வசம்பு செடியின் வேர் மிக வாசனையாக இருக்கும். இதன் மணத்தை 10, 15 அடி தூரம்வரையிலும் நுகர முடியும். குழந்தைகள் இயல்பாக கைகளை வாயில் வைத்துக்கொள்ளும் பழக்கம் கொண்டிருக்கும். வசம்பு வளையல்களை குழந்தைகள் கையில் அணிவித்தால்  அப்போது குழந்தையின் எச்சில் வசம்பில் பட்டு அதன் சாரம் குழந்தை வாயிற்குள் செல்லும். இதன் பலன் என்ன?கைக்குழந்தைகளின் பிரதான உணவே பால்தான். பால் சீரணிக்கப் பலமணிநேரம் ஆகும். குழந்தையின் ஜீரண சக்தியைத் தூண்டக்கூடிய மருந்தாக பிள்ளை வளர்த்தி என்னும் வசம்பை கையில் வளையலாகப் பயன்படுத்தினார்கள்.

தாயார் தன் கழுத்திலும் வசம்பை மாலையாக போட்டுக் கொள்ள, அதை குழந்தை எடுத்து வாயில் வைக்கும் போதும் இதே பலனை அது பெறுகிறது.  வசம்பை தேய்த்து குழந்தையின் கன்னத்திலும் நெற்றியிலும் பொட்டு வைப்பதையும் இன்றும் கிராமத்தில் வழக்கமாக உள்ளது. 

நாம் இன்றைக்கு ஸ்டெயின்லஸ் ஸ்டீல் பொருட்களையே அதிகம் பயன்படுத்துகிறோம். பழங்காலங்களில் மண்பாண்டம், செம்பு, பித்தளை வெங்கல பொருட்களையே அதிகம் பயன்படுத்தி வந்தோம். நாளாவட்டத்தில் அலுமினியம் மற்றும் ஸ்டெயின்லஸ் ஸ்டீலுக்கு (துருப்பிடிக்காத இரும்பு) மாறிவிட்டோம். இதனால் நோய்களே அதிகமாயின. ஆனால், முன்னோர்கள் பயன்படுத்திய செம்பு நம் உடலில் உலோக சத்தினை அதிகரித்து திறம்பட செயலாற்றி நம் ஆரோக்யத்தை மேம்படுத்தியது.

செம்பு/துத்தநாக கம்பிகளால் செய்த வளையல், கைக்குழந்தையின் கை, கால்களில் அணிவிக்கும்போது ஏற்கனவே கூறியபடி ‘ஆலிலை கிருஷ்ணன்’ போல தன் காலையும் குழந்தை எடுத்து வாயில் வைத்துக் கொள்ளும்போது செம்பு சத்து அக்குழந்தைக்கு சீர்மிகு ஆரோக்யம் அளிக்கிறது.  
பெங்சூயியில், உலோகம் ஐந்து முக்கிய காரணிகளில் ஒன்றாக உள்ளது உலோகத்தை குழந்தை சிறு வயதிலேயே பயன்படுத்தும் பொழுது ‘ச்சீ’ சக்தி நிரம்ப பெற்று, முழு பலசாலியாக வளர முடியும் என்பதை கண்டறிந்துள்ளனர். இப்படியாக  குழந்தை வளர்ச்சியில் பெங்சூயி/வாஸ்து பரிகாரமாக சிலவற்றை கூறி குழந்தை வளர்ப்பிலும் தன்னை முன்னிருத்திக் கொண்டுள்ளது

Tirukkolur Amal -Vaishnavas -audio

Namaskarams,
We wonder if you will have time enough to go through our latest updations/New arrivals , which are as follows.

YouTube Topic : Thirukkolur Ammal (Part-1) [26-01-2016]
Pranams,

News Letter Team
Updates




8 Health Benefits of Apricots :

8 Health Benefits of Apricots :
1.Cancer Prevention
The powerful antioxidants found in apricots help protect the body from free radical activity and damage to cells and DNA.
Though controversial, recent studies say that apricot seeds fight cancer due to their laetrile content. Laetrile, also known as B17, is a controversial substance found in the seeds also known as "pits" or "kernels" of apricots.
B17 has been noted for both its cancer-fightingpotential as well as its supposed toxic effect on humans. The FDA banned laetrile in 1971 because it contains cyanide, a well known poison. However, recent studies have questioned its level of toxicity and many researchers claim that laetrile kills cancer cells without serious side effects. More research is still needed and individuals should consult a doctor before consuming apricot seeds.
2.High In Antioxidants
Apricots are a good source of vitamin C and a great source of vitamin A, providing 20% of ones DV per serving.
3.Heart Health
The beta carotene found in apricots is now considered by many studies to play a positive role in cardiovascular health and heart disease prevention. They help prevent oxidation to LDL cholesterol and detoxify the blood.
4.High In Fiber
The high fiber content in apricots offers a variety of health benefits. It may be essential in colon health, is great for digestion and helps balance the metabolism and maintain a healthy body weight.
5.Eye Health
Fruit like apricots, high in vitamin A and carotenoids, are now considered by many to help strengthen the eyes. One report stated that eating 3 or more servings of these fruits per day may help to prevent age related eye disease like macular degeneration.
6.Anemia
Apricots contain a good amount of iron and copper, both of which may help in the formation of hemoglobin.
7.Skin Health
Rubbing apricot oil on the skin may help relieve the symptoms of conditions like eczema and scabies.
8.Weight Loss
Apricots are a low calorie, nutrient rich food source that may be a great addition to any weight loss program. In addition, the fiber in apricots may help to maintain a healthy weight level
















C

Digilocker

வந்துவிட்டது...
இனி எந்த ஆவணத்தையும் கையில் எடுத்துக் கொண்டு செல்ல வேண்டியது இல்லை, நகலும் தேவை இல்லை,
இந்திய அரசு டிஜிலாக்கர் என்ற புதிய மின்பூட்டு ஒன்றை அறிமுகப்படுத்தி உள்ளது.ஆதார் அட்டை எண் உள்ள அனைவரும்...
என்ற தளத்திற்குள் சென்று, தங்களது கடவுச்சீட்டு, ஓட்டுநர் உரிமம், 10, 12 மற்றும் பட்டச் சான்றிதழ்கள், வருமானவரிக் கணக்கு அட்டை (பான் கார்டு) மின் கட்டண அட்டை போன்ற சான்றிதழ்களைப் பதிவுசெய்து கொள்ள வேண்டும்.
அதன்பிறகு நீங்கள் ஏதேனும் ஒரு அரசுத்துறைக்கு விண்ணப்பித்தால். மேற்கண்ட சான்றிதழ்கள் எதையும் தாக்கல் செய்ய வேண்டியது இல்லை.
பதிலாக உங்கள் ஆதார் அட்டை எண்ணை மட்டும் கொடுத்தால் போதும். அவர்கள் சரிபார்த்துக் கொள்வார்கள்.இந்தத் திட்டம் ஏற்கனவே நடைமுறைக்கு வந்துவிட்டது.பயன்படுத்திக் கொள்ளுங்கள்.உங்கள் நண்பர்களுக்கும் வழிகாட்டுங்கள்

ஆரோக்கியம் சார்ந்த அறிவியல்

கால் மேல் கால் போட்டு உட்காராதே... இது என்ன கெட்ட பழக்கம்? - இப்படி பெரியவர்கள் கூறுவதைப் பார்த்திருப்போம். பெரியவர்கள் எதிரில் அப்படி உட்கார்வது மரியாதை இல்லை என்ற நோக்கில் அப்படிச் சொன்னாலும், அதன் பின்னணியில் ஆரோக்கியம் சார்ந்த அறிவியல் இருப்பது ஆய்வில் அறியப்பட்டுள்ளது. லேப்டாப் அல்லது கம்ப்யூட்டரில் பணிபுரியும் போது சிலர் கால்மேல் கால் போட்டு அமர்ந்திருப்பதைப் பார்த்திருப்போம். இவ்வாறு உட்கார்வதால் ரத்த அழுத்தம் அதிகரிக்கிறது என்று ஓர் ஆய்வில் கூறப்பட்டுள்ளது. கால் மேல் கால் போட்டு உட்காரும் போது, சிஸ்டாலிக் ரத்த அழுத்தம் 7 சதவிகிதமும், டயஸ்டாலிக் ரத்த அழுத்தம் 2 சதவிகிதமும் அதிகரிக்கிறதாம். அது மட்டுமே அல்ல... அடிக்கடி காலை குறுக்கே போட்டு உட்கார்வதால் இடுப்பு எலும்புகளின் இணைப்பில் அழுத்தம் ஏற்பட்டு நரம்புகளை சுருக்குகிறது. Fff
இதனால் ரத்த ஓட்டம் தடைப்பட்டு கால்களின் கீழ்ப்பகுதி நரம்புகளை வீக்கம் அடையச் செய்யும். இதுவே நாளடைவில் வெரிகோஸ் வெயின் எனப்படுகிற நரம்புப் பிரச்னை வரவும் வழிவகுக்கிறது. 10 முதல் 15 நிமிடங்களுக்கு மேல் கால்களை குறுக்கே போட்டு உட்காரக்கூடாது என்று இதயநோய் நிபுணரான டாக்டர் ஸ்டீபன் சினட்ரா கூறுகிறார். முக்கியமாக... நீரிழிவுக்காரர்கள் கால் மேல் கால் போட்டு அமர்வதை அறவே தவிர்க்க வேண்டும். பெரியவர்கள் சொன்ன ஒவ்வொரு அறிவுரையுமே அர்த்தமுள்ளதாக இருப்பது நமக்கு புரிய வருவது உண்மைதானே!
Courtesy pattam dhinamalar

தவறு யார்தான் செய்யவில்லை ?

தவறு   யார்தான் செய்யவில்லை 

'பாபாநாம் வா சுபாநாம் வா வதார்ஹாணாம்  ப்லவங்கம }
கார்யம் கருணமார்யேன  ந  கஸ்சிந்நாபராத்யதி(வால்மீகி ராமாயணம்) 
அசோக வனத்திலே அரக்கியர் மத்தியிலே வருத்தத்துடன் இருந்த சீதையிடம்,  "ஆஞ்சநேயன் ராமன் ராவணனை மாய்த்துவிட்டு வெற்றியுடன் திகழ்கிறான்"  என்ற நல்ல வார்த்தையை சொல்கிறான். சீதைக்குப் பேச்சே வரவில்லை. அஞ்சநேயனின் கண்கள் நாலாபக்கமும் போகிறது. மஹா விகார ரூபமுடைய ராக்ஷச ஸ்திரிகள் சுற்றிலும் இருக்கிறார்கள். இவ்வளவு நாட்களும்   சீதையை ஏகமாக மிரட்டியவர்கள்.  அவர்களை பார்த்ததும் கோபம் வந்தது. 
சீதையிடம், "அம்மா , இவர்கள் உங்களுக்கு செய்த கொடுமைக்கு,      நீங்கள் உத்தரவு கொடுத்தால் முஷ்டியினால் இவர்கள் இருக்கின்ற இடம் தெரியாமல் நொறுக்கி விடுவேன். கைகளாலும் கால்களாலும் உதைத்து துவைத்து விடுகிறேன்" என்றான் ஆஞ்சநேயன். 
இதற்கு சீதாபிராட்டி சொன்ன பதில்தான் மேலே சொன்ன சரம சுலோகம். 
ஆஞ்சநேயனிடத்திலிருந்து இந்த பேச்சு வந்தவுடன் , "உன்னுடைய  த்ருஷ்டியால் அவர்கள் பாபாத்மாக்கள் என்றே வைத்துக் கொள். என்னுடைய திருஷ்டியில் இவர்கள் ஒரு பாவமும் செய்யாதவர்கள்" என்றாள்.  மேலும் தொடர்ந்து "இப்படி என் சொல்கிறேன் தெரியுமா? உலகத்தில் எல்லோரும் தப்பு செய்தவர்களே ! தப்பு செய்யாதவர்களே இல்லை. அதனால்இவர்களுக்கு தண்டனை கொடுக்க யாருக்கு உரிமை உண்டு? அதிலும் ராவணனின் கட்டளையை பரிபாலனம் பண்ணினார்கள். விபீஷணனின் ராஜ்ஜியம் என்றாலும் அவன் சொல்வதைக் கேட்பார்கள். இவர்களாக ஸ்வதந்திரமாக என்னை மிரட்டினார்களா? ராமன் கானகம் வர காரணமான மந்தாரையையே (கூனியையே) பரமாத்மா மன்னித்தானே ! இவர்களை சீக்ஷித்தால் பரமாத்மா பொறுத்துக் கொள்வானா? ஆகையால் என் திருஷ்டியினால் இவர்கள் நல்லவர்களே ! " என்று காருண்யத்தோடு பேசினாள். 
இப்படி காருண்யத்தால் விசேஷமாக ஆட்கொள்வதே   சிறந்தது.  தப்பு செய்தவர்களை சிக்ஷிக்காமல்   அவர்கள் திருந்துபடியாக அனுக்ரஹம் பண்ணுவதல்லவா உயர்ந்தது ! அவர்களை சிக்ஷிக்கலாமா என்றாள். 
நிக்ரஹமே அறியாத மஹாலக்ஷ்மி ராக்ஷச  ஸ்திரிகளல்லாம் தப்பு செய்யாதவர்கள் என்று வாதித்தாள். 
உலகத்தில் தப்பு செய்யாதவர்களே கிடையாது என்று சீதா பிராட்டி சொன்னவுடன் ஆஞ்சநேயனின் முகம் வெளுத்து விட்டதாம். குறிப்பறிவதில் வல்லவள் சீதா பிராட்டி.
"என்ன ஆஞ்சநேயா  !  உன் ராமன் தப்பு பண்ணவில்லை என்று நினைத்தாயா? ராமனும் தப்பு பண்ணியவன்தான் " என்றாள்.  எல்லோரும் தப்பு பண்ணியவர்கள் எனறால்  அதில்  ராமனும் அடக்கம்தானே !
"பத்து மாத காலம் மாற்றான் மனையில் என்னை நிராதரவாக விட்டு வைத்தானே !  நிராதரவாக காமாந்தகனின் வீட்டில் கற்பைக் காப்பாற்றிக் கொண்டு இருக்க முடிவது எவ்வளவு சிரமம் ! இத்தனை நாட்கள் தாமதித்தது அவன் தப்பு இல்லையா? "என்று கேட்டாள் அன்னை .

"ஆமாம்  நியாயம்தான் ! இவ்வளவு நாள் ராமன் விட்டு வைத்தது தப்பு"என்று ஒத்துகொண்டான். மறுபடியும் ஆஞ்சநேயனின் முகம் வெளுத்து விட்டது. அதையும் பார்த்தாள் சீதை பிராட்டி.

இப்போதும் உன் சந்தேகம் புரிகிறது. நான் என்ன தப்பு   செய்தேன் என்று தெரிந்து கொள்ள ஆசைப் படுகிறாய். . எல்லோரும் தப்பு பண்ணியவர்கள் எனறால் அதில் நானும்  அடக்கம்தானே ! நானும் தப்பு பண்ணியவளே ! தன் கணவன் எப்படி இருந்தாலும் அவனைப் பற்றி மற்றவர்களிடம் விமர்சிப்பவள் உத்தமபத்தினிக்கு அழகல்ல. என் கணவன் என்னை பத்து மாதம் மாற்றான் வீட்டில் விட்டு வைத்தான் என்று உன்னிடம் நான் குறை சொன்னது நான் செய்த தப்பு" என்றாள். 

ஆஞ்சநேயனும்,  "ஆமாம். இதுவும் வாஸ்தவமே " என்றான். "நான் செய்த தப்பு என்ன ? " என்று கேட்டான்.

இவர்களை அடிக்கிறேன், உதைக்கிறேன் என்று சொல்கிறாயே அது நீ பண்ணிய   தப்பு. ராமனின் கட்டளையை மீறி நீ ஒரு காரியம் செய்வாயா? அதேபோல் இவர்கள் அவர்களின் அரசனான ராவணனின் கட்டளையை பண்ணினார்கள். அதனால் இவர்கள் தப்பு செய்தவர்கள் என்று எப்படி சொல்லமுடியும். இவர்களும் நல்லவர்களே! அப்படிப்பட்ட இவர்களை தண்டிக்க நினைத்தது. நீ செய்த தப்பு என்றாள். 

பராசர பட்டர் குணரத்ன கோசத்தில் , ராமனின்  கோஷ்டி, சீதா பிராட்டி கோஷ்டி இரண்டாக பிரிக்கிறார். ராமன் தன்னிடம் வந்து சரணம் புகுந்தவர்களுக்க்தான் அபயம் அளித்தான். விபீஷணன் சரணாகதி பண்ணினான். காகாசுரன் வந்து விழுந்ததையே   சரணமாகக் கொண்டு அனுக்ரஹம் பண்ணினான். 

சீதா பிராட்டியோ,  நனைந்த கை உலராமல் இருக்கும்போதே, ராக்ஷச ஸ்திரிகள் தன்னை மிரட்டிக் கொண்டிருக்கும்போதே, அத்தனை பேரையும்  ஆஞ்சநேயநிடமிருந்து காப்பாற்றிவிட்டாள். 

எனவே மஹாலக்ஷ்மியின் காருண்யம் பகவானுடைய காருண்யத்தைக் காட்டிலும் உயர்ந்தது.

(முக்கூர் ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மாச்சார் அவர்களின் கோதையின் பாதை பாகம் 2 ல் இருந்து தொகுத்தத்து) 

                               image2.JPG

கவான் கட்டி பொன் போலே..! அவனது திருநாமமோ ஆபரணங்களைப் போலே.! கட்டிப்

திருநாமம்   ***************************************

பகவான் கட்டி பொன் போலே..!  அவனது திருநாமமோ ஆபரணங்களைப்   போலே.!  கட்டிப்பொன் மிக உசத்தியானதுதான். ஆனால் அதைத் தலையில் வெச்சுக்க   முடியுமா ..? இல்லை கழுத்திலேதான் போட்டுக்க முடியுமா..? அல்லது முதுகிலே தாங்கிக் கொண்டு நிற்கத்தான் முடியுமா..? ஆனால் பகவானின் திருநாமங்களோ உடனே எடுத்தாளக்கூடிய ஆபரணங்கள். அணிந்தும்,  அணிய செய்தும் மகிழலாம் அழகு பார்க்கலாம்.
விஷ்ணு என்கிற திருநாமம் அவனுக்கே ரொம்ப பிடித்த நாமமாம். ஒவ்வொருத்துருக்கும் ஒவ்வொரு நாமம் பிடிக்கும்.ஆஞ்சநேயனுக்கு அவனை 'ஆஞ்சநேயன்'என்று அழைத்தால் அவ்வளவாகப் பிடிக்காதாம்; ராம தூதன் நான் என்கிறான். ஆகவே ராமதாச ஆஞ்சநேயன் என்று அழைத்தால்தான் அவனுக்கு பிடிக்குமாம். ராமதாச ஆஞ்சநேயா என்று சொன்னால் எகிறிக் குதிப்பான் அவன் ! நாம் என்ன கேட்கிறமோ அதை உடனே கொடுத்து விடுவானாம். ஒவ்வொருவருக்கும் பிடித்த பெயரைச் சொல்லிக் கூப்பிட்டால்தான் சந்தோசம் ஏற்படும். அப்படி பகவான் நாராயணனுக்கு ரொம்ப பிடித்த பெயர் விஷ்ணு. 

பகவான் இருந்து பிரயஜோனமில்லை.அவனை விளங்கச் செய்யக்கூடிய மகான்கள் இருக்க வேண்டும். ! இந்த உண்மைக்குச் சாட்சியாகத்தான் பகவானே பீஷ்மர் அம்புப் படுக்கையிலே இருந்தபடி சொன்ன விஷ்ணு சகஸ்ரநாமத்தைக் கேட்டான். பல பேர் கேட்டார்கள். அந்த வாசுதேவனே கேட்டான். அவன் சொன்னது கீதை; கேட்டது சகஸ்ரநாமம். இப்படி அவன் ஆனந்தமாய் கேட்டதே அதன் பெருமை, உயர்வு.
விஷ்ணு சகஸ்ரநாமம் சொல்லும்போது பகவானுடைய நாமாக்களைச் சொல்கிறோமா? அவன் குணங்களைச் சொல்கிறோமா? என்று சந்தேகமே வேண்டாம். அவனுடைய குணங்களையே தெரிவிக்கும் படியான நாமாக்கள் அவை; அத்தனையும் சுகுனங்கள். 

அந்த விஷ்ணு சர்வதா ரக்ஷகன், சர்வத்ர ரக்ஷகன். அப்படிப்பட்ட விஷ்ணுவை வஷட்காரத்தினால் ஆராதியுங்கள் என்கிறார் பீஷ்மாச்சார்யார். அவனுடைய திருநாமங்களைச் சொல்வதே வைபவம்தான். அவை அனைத்துமே குணப்ரயுக்தமான நாமாக்கள்  .  அந்த எம்பெருமானின் நல்ல குணங்கள் அனைத்தும் இந்த சகஸ்ரநாமத்திலே அடங்கியிருக்கிறது. 
சகஸ்ரநாமக்களைப் பார்த்தோமானால் அவனுடைய லீலா ரஸம் நாமாவாக இருக்கிறது. அதிலே ஒவ்வொரு அவதாரத்திலும் பண்ணிய லீலைகள் தெரிவதனாலே இந்த நாமக்களைச் சொன்னாலே பகவானுடைய அவதாரம், அவதார லீலைகள் எல்லாம் முடிந்து விடுகின்றன. அவன் பெருமையை விளக்கக்கூடியதாக  இந்த திருநாமங்கள் விளங்குகின்றன.

பகவான் கட்டி பொன் போலே..!  அவனது திருநாமமோ ஆபரணங்களைப்   போலே.!  கட்டிப். ஆகையினால்தான் அதை நாம் ஒன்று கூடி அனுபவிக்க முடிகிறது. 

துளிக்கூட மிச்சமின்றி ஆகாயம் முழுவதையும் காகிதமாக்கி, ஏழு சமுத்திர ஜலத்தையும் மையாக்கி (ink ) எழுதினாலும் சகஸ்ரநாமத்தின் பெருமையை விளக்க முடியாது. 
image1.JPG 

இணையதள வீடியோ ஸ்டிரீமிங் சேவை Netflix

அமெரிக்காவைச் சேர்ந்த நெட்ஃபிலிக்ஸ் (Netflix) நிறுவனம் தனது உலகத் தரத்திலான இணையதள வீடியோ ஸ்டிரீமிங் சேவையை இந்தியாவில் ஜனவரி 6ம் தேதி முதல் துவக்கியுள்ளது. 
இந்த சேவையை லேப்டாப், ஸ்மார்ட் டிவி, ஸ்மார்ட் போன், டேப்லெட்களில் இணையம் (internet) மூலமாக கண்டு களிக்கலாம். 
இதன் வாடிக்கையாளர்கள் தங்களுக்கு பிடித்தமான திரைப்படங்கள், பாடல்கள், சீரியல் உள்ளிட்ட தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், விளையாட்டு நிகழ்ச்சிகள், குழந்தைகள், பெண்கள், ஆண்கள், மாணவர்கள் என பல பிரிவுகளிலான நிகழ்ச்சிகள் உள்ளிட்டவற்றை தங்களுக்கு விருப்பப்பட்ட நேரத்தில் அதிக தரத்திலான ஒலி-ஒளியுடன் கண்டு மகிழலாம் என்பதே இதன் சிறப்பம்சம். 
லேப்டாப், செல்போன் மூலமாக காணும் காட்சிகளை புராஜக்டர் மூலமாக 70 எம்எம் திரையளவிலும் துல்லியமாகக் காணும் வசதி இதில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
தரத்திற்கு ஏற்ப (BASIC, HD, UHD) மாதாந்திரக் கட்டணத்தையும் ரூ.500, ரூ.650, ரூ.800 என நிர்ணயித்துள்ளது. இதன் முலம் அளவில்லா நிகழ்ச்சிகளைக் காணவும் அனுமதிக்கிறது. முதன் முதலாக சேரும் வாடிக்கையாளருக்கு முதல் மாத சேவையை இலவசமாகவும் வழங்குகிறது. 
https://www.netflix.com/in/  இணையத்தளத்தில் வாடிக்கையாளராக பதிந்து கொண்டு சேவையை உபயோகிக்கலாம்.
60 நாடுகளில் உள்ள 70 மில்லியன் வாடிக்கையாளர்களைக் கொண்ட இந்நிறுவனம்,
கடந்த மூன்றாவது காலாண்டில் மட்டுமே 1.74 பில்லியன் டாலர்கள் வருவாய் ஈட்டியுள்ளது. இந்நிலையில் இந்தியாவில் இதன் சேவை வெற்றி பெறுவது சாத்தியம்தானா? என இணைய பயனாளர்கள் கேள்வியை எழுப்புகின்றனர். 
ஏனென்றால் தரத்தில் குறைபாடு இருந்தாலும் இதுபோன்ற சேவையைதான் யூ-டியூப் நிறுவனம் வழங்கி வருகிறது. அதுமட்டுமின்றி நெட்பிலிக்ஸ் மூலம் அதில் குறிப்பிட்டுள்ள தர அடிப்படையில் சேவையை காணும் போது ஒரு மணிநேரத்திற்கு 1 முதல் 3 ஜி.பி வரையிலான டேட்டாவை இழக்க நேரிடுகிறது. 
தற்போது 1ஜிபி டேட்டா விலை செல்போன் சேவை வழங்கும் நிறுவனங்களைப் பொருத்து ரூ. 198 முதல் ரூ. 290 வரை உள்ளன. மேலும் நெட்பிலிக்ஸ் சேவைக்காக ரூ. 500 முதல் 850 வரை செலவு செய்ய வேண்டியுள்ளதால் இணைய உபயோகிப்பாளர்கள் மத்தியில் இதற்கு எந்த அளவிற்கு ஆதரவு கிடைக்கும் என்பது போகப் போகத்தான் தெரியும்.
Courtesy:dhinamani ilaignarmani 

சூரிய மின்சார பஸ்கள்

தில்லி நகரில் இப்போது கடும் குளிருடன் கை கோர்த்து மக்களைப் பதம் பார்த்துக் கொண்டிருப்பது தூசி, மாசு கலப்படமாகியிருக்கும் சுற்றுப்புற சூழ்நிலை. இத்தனைக்கும் பல ஆண்டுகளுக்கு முன்பாகவே தில்லி நகரில் ஆட்டோக்கள் எல்லாம் எரிபொருள் தேவைக்காக இயற்கை வாயுவிற்கு மாற்றப்பட்டுவிட்டன.
டீசலில் ஓடும் கார்கள், லாரிகளால் இந்த புகைமூட்டம் என்று முடிவு செய்து தில்லி நகரில் டீசலில் ஓடும் வாகனங்களை எப்படிக் கட்டுப்படுத்துவது என்று சுப்ரீம் கோர்ட் முதல் டில்லி அரசும், மத்திய அரசும் பலமாக யோசித்துக் கொண்டிருக்கும் நிலையில், சூரிய ஒளி மூலம் மின்சாரம் பெற்று ஓடும் இரண்டு பஸ்களை நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றம் சென்று வர பயன்படுத்த முடிவாகியுள்ளது. இந்த பஸ்களில் பொருத்தப்படும் பேட்டரிகளை இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிலையம் தயாரிக்கிறது. ஆகாயத்தில் ஏவப்படும் விண்கலங்களில் பொருத்தப்படும் பேட்டரிகள் இவை. ஒரு பேட்டரியின் விலை ஐந்து லட்சம். இதே பேட்டரியை வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்ய ஐம்பத்து ஐந்து லட்சம் தேவைப்படுமாம்.
தில்லியில் இதுமாதிரி 15 பஸ்கள் பொது மக்கள் பயன்படுத்துவதற்காக விடப்பட உள்ளன. அது மட்டுமல்ல... இந்தியாவில் எல்லா மாநிலங்களிலும் இந்த பேட்டரி சக்தியில் ஓடும் சூரிய மின்சார பஸ்கள் இயக்கப்படும். ஒன்றரை லட்சம் பஸ்கள் விட தீர்மானிக்கப்பட்டுள்ளது. டீசல் பயன்பாட்டைக் குறைக்கவும் இந்த ரக பஸ்கள் உதவும்.

இன்று தில்லி .. நாளை இந்தியாவின் எந்த நகரமும் மாசு, தூசிகளால் அல்லல்படும் நிலை ஏற்படும்.
அதற்கு முன் எச்சரிக்கை நடவடிக்கையாக குஜராத் மாநிலம் களத்தில் புகுந்துள்ளது. ஆறு சூரிய மின்சாரத்தால் ஓடும் பஸ்களை காந்தி நகருக்கும் அகமதாபாத் நகருக்கும் இடையில் வெள்ளோட்டம் விட்டு அவை எப்படிச் செயல்படுகின்றன என்று ஆய்வு செய்ய முடிவு செய்திருக்கிறது. இந்த பஸ்கள் மின்சாரத்தைச் ஏற்றிக் கொள்ள, இந்த இரண்டு நகரங்களில் சூரிய ஒளியில் மின்சாரத்தைத் தயாரித்து சேமித்து வைக்கும் மின்நிலையங்களையும் ஏற்படுத்தப் போகிறது. 
மாசுகளைக் குறைக்கும் இந்த நவீன ரக பஸ்களுக்கு வரி விலக்கு அனுமதிக்க வேண்டும் என்று குஜராத் போக்குவரத்து அமைச்சர் விஜய் ரூபாணி மத்திய அரசிற்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Courtesy:dhinamani  ilaignarmani