Bhoo thatha's Blogspot

Search my older Blog

Tuesday, January 26, 2016

இணையதள வீடியோ ஸ்டிரீமிங் சேவை Netflix

அமெரிக்காவைச் சேர்ந்த நெட்ஃபிலிக்ஸ் (Netflix) நிறுவனம் தனது உலகத் தரத்திலான இணையதள வீடியோ ஸ்டிரீமிங் சேவையை இந்தியாவில் ஜனவரி 6ம் தேதி முதல் துவக்கியுள்ளது. 
இந்த சேவையை லேப்டாப், ஸ்மார்ட் டிவி, ஸ்மார்ட் போன், டேப்லெட்களில் இணையம் (internet) மூலமாக கண்டு களிக்கலாம். 
இதன் வாடிக்கையாளர்கள் தங்களுக்கு பிடித்தமான திரைப்படங்கள், பாடல்கள், சீரியல் உள்ளிட்ட தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், விளையாட்டு நிகழ்ச்சிகள், குழந்தைகள், பெண்கள், ஆண்கள், மாணவர்கள் என பல பிரிவுகளிலான நிகழ்ச்சிகள் உள்ளிட்டவற்றை தங்களுக்கு விருப்பப்பட்ட நேரத்தில் அதிக தரத்திலான ஒலி-ஒளியுடன் கண்டு மகிழலாம் என்பதே இதன் சிறப்பம்சம். 
லேப்டாப், செல்போன் மூலமாக காணும் காட்சிகளை புராஜக்டர் மூலமாக 70 எம்எம் திரையளவிலும் துல்லியமாகக் காணும் வசதி இதில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
தரத்திற்கு ஏற்ப (BASIC, HD, UHD) மாதாந்திரக் கட்டணத்தையும் ரூ.500, ரூ.650, ரூ.800 என நிர்ணயித்துள்ளது. இதன் முலம் அளவில்லா நிகழ்ச்சிகளைக் காணவும் அனுமதிக்கிறது. முதன் முதலாக சேரும் வாடிக்கையாளருக்கு முதல் மாத சேவையை இலவசமாகவும் வழங்குகிறது. 
https://www.netflix.com/in/  இணையத்தளத்தில் வாடிக்கையாளராக பதிந்து கொண்டு சேவையை உபயோகிக்கலாம்.
60 நாடுகளில் உள்ள 70 மில்லியன் வாடிக்கையாளர்களைக் கொண்ட இந்நிறுவனம்,
கடந்த மூன்றாவது காலாண்டில் மட்டுமே 1.74 பில்லியன் டாலர்கள் வருவாய் ஈட்டியுள்ளது. இந்நிலையில் இந்தியாவில் இதன் சேவை வெற்றி பெறுவது சாத்தியம்தானா? என இணைய பயனாளர்கள் கேள்வியை எழுப்புகின்றனர். 
ஏனென்றால் தரத்தில் குறைபாடு இருந்தாலும் இதுபோன்ற சேவையைதான் யூ-டியூப் நிறுவனம் வழங்கி வருகிறது. அதுமட்டுமின்றி நெட்பிலிக்ஸ் மூலம் அதில் குறிப்பிட்டுள்ள தர அடிப்படையில் சேவையை காணும் போது ஒரு மணிநேரத்திற்கு 1 முதல் 3 ஜி.பி வரையிலான டேட்டாவை இழக்க நேரிடுகிறது. 
தற்போது 1ஜிபி டேட்டா விலை செல்போன் சேவை வழங்கும் நிறுவனங்களைப் பொருத்து ரூ. 198 முதல் ரூ. 290 வரை உள்ளன. மேலும் நெட்பிலிக்ஸ் சேவைக்காக ரூ. 500 முதல் 850 வரை செலவு செய்ய வேண்டியுள்ளதால் இணைய உபயோகிப்பாளர்கள் மத்தியில் இதற்கு எந்த அளவிற்கு ஆதரவு கிடைக்கும் என்பது போகப் போகத்தான் தெரியும்.
Courtesy:dhinamani ilaignarmani 

No comments: