எறும்புகள் தங்கள் புற்றில் ஒரு பூச்சி இனத்தை வளர்ப்பது உண்டு!
எறும்புகளின் 'செல்லப் பிராணி'யான அந்தப் பூச்சி இனத்தின் பெயர், 'அசுவுணி' (Aphids- - அபிட்ஸ்). அசுவுணிப் பூச்சியின் உடலில் இருந்து தேன் போன்ற ஒரு திரவம் (liquid) சுரக்கும். இதற்காகத்தான் எறும்புகள் இவற்றைப் பாதுகாக்கின்றன. 'தேன் எறும்புகள்' (Honey Ants - ஹனி ஆன்ட்ஸ்) என்ற எறும்பு வகைக்கு இந்த திரவம் முக்கியமான உணவுப் பொருள். இதற்காக எறும்புகள், அசுவுணிப் பூச்சிகளுக்கு உணவு அளித்தும், எதிரிகளிடம் இருந்து பாதுகாத்தும் உதவி செய்கின்றன. அசுவுணிப் பூச்சிகளின் முட்டைகளைக் குளிர்காலங்களில் பாதுகாப்பான இடத்திற்கு எடுத்துச் செல்கின்றன.
சில நேரங்களில், எறும்புகள் சிறிய 'ஸ்ட்ரா' போன்ற தங்கள் உணர்கொம்புகளால் அசுவுணிப் பூச்சியைத் தடவிக் கொடுத்து இந்ததிரவத்தைச் சுரக்கச் செய்கின்றன.அசுவுணிப் பூச்சிக்கு 'செடிப் பேன்' என்ற பெயரும் உண்டு. இவை மிகச் சிறியதாகவும் மென்மையாகவும் வெள்ளை, பழுப்பு, மஞ்சள், பச்சை, கருப்பு ஆகிய நிறங்களிலும் காணப்படும். அசுவுணிப் பூச்சிகளில் சில வகைகளுக்கு இறக்கை இருக்கும். சிலவற்றுக்கு இருக்காது.
அசுவுணிப் பூச்சி தன் கூர்மையான வாயால் வெண்டைக்காய், பருத்தி, உளுந்து ஆகிய செடிகளைக் கடித்துச் சாறு உறிஞ்சும். இதனால் செடிகள் பாதிப்புக்குள்ளாகும். எறும்புகள் அதிகமுள்ள இடங்களில் அசுவுணிப் பூச்சிகள் இருந்தால் ஆச்சரியப்படாதீர்கள்!
Courtesy dhinamalar ariviyal arivom
No comments:
Post a Comment