Bhoo thatha's Blogspot

Search my older Blog

Tuesday, January 26, 2016

ஆரோக்கியம் சார்ந்த அறிவியல்

கால் மேல் கால் போட்டு உட்காராதே... இது என்ன கெட்ட பழக்கம்? - இப்படி பெரியவர்கள் கூறுவதைப் பார்த்திருப்போம். பெரியவர்கள் எதிரில் அப்படி உட்கார்வது மரியாதை இல்லை என்ற நோக்கில் அப்படிச் சொன்னாலும், அதன் பின்னணியில் ஆரோக்கியம் சார்ந்த அறிவியல் இருப்பது ஆய்வில் அறியப்பட்டுள்ளது. லேப்டாப் அல்லது கம்ப்யூட்டரில் பணிபுரியும் போது சிலர் கால்மேல் கால் போட்டு அமர்ந்திருப்பதைப் பார்த்திருப்போம். இவ்வாறு உட்கார்வதால் ரத்த அழுத்தம் அதிகரிக்கிறது என்று ஓர் ஆய்வில் கூறப்பட்டுள்ளது. கால் மேல் கால் போட்டு உட்காரும் போது, சிஸ்டாலிக் ரத்த அழுத்தம் 7 சதவிகிதமும், டயஸ்டாலிக் ரத்த அழுத்தம் 2 சதவிகிதமும் அதிகரிக்கிறதாம். அது மட்டுமே அல்ல... அடிக்கடி காலை குறுக்கே போட்டு உட்கார்வதால் இடுப்பு எலும்புகளின் இணைப்பில் அழுத்தம் ஏற்பட்டு நரம்புகளை சுருக்குகிறது. Fff
இதனால் ரத்த ஓட்டம் தடைப்பட்டு கால்களின் கீழ்ப்பகுதி நரம்புகளை வீக்கம் அடையச் செய்யும். இதுவே நாளடைவில் வெரிகோஸ் வெயின் எனப்படுகிற நரம்புப் பிரச்னை வரவும் வழிவகுக்கிறது. 10 முதல் 15 நிமிடங்களுக்கு மேல் கால்களை குறுக்கே போட்டு உட்காரக்கூடாது என்று இதயநோய் நிபுணரான டாக்டர் ஸ்டீபன் சினட்ரா கூறுகிறார். முக்கியமாக... நீரிழிவுக்காரர்கள் கால் மேல் கால் போட்டு அமர்வதை அறவே தவிர்க்க வேண்டும். பெரியவர்கள் சொன்ன ஒவ்வொரு அறிவுரையுமே அர்த்தமுள்ளதாக இருப்பது நமக்கு புரிய வருவது உண்மைதானே!
Courtesy pattam dhinamalar

No comments: