Bhoo thatha's Blogspot

Search my older Blog

Thursday, November 7, 2013

ஆறாவது முறை''உலக செஸ் சாம்பியன்'

றாவது முறையாக உலக செஸ் சாம்பியன் பட்டத்தை வெல்ல, சொந்த மண்ணில் களம் இறங்குகிறார் விஸ்வநாதன் ஆனந்த். தன்னைவிட 20 வயது இளையவரான மேக்னஸ் கார்ல்ஸன் எனும் நார்வே வீரரை எதிர்கொள்கிறார். கார்ல்ஸன், தற்போது ரேக்கிங்கில் உலகின் நம்பர் ஒன் வீரர். ஆனந்த், உலக சாம்பியன் என்றாலும் ரேங்கிங்கில் ஏழாவது இடத்தில் உள்ளார். இந்த நூற்றாண்டின் மிகக் கடுமையான செஸ் போட்டியாக இருக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ள ஆனந்த் - கார்ல்ஸன் மோதும் போட்டி, சென்னையில் நவம்பர் 7 முதல் 26-ம் தேதி வரை நடைபெற இருக்கிறது.
செஸ் ஜாம்பவான் விளாடிமிர் க்ராம்னிக்கைத் தோற்கடித்து, ஆனந்தை எதிர்த்து விளையாடும் வாய்ப்பைப் பெற்றிருக்கிறார் கார்ல்ஸன். மேலும், கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற ஆனந்துக்கு எதிரான போட்டியில் கார்ல்ஸன்தான் வின்னர். கார்ல்ஸனின் பலமே யூகிக்க முடியாத கேம் பிளான்தான். 'முதலில் நிதானமாக ஆடுவது, அதன் பிறகு தடுத்தாடுவது, பிறகு அதிரடியாக ஆடுவது என எந்த ஃபார்முலாவும் இல்லாமல் கார்ல்ஸன் விளையாடுவர். அதனால் அவருடைய அடுத்த மூவ் இப்படி இருக்கும் என யாராலும் கணிக்க முடியாது’ என்கிறார்கள் செஸ் நிபுணர்கள்.
ஆனந்தும் கார்லஸனும் இதுவரை 29 முறை நேருக்குநேர் மோதியுள்ளனர். இதில் ஆறு முறை ஆனந்தும், மூன்று முறை கார்ல்ஸனும் வெல்ல, 20 போட்டிகள் டிராவில் முடிந்திருக்கின்றன.
 செஸ் விளையாட்டில் ஒவ்வொரு பிளேயருக்கும் பின் நான்கு பேர் கொண்ட குழு இருக்கும். பயிற்சியின்போது இவர்கள் பல்வேறு விதங்களில் வீரருக்கு உதவுவார்கள். 2007-08-ம் ஆண்டுகளில் நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப் போட்டிகளின்போது ஆனந்த் அணியில் இருந்தார் கார்ல்ஸன். அதனால் ஆனந்தின் ப்ளஸ், மைனஸ் களைத் தெரிந்துவைத்திருப்பார். அதேபோல்தான் ஆனந்துக்கும் கார்ல்ஸனின் பலம்-பலவீனம் தெரியும்.
ஆனந்தை உற்சாகப்படுத்த நீங்கள் தயாரா?

No comments: