Bhoo thatha's Blogspot

Search my older Blog

Friday, November 8, 2013

கமண் டோக்ளா'

இது மராத்திய ஸ்பெஷல், "கமண் டோக்ளா' செய்முறை நேரம். 
மராத்திய மாநிலத்தில் ஸ்பெஷலாக பேசப்படும் இந்த கமண் டோக்ளா புது வகையான பலகாரம். இதில் சிறிது மாற்றம் செய்யப்பட்டு தேவையானவையும் செய்முறையும் தரப்படுகிறது.
தேவையான பொருட்கள்: கடலை மாவு- 250 கிராம், அரிசி மாவு-25 கிராம், குறுமிளகு-10 கிராம் ( ஒன்றிரண்டாக பொடித்தது), பொடி உப்பு - தேவையான அளவு, புதிய பச்சை கொத்தமல்லி - அரைக் கட்டு, தேங்காய்ப்பூ - 1 கிண்ணம், சமையல் சோடா- 1/2 சிட்டிகை, ரீபைண்டு எண்ணெய் - 75 மி., கிராம், தயிர் அல்லது மோர் - 2 கிண்ணம்.
செய்முறை: கடலை மாவு, அரிசி மாவு ஆகியவைகளை தனித் தனியே சலித்து எடுத்துகொள்ளவும். புதிய பச்சை கொத்தமல்லியை நன்கு அலம்பி பொடி பொடியாக அரிந்துகொள்ளவும். கடலை மாவு, அரிசி மாவு, ஒன்றிரண்டாக பொடித்த குறுமிளகு, தேவையான பொடி உப்பு ஆகியவைகளை தயிர் அல்லது மோரில் போட்டு நன்கு தோசை மாவு போல கெட்டியாக கரைத்து சிறிது சமையல் சோடா சேர்த்து ஒரு மணி நேரம் ஊற வைக்கவும்.
பொங்கிய பிறகு இதனை அகலமான தட்டில், அரை தட்டு அளவில் சமமாக பரப்பி ஆவியில் வேக வைக்கவும். சுமார் 20 நிமிடங்களில் வெந்து விடும். பின்னர் வெளியே எடுத்து ஆற விடவும். ஆறிய இந்த கலவையை செவ்வக அல்லது சதுர வடிவில் சிறிய துண்டுகளாக்கி கொள்ளவும்.
அடிக்கனமான வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்த பிறகு கடுகை வெடிக்கவிட்டு, துண்டுகளாக நறுக்கி வைத்திருக்கும் டோக்ளாவை உடையாமல் அதில் போட்டு, கவனமாக மென்மையாக 2-3 நிமிடங்கள் கிளறவும் .
பிறகு வெளியே எடுத்து மெலமைன் தட்டில் வைத்து தேங்காய்ப் பூ மற்றும் பச்சை கொத்தமல்லி ஆகியவைகளை அதன் மீது பரவலாக தூவி பரிமாறினால் சுவையோ சுவை!
இதனுடன் டொமட்டோ கெட்ச் அப் தொட்டும் சாப்பிடலா

courtesy;''siruvar  malar''

No comments: