Bhoo thatha's Blogspot

Search my older Blog

Friday, November 8, 2013

வாயேஜர் விண்கலம்

வாழ்வின் ஒவ்வொரு நிமிடத்தையும் மகிழ்ந்து கொண்டாடுவோம்!

போ... வாயேஜர் இன்னும் போ!
தனது 36 ஆண்டுகால நீண்ட பயணத்தில் வாயேஜர் விண்கலம் நமது சூரிய மண்டலத்தை கடந்து பால்வெளிக்குள் நுழைந் துள்ளது. 2012 ஆகஸ்ட் 25ம் தேதி, சூரியனில் இருந்து 1900 கோடி கி.மீ., தொலைவை கடந்தது வாயேஜர் விண்கலம்.
அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசா, 1977ம் ஆண்டு வாயேஜர் விண்கலத்தை ஏவியது. இதனுடன் வாயேஜர்-2 விண்கலமும் ஏவப்பட்டது. இதில், வாயேஜர்-1 சூரிய மண்டலத்தை வெற்றி கரமாக கடந்துள்ளது. மனிதனால் ஏவப்பட்ட ஒரு விண்கலம் முதன் முறையாக சூரியக் குடும்பத்தை தாண்டுவது இதுவே முதன்முறை.
பேரண்டத்தில் நமது சூரியக்குடும்பத்துக்கு அப்பால் நட்சத்திரங்களும், எரிகற்களும், கோள்களும் அற்ற சூன்யமான அண்டவெளி அல்லது வெறுமையான அண்டவெளி இருக்கிறது.
சூன்யம் என்ற போதும், முழுக்க வெறுமையான பகுதி என கொள்ளாமல் கனமாக வெற்றிடம் என கூறலாம்.
இந்த கனமான வெற்றிடத்துக்குள் வாயேஜர்-1 நுழைந்துள்ளது. வாயேஜர்-1 வியாழனின் சுற்றுப்பாதையை 1979-லும், சனி கிரகத்தின் சுற்றுப்பாதையை 1980ம் ஆண்டிலும் கடந்தது.
அப்போது, இரு கிரகங்களையும் அவற்றின் துணைக்கோள்களான சந்திரன்களையும் தெளிவாக படம் பிடித்து புவிக்கு அனுப்பியது.
1990ம் ஆண்டு புவியில் இருந்து 960 கோடி கி.மீ., தூரத்தை கடந்த பின், முழு சூரிய மண்டலத்தையும் படம் பிடித்தது. சூரிய மண்டலத்தின் துல்லியமான எல்லை எது என்று குறிப்பிட இயலாத நிலையில், வாயேஜரில் ஏற்பட்ட சிறு மாறுதல்கள் மூலம் விஞ்ஞானிகள் அதனை கண்டுபிடித்தனர்.
சூரிய மண்டலத்தை கடக்கும்போது விண்கலத்தின் மேல்பகுதியிலுள்ள பிளாஸ்மா வின் அடர்த்தி அதிகரித்தல், வெப்பநிலையில் மாறுதல், காந்தப்புல கோணத்தில் மாறுதல் போன்ற அறிகுறிகள் ஏற்படும் என கணிக்கப்பட்டது.
2012ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இந்த அறிகுறிகள் ஏற்பட்டுள்ளன என்பது கடந்த செப்டம்பர் 12ம் தேதி வெளியான அறிவியல் சஞ்சிகை இதழின் ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன் மூலம், வாயேஜர்-1 சூரிய மண்டலத்தை கடந்து, வெறுமையான அண்ட வெளிக்குள் பயணித்தது உறுதி செய்யப் பட்டுள்ளது. கடந்த 2012 மார்ச் மாதம், சூரிய வெடிப்பு ஏற்பட்டு வெப்ப உமிழ்வு நிகழ்ந்தபோது, வாயேஜரை சுற்றியிருந்த பிளாஸ்மாவில் அதன் தாக்கம் தெரிந்தது.
"இந்த தாக்குதல்களை கண்டபோது, உண்மை யிலேயே நாங்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்தோம்' என இந்த ஆய்வில் ஈடுபட்டுள்ள அயோவா பல்கலைக்கழக விஞ்ஞானி டான் குர்னெட் தெரிவித்தார்.
இந்த வாயேஜர் விண்கலத்தில் இருந்து, வரும் 2020ம் ஆண்டு வரை சமிக்ஞைகள் கிடைக்கும் என நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
விண்வெளி ஆராய்ச்சி துறையில், முதன் முறையாக ஸ்புட்னிக், 600 மைல் தொலை வுள்ள புவியின் வளிமண்டலத்தை தாண்டிய சாதனையுடன் இது ஒப்பிடப்படுகிறது.
சூரிய மண்டல குமிழியை 1100.3 கோடி மைல் தொலைவை தாண்டி வாயேஜர் பயணித்து கொண்டிருக்கிறது.
இதுவும் வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வுதான்

siruvar malar

No comments: