Bhoo thatha's Blogspot

Search my older Blog

Sunday, August 30, 2015

Hanumaan


1
உலக உயிரினங்களில் மேலான சக்தி படைத்த ஒரே உயிரினம் மனித இனம் மட்டுமே! அதனால்தான் அளவில் பெரிய யானையைக்கூட மனிதனால் ஆட்டிவைக்க முடிகிறது. சீறிப் பாய்ந்துவரும் ஆற்றின் குறுக்கே அணை கட்டி, பஞ்சபூதங்களில் ஒரு பூதமான நீரையே அடக்கி ஆளவும் முடிகிறது.
மனிதனின் வல்லமையை இதுபோல் பட்டியல் போடத் தொடங்கினால் அது நீண்டபடியே இருக்கும். என்னதான் மனிதன் பெரும் வல்லாளனாக இந்தப் பூவுலகில் திகழ்ந்தபோதிலும் அவனால் மரணத்தை வெல்லமுடியவில்லை. அதேபோல் நரை, திரை, மூப்பிடமும் அவனால் எதுவும் செய்ய முடிவதில்லை.
அதுமட்டுமா?
அவனால் பல விருப்பங்களைத் தெரிவிக்க முடிகிறது- ஆனால் அனைத்தையும் ஈடேற்றிக்கொள்ள முடிவதில்லை. ஒன்று கிடைத்தால் ஒன்று இல்லை என்றாகிறது. கூர்ந்து கவனித்தால் அவன் வாழ்வு முழுக்க இன்பம் மட்டுமே வாழ்வாக இருந்ததில்லை. துன்பமும் கூடவே வந்து, "இரண்டும் கலந்ததே வாழ்க்கை' என்கிறது.
மொத்தத்தில் கூட்டிக்கழித்து வகுத்துப் பெருக்கினால், எதுவும் நிலையில்லை என்பது முதல் எதையும் எவரும் எடுத்துச்செல்ல முடியாது என்பது வரைதான், மேலான ஒப்பற்ற உயிரினத்தின் வாழ்க்கைப்பாடு அமைந்துள்ளது.
இதனால் ஏன் இப்படி? எதனால் இப்படி என்கிற கேள்விகள் முளைவிட, அவனும் தன் ஆறாவது அறிவாலே, தான் வாழ்வதற்காக வழிவகை செய்துகொள்வதற்கு நடுவில் ஒரு ஞானவேள்வியும் செய்ததில் பல சத்தியங்கள் புலனாகின்றன. அந்த சத்தியங்களின் ஒட்டுமொத்தமாக- தன்னைப் படைத்தது முதல் உலகைப் படைத்து அதில் பல்லாயிரம் உயிரினங்களை- தாவரங்களைப் படைத்து, பஞ்ச பூதங்களைப் படைத்தது வரை மேலான ஒரு சக்தி இருந்தாக வேண்டும் என்கிற பேருண்மையை நெருங்குகிறான்.
அந்த சக்திக்கு அவன் சூட்டிய பெயர்தான் கடவுள்! இந்தக் கடவுளை அவன் தன் புலனடக்கத்தால் தரிசனம் செய்து, புவனம் கடந்த பல பேருண்மைகளையும் அறிந்து, அதை அவன் உலகிற்குச் சொல்லும்போது அது ஆன்மிகப் பாடமாக, வேதங்களாக விளங்குகிறது.
இந்த ஆன்மிகமும் வேதமும் மானிடனை மகத்தானவனாக்கி- பிறப்பற்றவனாக்கி நித்திய இன்பத்தில் நிலைக்க வைக்கிறது. ஆனாலும் இந்த மகத்தான நிலையைஅடைவது எளிதல்ல!
கோடியில் ஒருவருக்கே அது வாய்க்கிறது.
அப்படி வாய்க்கப்பெற்ற ஒரு அற்புதமே அனுமன்! இத்தனைக்கும் அனுமன் மனிதாம்சத்தோடு விலங்கின் தன்மையும் கொண்ட ஒரு விசித்திரன்!
இந்த விசித்திரன் மானுட பக்திக்கு எளிதாக அகப்படும் ஒரு ஆச்சரியனும் கூட! இவனுடைய வரலாற்றை இதுகாறும் வாசித்ததில் இந்தப் பேருண்மையை நாம் உணர்ந்திருப்போம்.
வானர இனத்தில் பிறந்து, மானுட குணத்தில் வளர்ந்து, தேவதன்மையை அடைந்து, மனித இனத்துக்கு பெரும் உதாரணபுருஷனாக விளங்குகின்றவன் மாருதி என்கிற இந்தஅனுமன்!
எது சக்தி என்பதற்கு உதாரணம் இவன்.
எது பக்தி என்பதற்கும் உதாரணம் இவனே!
பெரும் சகாயன், இணையில்லாத நண்பன், உத்தமகுரு என்று எல்லா நிலைப்பாடும் இவனுக்குப் பொருந்தும்.
நால்வகை யுகங்களில் ஒவ்வொரு யுகத்துக்கும் ஒரு தன்மை உண்டு. இப்போது நடக்கும் கலியுகத்துக்கு வினோதமான பல தன்மைகள் உண்டு. அதில் ஒன்று தர்மம் நசிவதும் அதர்மம் வளர்வதுமாகும். அதுமட்டுமல்ல; கலியுகத்தில் எதுவானாலும் கண்ணுக்கு முன்னே! விதைப்பது எதுவோ அதையே அறுப்பவராகவும் இருப்போம்.
இந்த யுகத்தில் மானிடப் பிறப்பெடுத்து, பிறப்பை அழகாக முடித்துக் கொள்வதுஅவ்வளவு சுலபமான விஷயமல்ல. இந்த உலகை தற்போது பெரும் மாயை சூழ்ந்துள்ளது. அது நல்லதைக் கெட்டதாகவும், கெட்டதை நல்லதாகவும் காட்டவல்லது. தர்மத்துக்கு பெரும் சோதனைகள் சர்வசாதாரணமாக ஏற்படும். இறுதியில் தர்மமே வெல்லும். ஆனபோதிலும் இறுதிவரை பொறுமையாக இருக்கமுடியாதபடி வினைகள் ஆட்டிவைக்கப் பார்க்கும். பெரும் மனோதிடம் இருந்தாலன்றி மானிடப் பிறப்பை நல்லவிதமாக ஆக்க இயலாது.
இப்படி ஒரு காலகட்டம் வரும்; அப்போது மனித இனம் அல்லல்படும்போது அதை மீட்டெடுக்க நாம் ஏதாவது செய்தாகவேண்டும் என்று, வானரப் பிறப்பெடுத்து ராமபக்தனாகத் திகழ்ந்த அந்த நாளிலேயே அனுமன் முடிவு செய்துவிட்டான். அதனாலேயே "உனக்கு என்ன வேண்டும்?' என்று ராமன் கேட்டபோது இறவா வரத்தையோ- இல்லை பிறவா வரத்தையோ- அதுவுமில்லை மோட்ச கதியையோ அனுமன் கேட்கவில்லை.
"ப்ரபோ! உன் பக்தனாக உன் நாமத்தைச் சொல்லிக்கொண்டு யுகம் கடந்தும் நான் சஞ்சரிக்கும் வல்லமை ஒன்றே போதும்' என்று கேட்டான்.
அதாவது "ராமராம' என்று நாமம் சொல்லிக்கொண்டு பெரும் பக்தனாக எந்த நாளும் திகழும் ஒரு வரத்தைக் கேட்டவன் அனுமன்.
நாம் நம்முன் கடவுள் தோன்றினால் இப்படியா கேட்போம். எவ்வளவோ பேர்முன் கடவுள் தோன்றத்தான் செய்திருக்கிறார்.
எவருமே அனுமன்போல் ஒரு வரத்தைக் கேட்டதே இல்லையே...?
என்றால் அனுமன் எத்தனை பெரியவன்?
எவ்வளவு கருணை மிக்கவன்?
நம் அறிவால் ஓரளவுக்குத்தான் அனுமன் குணத்தை வியக்க இயலும். அவன் அளவுகள் கடந்தவன். அப்படிப் பெற்ற வரம் காரணமாக, இன்றும் அவன் தன்னை வேண்டுவோர்க்கு வழிகாட்டி பெரும் துணையாகவும் இருக்கிறான்.
பரந்த இந்த உலகில் அவனுக்கு மிகப் பிடித்தமான இடம் இமயமலைச் சாரல்! அங்கேஅவனது ராமநாம வேள்வி இன்றும் தொடர்ந்தபடியே உள்ளது. அதேசமயம் அவனது ஸ்தூலம் கடந்த ஒளியுடல் ஒன்றுக்குப் பலவாகி, பக்தர்கள் அழைக்கும் இடங்களுக்கெல்லாம் சென்று அவர்களுக்கு கை கொடுத்து உதவியபடி இருக்கிறது.
பாரத தேசம் மட்டுமில்லாமல் உலகம் முழுக்க அவனுக்கான ஆலயங்கள் எழுப்பப்பட் டுள்ளன. இதில் மிக அதிகமான ஆலயங்கள் இருப்பது நம் பாரத தேசத்தில் கர்நாடகம், பின் மகாராஷ்டிரம், அதன்பின் ஆந்திரம், இறுதியாகத்தான் தமிழகம்!
இவனது ரூபமே இவனது குணத்தைச் சொல்லிவிடும். தலைக்குமேல் வால் வளைந்து நிற்க, அதில் மணி இருந்தால், இவன் கேட்ட வரத்தை நம்மை பரிகாரம் செய்யவைத்து வழங்குபவன்.
கையில் சஞ்ஜீவி பர்வதத்துடன் இவன் இருந்தால், கடமை உணர்வோடு இருப்பவன். இவனது இந்த தோற்ற தரிசனம் நோயை நீக்கும்.
கைகூப்பி வணங்கியபடி இவன் இருந்தால், இவன் காதில் நாம் சொல்வது எல்லாமும் ஈடேறும். இவன் அதை மேலே சொல்லி நிறைவேற்றித் தருபவன்.
நிஷ்டையில் இருந்தால் மனஅமைதி தருபவன்.
தாவக் காத்திருந்தால் நண்பனாக- குருவாக- துணைவரத் தயாராக இருப்பதாகப் பொருள்.
இப்படி இவன் ரூபத்துக்குப் பின்னாலேயே பல பொருளுண்டு. இப்படி எல்லாவித ரூபங்களோடு விஸ்வரூபியாகவும் இவன் பல இடங்களில காட்சி தருகிறான்.  அந்த தரிசனம் நம் மனதின் பயத்தைப் போக்கி, உலகில் உண்மையில் எது பெரிதோ அதை நமக்கு உணர்த்தும். விஸ்வரூப தரிசனம் செய்யச் செய்ய மலிவானவை மனதைவிட்டுத் தானாக வெளியேறிவிடும்.
இவனுக்கு பழங்கள் என்றால் மிகப் பிரியம். அதேபோல் வடை, வெண்ணெயும் மிகப் பிடிக்கும். உண்ண எவ்வளவோ பதார்த்தங்கள் இருக்க, இம்மூன்றை இவனுக்கு பெரிதாக நிவேதனம் செய்வதன் பின்னணியில் ஆழ்ந்த பொருள் உள்ளது.
தென்னிந்தியாவில்தான் வடைமாலை பிரசித்தி... வடஇந்தியாவில் இனிப்பாலான ஜாங்கிரியைதான் பெரிதும் பிரசாதமாகப் படைப்பார்கள். எல்லாவற்றிலுமே நுட்பமான பல உள்விஷயங்கள் ஒளிந்துள்ளன.
முதலில் பழத்தைப் பார்ப்போம்.
உணவுப் பொருட்களிலேயே உன்னதமானது
பழம் என்பதற்கு ஒரே காரணம்தான். பூ பிஞ்சாகி, பிஞ்சு காயாகி, காய்தான் கனியாகிறது.
நால்வகை நிலைப்பாடு... இந்தக் கனியாதல் என்பதன் பின்னே பழுத்தல் என்பது உள்ளது. அதாவது காலத்தால் பழுத்தல். பழுத்தபின் பழம் மரத்தில் தங்காது. உதிர்ந்து விழுந்துவிடும். அப்படி உதிரும்போது பால்வடியாது.
அதாவது மரத்தைப் பிரியும் துக்கத்தை மரமோ அல்லது பழமோ காட்டாது.
அது ஒரு சந்தோஷப் பிரிவு!
இந்தக் கனிந்த நிலையை சமைந்த நிலை எனலாம். அதாவது அடுப்பு, பாத்திரம், நெருப்புஎன்று முயன்று நாம் சமைக்கத் தேவையின்றி இயற்கையே சமைக்கும்போது அதைப் பழுத்தல் என்கிறோம். அப்படி பழுக்கின்ற பழங்களும் உடம்புக்கு மிக உகந்தவையாக- எல்லா சக்தியும் உடையதாக- சத்வ குணத்தை அளிப்பதாக இருப்பதால், முனிவர்களின் முக்கிய உணவாக பழமே விளங்கியது. எனவேதான் இறை பிரசாதமாகவும் இது முதலிடம் பெறுகிறது. அனுமனோ விலங்கினத்துக்கும் பிரதிநிதி. அதிலும் பழங்களையே பிரதான உணவாகக் கொண்ட குரங்கு இனத்தவன். எனவே பழம் பெரும் பிரசாதம் இவனுக்கு.
அடுத்து வடை! வடையின் பிரதான தானியம் உளுந்து. உளுந்து கோள்களில் ராகுவை உடையது. ராகு- கேது எனும் இரு உபகிரகங்களும் அசுர வழி வந்து, அமுதம் திருடப்போய் தலையை இழந்து பாம்பின் தலையைப் பெற்றதெல்லாம் புராண வரலாறாகும்.
இந்த இரு கோள்களும் மானிட வாழ்வை தங்கள் தசைகளில்- புக்திகளில்- அந்தரங்களில் ஆட்டி வைப்பவர்கள். இவர்களை நாம் இணக்கமாக அடைய, இவர்களின் அம்சம் சார்ந்ததை அனுமனுக்குப் படையலிடும்போது, அவன் தன் மேலான சக்தியால் இவர்களின் பாதிப்புகளைத் தான் ஏற்று நம்மை ரட்சிக்கிறான்.
இந்த உளுந்தைப் பயன்படுத்தியே ஜாங்கிரி செய்யப்படுகிறது. எனவே உளுந்துதான் இதில் பிரதானம்.
அடுத்து வெண்ணெய்.
வெண்ணெய் கண்ணனுக்கும் பிரியமான உணவு.
விஞ்ஞானம் இதை கொழுப்பாகப் பார்க்கிறது.
மெய்ஞ்ஞானமோ இதை பெரும் தத்துவப் புதையலாகப் பார்க்கிறது.
பசுவின் பால் காய்ச்சப்பட்டு, பின் தயிராக்கப் பட்டு, அந்த தயிரும் கடையப்பட்டு அதனுள் இருந்தே மோரை விலக்கி வெண்ணெய் பிரிந்து வருகிறது. மோரோடும் தயிரோடும் இருந்தவரை ஒட்டி இருந்தது- பிரியவும் நீர்மேல் மிதக்கிறது. உருக்கினால் மணம் மிக்க நெய்யாகி வேள்விக்குப் பயன்பட்டு புனிதத் தீயாகி வானேகி மறைகிறது.
மனித வாழ்வும் இன்ப துன்பங்களால் கடையப்படுகிறது. அதன் காரணமாக  விளைந்த ஞானம் உலக பந்தத்தை நிலையற்றதாகக் கருதி, உலகோடு இருந்தாலும் அதோடு ஒட்டி விடாதபடி தனித்து நிற்க வழிசெய்கிறது. பின் பக்தியின் உருக்கத்தில் நெய் போலாகி, பின் தீயாகி விண்ணேகுகிறோம்.
வெண்ணெய்க்குப் பின்னால் இப்படி ஒரு நுட்பச் செறிவு இருப்பதால்தான் பிரசாதத் தில் வெண்ணெய்க்கு பிரதான இடம். பற்றற்ற வெண்ணெய் அனுமன் நெஞ்சை அடையும்போது, அவனது இதயத்தில் எப்போதும் ஒலித்துக்கொண்டிருக்கும் ராமநாம அதிர்வுகளுடன் கலந்து பெரும் பிரசாதமாகிவிடுகிறது. எனவேதான் அனுமனுக்கு வெண்ணெய்க் காப்பும் இடப்படுகிறது.
இதுபோக வெற்றிலை மாலையும்
அனுமனுக்கு மிக விசேஷமானது. அதேபோல செந்தூரமும் மிகப் பிரியம். பல இடங்களில் செந்தூர ஆஞ்சநேயனைக் காணலாம். செந்தூரம் அவனுக்கு ஏன் பிடிக்கும் என்பதன் பின்னே ரசமான சம்பவம் ஒன்றுண்டு. இந்தச் சம்பவத்துக்கும் சீதாபிராட்டிக்கும்கூட தொடர்புண்டு. அந்த சம்பவத் தொடர்புக்குரிய விஷயங்களை மட்டுமல்ல; இந்த யுகத்தில் அனுமன் பல ஞானியர்க்கு தரிசனமளித்து, அவர்களுக்கு ராம தரிசனம் கிடைக்கவும் வழிகாட்டியுள்ளான்.
இந்து சாம்ராஜ்ஜியம் கண்ட வீரசிவாஜி, அவரது குருவான ராமதாசரால் அனுமனின் திவ்ய தரிசனத்தைக் கண்டவராவர்.
அதேபோல கபீர்தாசர் தொடங்கி, சமர்த்த ராமதாசர், பத்ராசல ராமதாசர் என்று அனுமனை  நேரில் தரிசித்தவர்கள் பலப்பலர். அதுமட்டுமா... பெரும் மகானான ராகவேந்திரரும் அனுமனின் பேரருளால் இன்புற்றுத் திளைத்தவர். அனுமன் உபாசனா மூர்த்தி. அவன் எப்படி "ராம ராம' என்று ஜெபித்தபடி பெரும் உபாசகனாக இருக்கிறானோ அதேபோல அவனை உபாசிப்பவர்களுக்கு அவன் இஷ்ட தெய்வமாகி, அவர்களுக்கும் ராம தரிசனம் கிடைக்கச் செய்து பிறவித்தளையை விடுவிக்கிறான்.
பெரும் ஞானிகளுக்கு மட்டுமா அவன் வழிகாட்டி? பிஞ்சுப் பிள்ளைகளுக்கும்தான். இவனது மந்திரங்களில் "சாலீசா' மிக பவித்ரமானது. அனுமன் சாலீசா சொல்லும் குழந்தைகளுக்கு ஞாபக சக்தி பெருகி எதிலும் வெல்லும் ஆற்றல் ஏற்படும். அனுமனின் பல உபாசனா மந்திரங்கள் அவனை கட்டி இழுத்து வீட்டுக்கே அழைத்து வந்துவிடும். அப்படி அவன் எதிர்வந்து, "அழைத்தீர்களா?' என்று கதையும் கையுமாக நின்று கேட்கும்போது மேனி சிலிர்த்துப் போகும்! அதெல்லாம்தான் அனுமன் மகிமை. வரும் பதிவுகளில் அந்த மகிமைகளை வரிசையாக அறிவோம்!
Courtesy:bala hanumaan

Saturday, August 29, 2015

தூது சென்ற தூதுவளை

ஆளவந்தார் வாழி திருமாமத்தில் ”பச்சை இட்ட ராமர் பதம் பகருமவன் வாழியே” என்ற ஒரு வரி வருகிறது. அதற்கு என்ன அர்த்தம் என்று பார்க்கும் முன் அவர் சரித்திரத்தின் ஒரு பகுதியை சுருக்கமாக பார்க்கலாம்:

ஆளவந்தார், காட்டுமன்னார் கோயில்
ஆளவந்தார் கிபி 976 ஆம் ஆண்டு ஆடி மாதம் உத்தராடம் கூடிய வெள்ளிக்கிழமையில் வீரநாராயணபுரத்தில் அவதரித்தார். நாதமுனிகளின் பேரன். ( நாதமுனிகளின் குமாரர் ஈஸ்வர முனியின் பிள்ளை )

நாதமுனிகள் வடநாட்டில் பெருமாளுக்கு கைங்கரியம் செய்து வந்த பெருமாளின் பெயரான ‘யமுனைத் துறைவன்” என்ற பெயரை அவருக்கு மணக்கால் நம்பி சூட்டினார். 

( உய்யக்கொண்டார் (திருவெள்ளறையில் பிறந்தவர்) நாதமுனிகளின் சீடராக இருந்தவர். நாதமுனிகள், தன் மகன் ஈசுவரமுனிக்குப் பிறக்கும் குழந்தைக்கு யமுனைத்துறைவன் எனப் பெயர் சூட்டி அருளுரை புகட்டுமாறு உய்யக்கொண்டாரை வேண்டிக்கொண்டார். உய்யக்கொண்டார் தன் இறுதிக்காலத்தில் தனது சீடரான மணக்கால் நம்பியிடம் அப்பணியை ஒப்படைத்தார் ( நம்பி லால்குடி பக்கம் இருக்கும் மணக்கால் என்ற ஊரில் பிறந்தவர்) ) 

மணக்கால் நம்பி
சிறுவயதில் சந்தை சொல்ல (பலருடன் பிரபந்தம் செவிக்க(சொல்ல) பயிற்றுவிப்பது தான் சந்தை) யமுனைத்துறைவனை அனுப்பிய போது, முதல் நாள் சென்று சேவித்துவிட்டு மறுநாள் போன போது முதல் நாள் சொன்னதையே மீண்டும் சந்தையில் சொல்லுகிறார்கள் என்று வீடு திரும்பியவர் அவர்! 

தந்தை ஆசார்யரின் திருவடி அடைந்த பின், மஹாபாஷ்யபட்டர் என்பவரிடன் இவர் சாஸ்திரப் பாடம் கற்றுக்கொண்டு வந்த காலத்தில், சோழ மன்னனின் ஆஸ்தான வித்வானாக இருந்த ஆக்கியாழ்வான் என்னும் பண்டிதன் அந்நாட்டில் உள்ள வித்வான்களை வென்று அவர்களிடம் கப்பம் வாங்கி வந்தான். 

ஒரு நாள் யமுனைத் துறைவருடைய ஆசிரியரான மாஹாபாஷ்யபட்டருக்கு கப்பம் கேட்டு ஓலை அனுப்ப, பட்டர் திகைத்து நின்றார். அந்த சமயத்தில் யமுனைத்துறைவர் அந்த ஓலையை கிழித்து எறிந்தார். 

இதை கேள்விப்பட்ட அரசன் யமுனைத்துறைவரை அரண்மனைக்கு வருமாறு ஓலை அனுப்ப அந்த ஓலையும் கிழித்துவிட, அரசன் ’இவர் சாமான்யரல்லர்’ என்று அறிந்து இவர் வருவதற்கு பல்லக்கை அனுப்பி உரிய மரியாதைகளுடன் அரசபைக்கு வரவழைத்தான். 

உய்யக்கொண்டார் 
அரச சபையில் பல பண்டிதர்கள் முன்னிலையில் ஆக்கியாழ்வானுக்கும் யமுனைத்துறைவருக்கும் வாதப் போர் தொடங்கியது. வாதத்தின் ஆரம்பத்தில் ஆக்கியாழ்வான் யமுனைத் துறைவரை “இவர் சிறுபிள்ளைதானே” என்று நினைத்து சாஸ்திர விவாதம் இல்லாமல் உலகியல் விஷயங்களிலேயே தோற்கடித்துவிடலாம் என்று எண்ணி ”நீர் உண்டு என்பதை நான் இல்லை என்று மறுத்து பேசுவேன்”. போட்டியில் வென்றவர் தோற்றவர் தலையில் அடிக்க வேண்டும்” என்றார். 

இதை கவனித்துக்கொண்டு இருந்த அரசனும் அரசியும் தங்களுக்குள் சபதம் செய்துக்கொண்டார்கள். மன்னன் யமுனைத்துறைவர் தோற்றுவிடுவார், அப்படி அவர் ஜெயித்தால் தன் ராஜ்ஜியத்தில் பாதியை அவருக்கு தந்துவிடுவதாக சொன்னார். அரசியோ ”யமுனைத்துறைவர் வென்றுவிடுவார், அப்படி தோற்றால் நான் அரசி பதவியைத் துறந்து உமக்கு பணிப்பெண்ணாவேன்” என்றாள். 

போட்டி ஆரம்பித்தது, யமுனைத்துறைவர் மூன்று வாக்கியங்களை கூறினார் 
1. உன் தாய் மலடியல்ல 
2. மன்னன் சார்வபௌமன் ( சக்கரவர்த்தி ) 
3. அரசி கற்புக்கரசி

ஆக்கியாழ்வான் இதை மறுத்து பேச முடியாமல் மௌனமாக இருக்க தோல்வியை ஒப்புக்கொண்டார். யமுனைத்துறைவர் ஆக்கியாழ்வான் மூத்தவராக இருப்பதால் தலையில் அடிக்க மறுத்துவிட்டார். 

“நீர் சொன்ன மூன்று வாக்கியங்களையும் உம்மால் மறுத்து பேச முடியுமா?” என்று ஆக்கியாழ்வான் கேட்க 

யமுனைத் துறைவர் பின்வருமாறு விளக்கம் அளித்தார். 

1. ’தாய் மலடியல்ல’ என்பதற்கு “ஒற்றை மரம் தோப்பு ஆகாது” என்பது போல, ஒரே ஒரு பிள்ளையைப் பெற்றவளை பல பிள்ளைகளைப் பெற்றவளுடன் ஒப்பு நோக்க முடியாது. ஆகையால் ஒரே ஒரு பிள்ளை பெற்ற தாயும் மலடியே. 

2. ’மன்னன் ஸார்வபௌமன்’ என்பதற்கு “ஸார்வபௌமன் என்றால் பூமிப் பரப்பை எல்லாம் ஆள்பவன் என்று பொருள். ஒரு சிறிதளவு பூமியை (ராஜ்ஜியத்தை) ஆள்பவன் எப்படி ஸார்வபௌமன் ஆவான் ? 

3. ’அரசி கற்புக்கரசி’ என்பதற்கு “பெண் தன் கணவனை அடையும் முன்னரே சாஸ்திரப்படி திருமணம் ஆகும் முன் தேவர்களுக்கு வாழ்க்கைப்படுகிறாள். அதனால் அதையும் மறுக்க முடியும் 

என்று கூற யமுனைத்துறைவர் பதிலை கேட்ட அரசன் பாதி ராஜ்ஜியத்தை யமுனைத்துறைவருக்கு வழங்கினான். ராணி மகிழ்ச்சி அடைந்து “என்னை ஆள வந்தீரோ” என்று எடுத்து அணைத்துக் கொண்டார். அன்று முதல் யமுனைத்துறைவருக்கு “ஆளவந்தார்” என்ற திருநாமம் உண்டாயிற்று. 

ஆளவந்தார் தனக்கு தரப்பட்ட ராஜ்ஜியத்தை நிர்வகித்து வந்த காலத்தில், இந்த விஷயங்களை எல்லாம் கேட்டறிந்த மணக்கால் நம்பி மகிழ்ச்சி அடைந்து தன் ஆசார்யரின் கட்டளையை நிறைவேற்றத் தக்க சமயம் என்று எண்ணி ஆளவந்தாரைக் காண வந்தார், ஆனால் அவரால் அரண்மனைக் காவலை தாண்டி உள்ளே செல்ல முடியவில்லை. அரண்மனை சமையலறையில் பணிபுரிபவர்களின் வாயிலாக, ஆளவந்தார் தூதுவளைக் கீரையை விரும்பி உண்பார் என்ற விஷயத்தை விசாரித்து தெரிந்துக்கொண்டு, தினமும் தூதுவளைக் கீரையை கொண்டு வந்து கொடுக்க ஆரம்பித்தார். ஆறு மாதம் கடந்த பிறகும் ஆளவந்தார் இவரைப் பற்றி விசாரிக்காமல் போக, திடீர் என்று நான்கு நாட்கள் கீரை கொடுப்பதை மணக்கால் நம்பி நிறுத்தி விட்டார். ஆளவந்தார் ஏன் “நான்கு நாட்களாக ஏன் தூதுவளை கீரை இல்லை?” என்று சமையல் பணியாட்களை விசாரிக்க “ஒரு வயதான பிராமணர் ஆறு மாதங்களாக கொண்டு வந்து கொடுத்துக்கொண்டு இருந்தார், நான்கு நாட்களாக அவர் வரவில்லை” என்று கூறினார்கள். ’அவர் மறுபடி வந்தால் எனக்குத் தெரிவியுங்கள்’ என்று ஆளவந்தார் பணித்தார். 

மறுநாள் நம்பி கீரையை கொண்டு போய் கொடுக்க சமையற்காரர் ஆளவந்தாரிடம் அவரை அழைத்துக்கொண்டு சென்றார். 

ஆளவந்தார் நம்பியை பார்த்து உங்களுக்கு என்ன நிதி வேண்டும் ? என்று கேட்க நம்பி எனக்கு ஒன்றும் வேண்டாம் உங்கள் பாட்டனார் தேடிவைத்த நிதி ஒன்று என்னிடம் இருக்கிறது அதை உம்மிடம் அளிப்பதற்கு இங்கே வந்துவிட்டு போவதை தடை செய்யாமல் இருக்க வேண்டும் என்று வேண்டிக்கொண்டார். 

தினமும் நம்பி அரண்மனைக்கு வந்து கீதையின் உட்பொருளை அவருக்கு உபதேசம் செய்ய ஆரம்பித்தவுடன், படிப்படியாக ஆளவந்தாரின் உள்ளம் தினமும் நம்பியின் வரவை நாடத் தொடங்கியது. கீதையின் உட்பொருளில் திளைத்த ஆளவந்தார் “அவனை அடைவதற்கு உபாயம் எது?” என்று கேட்க நம்பியும் சரம ஸ்லோகத்தை உபதேசித்து, “அவனை அடைவதற்கு அவனே உபாயம்” என்று ஆளவந்தாருக்கு ’பரமனே உபேயம், பரமனே உபாயமும்’ என்பதை புரியவைத்தார். பிறகு ஆளவந்தாரை ஸ்ரீரங்கம் அழைத்துச் சென்று பெரியபெருமாளைக் காட்டி “உங்களுடைய பாட்டனார் நாதமுனிகள் தேடிவைத்த நிதி இதுவே” என்றார். 

”நீண்ட அப்பெரியவாய கண்களை”க் கொண்டு பெரியபெருமாள் ஆளவந்தாரை ஆட்கொண்டார். அதன் பிறகு ஆளவந்தார் எல்லாவற்றையும் துறந்து துறவு மேற்கொண்டு ஸ்ரீரங்கத்தையே உறைவிடமாகக் கொண்டு நிர்வாகம் செய்து வந்தார். 

( இன்றும் ஸ்ரீரங்கத்தில் ஆளவந்தார் திருநட்சத்திரத்திரம் அன்று ஆளவந்தாருக்கு தூதுவளைக் கீரை சமர்ப்பிக்கும் வழக்கம் இருந்து வருகிறது. ) 

ஒரு மானசீக ஆச்சார்யனாக, ஸ்ரீராமானுஜரை வைணவத்துக்கு இட்டு வந்து, பெரும் தொண்டாற்ற வைத்த பெருமை ஆளவந்தாரையே சாரும்.  
ஆளவந்தார் பல கிரந்தங்களை அருளியுள்ளார். அவரின் ’ஸ்தோத்திர ரத்னம்’ மிகவும் முக்கியமான ஒன்று. தினமும் வைணவரக்ள் அனுசந்திக்கும் தனியனான 

மாதா பிதா யுவதயஸ் தநயா விபூதி:
ஸர்வம் யதேவ நியமேந மதந்வயாநாம்
ஆத்யஸ்ய ந: குலபதேர் வகுளாபிராமம்
ஸ்ரீமத் ததங்க்ரியுகளம் ப்ரணமாமி மூர்த்நா

என்பது ஸ்தோத்திர ரத்னத்தின் ஒரு பகுதி. 
Courtsy-:sujatha desikan

The Vedic Science Behind Eating with Your Hands


hand-02
Hands are considered our most precious organ of action. Our hands and feet are said to be the conducts of the five elements–space, air, fire, water and earth. One of the five elements courses through each finger. Through the thumb, angushtha, comes space; through the forefinger, tarjani, air; through the midfinger, madhyama, fire; through the ring finger, anamika, water and through the little finger, kanishtha, earth.
In Vedic tradition, we eat with our hands because the five elements within them begin to transform food and make it digestible even before it reaches the mouth. This transformation also heightens the senses so that we can smell, taste and feel the texture of the foods we are eating. We can also hear the sounds of eating. All of these sensations are a necessary prelude to beckoning agni, the fire of digestion, to ready itself for the meal to come.
On the greater dimension, the act of eating is spiritual feasting. We are activating the energies of the Deities aligned with the elements, stimulating a surge of heightened consciousness within. This is made possible through the powerful play of mudra. It brings the elements of nature through our hands and fingers into the food, and then joins it with agni. If we are aware of awakening the fire within ourselves, we digest not only the food but also our thoughts more smoothly. The fire of digestion and the fire of the mind, tejas, work hand-in-hand.
hand-03
Ayurveda tells us that disease takes rise in the body because the digestive fire is awry and the mind is agitated. Most people today eat and run, juggling an overly full calendar. We often skip breakfast, eat a less-than-nutritious lunch, and that too in a hurry, and sit down to dinner late at night, after which we immediately fall into bed. How could proper digestion occur when we force the system to put up with such abuse year after year? In this frantic pace of living, how could we maintain composure in the mind and therefore remember the sacred purpose of these limbs? No wonder then that we have such a high incidence of cancer and heart disease, and ailments resulting from improper diet. We refuse to observe the integrity of our physiology by nourishing our bodies and souls with dignity and respect. Using the time-honored ways of sadhana can help us to restore health and harmony in our everyday lives.
Eating food with your hands feeds body, mind and spirit. According to the Taittiriya Upanishad, food represents the coarsest and last of the five vestures in which the soul is clothed and passes from body to body in the long process of metempsychosis. In other words, food is not limited to what we eat, but expresses the universe’s entire body and all that is manifested within her. Likewise, we eat food not only to sustain the body, but to assimilate the universe’s elements and energies within our physical and emotional body and to nourish the greater, spiritual Self. The Taittiriya Upanishad tells us: “The essence of all things here is the Earth. The essence of Earth is water. The essence of water is the plant. The essence of the plant is a person.”
Let’s take this text a step further and ask ourselves: what is the essence of a person? I believe it is the fundamental nature that is uniquely ours and connects us to the universe. As humans, we are linked to the vast energy of the infinite, dimensionless universe by way of our limbs. The Purusha Suktam, a sixteen-mantra poem composed by the sage Narayana is regarded as the oldest work on cosmic anatomy and ecology. It reveals that the universe is an infinite continuum of energy. Yet it describes this energy as a living force, with eyes, ears, arms, legs, hands and feet and heads watching over all of existence. Just as the universe guards the many limbs and energies of its infinite structure, so each of us is meant to become aware of the greater life force and its many aspects. The sage explained that the individual who strives to live a spiritual life must first be aware of the life force and its many manifestations, limbs and faces before he can accomplish and serve it.
When we use our limbs in accord with the sacred laws of nature, every action worships and praises the omniscient Divinity in all things. When we eat with our hands, or feed the young and infirm with them, use them to dig into the rich soil and plant a good seed, embrace someone, or give them a gift, clasp the hands in prayer, we are using our hands to share in the maternal healing energies of the universe. Being conscious of how we use our hands is a wonderful act of sadhana.
To remind yourself each day of the sanctity of your limbs, recite the Vedic prayer, “Karagre vasate Laksmih karamule Sarasvati Karamadhye tu Govindah prabhate karadarsanam,” which means, “On the tips of my fingers is Goddess Laksmi, on the base of my fingers is Goddess Sarasvati, in the middle of my fingers is Lord Govinda. In this manner, I look at my hands.”
hand-04
To start your mudra practice, engage anjali mudra. Each morning you engage this practice will help you remember the sanctity of your hands and your connection to the creative energies of our universe. In anjali mudra, bring the palms of your hands together in front of the heart, with fingers pointing upward. When we clasp the hands in this manner, we stimulate the prana, or energy, that circulates through the heart, which increases its vitality and brings us a sense of ease and resolve. To evoke the Deities, raise the clasped hands to the center of the forehead. This mudra is itself an act of prayer and helps to heal the heart, not only of the trespasses of the present life, but also of the wounds incurred through timeless rebirths. When you bring your hands together, you are transforming all five elements back into their source of tejas, the energy of the subtle fire of creation that is responsible for cellular and nuclear metabolism within and without. You will immediately feel oneness with the Divine.
We are all embarked on a lifelong quest for consciousness, which emerges from the cultivation of awareness, the inner knowing that depends entirely on the harmonious relationship we develop with nature. The aim of the food sadhana practices I advocate is to help us reconnect to the greater energy of the universe so that we may restore our cognitive memory that goes far back to the origin of the universe. Using mudras for eating and communing with the food we eat is a paramount step to connecting with cosmic energies and a vital means of receiving nourishment by touching upon the Earth’s bounty. The practice of these specific mudras is likely to open your heart to the Mother’s wisdom. Feast with your hands at Her table and you will never go hungry or angry. Food is memory. Eating with your hands is remembering your sacred nature.
While in the West eating with the hands usually conjures up pictures of a young child smeared from head to foot with food, in the East, using the hands as utensils is a highly refined art. Here are the six major ways in which the hands are used. (see newstand copy for illustrations):
In ghronikah mudra the five fingertips form a petal around a lump of food about the size of a plum. This is one of the two main mudras used for eating solid food like grains and vegetables, or for scooping dhals with chapati or bread.
hand-01
In annabhakshana mudra, use the fingertips to pick up a small amount of food, sufficient to fit on the base of the four fingers. Use the thumb to advance the food forward and into the mouth. This is the second of the two main mudras for eating any solid food. Only the right hand is used for eating. Annabhakshana mudra practice cultivates our discrimination in eating good quality food in the appropriate quantity and in a tranquil environment.
Kangulah mudra is taking food with the thumb, forefinger and mid-finger. Engage this mudra when eating long, slender pieces of food, like asparagus, carrots, celery, sugar cane and “drumsticks” or murungai. As we bring food to our mouth in kangulah mudra, the palm of the hand faces upward, evoking the spirit of consciousness as we touch upon Nature. This mudra cultivates a gentle reverence for Nature’s precious gifts. The first mudra, Ghronikah, activates and balances the element of earth within the body. The earth element controls our sense of smell and gives us added vision to “smell our way,” that is, to be keenly aware of our connection to Mother Nature.
Kadambah mudra crouches the five fingers around firm, solid food. This mudra is reserved for eating round-shaped fresh fruits that fit neatly in the palm of the hand, such as apple, pear, mango or peach. You may also use it to eat sweets like ladhu. The mudra is named after the famed kadamba tree, which is said to put forth buds at the roaring of thunder-clouds, and which produces hard, inedible fruits. When Mother Nature is mistreated and taken for granted, she roars her thunder and makes rare her fruits. Practicing this mudra helps us to remember to be grateful for every speck of Nature’s food.
Mukulah mudra is eating with all five fingers tightly knitted together. In this mudra a minimal quantity of food is taken at a time, for example, ten grains of cooked rice. The mudra is used in annaprashanam, or the ceremony of first feeding, one of the 16 samskaras, usually performed in the fifth or sixth month of a child’s life. Mukulah mudra is a reminder that we are forever in the bud of life, continually regenerating the on-rushing flow of awareness. Every bite of food must serve to awaken cosmic memory of the first food we, as conscious human beings, imbibe from the Mother’s nectary.
Khatakamukhah mudra is tasting or sampling food with forefinger, mid-finger and thumb tightly pinched. This mudra measures the equivalent of a half-teaspoon. It is used to mete out spices and condiments in cooking. We may also use it as a pinch-measure for medicines. Food is the most potent form of medicine. We need to exercise caution. Keeping our hearts open but our hands half-closed when receiving food is a good policy to maintain. Khatakamukhah mudra helps us to exercise firm discretion around food.

Friday, August 28, 2015

“ஏரார் முயல் விட்டு காக்கை பின் போவாரோ” - திருமங்கை ஆழ்வார்

“ஏரார் முயல் விட்டு காக்கை பின் போவாரோ” - திருமங்கை ஆழ்வார் 

சில மாதங்களுக்கு முன் தி.நகரிலிரிந்து தாம்பரம் சானிடோரியத்துக்கு குடிபெயர்ந்தேன். 

ஸ்ரீவைஷ்ணவர்கள் அதிகம் இருக்கும் இடம் அதனால் சரவணபவன் கூட கிடையாது என்பது முதல் ஆச்சரியம். பழம்பெரும் தமிழ் எழுத்தாளர்களைவிட கொசு அதிகம் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். அதனால் ரிஸ்க் எடுக்காமல் முதல் வேலையாக நெட்லானை வெல்கரோ கொண்டு கதவை விட்டுவிட்டு ஜன்னல் பொன்ற சின்ன ஓட்டைகளை அடைக்க ஏற்பாடு செய்தேன். 

பக்கத்துவிட்டு முருங்கை மர குப்பை உள்ளே வராமலும், நான் தாளித்தால் கடுகு கூட ஜன்னல் வழியாக வெளியே போகாதபடி மிகவும் பாதுகாக்கப்பட்ட இடத்தில் வாழ்ந்துக்கொண்டு இருக்கிறேன். மன்னிக்கவும் வாழ்ந்தேன். 

பெங்களூரில் ஒரு வாரம் வாசம் முடித்துவிட்டு செய்துவிட்டு இன்று சென்னை திரும்பினேன். 

காலை ஐந்தரைக்கு வீட்டை திறந்தால் எல்லாம் அலங்கோலமாக இருந்தது. 

ஷூராக் கீழே விழுந்து, நியூஸ் பேப்பர் கலைந்து, வீடு முழுக்க ஏதோ மஞ்சள் திரவம்... கூடவே வயிற்றை குமட்டிக்கொண்டு எலி செத்த நாற்றம். 

செத்த எலி எங்கே ? எங்கிருந்து வந்திருக்கும் என்று காலை ஆறு மணிக்கு ஆராயத் துவங்கினேன்.

முழுவதும் ஆராய்ந்த பின் பீரோ அடியில் ஏதோ கருப்பாக இருந்தது. இங்கிருந்து தான் நாற்றம் வருகிறது என்று டார்ச் அடித்து பார்த்தால் அது எலி இல்லை. ஒரு காக்கா! தலையில்லாமல். 

கொசு கூட வர முடியாத இடத்தில் எப்படி காக்கா என்று திரும்ப வீட்டை சோதித்தேன். சமையல் அறையின் ஒரு பக்கம் இருக்கும் ஜன்னல் வழியாக வெல்கரோவை தள்ளிக்கொண்டு ( ஏதோ துரத்த ) வந்திருக்கிறது. திரும்ப போக வழி தெரியாமல் வீடு முழுக்க அலைந்து செத்து போயிருக்கிறது என்ற முடிவுக்கு வந்தேன். 

காக்காவை கவரில் பார்சல் செய்து வெளியே இருக்கும் ஒரு குப்பை தொட்டியில் போட்டுவிட்டு, செண்ட், பினாயில், டெட்டால் என்று கைக்கு எது கிடைத்ததோ அதை எல்லாம் கலந்து வீட்டை சுத்தம் செய்த பின் கொஞ்சம் ’ஃபிரஷ் ஏர்’க்கு வெளியே சென்று விட்டு வரலாம் என்று வெளியே கிளம்பிய போது வீட்டை சுற்றி ஏகபப்ட்ட காகங்கள். என் தலையை சுற்றி என்று கூட சொல்லலாம். அதில் ஒரு காகம் நான் தான் ஏதோ தப்பு செய்துவிட்டேன் என்று நினைத்து என் தலையை கொத்த ஹிட்ச்காக்கின் "பேர்ட்ஸ்' படம் நினைவுக்கு வர நாற்றமே பரவாயில்லை என்று வீட்டுக்குள் ஓடி வந்துவிட்டேன். 

சரி ஒரு ரிலாக்சேஷனுக்கு பன்பலையை ஒலிக்கவிட்டால் அதில் ஏதோ ”கவிஞர் காக்கா கரையன்” என்று அசட்டுத்தனமான கவிதையை வைரமுத்துவின் மாடுலேஷனில்....பினாயில் நாற்றத்துடன். 

காக்காவை விரட்ட குடை தான் சரியான ஆயுதம் என்று வீட்டை விட்டு அலுவலகம் போகும் போது குடையுடன் சென்று காரில் ஏரிக்கொண்டேன். பக்கத்துவீட்டில் எதுக்கு குடை என்று பார்த்தார்கள். 

மாலை வீடு திரும்பிய போது மீண்டும் காகங்கள் என்னை வட்டமிட்டன. 

எப்படி வெல்கரோவை தாண்டி உள்ளே வந்தது என்று யோசித்தேன். வெல்'crow' என்பதாலா ?
Courtesy;sujatha desikan

Tamil novelist lakshmi

சமுதாயத்தில் எத்துணைதான் படித்திருந்தாலும், பெண்ணுக்குச் சம உரிமை இல்லை; பெண்கள் சரி நிகர் சமான நிலை பெற வேண்டும் என்பதே குறிக்கோள். பெண் பிரச்சினை, உரிமையே மையக் கருத்து. பெண்ணின் பெருமை பேசுவதே, அருமை பாராட்டுவதே அடித்தளம். இல்லத்தின் உயிர் நாடியே பெண்தான் என்பது. குடும்பச் சிக்கல்களை அலசுவது. பெண்மையின் மென்மை உணர்வுகள்/ஆண்மையின் வன்மை உணர்ச்சிகள், இவற்றின் உரசல்களால் உருவாகும் நிகழ்ச்சிகளைப் பின்னித் தருபவர்; அதேசமயம் நமது தமிழ் மரபினையும், இந்தியப் பண்பாட்டினையும் உயிராகப் பேணி எழுதி வருபவர் – அவர் தான் லக்ஷ்மி என்கிற டாக்டர் எஸ்.திரிபுரசுந்தரி (மது.ச. விமலானந்தம்)
சிதம்பரத்தை அடுத்துள்ள அம்மாபேட்டை என்ற சிறு கிராமத்தில் 1921ம் வருஷம் மார்ச் மாதம் 21 தேதி பிறந்தவர் லக்ஷ்மி. பெற்றோர் திருச்சி ஜில்லா தொட்டியம் கிராமத்தைச் சேர்ந்த டாக்டர் ஸ்ரீனிவாசன், பட்டம்மாள் என்ற சிவகாமி. உடன் பிறந்தவர்கள் ஐவர், நான்கு சகோதரிகள், ஒரு தம்பி.
தொட்டியம் தொடக்கப் பள்ளியிலும், முசிறி உயர் நிலைப் பள்ளியிலும் கல்வி பயின்ற லக்ஷ்மி, தனது உயர் நிலைக் கல்வியைத் திருச்சியிலுள்ள ஹோலி க்ராஸ் கல்லூரியில் தொடர்ந்தார். காரணம் ஐந்தாவது ஃபாரம் படிப்பை முடித்து எஸ்.எஸ்.எல்.சி வகுப்புக்குப் போக வேண்டிய சமயம், முசிறிப் பள்ளியின் தலைமையாசிரியர் “ஆண்களுக்காக செயல்பட்டுக் கொண்டிருக்கும் பள்ளியில் தொடர்ந்து வயது வந்த ஒரு பெண்ணைப் படிக்க அனுமதிக்க முடியாது” என்றதால்தான். சீரான போக்குவரத்து வசதிகள் இல்லாத காரணத்தால், முறையிட்டு, ஹாஸ்டல் வசதியைப் பெற்றார் லக்ஷ்மி. தமிழில் வகுப்பில் முதல் மாணவியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, முதல் ஆண்டு ஒரு பரிசையும் பெற்றார். இண்டர் முடித்தவுடன் மருத்துவம் படிக்க வேண்டும் என்ற குறிக்கோளுடன், சென்னையிலுள்ள கல்லூரிகளுக்கு விண்ணப்பங்களை அனுப்பினார். முதலில் வெய்டிங் லிஸ்டில் இருந்த போதிலும் இவருக்கு சென்னை ஸ்டான்லி மருத்துவக்கல்லூரியில் எம்.பி.பி.எஸ். படிக்க இடம் கிடைத்தது.
முதல் ஆறுமாதங்கள் ப்ரி-ரிஜிஸ்ட்ரேஷன் ஸ்டான்லியிலும், கல்லூரியில் வசதிகள் இல்லாததால், அனாடமி, ஃபிசியாலஜி படிப்பை மதராஸ் மெடிகல் காலேஜில் இரண்டு வருஷங்கள் தொடர்ந்து, மூன்றாம் வருஷப் படிப்பைத் தொடர ஸ்டான்லி திரும்பினார். இவர் மருத்துவம் படித்த காலம் இரண்டாவது உலக மகா யுத்தம் நடந்து கொண்டிருந்த காலம். அதன் தாக்கங்கள் எப்படியிருந்தன என்பதை கதாசிரியையின் கதை என்ற தமது சுய சரிதத்தில் விவரமாக எழுதியிருக்கிறார் லக்ஷ்மி. மருத்துவம் படித்துக் கொண்டிருக்கும்போது ஏற்பட்ட பொருளாதாரப் பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்ள எழுத்தின் உதவியை நாடினார் லக்ஷ்மி. அக்காலத்தில் ஆனந்த விகடன் காரியாலயம் ஸ்டான்லிக்கு அருகே ப்ராட்வேயில் தான் இருந்தது. இதைப் பற்றி திருமதி பட்டம்மாள் வாசன் நினைவு கூர்கிறார்:
ஒரு நாள் லக்ஷ்மி ஃபோன் பண்ணினா. “நான் கதையெல்லாம் எழுதுவேன், உங்கள் கணவரைப் பார்த்துப் பேச வேண்டும், உதவி செய்வீர்களா?” நீ ஆஃபீசுக்குப் போனால் அவரைப் பார்க்கலாம் என்றேன். அவரிடம் “டாக்டருக்குப் படிக்க வேண்டும், எங்களுக்கு இப்போது நிதி வசதி சரியாயில்லை. என்னுடைய கதைகள் சிலதைக் கொண்டு தருகிறேன். பிரசுரித்துப் பண உதவி செய்தால் சந்தோஷப்படுவேன்” என்று கேட்டிருக்கிறாள். நல்ல கதைகள் என்றால் பிரசுரிப்போம் என்று சொன்ன வாசன், பின்னர் கதைகள் தரமாக இருக்கவே பிரசுரம் செய்து உதவினார்.
டாக்டர் படிப்பு முடித்ததும் லக்ஷ்மியின் குடும்பம் சென்னையிலேயே குடியேறிற்று. தங்கைகள் கல்யாணம் பொறுப்பேற்று நடத்தி முடித்தார். 1955ம் வருஷம் தானும் கண்ணபிரான் என்ற தென்னாப்பிரிக்கத் தமிழரை திருமணம் செய்து கொண்டார். சென்னையிலுள்ள அடையாறு தியோசாஃபிகல் சொசைட்டியில்தான் இந்தத் திருமணம் நடந்தது. திருமணத்திற்குப் பின் லக்ஷ்மி இருபத்தியிரண்டு வருஷங்கள் தென்னாப்பிரிக்காவில் தங்கியிருந்தார். மகப்பேறு வைத்தியராகப் பணியாற்றினார். இத்தம்பதிகளுக்கு மகேஸ்வரன் என்ற ஒரு பிள்ளை.
1966ம் வருஷம் கண்ணபிரான் இறந்தது லக்ஷ்மியை மிகவும் பாதித்தது. இருப்பினும் அங்கேயே தன் வாழ்க்கையைத் தொடர்ந்த லக்ஷ்மி 1977ம் வருஷம் சென்னை திரும்பினார். என்ன காரணமாகவோ அதன் பிறகு அவர் தொடர்ந்து எழுதவில்லை. மகேஸ்வரனையும் மருத்துவப் படிப்பில் சேர்த்து அவரையும் மருத்துவராக்கினார்.
பதினான்கு வயதிலேயே எழுத ஆரம்பித்த லக்ஷ்மி நாற்பத்தி ஐந்து ஆண்டுகள் படைப்பிலக்கியம் செய்து, ஆயிரத்துக்கும் மேலான சிறுகதைகள், நூற்றுக்கும் மேலான நாவல்கள் வெளியிட்டுள்ளார். மருத்துவம், மகப்பேறு போன்ற பல்வேறு தலைப்புகளில் கட்டுரைகள் எழுதியுள்ளார். வானொலி நாடகங்களும் எழுதியுள்ளார். இவரது முதல் நாவல் பவானிபெண் மனம், மிதிலா விலாஸ் என்ற இரு நாவல்கள் தமிழ் வளர்ச்சிக் கழகப் பரிசையும், ஒரு காவிரியைப் போல 1984ல் சாகித்திய அகாதெமி விருதையும் பெற்றன. காஞ்சனையின் கனவு, பெண் மனம் என்ற நாவல்கள் காஞ்சனா, இருவர் உள்ளம் என்ற தலைப்புகளுடன் மூன்று தென் மொழிகளில் திரைப் படங்களாயின. இருவர் உள்ளம் படத்திற்கு, திரைக்கதை, வசனம் எழுதியது முன்னாள் முதல்வர் மு. கருணாநிதி.
லக்ஷ்மியின் மறைவு 1987ம் வருஷம் ஜனவரி மாதம் ஏழாம் தேதி சென்னையில். அவரது மறைவு குறித்து ஆனந்த விகடனில் (25-1-1987 – மீள் பதிப்பு ஆ.வி.11-3-2009) பட்டம்மாள் வாசன் நினைவு கூர்வது:
வாழ்க்கையில் நிறையச் சிரமப்பட்டிருந்தாலும், அவ பேசறப்போ சிரிச்சுண்டேதான் பேசுவா. சாகித்ய அகாடமி பரிசு வாங்கியதும் என்னைத் தேடி வந்து சொன்னது எனக்குப் பெருமையா இருந்தது. சமீபத்திலே எங்க வீட்டுக் கல்யாணத்துக்கு வந்திருந்தபோது ‘என் பிள்ளைக்குக் கல்யாணம் பண்ணப் போறேன்’ என்று ரொம்ப சந்தோஷமாச் சொன்னாள். அவ சாகும்போது, அந்த ஒரே பிள்ளையும் துரதிர்ஷ்டவசமா கிட்டக்க இல்லாம எங்கேயோ இங்கிலாந்திலேயா இருக்கணும்னு நினைச்ச போது என் மனசுக்கு கஷ்டமாயிருந்தது.”

தில்லியில் தென்னை பயிரிட முடியுமா?

வெவ்வேறு மொழிகளில் உள்ள கவிதைகளை மொழிபெயர்ப்பில் ஒப்பிட்டு ஆராய்ந்து இம்மொழியில் உள்ள கவிதைதான் சிறந்தது என்று இலக்கியத்  தீர்ப்பு வழங்குவது சரியா? ஒவ்வொரு மொழிக்கும் அதற்கென்றே பரம்பரியமாக வருகின்ற மொழியொடு இணைந்த பண்பாடு  உண்டு. ஒரு மொழியில் உள்ள நல்ல கவிதை, அந்த மொழியைப் பேசுகின்றவர்களுக்கு அதைப் படித்ததும் ஏற்படுகின்ற சுகாநுபவம், அம்மொழி தெரியாமல் அக்கவிதையை மொழிபெயர்ப்பில் படிக்கின்றவர்களுக்கு உண்டாகாது.ஏனென்றால், அந்த அநுபவம், எந்த மொழியில் அந்தக் கவிதை எழுதப்பட்டிருக்கிறதோ, வழி வழியாக வரும் அந்த மொழிப் பண்பாட்டினின்றும் பிரிக்க ஒண்ணாது. மொழிப் பண்பாடு, ச்மூகக் கலாசாரத்தால் நிர்ணயம் ஆகின்றது. உதாரணம் காட்டி விளக்கலாம்.
ஒளியா வெண்ணெய் உண்டான் என்று
உரலொடு ஆய்ச்சி ஒண் கயிற்றால்
விளியா ஆர்க்க ஆப்புண்டு
விம்மி அழுதான் மென் மலர்மேல்
களியா வண்டு கள் உண்ண
காமர் தென்றல் அலர் தூற்ற
நளிர்வாய் முல்லை முறுவலிக்கும்
நறையூர் நின்ற நம்பியே.
இச்செய்யுள் பெரிய திருமொழியில் வருகிறது.
திருநறையூர் நின்ற நம்பி கிருஷ்ணன். அவன் ஒவ்வொரு வீடாகச் சென்று  வெண்ணையைத் திருடி உண்கின்றான். அவன் விஷமம் பொறுக்க முடியாத அவன் தாய் யசோதை அவனைக் கயிற்றால் உரலில் சேர்த்துக் கட்டி விடுகின்றாள்.குழந்தையாகிய கிருஷ்ணன் தேம்பித்தேம்பி அழுகின்றான்.
இது ஒரு காட்சி.
இன்னொரு காட்சி, அவன் இருக்கும் ஊராகிய திருநறையூரைப் பற்றியது.அங்கு வண்டுகள் ஒவ்வொரு மலரிலும் புகுந்து தேனைத் திருடி உண்கின்றன.  வண்டுகள் ஒவ்வொரு மலராக நாடுவதென்பது  காதல் காட்சி. வண்டுகள் உள்புகுந்து தேணுண்ண, மலர்கள் பூக்கும். நறுமணம் எங்கும் காற்றின் மூலம் பரவும். மலர்களோடு வண்டுகள் காதல் பயின்றதை எங்கும்   பரவும் நறுமணம் மூலம், தென்றல் காற்று  ஊருக்கு அறிவிக்கின்றதென்று (‘அலர் தூற்ற’)கவிஞர் கூறுகிறார்.  இந்த ‘அலரை’க் கேட்டு முல்லை மலர்கள் முறுவலிக்கும்.
‘அலர்’ என்ற சொல், பண்டையத் தமிழ் இலக்கியங்களில் அகத்திணைப்  பாடல்களில் வரும் சொல். தலைவனும் தலைவியும் களவு ஓழுக்கத்தில் ஈடுபட்டிருக்கும் செய்தி ஊராருக்குத் தெரிய வருவதுதான் ‘அலர்’. தமிழ் ப் பண்பாட்டு சந்ததியினரைத் தவிர மற்றவர்களால் இப்பாட்டை ரஸிக்க இயலுமா? ஒரு மண்ணுக்கே உரிய ஒரு பயிரை அடியோடு பிடுஙகி வேறொரு மண்ணில் நட்டு விட முடியுமா? அது போல்தான் ஒரு மொழியினின்றும் இன்னொரு மொழியில் ஆக்கம் செய்வது.
ஆகவே வெவ்வேறு மொழிகளில் எழுதும் கவிஞர்களுடைய கவிதைகளை ஒப்பிட்டு மதிப்பீடு செய்வதென்பது வீண் வேலை. அந்த்ந்த மொழியில் படித்து ரஸிப்பதுதான் சாத்தியம்.
Courtesy:indhra parthasarathi

வல்லார்க்கு உப்பும் ஓர் ஆயுதம்

வள்ளுவர் கூறும் ‘சாவா மருந்தை’ (’அமிர்தம்’) வைஷ்ணவ வியாக்கியானகாரர்கள் ‘உப்புச் சாறு’ என்பார்கள். இங்கு ஏற்றம் உப்புக்குத்தான். அவ்வளவு முக்கியமானது உப்பு. ஏழை,பணக்காரன் என்றில்லாமல் அனைவர் உணவிலும் இருந்து அமைய வேண்டிய நிலையில், ஜனநாயக அந்தஸ்து பெறும் பண்டUppu Vèli_Wrapper  ம் உப்பு.
இந்தியாவைப் பொருளாதார ரீதியாகச் சுரண்டி அரசியியல் ஆதிக்கம் பெற ஒரு முக்கிய பொருளாக உப்பைக் கருதியது,18.19ம் நூற்றாண்டுகளில் இந்தியாவில் ஆட்சிச் செலுத்திய ஆங்கிலேயக்  கிழக்கிந்திய கம்பனி. அப்பொழுதைய இந்தியாவின் சிந்த் மாநிலத்தினின்றும் ஒரிஸா மாநிலம் வரை, வடகிழக்கு இந்தியாவில் 2504 மைல் தூர அளவில், ஒரு கல், மண், உலர்ந்த செடி கொடிகள் அடர்ந்த மாபெரும் புதர் வேலி எழுப்பி, அந்த எல்லைக்குள் உப்பைப் பதுக்கி வைத்து, காவல் காத்து, விற்பனை வரி விதித்து,, கடத்தல் விவகாரங்களில், தண்டனையாகவும், லஞ்சமாகவும் ஏராளமான பணம் பெற்றும், கொள்ளை அடித்து, 157ல் லண்டனிலிருந்து, நேரடியான ஆங்கில அரசாட்சிக்கு வழி வகுத்தனர் கிழக்கிந்திய கம்பனி நிர்வாகிகள். ஆனால், இதே உப்புதான், இந்தியாவிலிருந்து ஆங்கில ஆட்சியை விரட்டுவதற்கும், மகாத்மா காந்தியின் தலைமையில் அடிகோலியது என்பதுதான் நகைமுரண்.
Courtesy:indhra partasarathi

Aruna's tour to japan

ஜென் கவிதை, சூஷி உணவு, அதி வேக புல்லட் ரயில், புத்த மதம் என ஜப்பானை பற்றி பேசினாலே ஒரு பிம்பம் மனதில் தோன்றுவதுண்டு. என் நண்பர் ஒருவர் 3 வருடங்களாக அங்கு வசித்து வருகிறார். அமெரிக்காவில் இருந்த பொழுது 3 வார விடுமுறை ஒவ்வொரு முறையும் இந்தியா வந்து போவதிலேயே தீர்ந்து விடும். இந்தியா வந்த பின் இப்பிரச்சனை இல்லை. நண்பர் வேறு வருட கடைசியில் தாய்வான் போய் விடுவதாக பயமுறுத்தியதால் ஜப்பான் போக ஒரு திட்டம். மே மாதம் போக முடிவு செய்து விட்டு ஜெயமோகனின் ஊட்டி முகாம் அந்த நேரத்தில் வந்ததால் பின் ஜூன் முதல் வாரம் என முடிவானது. பெங்களூரில் இருந்து ஹாங்காங் சென்று பின் ஒசாகா. கதே பசிபிக்கில் மொத்தம் 13 மணி நேரத்தில் போய் சேர்ந்து விடலாம். கோபேயில் வசிக்கும் நண்பர் கிரனும் அவருடைய மனைவி சாச்சிகோவும் விமான நிலையம் வந்ததிருந்தனர். நண்பரின் அம்மாவும் என்னுடன் வந்திருந்தார்.
கோபேவிற்கும் ஒசாக்காவிற்குமான தூரம் 30 கி.மீ தான் என்றாலும், ஒசாகாவின் விமான நிலையம் ஒரு செயற்கை தீவில் இருப்பதால் சுற்றிக் கொண்டு வருவதற்கு காரில் 45 நிமிடம் பிடித்தது. இந்த தீவு ஹோன்ஷு தீவின் கரையில் உள்ளது. ஹோன்ஷு தீவை சுற்றி பாலம் அமைத்து எக்கச்சக்கமான தொழிற்சாலைகள் அமைத்து இருக்கிறார்கள். அமெசானின் ராட்சச கிடங்கு கூட இதில் உள்ளது.
பத்து வருடத்திற்கும் மேலாக பொருளாதார வீழ்சியில் (stagflation) உள்ளது ஜப்பான். மொத்த உள்னாட்டு உற்பத்தியை விட 230% சதவீதம் அதிகம் உள்ளது ஜப்பானின் மொத்த கடன். இச்சதவீதம் மிக அதிகமான நாடு உலகிலேயே ஜப்பான்தான் எனலாம். ஒரு ஒப்பு நோக்கிற்கு வேண்டுமானால், இந்தியாவில் இச்சதவீதம் 60%. ஜப்பான் நாட்டு பணமான யென்னின் ஆரோக்கியம் வேறு ஏற்றுமதியை பாதிக்கிறது என சொல்லிக் கொண்டு வந்தார் நண்பர். தொட்டில் முதல் சுடுகாடு வரை ஒரே நிரந்தர வேலை போன்ற கடந்த கால சாத்தியங்கள் தற்போது கனவாக மாறிக்கொண்டிருக்கிறது. 
ஜப்பான் கடல் சூழ்ந்த தீவானதால் வசிப்பதற்கான இடம் மிக குறைவு. நண்பர் அமெரிக்க கம்பெனியில் ex-pat ஆகியதால் கோபேயின் (Steak என அழைக்கப்படும் ஒரு விதமான மாட்டு கறிக்கு உலகிலேயே மிக புகழ் பெற்ற நகரம்) மத்திய பகுதியில் ஒரு அதி நவீன அடுக்கு மாடி கட்டிடத்தின் 27ஆம் மாடியில் வசிக்கிறார். ஜப்பானின் தீப்பெட்டி வீடுகளில் வளர்ந்த அவர் மனைவி மிக மகிழ்ச்சியுடன் வீட்டை சுற்றிக் காட்டினார். வீட்டை சுற்றி உள்ள பால்கனியில் உட்கார்ந்தால் டச்சுகாரர்கள் விரும்பி வசித்த மலை தூரத்தில் தெரிந்தது. சாச்சிக்கோ இரவெல்லாம் அமர்ந்து தங்கப் போகும் ஹோட்டல்களுக்கான பதிவுகள் செய்தார். அங்கு பெரும்பாலும் ஜப்பானிய மொழியே அதிகம் பேசப்படுவதால், அவர்தான் இந்த வேலையை செய்ய வேண்டி இருந்தது. 
ஆட்டோ சின்மயா நகர் வருமா என்று கேட்டாலே புழுவை போல் பார்த்து நம் மீது வசவெறியும் நம் மக்களுக்கு நேர் எதிர் ஜப்பானியர்கள். அனுமதி சீட்டை கொடுத்தால் கூட சொத்தெழுதி வைத்தது போல் கால் மடக்கி வணங்கி சிறிய கண்கள் காதெட்டும் வரை சிரித்து அரிகாத்தோ ஓசைமாஸ் என்கிறார்கள். ஆனால் மிக அதிகமான மன நோயையும் தற்கொலையையும் உள்ளடக்கிய ஒரு சமுதாயம் இது. மனிதர்களிடம் இவ்வளவு பண்புடன் பழகிவிட்டு பின் நேர்த்தியாக உடுத்தி ரயிலின் முன்னால் போய் விழும் முரண். முதல் சில நாட்களுக்கு இந்தத் தன்மை என்னை லேசாக பயமுறுத்தியது.
அடுத்த நாள் நாங்கள் ஜப்பானின் முன்னாள் தலைநகரான நாராவிற்கு ஹான்ஷின் என்ற தனியார் ரயில் பிடித்து சென்றோம். போகும் வழி எல்லாம் வித விதமான வண்ணங்களில் தானியங்கி இயந்திரங்கள் வைத்திருக்கிறார்கள். தண்ணீர், குளிர்பானம், சிகரெட், மதுபானம் என எல்லாம் கிடைக்கிறது. அதன் மேல் உள்ள விளம்பர பலகைகளில் பெரும்பாலும் அமெரிக்க நடிகர்கள் எதையாவது வாங்க சொல்லி ஜப்பானியர்களை வற்புறுத்துகிறார்கள். அன்று சனிக்கிழமை ஆதலால் பேஸ்பால் மாட்ச் பார்க்க மக்கள் உற்சாகமாக குடும்பத்துடன் போய் கொண்டிருந்தார்கள். நம்மூரில் கிரிக்கெட் போல் ஜப்பானியர்களுக்கு பேஸ்பால் பைத்தியம். அவர்கள்தாம் தற்போதைய உலக சாம்பியன்களும். ரயிலில் திரையில் அடுத்த நிறுத்தம் எது என்பதை ஆங்கிலத்திலும் காண்பிக்கிறது.
டாக்ஸி ஒன்று பிடித்து தோடைஜி (Todaiji) என்கிற புத்த மதத்தின் கேகான் பிரிவின் தலைமை ஆலயத்திற்கு சென்றோம். தோடைஜி என்றால் கிழக்கு நோக்கிய பெரிய ஆலயம் என பொருள். இவ்வாலயம் அமைந்திருக்கும் மரக் கட்டிடமும் அதில் உள்ள வெங்கல புத்தரும் உலகிலேயே மிக பெரியது. ஆலய தெற்கு வெளி வாசலில் இரு புறமும் உங்யோ, அக்யோ என்றழைக்கப்படுகிற இரு வாயில்காப்போன் சிலைகள். ஆலய வாசலில் கை கழுவ நீர் தொட்டியும் மரக் கரண்டிகளும் வைத்திருக்கிறார்கள். நிறைய பள்ளிக் குழந்தைகள். வருட இறுதி ஆனதால் கலாச்சார சுற்று பயணத்தில் வந்திருக்கிறார்கள். நான் பார்த்த எல்லா ஆலயங்களிலும் கொத்து கொத்தாக சிதறி கிடந்தார்கள். ஆலய முகப்பில் குண்டத்தில் ஊதுபத்திகள் தொடர்ந்து எரிந்து கொண்டிருக்கின்றன. வலது புறம் பிண்டோலா பாரத்வாஜா என்கின்ற புத்த அர்ஹதரின் 8 அடி உயர மரச்சிலை. இவர் புத்தரால் உலகில் இருக்கும்படி பணிக்கப்பட்ட 4 அர்ஹதரில் ஒருவர் என்றறியப்படுகிறார். ஜப்பானில் இவரை பின்சுரு என்கிறார்கள். இவரின் ஒரு பாகத்தை தொட்டு பின் நம் உடலில் அதே இடத்தை தொட்டால் அவ்வுறுப்பு சம்பந்தமான வியாதிகள் வராது என நம்புகிறார்கள்.
743-ஆம் ஆண்டு கட்டப்பட்ட இந்த ஆலயம் 2 முறை தீக்கிரையாகி தற்போதுள்ள ஆலயம் 1709ல் கட்டப்பட்டது. இவ்வாலயம் ஒரு World Heritage Site. ஆலயத்தில் உள்ள புத்தர் வைரோசனா என்றும் ஜப்பானியர்களால் டைபுட்சு என்றும் அழைக்கப்படுகிறார். 49 அடி உயரமும் 500 டன் எடையும் கொண்ட கருப்பு புத்தர். அவரை சுற்றி 16 போதி சத்வர்களும் அவரின் இரு புறத்தும் சிறு புத்தர்கள். போதிசத்வர்கள் தாமரை இதழ்களில் அமர்ந்து இருப்பது போல் பொரிக்கப்பட்ட ஒரு சிம்மாசனம் சிலையின் காலடியில்.
பிஷமோதேன், கொமுகூதேன் என்ற காவலர்கள் புத்தரின் பின்பக்கத்தில் நின்று ஆலயத்தை காக்கிறார்கள். இவர்களை இடிக்கும், காற்றுக்குமான கடவுளராக கருதுகிறார்கள்.
ஆலயத்தின் முன் இருமருங்கிலும் பச்சை புல்வெளி. நடுவில் ஒரு மரம் கூட கிடையாது. சதுர வடிவிலான ஒரே நிறத்துப் பச்சை திறந்த வெளி. ஆலயத்தின் வெளிவாசலில் ஒரு பெரிய குளம். நீர் நிலையும், திறந்த வெளியும் எல்லா ஆலயங்களிக்கும் உள்ள பொதுத்தன்மை. புத்த, ஷிண்டோ என எல்லா மத ஆலயங்களிலும் அவை உள்ளது.
ஆலயத்தின் வெளியே உள்ள இடங்களில் எல்லாம் சிகா வகையை சார்ந்த மான்கள் உலவுகின்றது. அவை புனிதமாக கருதப்படுவதால் அவை வேட்டை ஆடப்படுவதில்லை. மான்களுக்கு உணவளித்து, துரத்தி விளையாடும், கலர் ஐஸ் வாங்கி சாப்பிடும் குழந்தைகளும், பெரியவர்களுமான ஒரு மனித சிதறல்.
பின்னர் நாங்கள் கோப்கூஜி (Kokukuji) என்ற 7ஆம் நூற்றாண்டு கோவிலுக்கு சென்றோம். இக்கோவிலும் ஒரு World Heritage Site ஆக பாதுகாக்கப்படுகிறது. 669-ஆம் ஆண்டு புஜிவாரா குடும்பத்தின் தோற்றுனரும், அரசியல்வாதியுமான புஜிவாரா நோ கமடாரியின் மனைவி ககாமியால் அவர் கணவர் உடல் நலம் குன்றியிருந்த போது கட்டப்பட்டது. இக் கோவிலின் சிறப்பம்சம் இவ்வளாகத்தில் உள்ள 5 அடுக்கு பகோடா தான். தீக்கிரையான இந்த பகோடா மீண்டும் 15 ஆம் நூற்றாண்டில் புதுப்பிக்கப்பட்டது. இவ்வளாகத்தின் உள்ளே பகோடாவும், ஒரு தங்க மண்டபமும் அதன் உள்ளே யகூஷி புத்தாவின் மரச்சிலையும், ஒரு எண்கோண முக கோவிலும் (இப்பொழுது புழக்கத்தில் இல்லை) தற்பொழுது ஆலயமாக செயலாற்றி வரும் சிறிய எண்கோண கோவிலும் உள்ளது. ஆலய முகப்பில் ஒரு இளம் புத்த பிக்கு ஒரு பிரார்த்தனையை வழி நடத்திக் கொண்டிருந்தார். இக்கோவிலில் உள்ள புத்தரிடம் ஏதேனும் ஒரு வேண்டுகோளை மட்டுமே கூறி பிரார்த்தனை செய்ய வேண்டும். இரண்டாவது வேண்டுதல் இருந்தால், கோவிலை விட்டு வெளியேறி பின் மீண்டும் செல்ல வேண்டும். சிறிய கோவிலின் உள்ளே தரை மெத்தைகள் வைத்திருக்கிறார்கள். நாம் அமர்ந்து, முன்னே இருக்கும் காங் (gong) என்ற மணியை பிரார்த்தனையின் ஆரம்பத்தை குறிக்க ஒரு முறை ஒலித்து விட்டு, பிரார்தித்து மெழுகுதிரி ஏத்தி விட்டு பின் ஒரு முறை மணியை வழிபாடு முடிந்ததை குறிக்க ஒலித்து விட்டு வெளியேற வேண்டும். 
நாரா ரயில் நிலைய வாசலில் ஒருவர் ஜெபமாலையுடன், எளிய ஆடைகள் அணிந்து கையில் பிச்சைப் பாத்திரத்துடன் நின்றிருந்தார். அவர் பிக்கு ஆவதற்கான பயிற்சியின் ஒரு பகுதியாக இரந்து உண்கிறார் என்றார் நண்பர்.
பல நூற்றாண்டுகள் பழமையான ஆலயம் அதே சூழலில் பேணப்பட்டு காலத்தில் உறைந்தது போன்ற பிரமையை ஏற்படுத்துகிறது. நவீன உலகத்தின் நிழல் கூட படாமல் பாதுகாக்கப்படும் தனிமை. ஆனால் நூறே அடி நடந்து வந்தால் பாதாள ரயிலுக்கான பாதை. இரு மருங்கிலும் நூற்றுக்கணக்கான கண் கூசும் நியான் விளம்பர பலகைகள், விற்கும் உணவை தத்ரூபமாக மெழுகில் செய்து வைத்திருக்கும் உணவகங்கள், உலகின் எல்லா உயர் பிராண்டுகளும் விற்கும் நூற்றுக்கணக்கான கடைகள் இவைகளை கடந்து உள்ளே சென்றால் அதி வேக ரயில்கள். 100 அடி வித்தியாசத்தில் ஒரு அதி நவீன உலகம். ஒரே புனைவில் வரும் இரு வேறு தொடர்பில்லா உலகங்கள் நடுவே பயணிப்பது போன்ற உணர்வு.

tour to moon

நிலவுக்கு மனிதர்களை சுற்றுலா அழைத்துச் செல்லும் திட்டத்தை விரைவில் தொடங்க இருக்கும் அமெரிக்க நிறுவனம் ஒன்று, இரண்டு பேருக்கு 8,250 கோடி ரூபாய் கட்டணமாக வசூலிக்க உள்ளது.

1969ஆம் ஆண்டு ஜூலை 21ஆம் தேதி, முதன் முதலில் நிலாவில் காலடி வைத்தவர் நீல் ஆம்ஸ்ட்ராங்க். நிலவுக்கு மனிதன் சென்று வந்த பின்புதான் அங்கே மனிதன் குடியேற வாய்ப்பே இல்லை என்று தெரிந்தது. அதன் பிறகு, குடியேற வேண்டாம், சும்மா ஜாலியாக சுற்றி வரலாம் என்று திட்டம் போட்டார்கள். அதன் தொடர்ச்சியாக பல ஆய்வுகளை செய்தபின், இப்போதுதான் அதற்கான முழு வடிவம் கிடைத்திருக்கிறது. மக்களுக்கும் நிலாவை சுற்றிப் பார்க்கும் ஆர்வம் குறையவில்லை. எனவே நிலாவுக்கு பயணிகளை சுற்றுலா அழைத்துச் செல்லும் திட்டத்தை தீவிரமாக செயல்படுத்த முடிவெடுத்துள்ளனர்.
 
இப்போது அதை நிறைவேற்ற ‘கோல்டன் ஸ்பைக்’ என்ற நிறுவனம், நிலாவுக்கு சுற்றுலா செல்லும் திட்டத்தைச் செயல்படுத்த போகிறது. இந்த நிறுவனத்தின் தலைவரான கெர்ரி கிரிப்பின், அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி அமைப்பான நாசாவில் பணியாற்றிய அனுபவம் மிக்கவர். அதனால் இவர் தரும் திட்டத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது.

இந்தத் திட்டத்தை செயல்படுத்த, சுமார் 38,500 கோடி ரூபாய் முதலீடு செய்ய வேண்டி இருப்பதால், நிலாவுக்கு பயணம் மேற்கொள்ள இரண்டு பேர்களுக்கு கட்டணமாக ஒன்றரை பில்லியன் டாலர், அதாவது ரூ.8,250 கோடி கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.

இந்தக் கட்டணத்தை செலுத்தி விட்டால் இரண்டு பேர் நிலாவுக்கு பயணம் சென்று, இரண்டு நாட்கள் தங்கி வரலாம். எத்தனை பேர் இந்தப் பயணத்துக்கு முன்வருகிறார்களோ அதன் அடிப்படையில் கட்டணத்தில் சற்று கூட்டவோ, குறைக்கவோ அந்த நிறுவனம் முடிவு செய்துள்ளது. இந்தப் பயணத்தின்போது, விண்ணில் உருவாக்கப்பட்டுள்ள மிதக்கும் சர்வதேச விண்வெளி மையத்துக்கு செல்வதற்காக நாசா உருவாக்கி வரும் ராக்கெட்டுகள், விண்கலங்கள் பயன்படுத்தப்படுகிறது.

இது குறித்து கெர்ரி கிரிப்பின் கூறுகையில், "நிலாவுக்கு வணிக நோக்கில், அதுவும் நியாயமான கட்டணத்தில் நம்பத் தகுந்த விதத்தில் பயணம் ஏற்பாடு செய்வதுதான் எங்கள் நோக்கம்" என்கிறார்.

நிலாவுக்கு முதல் உல்லாசப் பயணம் 2020ஆம் ஆண்டு மேற்கொள்ளப்படுகிறது. நிலாவுக்கு ஒரு முறை உல்லாசப் பயணம் சென்று வந்து விட்டால், அதன்பின்னர் பயணக் கட்டணம் வெகுவாகக் குறையவும் வாய்ப்புள்ளது என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.