Bhoo thatha's Blogspot

Search my older Blog

Wednesday, August 26, 2015

ஜஷ்பூர்

இயற்கை எழில்மிகு ஜஷ்பூர்
 
த்தீஸ்கர் மாநிலத்தின்  வடகிழக்கு பகுதியில், பசுமையான காடுகளுடன், அழகிய நீர் வீழ்ச்சிகளையும் கொண்டு அமைந்துள்ளது ஜஷ்பூர். ஜஷ்பூர் நகர் அமைந்துள்ள நிலத்தின் புவி அமைப்பினைக் கொண்டு உயரமான மலைகளை உடைய பகுதி ஊப்பர் காட் என்றும், சற்று கீழே உள்ள மலைகளை கொண்ட் பீடபூமி பகுதியானது நீச் காட் என்றும் அழைக்கப்படுகின்றன. ஜண்டா காட் மற்றும் பேலாகாட் ஆகிய இரண்டு மலைப்பிரதேசங்களைக் கொண்ட இந் ஜஷ்பூர் மாவட்டத்தின் குன்குரி எனும் இடம் உஷ்ணப் பிரதேசமாகவும், பண்ட்ராபட் எனும் இடம் குளிர்பிரதேசமாகவும் இருக்கின்றன. 
 
பாதல்கோலே சரணாலயம்:
 
ப் மற்றும் டோர்கி ஆகிய ஆறுகளின் கரைப்பகுதியில் அமைந்துள்ளது பாத்ல் கோலே அப்யாரண் சரணாலயம். முழுவது சால் மரங்கள் நிரம்பியுள்ள 
இச்சரணாலயத்தில் தாவர வளமும், காட்டுயிர் வளமும் மிகுந்து காணப்படுகின்றன. இனிமையான பருவநிலை நிலவக்கூடிய இச்சரணாலயத்தில் சிறுத்தை, குரங்கு, கரடி, காட்டுப்புலி, கழுதைப்புலி, ஓநாய், குள்ளநரி போன்ற விலங்குகளுடன் புலம்பெயர் பறவைகளையும் அதிகமாக கண்டு ரசிக்கலாம்.
 
பேல் மஹாதேவ்:
 
ஷ்பூர் நகரத்தில் இருந்து 2 கிலோ மீட்டர் தொலைவில் மலைப்பாங்கான இடத்தில் அமைந்துள்ள குகைக் கோயிலான பேல் மஹாதேவ் கோயில் சிவனுக்காக  அர்பணிக்கப்பட்ட கோயிலாகும்.
 
 
குடியாராணி கி குஃபா:
 
ஷ்பூர் மாவட்டத்தில்  உள்ள முக்கிய வரலாற்று சின்னங்களில் மிகவும் பிரசித்தி பெற்றது இந்த குடியாராணி கி குஃபா என்ற அழைக்கப்படுகின்ற இக்குகை அமைப்புகளாகும். மலைகளில் உருவாகியுள்ள தனித்தன்மையான இக்குகையானது ஜஷ்பூரிலுள்ள பகிச்சா என்ற கிராமத்தில் இருந்து 17 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.
கதீட்ரல் குன்குரி:
சியாவிலேயே இரண்டாவது பெரிய கத்தோலிக்க தேவாலயம் என்று புகழப்படுகின்ற இந்த கதீட்ரல் குன்கிரி தேவாலயம் இரும்பு பட்டைகளால் நிர்மாணிக்கப்பட்டு வித்தியாசமான தோற்றத்துடன் ஏழு தொகுதிகளுடனும் அத்தொகுதிகளுக்கான ஏழு புனிதச் சின்னங்களுடனும் அமைக்கப்பட்டுள்ளது.
ஜஷ்பூர் நீர்வீழ்ச்சிகள்:
ஷ்பூரில் ராஜ்புரி நீர்வீழ்ச்சி, தன்புரி நீர்வீழ்ச்சி, ராணி தஹ் நீர்வீழ்ச்சி, பிரிங்ராஜ் நீர்வீழ்ச்சி, தமேரா நீர்வீழ்ச்சி, குல்லு நீர்வீழ்ச்சி, சுரி நீர்வீழ்ச்சி, பனே நீர்வீழ்ச்சி போன்ற அழகிய நீர்வீழ்ச்சிகளாகும். இவற்றில் ராணி தஹ் நீர்வீழ்ச்சி மற்றும் தன்புரி நீர்வீழ்ச்சி ஆகிய இரண்டும் பசுமையான காட்டுப்பகுதியின் நடுவே ரம்மியமான இயற்கைக் காட்சிகளின் நடுவே வீற்றிருக்கின்றன. குன்குரியிலிருந்து 25 கிலோமீட்டர் தொலைவில் பனே நீர்வீழ்ச்சி உள்ளது. பனே நீர்வீழ்ச்சியை ஒட்டியே குல்லு மற்றும் சுரி நீர் வீழ்ச்சிகளும் அமைந்துள்ளன.
ஸ்னேக் பார்க்:
நாகலோக் என்று அழைக்கப்படுகின்ற ஸ்னேக் பார்க்கானது தப்காரா என்ற இடத்தில் அமைந்துள்ளது. இங்கு இந்திய நாகம், கட்டுவிரியன், ராஜ நாகம் போன்ற பாம்பு வகைகள் போன்றவை பாதுகாத்து வளர்க்கப்படுகின்றன.
Courtesy:"kumudham.com"

No comments: