விதி வலியது"" ::
இந்திரன் மனைவி 'இந்திராணி' ஒரு கிளியை மிகவும் பிரியமாக வளர்த்து வந்தாள்.
ஒரு நாள் அந்த கிளி நோய்வாய்ப்பட்டுவிட்டது. அதை பரிசோதித்த மருத்துவர் இனி அதுபிழைக்காது என்று கூறிவிட்டார்.
உடனே தன் கணவனை அழைத்த இந்திராணி, 'இந்தக் கிளியை எப்படியாவது காப்பாற்றுங்கள். கிளி இறந்துவிட்டால் நானும் இறந்துவிடுவேன்' என்றாள். இந்திரன், 'கவலைப்படாதேஇந்திராணி. நான் உடனே பிரம்மாவிடம் சென்று முறையிடுகிறேன். ஒவ்வொருவர்தலையெழுத்தையும் எழுதுபவர் அவர் தானே? அவரிடம் சென்று கிளியின் தலையெழுத்தை மாற்றிஎழுதி விடுவோம்' என்று சொல்லிவிட்டு , பிரம்மாவிடம் சென்று விஷயத்தை கூறினான்.
விஷயத்தை கேட்ட பிரம்மா, 'இந்திரா, படைப்பது மட்டுமே என் வேலை. உயிர்களை காப்பதுசாட்சாத் மஹாவிஷ்ணுவின் தொழில். நாம் அவரிடம் சென்று உதவி கேட்போம். வா.. நானும்உன்னுடன் வருகிறேன்' என்று இந்திரனை அழைத்துக் கொண்டு மஹாவிஷ்ணுவிடம் சென்றுவிஷயத்தை தெரிவித்தார்.
மஹாவிஷ்ணுவோ, 'உயிர்களை காப்பது நான்தான். ஆனால் உன் கிளி இறக்கும் தருவாயில்இருக்கிறதே! அழிக்கும் தொழிலை மேற்கொண்ட சிவன் பெருமான் தான் அதைக் காப்பாற்றவேண்டும். வாருங்கள். நானும் உங்களுடன் வந்து சிவபெருமானிடம் பேசுகிறேன்' என்றுகிளம்பினார்.
விபரங்களை கேட்ட சிவன், 'அழிக்கும் தொழில் என்னுடையது தான். உயிர்களை எடுக்கும்பொறுப்பை நான் எமதர்மராஜனிடம் ஒப்படைத்துள்ளேன். வாருங்கள்.. நாம் அனைவரும் சென்றுஎமதர்மனிடம் கூறி அந்த கிளியின் உயிரை எடுக்க வேண்டாம் என்று முறையிடுவோம்' என்றுசொல்லி அவர்களை அழைத்துக் கொண்டு எமலோகம் செல்கிறார்.
தன்னுடைய அவைக்கு சிவன், மஹாவிஷ்ணு, பிரம்மா, இந்திரன் ஆகிய நால்வரும் வருவதைகண்ட எமதர்மன் உடனே எழுது ஓடி வந்து வரவேற்கிறார்.
விஷயம் முழுவதையும் கேட்ட அவர், 'ஒவ்வொரு உயிரையும் எந்த நேரத்தில், எந்த சூழ்நிலையில், என்ன காரணத்தால் எடுக்க வேண்டும் என்ற காரணத்தை, ஒரு ஓலையில் எழுதி ஒரு பெரியஅறையில் தொங்க விட்டு விடுவோம். அந்த ஓலை என்று அறுந்து விழுமோ, அன்று அவரின் ஆயுள்முடிந்துவிடும். வாருங்கள்.. அந்த அறைக்குச் சென்று, கிளியின் ஆயுள் ஓலை எது என்று பார்த்து, அதை மாற்றி எழுதிவிடுவோம்' என்று அவர்களை அழைத்துச் செல்கிறார்.
இப்படியாக, இந்திரன், பிரம்மா, விஷ்ணு, சிவன், எம்தர்மன் ஆகிய ஐவரும் அந்த அறைக்குச்சென்றனர். அவர்கள் உள்ளே நுழைந்தவுடன் ஒரு ஓலை அறுந்து விழுகிறது. உடனே அவர்கள்அவசரமாகச் சென்று அந்த ஓலையை எடுத்து பார்க்கின்றனர்.அது அந்த கிளியின் ஆயுள் ஓலை. அவசரமாக அதைப் படித்து பார்க்கின்றனர்.
அதில்,,, "இந்திரன், பிரம்மா, விஷ்ணு, சிவன், எமதர்மன் ஆகிய ஐவரும் எப்போது ஒன்றாக இந்தஅறைக்குள் நுழைகிறார்களோ, அப்போது இந்த கிளி இறந்துவிடும்" என்று எழுதப்பட்டிருந்தது
-------
ராமநாம மகிமை
ராம நாமத்தின் சிறப்புக்களை கம்பர் மிக அழகாகச் சொல்லி வைத்திருக்கிறார். ‘ராமா’ என்று ஒரு முறை சொன்னால் நன்மை கள் அத்தனையும் வந்து சேரும். ஒரு வில், ஒரு இல், ஒரு சொல் என்று வாழ்ந்த ராமனுக்கு, நாம் பெருமை சூட்டி ராம நாமத்தை உச்சரித்தால் பூமகளின் அருள் நமக்குக் கிடைக்கும்.
‘நன்மையும் செல்வமும் நாளும் தங்குமே,
தின்மையும் பாவமும் சிதைந்து தேயுமே
சென்மமும் மரணமும் இன்றித் தீயுமே,
இம்மையில் ராமா என்ற இரெண்டெழுத்தினால்’
என்பது கம்பர் வாக்கு.
பிரகாரம் சுற்றும் பலன்கணபதிக்கு ஒரு பிரகாரம், சூரியனுக்கு இரண்டு பிரகாரம், சிவனுக்கும், அம்பிகைக்கும் மூன்று பிரகாரம், விஷ்ணு, லட்சுமி தேவிக்கு நான்கு பிரகாரம் சுற்றி வலம் வர வேண்டும். அரச மரத்திற்கு ஏழு பிரகாரம் சுற்றி வருவது சிறந்த பலனைத் தரும். குடும்பத்தோடு பிரகார வலம் வரும்போது, கணவன் முதலாவதாகவும், மனைவி இரண்டாவதாகவும், பிள்ளைகள் மூன்றாவதாகவும் வரவேண்டும். எக்காரணத்தைக் கொண்டும் கணவனை முந்திக்கொண்டு மனைவி பிரகார வலம் வரக்கூடாது.
தெற்கு திசை தெய்வம்எந்த தெய்வத்தை எந்த திசையில் வைத்து வழிபட வேண்டும் என்று சாஸ்திர நியதி இருக்கின்றது. அந்தத் திசையில் வைத்து வழிபட்டால் அற்புதமான பலன் கிடைக்கும். நடராஜர் படமும், குரு தட்சிணாமூர்த்தியின் படமும் தெற்கில் பார்க்கும் விதத்தில் வைத்து வழிபட்டால் தான் சிறப்பான பலன்களை நீங்கள் காண முடியும். துளசி மாடம் அமைக்கும்போது கிழக்கு பக்கம் நின்று, மேற்கு பார்த்தபடி பூஜை செய்வது நல்லது. துளசியை வழிபட்டால் வளர்ச்சி கூடும்.

----
------
No comments:
Post a Comment