வள்ளுவர் கூறும் ‘சாவா மருந்தை’ (’அமிர்தம்’) வைஷ்ணவ வியாக்கியானகாரர்கள் ‘உப்புச் சாறு’ என்பார்கள். இங்கு ஏற்றம் உப்புக்குத்தான். அவ்வளவு முக்கியமானது உப்பு. ஏழை,பணக்காரன் என்றில்லாமல் அனைவர் உணவிலும் இருந்து அமைய வேண்டிய நிலையில், ஜனநாயக அந்தஸ்து பெறும் பண்ட ம் உப்பு.
இந்தியாவைப் பொருளாதார ரீதியாகச் சுரண்டி அரசியியல் ஆதிக்கம் பெற ஒரு முக்கிய பொருளாக உப்பைக் கருதியது,18.19ம் நூற்றாண்டுகளில் இந்தியாவில் ஆட்சிச் செலுத்திய ஆங்கிலேயக் கிழக்கிந்திய கம்பனி. அப்பொழுதைய இந்தியாவின் சிந்த் மாநிலத்தினின்றும் ஒரிஸா மாநிலம் வரை, வடகிழக்கு இந்தியாவில் 2504 மைல் தூர அளவில், ஒரு கல், மண், உலர்ந்த செடி கொடிகள் அடர்ந்த மாபெரும் புதர் வேலி எழுப்பி, அந்த எல்லைக்குள் உப்பைப் பதுக்கி வைத்து, காவல் காத்து, விற்பனை வரி விதித்து,, கடத்தல் விவகாரங்களில், தண்டனையாகவும், லஞ்சமாகவும் ஏராளமான பணம் பெற்றும், கொள்ளை அடித்து, 157ல் லண்டனிலிருந்து, நேரடியான ஆங்கில அரசாட்சிக்கு வழி வகுத்தனர் கிழக்கிந்திய கம்பனி நிர்வாகிகள். ஆனால், இதே உப்புதான், இந்தியாவிலிருந்து ஆங்கில ஆட்சியை விரட்டுவதற்கும், மகாத்மா காந்தியின் தலைமையில் அடிகோலியது என்பதுதான் நகைமுரண்.
Courtesy:indhra partasarathi
No comments:
Post a Comment