அமெரிக்கா சிநேகிதிகள் எல்லோரும் சேர்ந்து பேரி ஷவர் கொண்டாடினார்கள்.
பெண் கர்ப்பமாக இருக்கும்போது எட்டாவது அல்லது ஒன்பதாவது மாதத்தில், அவனது நெருங்கிய சிநேகிதிகள் சேர்ந்து இதைக் கொண்டாடுகிறார்கள். ஒருவருக்கொருவர் தொலைபேசியின் மூலம் பேசி வார இறுதி நாளன்று (சனிக்கிழமை) விழாவுக்கு ஏற்பாடு செய்வார்கள். ஒவ்வொருவரும் ஓர் உணவு வகையைத் தயாரித்துக் கொண்டு வருவார்கள். ஆனால் விழா நாயகிக்கு மட்டும் விவரம் சொல்லமாட்டார்கள்.
குறிப்பிட்ட நாளன்று என்லோரும் விழா நடக்கும் சிநேகிதியின் வீட்டில் கூடிவிடுவார்கள். குழந்தை பிறப்பதற்கு முன்னே என்ன குழந்தை என்று தெரிந்து விடுவதால் ஆணாக இருந்தால் நீலக்கலர் பலூன்களும் பெண்ணாக இருந்தால் பிங்க் கலர் பலூன்களும் கட்டித் தொங்கவிடுவார்கள்.
பார்ட்டி நடக்கும் சிநேகிதியின் வீட்டுக்கு கர்ப்பமாக இருக்கும் அந்தப் பெண்ணை அவளது கணவரோடு ஏதாவது ஒரு காரணத்தைச் சொல்லி அழைத்து வருவார்கள். அவர்கள் கதவைத் தட்டி உள்ளே நுழைந்ததும் அத்தனை பேரும் கைதட்டி வரவேற்பது கண்கொள்ளாக்காட்சியாக இருக்கும்.
கேக் வெட்டி டின்னர் சாப்பிட்டு கேம்ஸ் விளையாடி என்று உற்சாகமாக அன்றைய நேரம் கழியும். பிறக்கப்போகும் குழந்தைக்குத் தேவையான பொருள்களாக பார்த்துப் பார்த்துப் பரிசளிப்பார்கள்.
கர்ப்பிணிப் பெண், பிரசவத்துக்கு முந்தைய மாதங்களில் மனநிம்மதியாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்க வேண்டும் என்று சொல்வார்கள். இதைச் செயல்படுத்தும் விதமாகவே இந்த பேபி ஷவர் நிகழ்ச்சி இருக்கிறதென்று சொல்லலாம்.
அமெரிக்காவில் இருக்கும் பெண்கள் எல்லோருக்குமே பிரசவத்தின் போது பெற்றோர்கள் உடனிருப்பார்கள் என்று சொல்ல முடியாது. அவர்களுக்கு இந்த மாதிரியான அன்புப் பரிமாறல்கள் கண்டிப்பாகப் புத்துணர்ச்சியையும், பக்கபலத்தையும், மனநிறைவையும் கொடுக்கிறதென்றால் அது மிகையாகாது!
நன்றி; மங்கையர் மலர்
Search my older Blog
Thursday, January 7, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment