பாலைத் தயிராக மிக சீக்கிரமே உறைய வைக்கும் புதுவிதமான பாக்டீரியா ஒன்றை விஞ் ஞானிகள் கண்டுபிடிக்கிறார்கள். ஒரு நிமிடத்தில் இரண்டாகப் பெருகும் தன்மையுடையது அந்த பாக்டீரியா. மதியம் 12 மணிக்கு ஒரே ஒரு பாக்டீரியாவைப் பாலில் விடுகிறார்கள். சரியாக 12.43 மணிக்கு (அதாவது 43 நிமிடங்கள் கழித்து) பாலில் பாதி அளவு தயிராக உறைந்திருந்தது. அப்படி என்றால் பால் முழுவதும் எத்தனை மணிக் குத் தயிராகும்?
- ழி
4) செவ்வக வடிவத்தில் ஒரு வீடு கட்டப்பட்டு இருக் கிறது. அந்த வீட்டின் எல்லாப் பக்கங்களும் தெற்கு நோக்கியே அமைந்திருக்கின்றன. அந்தப் பக்கமாக ஒரு கரடி சென்றுகொண்டு இருக்கிறது. அந்தக் கரடியின் நிறம் என்ன?
-
5) ஒரு டன் தங்கம், ஒரு டன் பஞ்சு. இரண்டில் எது அதிக கனமானது?
6) ஒருவரை நான் 1983-ம் ஆண்டு ஏதோ ஒரு மாதத்தில், ஒரு தேதியில், மதிய வேளையில் சந்தித்தேன். அப்போது தனது வயது 22 என்றார். அதே நபரை எனது நண்பர் ஒருவர் 1987-ம்ஆண்டு மாசி மாதம் பத்தாம் நாள் நடுநிசியில் சந்தித்த போது தனது வயதை 18 என்று கூறியுள்ளார். ஆனால், அந்த நபர் பொய் சொல்லவில்லை. அது எப்படி?
-
7) பதினொன்றோடு இரண்டைச் சேர்த்தால் ஒன்றாகும். எப்படி?
ம்
8) ஒரு சட்டபூர்வமான கேள்வி: ஒருவர் தனது விதவை மனைவியின் தங்கையை மணப்பதற்குச் சட்டத்தில் இடம் உண்டா?
மார்
விடைகள்
3) 12.44க்கு. 12.43க்குப் பாலில் பாதி தயிராகியிருந்தது. அதிலிருந்த ஒவ்வொரு பாக்டீரியாவும் இரண்டாகப் பெருகியதில், அடுத்த ஒரு நிமிடத்திலேயே பால் முழுவதும் தயிராகிவிடும்!
4) வெள்ளை. ஏனென்றால், எல்லாப் பக்கங்களுமே தெற்கு நோக்கி அமைந்திருக்கும் வீட்டை வட துருவத்தில்தான் கட்ட முடியும். அந்த வெள்ளை நிறக் கரடி, ஒரு துருவக் கரடி!
5) இரண்டும் ஒரே அளவு கனமானவையே. ஒரு டன்!
6) அது கி.முவில் நடந்த சந்திப்பு!
7) பதினோரு மணியோடு இரண்டு மணி நேரத்தைக் கூட்டினால் ஒரு மணிதானே வரும்!
8) விதவை மனைவி என்றாலே, அந்தக் கணவன் இறந்தவனாகிறான். ஆகவே நோ சான்ஸ்!
|
|
|
|
|
No comments:
Post a Comment