Bhoo thatha's Blogspot

Search my older Blog

Tuesday, January 26, 2010

REPUBLIC DAY AT PONDICHERRY


இந்திய குடியரசு தினவிழா கோலாகலம்









புதுவையில் இன்று நடைபெற்ற குடியரசு தினவிழாவில் துணைநிலை ஆளுனர் இக்பால்சிங் தேசியக்கொடியேற்றி காவலர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.

புதுவை அரசு சார்பில் 61வது இந்திய குடியரசு தினவிழா உப்பளம் இந்திரா காந்தி விளையாட்டு மைதானத்தில் கொண்டாடப்பட்டது. இதனையொட்டி இன்று காலை நடைபெற்ற விழாவில் துணைநிலை ஆளுனர் இக்பால் சிங் தேசிய கொடியேற்றினார். இதனை தொடர்ந்து காவலர்கள் அணிவகுப்பு மரியாதையை அவர் ஏற்றுக் கொண்டார்.

இதன்பின்னர் காவல் துறை, கல்வித்துறை உட்பட பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கியவர்களுக்கு விருதுகள் மற்றும் கேடயங்களை வழங்கினார். இதில் முதல்வர் வைத்திலிங்கம், அமைச்சர்கள் வல்சராஜ்,ஷாஜகான், கந்தசாமி, நமச்சிவாயம் , ராஜ்யசபா உறுப்பினர் கண்ணன், சட்டமன்ற உறுப்பினர்கள் , பல்வேறு கட்சித் தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

இதனை தொடர்ந்து காவல் துறை, ஊர்க்காவல் படை, ஆயுத படை, ஐ.ஆர்.பி பட்டாலியன்,முன்னாள் ராணுவ வீரர்கள், என்.சி.சி, என்.எஸ்.எஸ் மற்றும் பல்வேறு பள்ளி மாணவ, மாணவிகளின் அணிவகுப்பு மரியாதையை துணைநிலை ஆளுனர் இக்பால்சிங் ஏற்றுக் கொண்டார்.

இதன்பின்னர் அரசு துறைகளின் சாதனைகள் மற்றும் பணிகள் தொடர்பான அலங்கார வண்டி ஊர்வலம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடந்தன.

இந்நிகழ்ச்சியில் டிஜிபி வர்மா, டிஐஜி சிங், சீனியர் எஸ்பிக்கள் ஸ்ரீகாந்த், சிந்துப்பிள்ளை மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். குடியரசு தினவிழா காரணமாக உப்பளம் மைதானத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. மேலும் குடியரசு தினவிழா முடியும் வரை கடற்கரை சாலையில் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது.

No comments: