அவரைக்காய் மொச்சைக் கறி
தேவையான பொருள்கள்:
அவரைக்காய் - லி கிலோ,
பச்சை மொச்சைப் பயறு- 100 கிராம்,
மிளகாய் வற்றல் -6,
பெருங்காயம் - லி ஸ்பூன்,
துவரம் பருப்பு - 100 கிராம்,
கடுகு, சீரகம் - 1 தேக்கரண்டி,
உப்பு, கறிவேப்பிலை, எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை:
அவரைக்காயைப் பொடியாக நறுக்க வும். கடுகு தாளித்து, நறுக்கிய அவரைக் காயையும், மொச்சைக் காயையும் சேர்த்து, உப்புப் போட்டு சிறிதளவு தண்ணீர் தெளித்து வேகவிடவும். அரை மணி நேரம் ஊறிய துவரம் பருப்புடன், பெருங்காயம், வர மிளகாய், சிறிதளவு உப்பு போட்டு சீரகத்தையும் சேர்த்துக் கரகரப்பாக அரைத் துக் கொள்ளவும்.
தேவையான அளவு எண்ணெய் விட்டு பருப்புக் கலவையைச் சுருள வதக்க, நன்றாக வெந்து, உதிர் உதிராக ஆகிவிடும். பிறகு அதனுடன் காய்கறிக் கலவையையும் சேர்த்து வதக்கவும். கறிவேப்பிலை போட்டு உதிரான பருப்பு உசிலியை இறக்கவும்.
மிக மிக மணமுள்ள, ருசியுள்ள அவரைக்காய் மொச்சைக் கறி தயார்!
வாழைக்காய் கறி
தேவையானவை:
பெரிய வாழைக்காய் - 2,
புளிக் கரைசல் - சிறிதளவு,
மிளகாய் வற்றல் - 3,
கடலைப் பருப்பு - 1 மேசைக்கரண்டி,
பெருங்காயம் - 1 துண்டு,
வறுத்துப் பொடித்த வேர்க்கடலை- 2 மேசைக்கரண்டி,
கடுகு - தாளிக்க,
எண்ணெய் - 2 மேசைக்கரண்டி,
உப்பு, கறிவேப்பிலை,
மஞ்சள் தூள் - தேவையான அளவு
செய்முறை:
வாழைக்காயைத் தோல் சீவி, துண்டுகளாக நறுக்கி, மூழ் கும் அளவு தண்ணீர் விட்டு, மஞ் சள் தூள், உப்பு, புளிக்கரைசல் இவற் றைச் சேர்த்து வேகவிடவும். சிறிதளவு எண்ணெய் விட்டு, பெருங்காயம், மிள காய், கடலைப் பருப்பு சேர்த்துச் சிவக்க வறுத்துக் கரகரப்பாகப் பொடிக்கவும்.
வாணலியில் தாளித்து, தண்ணீர் போக வடித்த வாழைக்காயைப் போட்டு நன்றாக வதக்கவும். பிறகு பொடித்த மசாலா, வேர்க் கடலைப் பொடி இவற்றைப் போட்டு மிதமான தீயில் மொறுமொறுப்பாக வரும் வரை வதக்கவும். இறக்கும்போது கறிவேப் பிலையைக் கிள்ளிப் போட்டு, இரண்டு டீஸ்பூன் தேங்காய் எண்ணெய் சேர்த்தால் சுவையும், மணமும் கூடும்.
வாழைக்காய்ப் பொடி
வாழைக்காயை அடுப்பில் சுட்டு, தோல் உரித்து, துருவிக் கொள்ளவும். மிள காய் வற்றல், துவரம் பருப்பு, பெருங்கா யம், உளுத்தம் பருப்பு, கடுகு, இவற்றை வறுத்துப் பொடி செய்து கொள்ளவும். பிறகு, உப்பு கலந்து, உதிர்த்த காயுடன் கலந்துவிட சூப்பர் வாழைக்காய்ப் பொடி தயார்! இவற்றைச் சாதத்தில் கலந்து சாப்பிடலாம்.
கத்தரிக்காய் கடலை மாவுக் கறி
தேவையானவை:
பிஞ்சுக் கத்தரிக்காய் - லீ கிலோ,
பெரிய வெங்காயம் - 2,
வெல்லப் பொடி - 1 டீஸ்பூன்,
கடலை மாவு - 2 டேபிள் ஸ்பூன்,
புளி, உப்பு, எண்ணெய், மசாலாப் பொடி, கறிவேப்பிலை - தேவையான அளவு.
செய்முறை:
இந்தக் கறிக்கு செந்நிற கத்தரிக்காய் நன்றாக இருக்கும். நீளவாட் டில் காயை நாலாகப் பிளக்கவும். காம்பை நீக்கி, தண்ணீரில் போடவும்.
வெங்காயத்தை நீளவாட்டில் சற்று கனமாக நறுக்கவும். பின், அடிகனமான வாணலியில் அரை தேக்கரண்டி எண் ணெய் விட்டு, காய்ந்தபின் தாளித்து கத்தரிக்காய், வெங்காயம் போடவும். பிறகு மசாலாப் பொடி சேர்த்து, தேவையான உப்பு, கெட்டியா கக் கரைத்த புளி சிறிது, வெல்லப் பொடி ஒரு டீஸ்பூன் போட்டு கிளறி மூடிவைக்கவும்.
கத்தரிக்காய் வெந்த பிறகு இரண்டு டேபிள் ஸ்பூன் கடலை மாவு தூவி, கறிவேப்பிலை சேர்க்கவும். மாவு பொரிந்து காயில் ஒட்டிக் கொள்ளும். சூடான சாதத்துக்கு நன்றாக இருக்கும். நல் லெண்ணெயில் செய்தால் சுவை கூடும்.
குறிப்பு: கடலை மாவுக்குப் பதிலாக உடைத்த கடலையைப் பொடி செய்தும் போடலாம். சுவை கூடும்!
பரங்கிக்காய் வெல்லக் கறி
தேவையானவை :
மஞ்சள் பரங்கிக்காய் - லீ கிலோ,
வெல்லம் - 100 கிராம்,
சிட்டிகை உப்பு, கடுகு - 1 டீஸ்பூன்,
வெந்தயம் - லீ டீஸ்பூன்,
சிவப்பு மிளகாய் வற்றல்,
பச்சை மிளகாய் - தலா 2,
தேங்காய்த் துருவல் - 1கப்,
கறிவேப்பிலை - சிறிதளவு,
நெய் - 2 டீஸ்பூன்.
செய்முறை:
பரங்கியைத் தோல் சீவி, பெரிய துண்டுகளாக நறுக்கவும். தேவை யான அளவு தண்ணீர் வைத்து, கொதித்த தும் காய்களைப் போட்டுக் குழையாமல் வேகவிடவும். வாணலியில் நெய் விட்டு, கடுகு, வெந்தயம், சிவப்பு மிளகாய் நறுக் கிய பச்சை மிளகாய், கறிவேப்பிலை போட்டு வதக்கவும். வேகவைத்த பரங்கிக் காய், உப்பு, வெல்லத் துருவல், தேங் காய்த் துருவல் அனைத்தையும் போட்டு புரட்டவும். வெல்லம் உருகி காயுடன் சேரும் வரை வதக்கி இறக்கவும்.
நன்றி;கல்கி வார இதழ்
Search my older Blog
Tuesday, January 5, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment