Bhoo thatha's Blogspot

Search my older Blog

Friday, January 29, 2016

தினம் ஒரு சிறுதானியம் - வரகு கஞ்சி

தினம் ஒரு சிறுதானியம் - வரகு கஞ்சி
Courtesy vikatan e magazine

பண்டை தமிழர்கள் உட்கொண்டு வந்த வரகு, தற்போது செட்டிநாட்டுப் பகுதியில் அதிகமாகப் பயன்படுத்தப்படுகிறது. வரகின் பலன்களையும், சத்துக்களையும் உணர்ந்து வரகில் அப்பம், வெல்லப் பணியாரம், கஞ்சி என வெரைட்டியான உணவுகளைச் சமைக்கின்றனர். அரிசி உணவைக் காட்டிலும் வரகு தானியத்தின் மூலம் உடலுக்குக் கூடுதல் வலுவைக் கூட்டலாம்.

பலன்கள்
நார்ச்சத்து மிக அதிகம். மாவுச்சத்தும் குறைந்த அளவே இருப்பதால் ஆரோக்கியத்துக்கு நல்லது. புரதம், கால்சியம், வைட்டமின் பி, தாது உப்புக்கள் நிறைய உள்ளன. விரைவில் செரிமானம் அடைவதுடன், உடலுக்குத் தேவையான சக்தியைக் கொடுக்கும். தினமும் வரகு, பூண்டு பால் கஞ்சியை அருந்துவதன் மூலம், நோய்களை விரட்டலாம். உடலைத் திடகாத்திரமாக வைத்திருக்கலாம்.

வரகு கஞ்சி
சுத்தம் செய்த கால் கப் வரகு அரிசியை ஒரு டம்ளர் தண்ணீரில் வேக வைக்கவும். பாதி அளவு வெந்ததும், உரித்த பூண்டு பல் 10, ஒரு துண்டு சுக்கு, கால் டீஸ்பூன் சீரகம், வெந்தயம், ஒரு டம்ளர் பால் சேர்த்து வேகவிடவும். நன்றாக வெந்ததும் தேவையான உப்பு சேர்த்துக் கலக்கி இறக்கவும்.

No comments: