Thiruppaavai Swarna Vimanam,Srivilliputhur Andal sannidi..Select fotos of the Vimanam after Mahasamprokshanam. On 20-1-2016 Wednesday( Purely incidentally,it is made of 78 kgs of gold).-----On, January 16 2016, Manmadha Varusha Thai Revathi; Kanu Utsava celebration took place in a grand manner at Sri Bhuvarahaswamy Temple, Srimushnam. On this occasion, in the morning Visesha Thirumanjanam for Sri Godha devi sametha Sri Yagya Varaha Perumal followed by asthanam at mandapam . In the evening Ul prakara purappadu took place inside the temple premises. Many astikas participated in the Kanu Utsava thirumanjanam and had the blessings of Sri Bhuvaraha perumal and Sri Andal.கோதா தேவி ஸமேதராய் ஸ்ரீ யக்ஞய வராஹனுக்கு கனு உத்ஸவ திருமஞ்சனம்இந்த பதிவின் நோக்கம் பகவானுக்கு தூய உள்ளம் மட்டுமே தேவை என்பதை காட்டவே:
ஸ்ரீராமனது திருமணம் வெகு விமரிசையாக நடந்தது பற்றி அனைவரும் அறிவோம். அகிலம் போற்றும் ஸ்ரீ ராமன் தசரத ராமனாக விச்வாமித்ரருடன் சென்று சீதா ராமனாக மிதிலையிலிருந்து அயோத்தியை வந்து அடைந்தார். அயோத்தியே கோலாகலமாக திகழ்ந்தது. எல்லோரும் ராமனை தங்கள் வீட்டு பிள்ளையாகவே பாவித்தது தெரிந்த கதைதான். அயோத்தியை நன்கு அலங்கரித்தனர். ஸ்ரீ ராமானும் சீதையும் அயோத்தி வந்ததிலிருந்து தினம் தினமும் அயோத்திவாசிகள் எல்லோரும் ஒருவர் பின் ஒருவராக சீதா சமேத ராமனை நேரில் சந்தித்து பரிசு பொருட்களை கொடுத்து வாழ்த்தினர். மித்ரபந்து என்ற ஒரு காலணி தயாரிக்கும் நபர் தன்னுடைய திறமையை எல்லாம் காட்டி ஒரு மரத்தால் ஆன சிறந்த பாதுகையை தயாரித்து ஸ்ரீ ராமனுக்கு அன்பளிப்பாக வழங்க காத்திருந்தான். அவன் செய்த அந்த மரத்தால் ஆன காலணி மிக நேர்த்தியாக அருமையான வேலைபாட்டுடன் காண்போர் மனதை கவரும் வண்ணம் இருந்தது. இதற்கு அவனும் அவனது மனைவியும் ஐந்து ஆறு நாட்கள் கடுமையாக உழைத்தனர். மித்ரபந்துவிற்கு மிகவும் பெருமை தனது தயாரிப்பான காலணியை பற்றி. மித்ரபந்து அதிக ஆசை இல்லாத ஒரு மனிதன். தனது பொருள்களுக்கு குறைந்த அளவே லாபம் வைத்து அதுவும் அவனது குறைந்தபட்ச தேவையை பூர்த்தி செய்யும் அளவிற்கே வியாபாரம் செய்து வந்தான். அதனால்தான் அவனிடம் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு பணமோ உடமையோ கிடையாது. இருந்தாலும் ராமன் மேல் கொண்ட அன்பினால் தன்னிடம் இருந்த ஒரு உயர் ஜாதி மரத்தை கொண்டு நேர்த்தியான காலணி ஜோடியை செய்து மிக பவ்யமாக எடுத்து சென்று ஸ்ரீ ராமனுக்கு அர்பணிக்க வரிசையில் காத்திருந்தான் வரிசை மெதுவே நகர முன்னும் பின்னும் உள்ளோர் ஏராளாமான விலை மதிக்க முடியாத பொருள்களை சமர்பிக்க உள்ளதை கண்டான். அவன், எல்லோரும் பல நல்ல நல்ல அருமையான பொருள்களை வழங்க தான் மட்டும் ஒரு காலணியை போயும் போயும் ஒரு மர காலணியை கொடுக்க வேண்டியுள்ளதே என்று மனம் வருந்தினான். அவன் ஸ்ரீ ராமனின் மேடையை அணுக இருந்த சமயம் தனது முடிவை மாற்றிக் கொண்டு வரிசையில் இருந்து விலக எத்தனித்தான். அதை கண்ட எல்லோரது தாபங்களையும் போக்குவதற்கே அவதாரம் எடுத்த அண்ணல் ஸ்ரீ ராமபிரான், மித்ரபந்துவை அன்புடன் அழைத்து, ' என்ன! உனது அன்பளிப்பை ஏற்க அடியேனுக்கு தகுதி இல்லையா? ஏன் மேடை வரை வந்து திரும்புகிறாய்? என மதுரமான குரலில் கேட்டார். உடனே, மித்ரபந்து மிகவும் பதறியவனாய் "அண்ணலே, பரம்பொருளே "என்ன அபாச்சரம் செய்துவிட்டேன் தங்களிடமிருந்து இப்படி ஒரு வார்த்தை வர. எல்லோரும் விலையுயர்ந்த அன்பளிப்பை கொடுக்கும் போது நான் மட்டும் போயும் போயும் ஒரு காலனியை கொண்டு வந்தேனே என்றுதான் வெட்கி திரும்பினேன் என்றான். உடனே ஸ்ரீ ராமன், 'எங்கே காட்டு அந்த காலணியை என்றவாறு அதை தன் கரங்களில் வாங்கி அதை பார்த்தார். சீதே! பார்த்தாயா எப்படி ஒரு நேர்த்தியான அழகான காலணி என்று சீதியிடம் காட்டினார். சீதையும் அகம் மகிழ்ந்து இது போன்ற ஒரு காலணியை மிதிலையிலும் பார்த்ததில்லை என்றாள். மித்ரா இதையா அற்ப பொருள் என்றாய். "உண்மையான உழைப்பில் உதித்த உன் பரிசுதான் உயர்ந்தது' எனக் கூறி பாதுகைகளை ஏற்றுக்கொள்ள, மித்ரபந்து மகிழ்ந்து போனான். மயன் போன்ற தேவனாலும் இதை இவ்வளவு அழகாக செய்ய முடியாது. இதை நான் இப்போதே அணிந்து கொள்கிறேன் என்று அணிந்து கொண்டார்.அந்த சமயம் ஒரு பரபரப்புடன் கூடிய கூச்சல் எழுந்தது. அனைவரின் கவனத்தையும் ஈர்த்தவாறு ஒருவர் ஒரு யானையின் தந்தத்தால் செய்த ஒரு பேழையை நல்ல பட்டு வஸ்திரத்தால் மூடி ராமன் இருந்த மேடையில் ஏறினார். அங்கெ தசரத மகாராஜா வந்தவரை அன்புடன் அழைத்து ராமனுக்கு அருகில் சென்றார். அந்த மனிதர் யார் தெரியுமா? தசரதனுக்கு வாசனை திரவியங்களை விற்கும் ஒரு வணிகன்.ராஜங்கத்திர்க்கே வாசனை திரவியங்கள் கொடுப்பவர் அதுவும் தசரத மகாராஜவிர்க்கே கொடுப்பவர் எனறால் சொல்லவேண்டுமா அவர் எவ்வளவு பெரிய வணிகன் என்று. வணிகனும் அண்ணலிடம் பேழையை திறந்து காட்ட அதில் தங்கத்தால் ஆன ஒரு ஜோடி காலணி இருந்தது. அதில் வைரங்களும், வைடூரியங்களும் ரத்தினங்களும் மரகத கற்களும் நேர்த்தியாக உயர்ந்த வேலைப்பாட்டுடன் காண்போர் மனதையெல்லாம் கொள்ளைக் கொள்ளும் அளவிற்கு இருந்தது. தசரதன் பெருமையுடன் அந்த வணிகனிடம் தன் பாராட்டை சொல்லி அதனை ராமனிடம் காண்பிக்க ராமனும் அதை கண்டான். அப்போது அந்த வணிகன் தசரதனிடம், ' இதை செய்ய நான்கு தோலா தங்கமும் விலையுயர்ந்த வைர வைடூரியங்களை மேலை நாடுகளில் இருந்து வரவலைத்ததையும் கூறினான். தசரதன் அங்கிருந்த கரூவூல அதிகாரியை கூப்பிட்டு இந்த விலை உயர்ந்த பொருளை பொக்கிஷத்தில் சேர்த்து அதை கவனமுடன் கண்காணிக்குமாறு உத்தரவிட்டான். அந்த காலணி அங்கிருந்து சென்றதும், வணிகனுக்கு தக்க சம்பாவனைகளை செய்து தசரதன் அனுப்பி வைத்தான்.மேடையில் ஒரு ஓரத்திலிருந்து இதையெல்லாம் பார்வையிட்ட மித்ரபந்துவும் வருத்தத்துடன் கிளம்பினான். உடனே அண்ணல், மித்ரபந்துவை கூப்பிட்டு, மித்ரா வருந்தாதே! நீ கொடுத்து நான் அணிந்திருக்கும் இந்த காலணி ஒரு நாள் உலக புகழ் பெரும் என்று சொல்லி அவன் வாட்டத்தை போக்கி அனுப்பி வைத்தான். ராமன் வாக்கு என்றும் பொய்த்ததில்லையே! சத்தியமே உருவானவன் அல்லவா அண்ணல்.இந்த நிகழ்ச்சிக்கு பின் சீதையும் ராமரும் அரண்மனையில் ஆதர்ஷ தம்பதிகளாய் இருந்து வந்தனர். காலங்கள் உருள, ராமனுக்கு பட்டாபிஷேகம் குறிக்கப்பட்டது அதன் பின் பட்டாபிஷேக நின்றதை எல்லாம் எல்லோரும் அறிவீர்தானே. அடியேனுக்கு அதை விவரிக்க மனம் திடமாக இல்லையே.ராமனை கைகேயி கூப்பிட்டு கானகம் செல்ல உத்தரவிட்டதையும் அனைவரும் அறிந்ததே. அந்த சமயம் கைகேயி, "ராம நீ கானகம் செல்ல ஏற்ற உடையை தருகிறேன் என்று மர உரியையும் மித்ரபந்து கொடுத்த அந்த காலணியையும் தருகிறாள். ராமனும் அந்த காலணியை வாஞ்சையுடன் பார்க்கிறான்.மரவுரி ஏற்ற ராமன் நகரத்தை விட்டு கிளம்புகிறான். ராமன் கானகம் செல்லுகிறான் என்ற செய்தியை கேட்ட நகர மாந்தார் எல்லோரும் ராமன் செல்லவிருக்கும் வீதியில் கவலை தோய்ந்த முகத்துடனும் துக்கத்துடனும் காத்திருக்கின்றனர். அதில் நம் மித்ரபந்துவும் ஒருவன். அண்ணலின் பாதங்களில் அவன் அளித்த அந்த காலணி . துக்கம் தாங்காமல் அண்ணலே! தாங்கள் கானகம் செல்லவா இந்த துர்பாக்கியசாலியின் காலணி பயன்பட வேண்டும் என விம்புகிறான். கண்ணீருடன் நின்ற மித்ரபந்துவை பார்த்து, "விலை உயர்ந்த பரிசுகள் எனக்குப் பயன்படவில்லை. உன்னுடைய பாதுகைகள்தான் கல்லும், முள்ளும் குத்தாமல் காக்கப் போகிறது' என்றார் அண்ணலும் மெளனமாக அன்றலர்ந்த தாமரை மலர் போன்ற முகத்துடன் சீதை லக்ஷ்மனனுடன் கானகம் ஏகினான்.
பரதன் கேகேய நாட்டிலிருந்து திரும்பி வந்து அரசுரிமை ஏற்க மறுத்ததை இவையகம் அறிந்த ஒன்றுதானே . பரதனும் குல குரு வஷிஸ்டர், மற்றும் மறை ஓதும் வேதியர் சூழ கானகம் சென்று ராமனை மீண்டும் அயோத்தி வர விண்ணப்பிக்கிறான். அண்ணலும் தனது தாய் தந்தையின் கட்டளையை மதிக்க உள்ள சூழ்நிலையை எடுத்துக் கூற, பரதன் '"என் உயிருனும் மேலான அண்ணலே நீரே என் தந்தை, நீர் பதினான்கு ஆண்டுகள் காலம் வனவாசம் முடித்து அயோத்தி திரும்பும் வரை தங்களின் பாதுகையை சிம்மாசனத்திலே அமர்த்தி அதன் பிரதிநிதியாய் அயோத்தியின் வெளியில் உள்ள நந்தி கிராமத்தில் ஆட்சி புரிவேன் என்று அண்ணலின் பாதுகையை தனது சிரத்திலே தாங்கி ஊர் திரும்பினான். அந்த பாதுகைதான் 14 ஆண்டுகள் இவ்வுலகை ஆண்டது. அதுதான் மித்ரபந்துவின் அன்பளிப்பாக கொடுத்த காலணி .
அன்பர்களே! ஆண்டவன் என்றுமே ஆடம்பரத்தை விரும்புபவன் அல்ல ! அவன் விரும்புவதல்லாம் தூய பக்தியுடன் கூடிய உள்ளமே. நீவிர் கொடுக்கும் ஒரு துளசி தளமோ அல்லது ஒரு உத்தரணி நீரோ போதும். தூய உள்ளத்தை சமர்ப்பியுங்கள் அவன் உமது இதய சிம்மாசனத்திலே நிச்சயம் அமர்வான். அவனுக்கு பெரிய சங்கீத கலா பூஷனங்களின் கீர்த்தனைதான் வேண்டும் என்றில்லை.நீவிர் அன்புடன் அவனை அவனது நாம ஜெபத்தால் பூஜித்தால் போதும். உமது குரல் எப்படி இருப்பினும் அவனை உள்ளன்போடு பஜனை பஜனை பாட்டு பாடி கூப்பிட்டால் போதும் ஓடி வருவான் உமது இதய சிம்மாசனத்தில் அமர.
ஒரு சமயம் பீமன் ஒரு துக்கத்தினால் தூக்கம் வராமல் பகவான் மீது பாட்டு பாடினான். கர்ண கொடூரமான குரல். நகரத்தில் உள்ளோர் தூக்கம் போக காதுகளில் பஞ்சை வைத்துக் கொண்டார்கள். தருமன், “ பீமா இப்படியா அர்த்த ராத்திரியில் சத்தமாக பாடுவாய்” என கோபிக்க பீமனும் நடு காட்டிற்கு சென்று கர்ண கொடூர கானத்தை தொடர்ந்தான். கொடிய மிருகங்களும் சத்தத்தை தாள முடியாமல் இடம் பெயர்ந்தன. அப்போது ஒரு கரிய தோற்றம் கொண்ட உருவம் ஒன்று பீமனுக்கு முன்னாள் உட்கார்ந்து தாளம் போட்டவாறு கண்களில் நீர் வர ரசித்துக் கொண்டிருந்தது. திடீரென பீமன் கண்ணை திறந்து பார்க்க, எதிரே தனக்கும் ஒரு ரசிகனா என்று உற்று பார்த்தால் அங்கெ ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா! ஆம் ஊரே வெறுத்து ஓடிய சங்கீதத்தை, நாம ஜெபத்தை கண்களில் நீர் வடிய பரமாத்மா ரசித்துக் கொண்டிருந்தார்.
இதிலிருந்து என்ன தெரிகிறது ! பரமாத்மாவிற்கு தேவையெல்லாம் பக்தி பக்தி பக்தி !.
Search my older Blog
Tuesday, January 26, 2016
பரமாத்மாவிற்கு தேவையெல்லாம் பக்தி பக்தி பக்தி !.Sri vaishnavam
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment