ஆலிவ் எண்ணெய்யின் மறுபக்கம்
கடலை எண்ணெய் இதயத்திற்கு நல்லதல்ல என தமிழகத்தில் சூரியகாந்தி எண்ணெய் அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது சூரியகாந்தி எண்ணெய்க்கு மாற்றாக ஆலிவ்
எண்ணெய்யைப் பரிந்துரை செய்கின்றனர். தமிழக சமையலில் உள்ள வெப்பநிலைக்கு ஆலிவ் எண்ணெய் நல்லதல்ல என்ற கருத்து நிலவுகிறது. ஐரோப்பிய நாடுகளில் ஆலிவ் எண்ணெய் வெப்பப்படுத்தப்படுவது இல்லை. சாலட் போன்றவற்றில் மட்டுமே ஆலிவ் எண்ணெய் சேர்க்கப்படுகிறது. இந்தியாவிலிருந்து வெளிநாட்டில் குடியேறிய வெளிநாடு வாழ் இந்தியர்கள் அங்கு சமையலில் ஆலிவ் எண்ணெய்யை பயன்படுத்துவது இல்லை. நல்லெண்ணைய்யைத் தான் பயன்படுத்துகின்றனர்.
தகவல் சுரங்கம்
விருதுத்தொகை இல்லாத விருதுகள்
குடியரசு தினத்தில் அறிவிக்கப்படும் பத்ம விருதுகள்எதற்குமே பரிசுத் தொகை வழங்கப்படுவது இல்லை. பதக்கம், பட்டயம் ஆகியன மட்டுமே வழங்கப்படுகின்றன. விருது பெற்றவர்களும் தங்கள் பெயருக்கு முன்னால் 'பத்ம விபூஷண்', 'பத்ம பூஷன்', 'பத்ம ஸ்ரீ' என போட்டுக்கொள்ளும் வழக்கமில்லை. ஆனால் இப்போது பத்ம விருதுகள் பெற்றவர்கள் பெயருக்கு முன்னால் பட்டத்தையும் சேர்த்துக் கொள்கின்றனர். மத்தியஅரசு வழங்கும் விருதுகளில் விருதுத்தொகை மிக அதிகமாக வழங்கப்படும் விருது 'காந்தி அமைதிப் பரிசு'. இதற்கு ரூ.1 கோடி வழங்கப்படுகிறது. தாகூர் சமூக நல்லிணக்க விருதுக்கும் ரூபாய் 1 கோடி வழங்கப்படுகிறது.
Courtesy ariviyal aayiram dinamalar

No comments:
Post a Comment