அரங்கனின் விஸ்வரூப தரிசனத்திற்காக திருவரங்கம் பெரிய கோயிலில் வளர்க்கப்பட்டு வந்த பசுங்கன்று ஒன்று விதிவசத்தால் வழி தவறிப்போய் திருவானைக்காவைச் சேர்ந்த படுகையில் மேய்ந்து கொண்டிருந்ததை சைவர்கள் கண்டு கொண்டார்கள். அப்பசுங்கன்றை தங்கள் திருக்கோயிலுக்கு ஓட்டிச் சென்று கட்டிப்போட்டு விட்டார்கள்.
அரங்க நிர்வாகிகள் அலைந்து தேடியபின் திருவானைக்காவலில் பசு இருப்பதை அறிந்தார்கள். பசுவை விடுவிக்கும்படி கேட்க பிள்ளைபெருமாள் ஐயங்கார் தங்களது ஈசனைப் பற்றிப் பாடினால் பசுவினை விடுவிப்பதாய் சைவர்கள் கூறிவிட்டனர்.
அய்யங்காருக்கு விஷயம் அறிவிக்கப்பட்டது. நாளை கட்டாயம் பாடுகிறேன் என பிள்ளைபெருமானும் தெரிவிக்க இப்போதே பாடல் வேண்டுமென சைவர்கள் அறிவிக்க நாளைதான் என அய்யங்காரும் உறுதியாய் இருக்க சரி நாளை பாடப்போகும் பாடலின் முதலடியாவது இப்போதே சொல்லவும் என மறுப்பும் வர மங்கை பாகன் எனத் தொடங்கி பாடுகிறேன் எனச் சொல்ல பசுவும் விடுவிக்கப்பட்டது.
பிள்ளைப் பெருமாள் யார்?
அரங்கனைப் பாடிய வாயால் குரங்கனைப் பாடமாட்டேன் என்று சொல்லிய வீரவைணவர்.
குரங்கம் என்றால் மான் என்று பொருள் மானையும் மழுவையும் தனது இரண்டு கரங்களிலும் தரித்திருக்கிறான் சிவனென்ற காரணத்தால் அரனைக் குரங்கனென்று கூறியவர்.
அப்படிப்பட்ட பிள்ளைப் பெருமாள் பெருமானை தங்கள் தெய்வத்தைப் பற்றி பாடச் சொல்லி அதில் வென்று விட்டதாக சைவர்கள் அன்றைய இரவை மகிழ்ச்சியாய் கழித்தார்கள்.
மறுநாள் மாலையும் வந்தது,
அய்யங்கார் பாடிய பாடல்தான் இது.
'மங்கை பாகன் சடையில் வைத்த
கங்கை யார் பதத்து நீர்?
வனசு மேவு முனிவனுக்கு
மைந்தனானதில்லையோ?
செங்கையால் இரந்தவன்
கபாலமார் அகற்றினார்?
செய்யதாளின் மலரரன்
சிரத்திலானதில்லையோ?
வெங்கண் வேழ மூலமென்ன
வந்ததுங்கள் தேவனோ?
வீறு வாணன் சமரில்
அன்று விரலழிந்தில்லையோ?
அங்க ஞால முண்டபோது
வெள்ளி வெற்பகன்றதோ?
ஆதலால் அரங்கனின்றி
வேறு தெய்வமில்லையே!"v
--------
No comments:
Post a Comment