-
வெரைட்டி ரைஸ் தயாரிக்கும்போது, சாதத்தை உதிரியாகக் களறீயதும், ஒரு கரண்டியால் மேற்புறம் சிராக அழுத்தி விட்டு, மூடி வைத்து விடுங்கள். இதனால், நெடுநேரம் சூடாக இருப்பதுடன், சுவையும் குறையாமல் ஃபிரெஷ்ஷாகவும் இருக்கும். -
காலையில் செய்த சாதம், பொரியல் மீந்து விட்டதா? இரண்டையும் நன்றாக மசித்து, வதக்கிய வெங்காயத்துண்டுகளை சேர்த்து கட்லெட்டாக செய்துவிடலாம். மாலை சிற்றுண்டி ரெடி!-
மாங்காய் தொக்கு வருடம் முழுவதும் சாப்பிட ஆசையா? இரண்டு மூன்று மாங்காய்களை தோல் சீவி துருவிக் கொள்ளுங்கள். இதனுடன் மஞ்சள்தூள், உப்பு சேர்த்து வெயிலில் நன்றாகக் காய வைத்து ஒரு பாட்டிலில் எடுத்து வைத்துவிடுங்கள். தேவைப்படும்போது, இதில்இருந்து சிறிது எடுத்து வெந்நீரில் ஊற வைத்து, வழக்கம்போல நல்லெண்ணெய் தாளித்து, தொக¢கு செய்து கொள்ளலாம். -
தேங்காய் பர்ஃப¤ செய்யும்போது முதலிலேயே சர்க்கரை, தேங்காய் துருவல் இரண்டையும் சேர்த்து அடுப்பில் வைக்காதீர்கள். சர்க்கரையை கம்பிப் பாகு பதம் வரும்வரை காய்ச்சி, பிறகு, தேங்காய் துருவலை சேர்த்தால், அதிகம் கிளற வேண்டிய அவசியமிருக்காது. பர்ஃபியும் சீக்கிரத்தில் கெட்டியாகிவிடும்.நன்றி; அவள் விகடன் டிசம்பர்
-
No comments:
Post a Comment