Bhoo thatha's Blogspot

Search my older Blog

Monday, December 7, 2009

humour

சாமி கண்ணைக் குத்திட்டார்....

ஒரு ஊரில் ஒரு விநோதமான பழக்கம் இருந்ததாம்.
அங்க ஊர் கோயில்ல வழிபாட்டின் போது கடவுள் சிலையின் மீது கல்லை விட்டு எறியனுமாம்.கல்லு சரியா விழுந்தா நினைச்சது நடக்கும்னு ஐதீகம்.
அந்த ஊருக்குப் புதுசா ஒருத்தன் விருந்துக்கு வந்தானாம்.
அவனையும் அப்படிக் கல்லை விட்டு எறியச் சொன்னாங்களாம்.
அவனுக்கோ கடவுள் சிலை மீது  கல்லெறிய பயம்.சின்ன வயசிலே ஏதாச்சும் தப்பு செஞ்சா சாமி கண்ணைக் குத்தும்னு சொல்லி சொல்லி அவங்க ஆத்தா வளர்த்து விட்டிருந்தது.சும்மா செய்யறத் தப்புக்கு கண்ணைக் குத்தும் சாமி அவர் மேலேயே கல்லைப் போட்டா சும்மா விடுமான்னு பயந்தான்.
ஆனாலும் ஊர்க்காரவங்க விடலை.சரின்னு வேறு வழியில்லாம கல்லை எடுத்து சிலையின் மீது எறிவது போல போக்குக் காட்டிட்டு பக்கத்துல இருந்த மரத்தின் மீது போட்டானாம்.
கொஞ்ச நேரத்துல அவனுக்கு ரெண்டு கண்ணும் போயிடுச்சாம்.
சாமீ எனக்கு ஒரு உண்மைத் தெரியனும் சாமீய்ய்ய்  உன்னைக் காயப்படுத்தக் கூடாதுன்னுதானே மரத்து மேல எறிஞ்சேன் .இருந்தும் ஏஞ்சாமி என் கண்ணைக் குத்திட்டே னு அழுதானாம்.
அதுக்கு   கடவுள் சொன்னாராம் ஊர்க்காரங்க கல்லெடுத்து அடிக்கிறாங்கன்னு தான் நானே பக்கத்துல இருந்த மரத்து மேல ஒளிஞ்சிருந்தேன்.பாவி நீ எப்படியோ தெரிஞ்சுகிட்டு என்னை கல்லால அடிச்சிட்டியே அதான் தப்பு செஞ்ச உன்னைக் கண்ணைக் குத்திட்டேன்னு .

அசத்தப்போவது யாரு நிகழ்ச்சியில் மதுரை மகா சொல்லக் கேட்டு இரசித்தது:

நன்றி;kummionly blogspot


No comments: