Bhoo thatha's Blogspot

Search my older Blog

Monday, December 7, 2009

religion

. நாம் ஒவ்வொருவரும் முற்பிறவியில் என்ன பாவங்கள் செய்தோமோ தெரியாது. இப்பிறவியில் இப்படி கஷ்டப்படுகிறோம்.நமது அப்பா,தாத்தா,பாட்டனார் என்ன குற்றங்கள் செய்தார்களோ நமக்குத் தெரியாது; அந்தப் பாவச்சுமையை நாமும் நமது பங்குக்குச் சுமக்கிறோம்.சரி! பணக்கஷ்டத்தின் வேதனையை நாம் தினம் தினம் இல்லாவிட்டாலும்,அடிக்கடியாவது உணர்கிறோம்.இதற்கு தீர்வு ஒன்றுதான் குபேர கிரிவலம்.
அதென்ன குபேர கிரிவலம்.
ஒவ்வொரு தமிழ் வருடமும், கார்த்திகை மாதம் வரும் தேய்பிறை சிவராத்திரி அன்று வான் உலகிலிருந்து செல்வத்தின் அதிபதியான குபேரபகவான் பூமிக்கு வருகிறார்.வந்து காலைப்பொழுதில் மூலவரான திரு.அண்ணாமலை திருமதி.உண்ணாமுலையம்மனை வழிபடுகிறார்.பிறகு அங்குஇருந்து வந்து அவர் திரு அண்ணாமலையின் கிரிவலப்பாதையில் 7 வது லிங்கமான குபேரலிங்கத்துக்கு தினப்பிரதோஷ நேரத்தில் (மாலை 4.30 முதல் 6.00 வரை) பூஜை செய்கிறார்.அப்படி பூஜை செய்துவிட்டு, இரவு 7 மணியளவில் குபேரபகவானே கிரிவலம் செல்கிறார்.அதே நாளில் நாமும் கிரிவலம் சென்றால், நமக்கு அண்ணாமலையின் அருளும், சித்தர்களின் அருளாசியும், குபேரனது அருளும் கிடைக்கும்.
இதன் மூலம் நாம்,நமது முன்னோர்கள் செய்த பாவங்கள் தீரும்.நாம்,நமது அடுத்த ஏழு தலைமுறையும் நிம்மதியாகவும்,செல்வச்செழிப்புடனும் வாழும்.இந்த ரகசியம் பல நூற்றாண்டுகளாக மகான்களுக்கு மட்டுமே தெரிந்த ரகசியமாக இருந்தது.

அனைவரும் குபேர கிரிவலம் சென்றால் அவர்கள் அனைவரும் செல்வந்தராவார்கள் 
(ஒரே தடவை சென்றுவந்தால் மட்டும் ஏன் செல்வ வளம் நமக்குக் கிடைப்பதில்லையே? ஏன்?
எனில், 7 தலைமுறைகளில் சுமார் 245 குடும்பங்கள் வருகின்றன.அவர்கள் அதாகப்பட்டது நமது அப்பா,அம்மா; அவர்களின் அப்பாக்கள், அம்மாக்கள்(நமது தாத்தாக்கள்,பாட்டிகள்) என ஒவ்வொருவரும் செய்த கர்மவினைகளை கரைக்க சில அல்லது பல முறை கிரிவலம் செல்ல வேண்டியிருக்கிறது.அதனால்தான்.
14 கிலோ மீட்டர்கள் தூரத்தை அங்கப் பிரதட்சணம் செய்து கிரிவலம் வரும் மனிதர்!!!!!!)



கிரிவலம் செல்லும் போது செருப்பு போடக்கூடாது.ஆண்கள் ருத்ராட்சம் கழுத்திலும் கைகள்,புஜங்களில் அணிந்து, வேட்டி (பெண்கள் அவரவர் பாரம்பரிய உடை)உடுத்தி, மேலாடை அணியாமல் சிவ மந்திரங்களை மனதுக்குள் ஜபித்தவாறு கிரிவலம் செல்ல வேண்டும்.கிரிவலம் முடிந்து அன்று இரவு கண்டிப்பாக அண்ணாமலையில் தங்க வேண்டும் என்பது ஐதீகம்.தங்கி, மறு நாள் வேறு எங்கும் செல்லாமல் அவரவர் ஊருக்குச் செல்ல வேண்டும் என்பது எழுதப்படாத சம்பிரதாயம்.அப்படி செய்தால் மட்டுமே குபேரகிரிவலத்தின் பலன் நமக்குக் கிடைக்கும்.


ஏன் வெட்டிக்கதை பேசக்கூடாது? இந்த கிரிவலப்பாதையான 14 கி.மீட்டர்கள் முழுக்க ஏராளமான சித்தர்கள் வாழ்ந்துவருகிறார்கள்.நமது வீண் பேச்சு அவர்களுக்கு தொந்தரவாக இருக்ககூடாது அதனால்!சரி! குபேரகிரிவல நாள் இந்த வருடம் எந்த நாள்?14.12.2009 திங்கள்அன்று மாலை 4 மணிக்கு 
 
நன்றி;ஆண் மீகக்கடல் 

No comments: