Bhoo thatha's Blogspot

Search my older Blog

Friday, December 4, 2009

technology

வருங்காலத் தொழில்நுட்பம்!
ண்டுதோறும் நவம்பர் மாதக் கடைசி வியாழக்கிழமை அமெரிக்காவில் Thanks giving பண்டிகை. அமெரிக்காவில் அனுமதிக்கப்பட்டுள்ள சில கட்டாயவிடு முறைகளில் இதுவும் ஒன்று. காரணம்? அது 'கறுப்பு வெள்ளி'!
அப்படின்னா?
அமெரிக்காவில் நுகர்வு என்பது ஓர் அடிப்படைத் தேவை. அது அமெரிக்க மக்களின் ஆதாரச் சுருதி. நவம்பர் மாதக் கடைசி வெள்ளிக்கிழமை வருடாந்திர நுகர்வுக் கொண்டாட்டத்தின் முக்கிய நாள், கிறிஸ்துமஸ் ஷாப்பிங் சீஸனின் தொடக்க நாள் இந்த வெள்ளி. கறுப்பு வெள்ளியன்று, மலிவு-சலுகை-தள்ளுபடி எனப் பரபரப்பாக இருக்கும். அதுவும் சில கடைகளில், சில மணி நேரங்களே இந்த விற்ப னைக் கோலாகலம் உண்டு என்பதால், குடும்ப சகிதம் பார்க்கிங் லாட்டில் இரவு முழுக்க வரிசையில் நிற்கும் கூத்து எல்லாம்கூட உண்டு. கறுப்பு வெள்ளி என்ற பெயர் வந்ததற்குக் காரணம் செம சுவாரஸ்யம்.60-களின் தொடக்கத்தில் இந்த வெள்ளிக்கிழமை விற்பனைகளால் உண்டாகும் டிராஃபிக் ஜாம் பிலெடெல்ஃபியா காவல் துறையினருக்குத் தலைவலியாக இருக்க, அதைக் கறுப்பு வெள்ளி எனப் பெயரிட்டனர். அது எப்படியோ நாடு முழுதும் பரவி ஒரு பொதுப் பெயராகிவிட்டது.

60-களில் இணையம் இல்லை. ஆனால், இணையம் பிரபலமாகிவிட்ட இந்தச் சில வருடங்களில் இணையத்தில் கட்டப்பட்டுள்ள இ-காமர்ஸ் தளங்களுக்கு நுகர் வோர் வெள்ளியன்று செல்கிறார்களா என்றால், டிரெண்ட் அப்படியே உல்டா. மாறாக, நான்கு நாட்கள் விடுமுறையை ஜாலியாகக் கழித்துவிட்டு, வரும் திங்கள்கிழமை காலையில் ஆன்லைன் வியாபாரத் தளங்களைத் தேடுகிறார் திருவாளர் இணைய ஜனம். இந்த டிரெண்டினால், இ-காமர்ஸ் தளங்களின் டிராஃபிக் அதிகமாகி, அவற்றை ஆமை வேகத்தில் நகரவைப்பதால், கடந்த சில வருடங்களுக்கு முன் இந்த திங்கள்கிழமைக்கு Cyber Black Monday என்று பெயரிட்டார்கள்.
அப்படியானால், வேலை நேரத்திலா மக்கள் ஆன்லைனில் தங்களது பொருள் வாங்குவது போன்ற சொந்த வேலைகளைச் செய்துகொண்டு இருக்கிறார்கள்? என்றகேள்வி எழலாம். இ-காமர்ஸ் மட்டும் அல்ல; சமூக வலைதளங்களிலும் அதிக வேலை நேரம் செலவா கிறது என்பதைப்பற்றி விரிவாக ஆராய்ச்சி நடந்துகொண்டு இருக்கிறது. இப்போதைக்கு, லாஸ் ஏஞ்சலீஸ் அருண்குமார் கணபதி, விகடன் டாட் காமில் லாக் ஆஃப் செய்துவிட்டு, வேலையைத் தொட ருங்கள்!
இணையத்தில் என்னவிதமான கிரேஸி ஐடியாவையும் முயற்சிக்கலாம் என்பதற்கு www.woot.com ஒரு நல்ல உதாரணம். இதன் பிசினஸ் மாடல் ரொம்பவும் சிம்பிள். அமேசான் போன்ற ஆன்லைன் மெகா ஸ்டோர்போல இல்லாமல், woot.com-ல் ஒரு நாளைக்கு ஒரு பொருள் மட்டுமே விற்பனைக்கு வைக்கப்படும். இந்தப் பொருளும் மற்ற ஆன்லைன் தளங் களைவிட மலிவான விலையில்விற்கப் படும். இப்படிச் செய்தால் இந்த நிறுவனம் விரைவில் நஷ்டம் அடைந்து மூடப்பட்டுவிடும் என்றுதானேஎதிர் பார்ப்பீர்கள்? நானும் woot.com-ஐப்பற்றி முதலில் கேள்விப்பட்டபோது அப்படித்தான் நினைத்தேன். ஆனால், பொருட்களை மொத்த விலையில் வாங்கி, அதில் mark mark up வைத்து விற்று லாபம் சம்பாதிக்கும் சராசரி வியாபாரத்தில் இல்லை woot.com. மாறாக, தங்களது தளத்தைப்பற்றி பரபரப்பை உருவாக்கவைப்பதுதான் அவர்களது முக்கிய இலக்கு. நாளின் எந்த நேரத் தில், அந்த நாளின் பொருளைப் பதிவேற்றம் செய்வார் கள் என்ற எதிர்பார்ப்பில் தொடர்ந்து அவர்களது தளத்துக்குச் சென்றுகொண்டு இருப்பது மட்டும்அல்லாது, பொருளுக்காகக் காத்திருக்கும் நேரத்தில், அங்கே இருக்கும் விவாதத் தளங்களில் பங்கேற்பதும் உண்டு. ஏற்கெனவே, woot.com. ல் இருந்து பொருட் களை வாங்கி இருப்பவர்கள் அந்தப் பொருட்களைப் பற்றிய விவாதத்தில் பங்கேற்பர்.
ஆக, மொத்தத்தில் பொருட்களை விற்கும் இ-காமர்ஸ் தளம் என்ற பெயரில் woot.com.(content) சேகரிப்பு. அதுவும், woot.com&க்குச் செல்பவர்கள் ஆன்லைனில் பொருட்கள் வாங்கும் ஆர்வலர்கள் என்பதால், அவர்கள் அளிக்கும் தகவல்கள் மிகவும் பொருத்தமானவை (Relevant Content) என்பது எக்ஸ்ட்ரா ஸ்பெஷல். சமூக வலைதளங்கள்தான் இன்றைய இணையலோகத்தில் முக்கியமானவை எனக் கருதப்படும் இன்றைய நாட்களிலும், 'Content is king’ என்பதில் எந்த மாற்றமும் இல்லை. இந்தத் தகவல்களையும், டிராஃபிக்கையும் பயன்படுத்தி விளம்பரங்கள் வழியாக லாபம் சம்பாதிப் பதுதான் இந்த நிறுவனத்தின் ஸ்மார்ட்டான பிசினஸ் மாடல். அது இதுவரை வெற்றிகரமாகவே சென்று கொண்டு இருக்கிறது. செய்வது வியாபாரம் அல்ல; மாறாக, தகவல்
சென்ற வாரத்தில், கூகுளின் க்ரோம் OS-ன் பிறப்பைப் பார்த்தோம். வெளியிடப்பட்ட நாளில் இருந்து, க்ரோம் OS பற்றி நாள்தோறும் ஐ.டி இண்டஸ்ட்ரியில் பலவிதமான உத்தேசங்கள், தீர்க்கதரிசனங்கள். க்ரோம் OS மூலமாக கூகுள் ஜெயிக்குமா என்பதைவிட, இதன் வெற்றி யாரை எல்லாம் கடுமையாகப் பாதிக்கும் என் பதையும் பார்க்க வேண்டியது அவசியம். க்ரோம் OS மூலம் விலை குறைவான நெட்புக் பயனீட் டாளர்களைக் கவர்ந்து mass market-ஐ அள்ளிச் செல்ல கூகுள் நோக்கமிடுவது தெளிவு. அதே நேரத்தில், விலை அதிக மாகவும், high end feature களை எதிர் பார்க்கும் பயனீட்டாளர்களை ஈர்ப்பதில் ஆப்பிள் நிறுவனம் வெற்றியடைந்து வருவது தெரிகிறது. இவர்கள் இருவருக்கும் இடையே மாட்டிக்கொண்டு சட்னியாகப்போவது மைக்ரோசாஃப்ட் என்பதற்கான அறிகுறிகள் அதிகம். க்ரோம் OS ஏற்றப்பட்ட நெட்புக் அளவுக்கு விலை குறைவாக இல்லாமலும், high end feature களைக் கொடுக்க முடியாமலும் இரண்டுங்கெட்டானாக மைக்ரோசாஃப்ட் அவதிப்படப்போவது ஒருபுறம் இருக்க, கணினியில் சேமிக்கப்பட்ட தகவல்களைக் காப்பாற்றுவதற்கான மென்பொருட்களைத் தயாரித்து விற்பவை, வைரஸ் தடுப்பு மென்பொருள் நிறுவனங்கள், டேட்டா பேக்-அப் செய்ய உதவும் மென்பொருள் தயாரிப்பாளர்கள் இத்யாதி வகையறாக்கள் அனைவரும் சிக்கலுக்குள்ளாகப்போவது நிச்சயம்.

1. ஒரு பள்ளிப் பேருந்தில் எத்தனை கால்ஃப் பந்து களை அடைக்க முடியும்?
2. சியாட்டில் நகரிலுள்ள அனைத்துக் கட்டடங்களின் ஜன்னல்களையும் கழுவ, எவ்வளவு சம்பளமாகக் கேட்பீர்கள்?
3. சாக்கடை மூடி வட்டமாக இருப்பதன் காரணம் என்ன?
இவை எல்லாம் லொள்ளு கேள்விகள் இல்லை. கூகுளில் வேலைக்காக இன்டர்வியூ செய்யப்பட்ட சிலரிடம் கேட்கப்பட்ட இந்த கேள்வி

aadhaaram; vikatan 09-12-09

No comments: