ஹனுமத்தோடி
கும்பகோணத்தில் இருக்கும் அருள்மிகு ஸ்ரீராமஸ்வாமி கோயிலில்
நாம் வாயு மைந்தன் ஸ்ரீ ராமதூதனை வீணாகானம் செய்யும்
கோலத்தில் காணலாம் ,
வீணாகானத்தில் நாரதர் சிறந்து விளங்கியவர் அவரும் தன் கானத்திற்கு ஈடே
இல்லை என்ற நினைப்பில் இருந்தபோது
அனுமனில் வீணாகானத்தில் தன்னை மறந்து சிலைப்போல் நின்று விட்டார்
ஆஞ்சநேயர் வாசிப்பில் ஒவ்வொரு ஸ்வரமும் ராம் ராம் என்று
சொல்லுமாம் அவர் வீணையுடன் ஒன்றி வாசிக்க அந்த நாதத்தில்
ஸ்ரீராமனும் ஒன்றி விடுவார் இவருக்க்குப்பிடித்த ராகத்தின் பெயர்
ஹனுமத்தோடி என்று இருக்கிறது மேளகர்த்தா வரிசையில்
எட்டாவதாக வருகிறது என ஞாபகம் ,
அவர் நாதத்தின் இனிமையைப்பார்த்து தன்னுடன் போட்டிக்கு
அழைத்தார் நாரதர் ,
போட்டி என்ன வென்றால்இசையினால் "கல்லும் கனியும் என்பதை நிரூபிக்க
வேண்டும் கல்லும் உருக வேண்டும் என்பதுதான்
{இதேபோல் தான் அக்பர் அரசவையில் ஐஸ்கட்டிகளைப் தன் இசையால் உருக
வைக்கவேண்டும் என்று சங்கீதவித்வான்
தான்சன் முன் நடந்தது என்று சரித்திரம் சொல்கிறது }
மாருதி இசைப்பது ராமனுக்காக அல்லவா ?இருப்பினும் நாரதரை
திருப்தி செய்ய அனுமார் ஒப்புத்துக்கொண்டார் ,
நாரதர் முதலில் அனுமாரை ஆரம்பிக்கச்சொன்னார் ,
அனுமாரும் அதன்படியே பாடியும் உடன் வீணையும் இசைக்க
ஆரம்பித்தார் தோடி ராகத்தில் ஸ்ரீராம ஜயராம ஜயஜயராமா"
என்ற ராம மந்திரத்தை எடுத்து அதில் தன்னையே மறந்தார் ,
சுற்றிலும் மலைகள் நடுநடுவே பாறைகள்,...... இசையை அனுபவித்தபடி நாரதர்
ஒரு பாறைமேல் அமர்ந்தபடி தன் மஹதி என்ற வீணையை தன் அருகில் பாறைமேல்
வைத்தார்
இசைநாதத்தில் அனுமனும் உருக நாரதரையும் அந்த இசை
உருக்கின,
கூடவே இருந்த பாறையும் உருகத்தொடங்கியது
அவ்வளவுதான் "மஹதி "என்ற நாரதரின் வீணையை
பாறை மூடிக்கொண்டது
அனுமனின் கானம் நின்று எங்கும் ஒரே இன்ப நிலை
நாரதருக்கு ஒன்றும் பேசமுடியாத நிலை மௌனம் தான்
அங்குப்பேசியது
போட்டி இன்னும் முடிவடையவில்லையே! தானும் கல்லுருகப்பாடி
ஜயிக்கவேண்டும் என்ற எண்ணம் வலுக்க தன் வீணையை
எடுக்கப்போனார் ஆனால் அதுவோ பாறையில் புதைந்து இருந்தது
சரி பாடி ஜயிக்கலாம் என்று பாட ஆரம்பித்தார்
ஆனால் ஒன்றும் நடக்கவில்லை
"அஞ்சன குமாரா நான் தோல்வியை ஒப்புத்துக்கொண்டு விட்டேன்
என் தோளில் என் வீணை எப்போதும் இருக்கும் தயவு செய்து
உன் இசையினால் திரும்பவும் பாறையை உருக்கி வீணையை
என்னிடம் கொடுத்துவிடு கொடுப்பதற்கு முன்னால் நீ அதை மீட்டிவிட்டுக்கொடு
உன் கரம் அதில் படவேண்டும் ",
அனுமன் இதைக்கேட்டு மனம் வருந்தி "நாரதமுனிவரே
தாங்கள் இப்படிச்சொல்லலாமா நாதகுருவா இப்படிச்சொல்கிறீர்கள்?
என்று மிகப்பணிவாகக்கூறி திரும்பவும் வீணையை இசைக்க
பாறை உருகி வீணையும் எடுக்க முடிந்த்து
அவர் வீணையும் ராம் ராம் என்று சொன்னதாக ஹிந்தியில்
ஒரு பாடல் உண்டு
சிவ்ஜி கே டம்ரூ ஸே நிகலா ராம் ராம் ராம் ,,,,,,,இதன் தமிழாக்கம்
சிவனின் உடுக்கில் பிறந்த நாதம் ராம் ராம் ராம்
நாரத்ரின் வீணையில் பிறந்தது ராம் ராம் ராம்
சபரியின் இலந்தையில் பிறந்தது ராம் ராம் ராம்
அனுமானின் வாயில் எப்போதுமே ராம் ராம் ராம்
சபரியின் இலந்தையில் பிறந்தது ராம் ராம் ராம்
அனுமானின் வாயில் எப்போதுமே ராம் ராம் ராம
இங்கயும் நீதான் ஒளிந்திருக்கிறாய் ராம்போலா!
ஹனும தோடி
தோடி ராகமே கடபயாதி ஸங்க்யைப்படி ஹனும தோடி என்றழைக்கப் படுகிறது.
சுத்த மத்யம ராகம்; 72 மேளகர்த்தா ராகங்களில் எட்டாவது; ஆனால் நவமியில்
அவதரித்தவனைக்
குறித்த பாடல்களே இந்த ராகத்தில் அதிகம் இருக்கும் என்னும் தோற்றம்.
இந்த ராகத்தில் ஸத்குரு த்யாகராஜர் 32 பாடல்கள் இயற்றியுள்ளார்; சில
அம்பிகைக்கானவை.
தீக்ஷிதரும் ஸ்ரீ ராமனின் மேல் தோடியில் பாடியுள்ளார்.
ஹிந்துஸ்தானி ஸங்கீதத்தில் இது பைரவி தாட்;காலையில் பாடும் ராகம்.
வடநாட்டவரின் தோடி ராகமும் நமது தோடி ராகமும் வேறு;
அவர்களது தோடி நமது சுபபந்துவராளி.
Search my older Blog
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment