Bhoo thatha's Blogspot

Search my older Blog

Sunday, December 6, 2009

nature animals

துதிக்கையில் ஒன்பது லிட்டர் தண்ணீர்
டிசம்பர் 06,2009,15:13   IST
* யானைகள் எலிபண்டிடே எனும் குடும்பத்தைச் சேர்ந்தவை.
* யானைகளின் முன்னங்கால்கள் வட்டவடிவிலும், பின்னங்கால்கள் நீள் வடிவிலும் காணப்படுகின்றது.
* ஓர் ஆண் யானையின் மொத்த எடை சுமார் 5000 கிலோவாக இருக்கும்.
* யானைகள் ஒரு மணி நேரத்தில் சுமார் 8 கி.மீ. தூரம் வரை நடக்கும் ஆற்றலுடையது.
* யானையின் துதிக்கையினுள் ஒரே நேரத்தில் சுமார் 9 லிட்டர் தண்ணீரை உறிஞ்சும்.
* யானையின் துதிக்கை 40000 தசைகளால் ஆனது.
* யானையின் துதிக்கை 100 கிலோ எடைப்பொருளை தூக்கவல்லது.
* யானை ஒருநாளில் சுமார் 300 கிலோ எடையுள்ள தாவர உணவுகளை உண்ணுகின்றன.
* பூமிகளில் வாழும் பாலூட்டிகளில் யானையே மிகப்பெரிய பாலூட்டியாகும்.
* விலங்கு இனத்தில் யானைக்கு மட்டுமே நான்கு முழங்கால்கள் அமைந்துள்ளன.
* விலங்கு இனத்தில் யானைகளால் மட்டுமே குதிக்க முடியாது.
* யானையின் தந்தங்கள் அவற்றின் வாழ்நாள் முழுவதும் வளர்ந்து கொண்டே இருக்கின்றன.
* யானையின் கால்களின் கீழ்ப்புறம் நமக்கு இருப்பதைப் போலவே ரேகைகள் அமைந்துள்ளன.
* யானையின் கர்ப்பகாலம் 22 மாதங்கள்.
* யானைகள் சராசரியாக 70 வருடங்கள் வரை வாழ்கின்றன.


-


வினோத யானை !
யானைகளுக்கு ஞாபக சக்தி மற்றும் செயல்திறன் உண்டு என்பது கதையல்ல ; நிருபீக்கப்பட்ட உண்மையும் கூட. வாஷிங்டனில் உள்ள மிருகக் காட்சி சாலையில் ""ஷாந்தி'' என்ற இந்திய யானை தன் பெயர்தான் ஷாந்தி என்ற தண்னுணர்வும், நான் இருக்கின்றேன் என் தன்நிலைப்பாடும் கொண்டதாக இருக்கிறது.
பெரிய கண்ணாடியை அதன் முன்பு வைத்தபோது, அதில் உள்ள பிம்பத்தை ஏதோ பொருளாக முதலில் கருதியது ; பின் நாளடைவில் அதில் தெரிவது தானேதான் என்றும் அறிந்து கொண்டது. இப்போதெல்லாம், தன் உருவத்தையும் தனது உள்ளங்கையில் ஏதேனும் உறுத்தினால், அதைப் பார்க்கவும் கண்ணாடியைப் பயன்படுத்த ஆரம்பித்து விட்டது.
நன்றி  மஞ்சரி டிசம்பர் 

No comments: