Bhoo thatha's Blogspot

Search my older Blog

Tuesday, January 26, 2016

கவான் கட்டி பொன் போலே..! அவனது திருநாமமோ ஆபரணங்களைப் போலே.! கட்டிப்

திருநாமம்   ***************************************

பகவான் கட்டி பொன் போலே..!  அவனது திருநாமமோ ஆபரணங்களைப்   போலே.!  கட்டிப்பொன் மிக உசத்தியானதுதான். ஆனால் அதைத் தலையில் வெச்சுக்க   முடியுமா ..? இல்லை கழுத்திலேதான் போட்டுக்க முடியுமா..? அல்லது முதுகிலே தாங்கிக் கொண்டு நிற்கத்தான் முடியுமா..? ஆனால் பகவானின் திருநாமங்களோ உடனே எடுத்தாளக்கூடிய ஆபரணங்கள். அணிந்தும்,  அணிய செய்தும் மகிழலாம் அழகு பார்க்கலாம்.
விஷ்ணு என்கிற திருநாமம் அவனுக்கே ரொம்ப பிடித்த நாமமாம். ஒவ்வொருத்துருக்கும் ஒவ்வொரு நாமம் பிடிக்கும்.ஆஞ்சநேயனுக்கு அவனை 'ஆஞ்சநேயன்'என்று அழைத்தால் அவ்வளவாகப் பிடிக்காதாம்; ராம தூதன் நான் என்கிறான். ஆகவே ராமதாச ஆஞ்சநேயன் என்று அழைத்தால்தான் அவனுக்கு பிடிக்குமாம். ராமதாச ஆஞ்சநேயா என்று சொன்னால் எகிறிக் குதிப்பான் அவன் ! நாம் என்ன கேட்கிறமோ அதை உடனே கொடுத்து விடுவானாம். ஒவ்வொருவருக்கும் பிடித்த பெயரைச் சொல்லிக் கூப்பிட்டால்தான் சந்தோசம் ஏற்படும். அப்படி பகவான் நாராயணனுக்கு ரொம்ப பிடித்த பெயர் விஷ்ணு. 

பகவான் இருந்து பிரயஜோனமில்லை.அவனை விளங்கச் செய்யக்கூடிய மகான்கள் இருக்க வேண்டும். ! இந்த உண்மைக்குச் சாட்சியாகத்தான் பகவானே பீஷ்மர் அம்புப் படுக்கையிலே இருந்தபடி சொன்ன விஷ்ணு சகஸ்ரநாமத்தைக் கேட்டான். பல பேர் கேட்டார்கள். அந்த வாசுதேவனே கேட்டான். அவன் சொன்னது கீதை; கேட்டது சகஸ்ரநாமம். இப்படி அவன் ஆனந்தமாய் கேட்டதே அதன் பெருமை, உயர்வு.
விஷ்ணு சகஸ்ரநாமம் சொல்லும்போது பகவானுடைய நாமாக்களைச் சொல்கிறோமா? அவன் குணங்களைச் சொல்கிறோமா? என்று சந்தேகமே வேண்டாம். அவனுடைய குணங்களையே தெரிவிக்கும் படியான நாமாக்கள் அவை; அத்தனையும் சுகுனங்கள். 

அந்த விஷ்ணு சர்வதா ரக்ஷகன், சர்வத்ர ரக்ஷகன். அப்படிப்பட்ட விஷ்ணுவை வஷட்காரத்தினால் ஆராதியுங்கள் என்கிறார் பீஷ்மாச்சார்யார். அவனுடைய திருநாமங்களைச் சொல்வதே வைபவம்தான். அவை அனைத்துமே குணப்ரயுக்தமான நாமாக்கள்  .  அந்த எம்பெருமானின் நல்ல குணங்கள் அனைத்தும் இந்த சகஸ்ரநாமத்திலே அடங்கியிருக்கிறது. 
சகஸ்ரநாமக்களைப் பார்த்தோமானால் அவனுடைய லீலா ரஸம் நாமாவாக இருக்கிறது. அதிலே ஒவ்வொரு அவதாரத்திலும் பண்ணிய லீலைகள் தெரிவதனாலே இந்த நாமக்களைச் சொன்னாலே பகவானுடைய அவதாரம், அவதார லீலைகள் எல்லாம் முடிந்து விடுகின்றன. அவன் பெருமையை விளக்கக்கூடியதாக  இந்த திருநாமங்கள் விளங்குகின்றன.

பகவான் கட்டி பொன் போலே..!  அவனது திருநாமமோ ஆபரணங்களைப்   போலே.!  கட்டிப். ஆகையினால்தான் அதை நாம் ஒன்று கூடி அனுபவிக்க முடிகிறது. 

துளிக்கூட மிச்சமின்றி ஆகாயம் முழுவதையும் காகிதமாக்கி, ஏழு சமுத்திர ஜலத்தையும் மையாக்கி (ink ) எழுதினாலும் சகஸ்ரநாமத்தின் பெருமையை விளக்க முடியாது. 
image1.JPG 

No comments: