Bhoo thatha's Blogspot

Search my older Blog

Monday, November 16, 2009

என்.ஆர்.ஐ

வெளி நாடு வாழ் இந்தியர்களை பற்றி என் மனதில் தோன்றியது

என் வீட்டுகாரும் கொஞ்ச18 வருடங்களுக்கு முன்னால் அண்ணா பல்கலை கழகத்தில் பொறியியல் படித்து முதல் வகுப்பில் பாசாகி வேலைக்கு ஒருவருடம் அலை அலை என்று அலைந்து எந்த கம்பெநிய்ம் வேலை இல்லை என்று சொல்லி விட்டார் கள் .(அவர்களை சொல்லிய்ம் குற்றம் இல்லை வேலை இருந்தால் தான் கொடுப்பார்களே )

அப்புறம் வெளிநாட்டுக்கு ஆள் எடுக்கிறார்கள் என்று கேள்விப்பட்டு அப்ளை பண்ணி வந்து குடும்ப சுமைஎல்லாம் சுமந்து வீட்டில் கூடபிரந்த்வர்கள் கல்யாணம் இத்யாதி இத்யாதி எல்லாம் முடித்து ஒரு அளவு செட்டிலாகி வரும் பொழுது எங்கள் பிள்ளைகள் .

எங்கள் பிள்ளைகள் என்று வரும்பொழுது நிலைமை சொல்லி தெரிய வேண்டியது இல்லை .

இதன் நடுவில் உதவி என்று செயப்போய் பிரச்சனைகளை வாங்கி கட்டிகொண்டது தான் மிச்சம் .கேட்ப்பவர்கள் பிசைபோடுடா என்ற தொனியில் தான் கேட்கிறார்கள் காரியம் கழிந்ததும் திரும்பிகூட பார்ப்பதில்லை .

மேலும் ஊரில் இருப்பவர்களுக்கு வெளிநாடுகளில் இருந்து வருபவர்கள் கொண்டுவரும்

சாதனங்கள் எல்லாம் கடைவீதிகளில் காசு கொடுக்காமல் சும்மா கிடைக்கிறது கொண்டுவந்து கொட்டுகிறார்கள் என்று நினைப்பு.

நம்ம ஆளுங்களுக்கும் மூன்று நான்கு பெட்டியோடு போயிறங்கினால் தான் மதிப்பு அதனால் கடனை வாங்கி பெட்டியேய் நிரப்பி விடுவார்கள் .வந்து நான்கு மாத சம்பளம் கடனடைகவே சரியாக இருக்கும்.

வெளிநாடு வாழ் இந்தியர் யவரும் விரும்பி வெளிநாடுகளுக்கு வரவில்லை .சுமைகளை
சும்மந்தபடி தான் வருகிறார்கள் .

எல்லா என்.ஆர்.ஐ களும் இந்தியா வந்தால் இந்தியாவில் வேலை கிடைக்குமா ?


வெளிநாட்டு வேலை யினால் நம்ம நாடு பயன் அடைந்து தான் இருக்கிறது என்பதை மறுப்பதற்கில்லை .


ஒபாமா சொன்னது போல் இந்த வாசகம் (இந்தியா போன்ற நாடுகளுக்கு அவுட்சோர்சிங் செய்யப்பட்டிருந்த வேலைகள், குறைந்த ஊழியத்திற்கானவை. ஆனால், அதிக வேலை பளு உள்ளவை) இந்தியார்கள் என்றாலே எல்லா வெளி நாட்டவர்களும் ஒபாமாவை போலவே நினைகிறார்கள் .

நம்ம நாடும் பல துறைகளிலும் வழர்ந்து வெற்றி பெறட்டும் .நம் நாட்டவருக்கு நம் நாட்டிலீயே வேலை கிடைக்கட்டும் .உலகில் அமைதிபிரக்கட்டும் என்று பிராத்திப்போம் .

மேலை நாடுகளும் வழரட்டும் .நம்மை சுற்றி இருப்பவர் நல்லா இருந்தால் தான் நம்ம நல்லா இருக்கமுடயும்

நன்றி; GLOBE TROTTER


விமர்சனங்கள் 
சிலர் வெளிநாட்டில் வேலைச் செய்பவர்களைப் பார்த்தாலே எரிச்சல்
அடைவார்கள்.படிச்சப் படிப்பைத் தாய்
நாட்டிற்கு பயன்படுத்தாமல் பந்தாவிற்காக வெளிநாட்டு வழ்கை வாழ்வதாக ஏலனம் செய்வார்கள்.அவர்களை எல்லாம் கொமுட்டியிலேயெ (ஆமாம் இது எங்கெ இருக்கிறது)குத்தலாமா என்று ஆத்திரம் வரும்.நிறைய பேருக்கு வெளிநாட்டில் பணம் கொட்டிக் கிடப்பதாக நினைப்பு.குறிப்பாக உறவினர்களின் பிடு  ங்கல் கட்டுக்கடங்காது.எவ்வளவு கொடுத்தாலும் குறைதான்.
அதானாலேயெ நான் ஊருக்கு வந்தால் பேரும்பாலும்
நேரத்தை நண்பர்களுடனேயெ
செலவழிப்பேன். குறிப்பாக நாம் சற்று வசதியாக வாந்ழ்தோமானால் நம்
கடந்த கால வாழ்கையை முதுகுக்குப்
பின்னால் சுற்றிக் காட்டாதவர்கள்
குறைவு(இது ஒரு காலத்திலே எப்படி இருந்தது தெரியுமா,இதுக்கு வ்ந்த வாழ்வெ பாத்தியா?....)அவர்களை
எல்லாம் செருப்பை கழட்டி அடிக்கலாமா என்று கூட எனக்கு
தோன்றும்.இந்த நாட்டில் வயிற்று பிழைப்புக்கு வழித் தேரியாமல்
தான் வெளிநாட்டுக்கு ஓடி வ்ந்தோம் என்பதை மட்டும் நீங்கள் கொஞ்சம் உண்ர்ந்தால் போதும்

.உதாரணம்: என்னிடம் ஒரு நண்பர் 1000w stereo system வாங்கி வரச் சொன்னது. அதன் விலை, எடை இதையெல்லாம் கருத்தில் கொள்ளாமல், வாங்கியே வர வேண்டும் என்று அடம் பிடித்தது. அதை விடுத்து சிறியதாய் ஒரு பரிசுப் பொருள் கொடுத்த போது அதை கேலி செய்தது. கொடுமை


இதைவிட பொருளையும் வாங்கி கொண்டு இதெல்லாம் ரங்கநாதன் தெருவிலேயே கிடைக்குது.

இதெல்லாமா வாங்கி வந்த ..? என்று நக்கல் வேறு.

No comments: