- டாக்டர் ஏ.வி.ஸ்ரீனிவாஸன்
மூன்றாவது கண் உண்டு. யாருக்கு ? பெண்ணுக்குத்தான். ""என்ன டாக்டர் விளையாடறீங்களா ?'' என்று கேட்காதீர்கள். நிஜமாகவே மூன்றாவது கண் இல்லாவிட்டாலும் அப்படி இருப்பது போல்தான் அவளது செயல்கள் பல இடங்களில் பிரதிபலிக்கின்றன. பார்க்கலாம்.
"" என்னங்கத் திருப்பி, திருப்பி அதையே சொல்றீங்க ?'' அலுத்துக்கொண்டாள் பாவனா.
""இதுதாம்மா சரியான மேட்சிங் ப்ளவுஸ் பீஸ். இதுக்கு மேல எங்ககிட்ட இல்லை''அத்துடன் முடித்துக் கொண்டார் கடைக்காரர்.
""என்ன பாவனா ? இன்னுமா முடியல'' என்று வந்த கணவனிடம், ""வாங்க அடுத்த கடைக்குப் போகலாம்''என்று புறப்பட்டாள்.
""என்ன, ஒரு மேட்சிங் ப்ளவுஸ் பீஸ் வாங்க எத்தனை கடை ஏறி இறங்கறது ?'' அலுத்துக் கொண்டே வண்டியை ஸ்டார்ட் செய்தான் சுந்தர்.
பாவனவை மட்டுமல்ல ; எந்தப் பெண்ணையும் நிறங்களின் தேர்வுகளில் அவ்வளவு சீக்கிரமாகத் திருப்திப் படுத்திவிட முடியாது. ஏன்...ஏன்...ஏன்...?
மூளையின் வெளிப்பகுதி (எக்ஸ்டென்ஷன்) தான் கண். இது கபாலத்தின் வெளியே உள்ளது அவ்வளவே. விழியின் பின்பகுதி ரெடினா. இதில் ஃபோட்டோ ரிஸப்டர்ஸ் எனப்படும் 130 மில்லியன் செல்கள் உள்ளன.
இவைதான் கறுப்பு வெள்ளை நிறங்களைப் பிரித்தறியும். இவற்றையெல்லாம் கொடுப்பது எக்ஸ் க்ரோமோமோம்தான் .

இரண்டு எக்ஸ்க்ரோமோசோம்கள் இணைந்தால் பெண் கருவும், எக்ஸ்+ஒய் க்ரோமோசோம்கள் இணைந்தால் ஆண் கருவும் உண்டாகும். பெண்ணுக்கு அதிகப்படியான எக்ஸ் க்ரோமோசோம்தான் அவளுக்குப் ப்ளஸ்பாயிண்ட்.
நிறங்களைப் பிரித்தறியும் கோன் செல்கள் ஆணை விட, அவளுக்கு அதிகம். ஆண்களால் பச்சை, சிவப்பு, நீலம் என்று பொதுவான நிறங்களையே பகுத்தறிய முடியும். ஆனால், பெண்ணோ ஸ்கின் கலர், சாக்லேட் கலர், அக்வா கலர் என்று அடுக்கிக் கொண்டே போவாள்.
கடைக்காரர் கண்ணுக்கு மேட்சிங்காகத் தெரியும் நிறம் அவளுக்குத் திருப்தி அளிக்காது. இது மட்டுமல்ல. ஆணை விட அவளது பார்வை பரந்து விரியும் தன்மையுடையது. அவளது தலையின் மேல், கீழ், இடது மற்றும் வலது ஆகிய நாலாபுறமும் 45 டிகிரி அளவுக்குப் பார்வை செய்யும் அளவுக்கு அவளது மூளையின் அமைப்பு உள்ளது. சிலருக்கு இது 180 டிகிரி அளவு வரை கூடப் போகலாம்.
ஆணின் கண் பெண்ணின் கண்ணை விடப் பெரியது. ஆனாலும், அவனது பார்வை ஒரே நேர்க்கோட்டில்தான் விரியும். தனக்கு எதிரே உள்ளவற்றை எளிதில் கண்டுகொள்ள முடியும். அதன் தூரம் அதிகமானாலும் அவனுக்கு எளிது.
கண்ணிமைக்காமல் இரையைப் பிடிக்க இப்பார்வை அவனுக்கு உதவியது. காட்டு விலங்குகளிடமிருந்தும், எதிரிகளிடமிருந்தும் குழந்தைகளையும் சுற்றத்தாரையும் காப்பாற்ற பெண்ணுக்கு நாலாபுறமும் பார்வை அவசியமானது. சிறுமிகளை விட சிறுவர்கள் ரோட்டைக் கடப்பதற்குச் சிரமப்படுவார்கள். யு.கே.யில் நடந்த ஒரு கருத்துக்கணிப்பில் ஒரு வருடத்தில் விபத்தில் அடிபட்டுக் கொண்ட சிறுவர்களின் எண்ணிக்கை சிறுமிகளை விட இரு மடங்கு அதிகமாக இருந்ததாம்.
ஆண்கள் ஃபிரிட்ஜையோ, பீரோவையோ திறந்து வைத்துக் கொண்டு நின்று கொண்டிருந்தாலும், வேண்டிய பொருளை எளிதில் தேடி எடுத்துக்கொள்வதில் சிரமப்படுவார்கள்.
"" அங்கதானே வெச்சிருக்கேன்'' என்று மனைவி கத்திக் கொண்டிருப்பார். கடைசியில் அவள்தான் வந்து எடுத்துக்கொடுக்க வேண்டியிருக்கும். அவனைச் சொல்லிக் குற்றமில்லை. பாவம் அவனது பார்வை அப்படி. என்ன செய்ய ?
மூளையில் பதிவு செய்யப்படும் எல்லாவற்றையும் அது வெளிப்படுத்துவதில்லை. உதாரணத்துக்கு, மூளை வானத்தின் எல்லா நிறங்களையும் உணர்ந்தாலும், வானம் நீலம் என்பதை மட்டுமே எடுத்துக் கொள்ளும். அதனால்தான் பலவற்றை நாம் கூர்ந்து கற்றுக்கொள்ள முடிகிறது.
உதாரணத்துக்குத் தரையில் விழுந்த ஊசியைத் தேடும்போது நம் பார்வை குவிக்கப்படுகிறது. எடுத்து விடுகிறோம். இது ஆணின் பார்வை. இது போல பெண்ணின் பரந்த பார்வையை ஆணும் பயிற்சியின் மூலம் பெற முடியும். இப்படிப் பெண்ணின் பார்வையின் மகிமையைச் சொல்லிக்கொண்டே போனாலும் ஒரு விஷயத்துக்கு அவர்கள் மிகவும் திணறித்தான் விடுகிறார்கள். என்ன அது ?
நன்றி;;;kalki
No comments:
Post a Comment