இரண்டு கரண்டி அரிசி, அரைக் கரண்டி உளுத்தம்பருப்பை அரை மணி நேரம் ஊற வைத்து, மிக்ஸியில் மைய அரைத்து தோசை மாவில் சேர்த்து விட்டால் உப்பு சரியாகிவிடும்.
பொரியல் வகைகளில் உப்பு அதிகமானால், தேங்காயைத் துருவிச் சேர்க்கலாம்.
ஒரு கரண்டி பயத்தம் பருப்பை வெந்நீரில் கால் மணி நேரம் ஊற வைத்து, அதைப் பொரியல் கலந்து விடலாம்.
நான்கில் ஒரு பாகம் பொரியலை (பீன்ஸ், கேரட், பீட்ரூட், முட்டைகோஸ், அவரை, உருளைக்கிழங்கு போன்றவை) எடுத்து வடிகட்டியில் போட்டு, சுத்தமான தண்ணீரை ஊற்றிக் கழுவி விட்டால் உப்பு சுவை போய் விடும். இதை மீதமுள்ள முக்கால் பாகப் பொரியல் கலந்து ஒரு புரட்டு புரட்டி விட்டால் போதும்... உப்பு சுவை சரியான அளவுக்கு வந்துவிடும்.
கத்தரிக்காய், கோவைக்காய், வெண்டைக்காய், உருளைக்கிழங்கு, பீட்ரூட், கேரட் போன்றவற்றுடன் வெங்காயம் நன்கு சேரும். எனவே, இந்த வகைப் பொரியல்களில் உப்பு அதிகமானால், பொடியாக நறுக்கிய வெங்காயத்தை எண்ணெயில் வதக்கிச் சேர்த்து விடலாம்.
பருப்பு சேர்க்காத பொடி என்றால் (தனியாப்பொடி, கறிமசலாபொடி போன்றவை), கறிவேப்பிலையைக் கொஞ்சம் எடுத்து, எண்ணெயில் வறுத்துப் பொடித்து, உப்பு கூடிப்போன பொடியில் கலந்து விடலாம்.
காரம் கூடிவிட்டதா?
குருமா என்றால் புளிப்பில்லாத கெட்டித் தயிர் அல்லது கெட்டித் தேங்காய்ப் பால் சேர்த்துக் கலக்கி விடுங்கள்.மட்டர் பனீர், சோலே மசாலா, பாவ் பாஜி போன்றவற்றில் காரம் அதிகமா? ஃப்ரெஷ் கிரீம் அல்லது சூடான பால் வெண்ணெய் சேர்த்து உருக்கி அதைச் சேர்த்து விட்டால், 'காரமா... எங்கே..?' என்பார்கள்.
கலப்பு சாதமாக இருந்தால் (தேங்காய், எலுமிச்சை சாதம் முதயன) அவற்றிலுள்ள மிளகாய்த் துண்டுகளை பொறுக்கி எடுத்து விடுங்கள். பின்னர்... வடாம், அப்பளம் இவற்றைப் பொரித்து தூளாக்கி பரிமாறும் நேரத்தில் மேலே தாராளமாகத் தூவி மொறுமொறுவென்று பரிமாறுங்கள்.
புலாவ் பிரியாணி காரமாக இருந்தால் பிரெட் கிரம்ப்ஸ் ஒரு கரண்டி எடுத்து, வெறும் வாணயில் ஒரு நிமிடம் சூடாக்கிச் சேர்த்து விடுங்கள். பரிமாறும்போது சாதாரண கார்ன்ஃபிளேக்ஸ் கூட சேர்க்கலாம். வெறும் வெங்காயத்தைப் பொடியாக நறுக்கி வெண்ணெய் அல்லது நெய்யில் வதக்கிக் கலந்தும் சேர்க்கலாம்.
புளிப்பு கூடி விட்டதா?
வெல்லம் ஒரு கட்டி கரைத்து விடுங்கள். பொட்டுக்கடலை மாவையும் நீர்க்கக் கரைத்து அதில் சேர்த்து விடுங்கள்.வெங்காயத்தை ஒரு ஸ்பூன் எண்ணெயில் வதக்கி, மிக்ஸியில் அரைத்துச் சேர்த்தாலும் குழம்பு சாம்பார் வகைகளில் புளிப்பு மட்டுப்படும்.
இட் மாவு புளித்துவிட்டதா?
சாம்பார் நீர்த்துவிட்டதா?
சிறிது நேரம் அப்படியே வைத்திருந்தால் மேலே தெளிவாக தண்ணீர் தேங்கும். அதைக் கவனமாக இறுத்துவிட்டால்... சாம்பார் கெட்டிதான். இறுத்து எடுத்த தண்ணீரை வீணாக்காமல்... சப்பாத்தி மாவு பிசைய உபயோகிக்காலாம்.தண்ணீர் அதிகமாகப் போன கூட்டு, குருமா, கிரேவி வகைகளுக்கு பால் கரைத்த சோள மாவு, பொட்டுக்கடலை மாவு சேர்த்து ஒரு கொதி கொதிக்க வைத்தால் கெட்டியாகி விடும் (கூட்டு அல்லது குருமாவிருந்தே கொஞ்சம் எடுத்து அதில் மாவைக் கரைத்துச் சேர்ப்பதும் நல்ல உத்தி!)
சப்பாத்தி, வடை, போண்டா, அதிரசம், அப்பம் போன்றவற்றுக்கான மாவில் தண்ணீர் அதிகமாகி விட்டால்... ஃப்ரீஸரில் 20 அல்லது 30 நிமிடங்கள் திறந்தபடி வைத்தால் கெட்டியாகி விடும். அதை ஃப்ரீஸரிருந்து எடுத்த உடனே திட்டமிட்ட உணவுப் பொருளைத் தயாரித்து விடலாம்.
சாதம் குழைந்துவிட்டதா?
கரண்டியால் கிளறாதீர்கள். அப்படியே ஒரு அகன்ற பாத்திரத்தில் போட்டு ஆற விடுங்கள். பின், அதில் எண்ணெய் அல்லது வெண்ணெயைப் பரவலாக ஊற்றி, பாத்திரத்தை மேலும் கீழும் லேசாகக் குலுக்குங்கள். அல்லது ஒரு முள் கரண்டியால் குறுக்கும் நெடுக்கும் கோடு போடுவது போலக் கீறுங்கள். குழைந்த சாதம் கெட்டியாகிவிடும்.!நன்றி- அவள் விகடன்
No comments:
Post a Comment