Bhoo thatha's Blogspot

Search my older Blog

Wednesday, November 25, 2009

ramayanam--sulochana,wife of indrajit

இந்திரஜித்தின் மனைவி
விசாலம் ராமன்


      இந்திரஜித்தின் மனைவி
                      விசாலம் ராமன்


ராமாயணத்தில் லக்ஷமணனின் மனைவியான ஊர்மிளையின் பாத்திரம் எனக்கு ரொம்பப் பிடித்த ஒன்று, அது போல் மண்டோதரி, சுலோசனா இருவரும் என்னை மிகவும் கவர்ந்தவர்கள். முன்பு சதி சுலோச்னா என்ற நாடகம் பார்க்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அப்பப்பா! அந்த சுலோசனாவின் கற்பும் பதிபக்தியும் சொல்ல முடியாது. சுலோசனா இந்திரஜித்தின் மனைவி. இந்திரஜித்திற்குப் போர்க்களம் போக் உத்தரவு வந்தது. அந்த யுத்த பூமியில் சீதையை மீட்க வந்த யுத்தம் இராம இராவண யுத்தம்.
தன் மனைவியைப்பார்க்க வந்தான் இந்திரஜித், "சுலோசனா நான் யுத்தபூமிக்குச் செல்ல வேண்டும். வெற்றித் திலகமிட்டு வழியனுப்பு, ஏன் கண் கலங்குகிறாய்?".
உங்கள் தந்தை பேச்சைக்கேட்பது நியாயம் தான், ஆனால் உங்கள் தந்தை செய்வது அநியாயம். கற்புக்கரசியான சீதையப் பிடித்து சிறையிட்டிருக்கிறார். பதிவிரதையின் கண்ணீர் நம் நாட்டையே அழித்து விடும். நீங்கள் அவருக்கு இதை எடுத்துச் சொல்ல வேண்டாமா?"
தந்தை இட்ட ஆணையை ஏன் என்று கேட்காமல் நிறைவேற்றுவது தான் மகனின் கடமை. நான் என் கட்மையைத்தான் செய்யப்போகிறேன். வருந்தாதே"
எதோ சமாதானம் செய்து இந்திரஜித் யுத்த்த்திற்கு கிளம்பி விட்டான்.
இந்தச் சுலோசனா ஸ்ரீ ஆதிசேஷனின் புதல்வி, 
இலட்சுமணன் ஆதிசேஷனின் மறு அவதாரம் தான்.
யுத்தத்தில் இந்திரஜித்தை எதிர்த்து நின்றவர் இலட்சுமணர்.
போரில் இந்திரஜித் தன் நாகப்பாசத்தால் இலட்சுமணரைக் கட்டிப் போட, பின் கருடனின் உதவியால் விடுவிக்கப்பட்டார். இலட்சுமணரை வெல்ல "நிகும்பலை" என்ற யாகம் செய்ய அரக்கன் மாயமானான். அந்த யாகம் பூர்த்தியானால் வெற்றி அவனுக்கு நிச்சியம். விபீஷணருக்கு இந்தச் சூழ்ச்சி தெரிந்து, அதைத் தடுக்க அனுமன் இலட்சுமணர் இருவரையும் அழைத்துக்கொணடு யாகசாலைக்குப் போய்ச்சேர்ந்தார். உள்ளே போவதும் அவ்வளவு எளிதல்ல. அங்கும் பல ராட்சர்களைக் கொல்லவேண்டி இருந்தது. இலட்சுமணர் யாகத்தில் இருக்கும் பொருட்களைத் தட்டிவிட்டு போருக்கு அழைத்தார். அவன் வரவில்லை, பின் விபீஷணர் சொற்படி இந்திரஜித்தை கோழை, பலமில்லாதவன், பயந்தவன் என்றெல்லாம் இகழந்தார். இந்திரஜித்திற்கு ரோசம் பொத்துக்கொண்டு வர, யாகத்தை நிறுத்திப் போருக்கு வந்தான்.
போரில் இலக்குமணர் அவனது கையை வெட்டினார். அந்தக்கை பறந்துப்போய் சுலோசனாவின் முன்னால் விழுந்தது. உடனே அது தன் கணவரது கை என்று தெரிந்து அழ ஆரம்பித்தாள். எல்லோரும், "எத்தனையோ கைகள், பல பாகங்கள் போரில் வெட்டப்படுகின்றன, இது உன் கணவர் கையாக இருக்காது" என்றனர்.
அவர்கள் முன் அந்தக்கையிடம் சுலோசனா பேசினாள், " அன்புக் கணவரது கையே, நான் இந்திரஜித்தின் மனைவி, கற்புக்கரசி என்பது சத்தியமானால் நீ உண்மையில் நட்ந்ததை எழுதிக்காட்ட வேண்டும் இது நான் பணிவுடன் வேண்டிக்கொள்கிறேன்,"
உடனே அந்தக்கை எழுத ஆரம்பித்தது, " நான் தான் உன் கணவன் இந்திரஜித்தின் வலது கை, இலட்சுமண்ரால் வெட்டப்பட்டு உன் முன்னால் விழுந்த கை"
சுலோசனாவின் கற்பின் சக்தியைக் கண்டு எல்லோரும் வியந்தனர். சுலோச்னா அலறிக்கொண்டு யுத்த பூமியை நோக்கி ஓடினாள். அவளது இந்திரஜித்தின் தலை இல்லாத உடல் தனியாகக் கிடந்தது. ஓடினாள் இராவணனிடம் தலைவிரிக் கோலமாய். தன் கண்வரது தலையை வாங்கிவருமாறு கேட்டுக்கொண்டாள். அவன் செவி சாய்க்கவில்லை. பலரிடம் கேட்டாள். ஒன்றும் நடக்கவில்லை. தானே நேராக ராமரிடம் சென்றாள்.
ராமர் ஒரு நிமிடம் திகைத்துப்போனார். "யார் இவள்? இப்படி அழுதபடி ஓடிவருகிறாள்?'
வீபீஷணன் அவரைப்பற்றிச் சொன்னார். சுலோசனாவும் ராமர் பாதத்தில் விழுந்து தன் கணவரின் தலையைக் கேட்டார். இலட்சுமணன் அவளைப் பார்த்து, அவள்தான் ஆதிசேஷனின் புத்ல்வி எனத் தெரிந்து கொண்டார். தன் மாப்பிள்ளையையே தான் கொன்று விட்டோமே என்று மூர்ச்சித்து விழுந்தார்.
இராமரும் இந்திரஜித்தின் தலையைக் கொடுக்க, சுலோசனா சிதையை வளர்த்து கணவரது தலை உடல் இரண்டையும் அதில் வைத்துத் தீ மூட்டினாள், "நானும் உங்களுடன் வருகிறேன்" என்று வெட்டுப்படட கையைத் தன் கையில் இறுக்கிப் பிடித்தபடி அக்னியில் குதித்து விட்டாள். பின் அவளது ஒளி ஜோதியாக ஆகாயத்தில் கலந்தது.
இந்த நாடகத்தில் இந்தக்க் கட்டம் மிகவும் அருமையாகச் செய்திருந்தனர், மனோகர் அவர்கள் குரூப் அல்லது திரு ராஜமாணிக்கம் அவர்களின் குழுவோ, சரியாக நினவில்லை.
என் மனதில் பதிந்து போன ஒன்று இது

நன்றி; சாந்தம் educationalசர்வீஸ் 

No comments: