Bhoo thatha's Blogspot

Search my older Blog

Saturday, November 21, 2009

இஞ்சிக்கு மிஞ்சினது எதுவும் இலலை -ஜீரண  கோளாறுகளுக்கு 
பெரியவங்களுக்கான வைத்தியம்...

இஞ்சித் துவையல். இது எல்லாருக்கும் தெரிஞ்சதுதான். ஆனா, அதோட மகத்துவம் இருக்கே... அதுதான் பலபேருக்கு தெரியாது. வயிறு சம்பந்தமான பிரச்னைனா... அதுக்கு மிஞ்சின வைத்தியம் எதுவும் இல்லைனே சொல்லலாம். இஞ்சியோட தோலை சுத்தமா எடுத்துட்டு, நல்லெண்ணெய் விட்டு வதக்கி புளி, உப்பு, காஞ்ச மிளகாய், வறுத்த உளுந்தம்பருப்பு சேர்த்து அரைச்சி சாப்பிடுங்க, செரிமானக்கோளாறெல்லாம் காத்தா பறந்துரும்.
பிரண்டைத்தண்டு. நல்ல இளந்தண்டா 10 கணு எடுத்துக்கோங்க. அதை நல்லெண்ணெய் விட்டு வதக்கி... புளி, உப்பு, காஞ்ச மிளகாய், வறுத்த உளுந்தம்பருப்பு சேர்த்து அரைச்சி சாப்பிட்டீங்கனாலும் கோளாறு போயே போயிரும். அதுமட்டுமில்ல... சாப்பாடும் கூட கொஞ்சம் இழுக்கும்.
வயித்து உப்புசம், திடீர் வயித்துவலினு சிலர் படாத பாடுபடுவாங்க. உடனே ஒரு கைப்பிடி முருங்கை இலையை உருவுங்க, காம்பெல்லாம் தள்ளிட்டு... கால் ஸ்பூன் உப்பு சேர்த்து நல்லா கசக்குங்க. அதுல வர்ற சாறை அப்பிடியே குடிச்சிருங்க. கசக்குறப்ப கைவிரல் நடுவுல வடிஞ்சிருக்கற சாறை வயித்துல தடவுங்க, வயித்துவலி வந்த வழியைப் பாத்து ஓடியே போயிரும் ஓடி!
நன்றி ;அவள் விகடன்

No comments: