Bhoo thatha's Blogspot

Search my older Blog

Monday, November 16, 2009

mother mirra dharshan day at pondicheery 17 th november'09

இன்றைக்கும் நாளைக்கும், அப்புறம் என்றைக்கும் நான் வேண்டும் வரம்!


நவம்பர்  17,  ஸ்ரீ அரவிந்த அன்னை மகா சமாதி அடைந்த நாள். ஆசிரமத்தின் தரிசன நாளாக அனுசரிக்கப்படும் நாள் இது., அன்னையை வணங்கச் செல்பவர்களுக்கு, அவரவர் பக்குவத்திற்குத் தகுந்தபடி அன்னை ஒரு செய்தியை அளிப்பது உண்டு! கூடவே அதற்குத் துணை செய்யும் மலர்களும்!

இன்றைக்கும் அந்த நடை முறை அனுசரிக்கப்படுகிறது. இங்கே காண்பது ஸ்ரீ அரவிந்த ஆசிரமத்திற்கு, நாளை ஸ்ரீ அன்னையின் சமாதியைத் தரிசிக்கச் செல்பவர்களுக்கு அளிக்கப்படவிருக்கும் செய்தி. நேரில் செல்பவர்களுக்கும், கடிதம் மூலமாக வேண்டுபவர்களுக்கும் மலர்களும் (சமாதி மேல் அர்ப்பணிப்புடன் விக்கப்பட்ட மலர்களைக் காய வைத்து அன்னை அல்லது ஸ்ரீ அரவிந்தர் படம் ஒட்டிய சிறு பாக்கெட்டுக்குள் வைத்து) பிரசாதமாகக் கிடைக்கும்.

உன்னோடு நான் எப்போதும் இருக்கிறேன் என்ற அன்னையின் வார்த்தைகளை, அனுபவத்தில் மட்டுமே கண்டு உணர முடியும்

ஸ்ரீ அரவிந்த அன்னையே! உன் திருவடிகளைச் சரண் அடைகிறேன்.
எனது கரணங்கள், மனம் ஜீவன் அனைத்தையும் உன்னிடம் சமர்ப்பிக்கிறேன்.
ஒவ்வொரு அணுவிலும், அசைவிலும் உனது ஒளியையே வேண்டி நிற்கிறேன்.
ஒவ்வாத எண்ணங்களோடும் செயல்களோடும் இருக்க நேரிடும் போது கூட
அன்னை என்னோடு இருக்கிறாள்! அவள் என்னைப்பார்த்துக் கொள்வாள் !
இந்த ஒரு நம்பிக்கையே என்னைச் சரிந்து விடாமல் காப்பாற்றி வருகிறது.
எண்ணமும் எழுத்தும் உன்னதே என்று இருக்கும் பரம சுகநிலை அருள்வாய்!
புதுவையிலோ, உனது இருப்பிடத்திற்கு அருகிலோ இருக்கும் வாய்ப்பு இல்லை
ஆனாலும் உனது அருளும்  ஒளியும்  இங்கே நிறைந்திருப்பதைஅறிவேன் அம்மா!
அருளுக்கும் ஒளிக்கும் தூரம் ஏது? உனக்கும் எனக்கும் தடைச் சுவர்கள் தானேது?
நாளைக் காலையில் உன்னுடைய தரிசனம் வேண்டி வரிசையில்  நிற்கும் அடியவர்
பலருடன் என்னுடைய பிரார்த்தனை மலர்களும் சேர்ந்து நிற்கும்!

என்னையும் உனது அன்பிற்குத் தகுதியான குழந்தையாக ஏற்றுக்கொள்வாய் அம்மா!
இதுவே இன்றைக்கும் நாளைக்கும், அப்புறம் என்றைக்கும் நான் வேண்டும் வரம்!



The Mother left her physical body on 17th November 1973


நன்றி;கிரிஷ்ணமூர்த்தி consent to be......nothing

No comments: