Bhoo thatha's Blogspot

Search my older Blog

Sunday, November 15, 2009

1. சரஸ்வதி
   2. ஈஸ்வரி
   3. மீனா
   4. சிவகாமி
   5. கலைமணி
   6. தேன்மொழி..

என்ன சார் இது ஹைதர்காலத்து பேருன்னு கேட்காதீங்க!

[image:
http://img.dinamalar.com/data/images_piraithal/kalkinews_10654848815.jpg]

ஆங்கில மோகத்துக்கும், சமஸ்க்ருத ப்ரியத்திலும், தமிழ்ப்பெயரை துறக்கும்
சூழலில், இந்தச் சீனர்கள் தமிழ் மீதான காதலால் வைத்துக் கொண்ட பெயர்கள் இவை.

பெயரில் மட்டுமல்லாது தமிழை முறையாகப் பயின்று, தமிழ் பேசி, சீன வானொலியில்
தமிழ் நிகழ்ச்சிகளை அளிக்கும் தொகுப்பாளர்கள்.

"நான்கு ஆண்டுகளில் தமிழ் மொழியை கற்று, பணியில் சேர்ந்தேன். எனக்குப்
பிடித்தவர் தெய்வப்புலவர் தான்.(யாருன்னு தெரியுதா??).

"நன்றி மறப்பது நன்றன்று - நன்றல்லது
 அன்றே மறப்பது நன்று."

இந்தக் குறளை நம்மோட ஒவ்வொரு வளர்ச்சியிலும் நினைத்துக் கொள்ள
வேண்டும்."என்கிறார் சேச்சியாங் மாநிலத்தைச் சேர்ந்த சரஸ்வதி.

அறிவிப்பாளர்களாக விளங்கும் இந்த வானொலி நேயர்களுக்காக "சீனத்தமிழொலி" என்ற
இதழும் வெளிவருகிறது.

"எங்களின் நாற்பத்தைந்தாவது நிறைவு நாளில் நெஞ்சார்ந்த மகிழ்ச்சியை
நேயர்களுக்கு நேர்த்திக் கடனாக்குகிறோம்",என்று பெய்ஜிங் மாநில தேன்மொழி
சொன்னபோது, மெல்ல தமிழ் இனி வளரும் என்ற நம்பிக்கை நாற்று துளிர்
விடத்தொடங்கியது.
*
அமிர்தா

*நன்றி:- கல்கி்

No comments: